ஞாயிறு, 5 ஜூலை, 2020

கொடுஊரில் உள்ளது கடல்கோளுக்கு முந்திய கோட்டையா?

கொடுஊரில் உள்ளது 
கடல்கோளுக்கு முந்திய கோட்டையா? 


ஆந்திராவில், கொடுஊரை ( Gutturu, Andhra Pradesh 515164 - இருப்பிடம் 14.190560N, 77.632756E, https://goo.gl/maps/Rbvtbc1TVprVPXfR6) மையமாகக் கொண்டு தெற்கிலும் வடக்கிலும் சுமார் 30 கி.மீ. நீளமும், கிழக்கிலும் மேற்கிலும் சுமார் 10 கி.மீ. அகலமும், சுமார் 80கி.மீ. சுற்றளவிற்குக் குன்றுகளின் மேல் கற்பாறைகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டது போன்று உள்ளன.  இதனால் இது பண்டைக்காலத்தில் பாதுகாப்பு மிகுந்த மிகப்பெரிய கோட்டை அரணாக இருந்திருக்க வேண்டும்.  பிரளயத்தினால் ஏற்பட்ட பெருங்கடல்கோளால் இந்தக் கோட்டை அழிந்திருக்கலாம் என்ற சிந்தனையுடன் யாத்திரையைத் தொடர்ந்தேன்.  இந்தக் கோட்டைக்குள் சாலை நுழையும் இடத்தில் கும்பகர்ணன் படுத்து உறங்குவது போன்ற பெரியதொரு உருவச்சிலையை வைத்துள்ளனர் (https://goo.gl/maps/WwJPASdMs42LSnL99).  நான் யாத்திரையில் இருந்த காரணத்தினாலும், தெலுங்குமொழி தெரியாத காரணத்தினாலும் அதிகமான தகவல்களைக் கேட்டறிய இயலாமல் போனது. இந்த இடம் தொன்மையானதொரு நகர நாகரிகம் இருந்த இடமாக இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

இராமேசுவரம் காசி பாதயாத்திரைப் பயணத்தின் போது,
ஆனி 21 (05.07.2014) சனிக் கிழமையன்று பார்த்தது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக