திங்கள், 31 ஆகஸ்ட், 2020

மதுரைக்கு வந்த சுனாமியும் அரியலூருக்கு வந்த சுனாமியும்

மதுரைக்கு வந்த சுனாமியும்
அரியலூருக்கு வந்த சுனாமியும்

மதுரையானது கடற்கரையில் இருந்து சுமார் 100 கி.மீ. அப்பால் உள்ளது. எனவே மதுரைவரை சுனாமி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.     

அரியலூரில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.  அரியலூர் கடற்கரையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது.  



கடற்கரையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள  டால்மியாபுரத்தில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன.
 
கடற்கரையில் இருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள அரியலூர் மற்றும் டால்மியாபுரம் முதலான ஊர்களுக்குக் கடல்கோளினால் உண்டான கடல்வெள்ளம் வந்துள்ளது என்பது உறுதி.   அதே கடல் வெள்ளம் கடற்கரையில் இருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள மதுரைக்கும் வந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.  




பிரளயம் ஏற்பட்டுக் கடல்கோள் உண்டானபோது,  கடல்வெள்ளம் மதுரைவரை வந்ததாகவும்,  கடல்வாழ் சுரிவளை (RASTELLUM CARINATUM)  யைக் கடல்வெள்ளம் அடித்து உதைத்து மதுரையில் உள்ள வாவியில் சேர்த்ததாகவும் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

சுரிவளையின் படிமங்கள் அரியலூரிலும்  டால்மியாபுரத்திலும் கிடைத்துள்ளன. எனவே முறையான ஆய்வுகள் நடைபெற்றால், மதுரையின் உள்ள தொன்மையான பள்ளமான நீர்நிலைகளில் கடல்கோளின்போது அடித்துவரப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.    

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


1) https://worldfossilsociety.org/2015/09/ariyalur-fossilsrastellum-carinatum/


2) திருவிளையாடற் புராணம் பாடல்கள் 

888.       துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட  உதைத்து

வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக்  கொட்பத்

தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை

அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும்.  

889.       காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்

கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்

பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால் 

அவன் அடி சென்று அடைந்தார் போல்  அடங்கியது ஆல்.               


3) கூகுள் புவிப்படத்தில் எழுகடல் தெரு

W4CF+66 Madurai, Tamil Nadu


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக