Theory of Tsunamis, "மலி திரை ஊர்ந்து” திருமலை
கீழடி அருகே புதையுண்டுள்ள நகரம் கடல்கொண்ட மதுரையா ?
"மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியதா" ?
தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலையின் கிழக்கே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே உள்ள இந்த ஊர் உள்ளது. மாடமலி மதுரை திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே உள்ளது என்று நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார். இதனால் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரமே பண்டைய மதுரையாக இருக்க வேண்டும்.
குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் இப்போதுள்ள மதுரைநகரம் புனர்நிர்மாணம் செய்யப்பெற்று மக்கள் எல்லாம் அங்கே குடியமர்த்தப் பெற்றுள்ளனர். பழைமையான இந்த நகரத்திற்கும் மதுரை என்று பெயர், புதிதாக நிருமாணம் செய்யப்பட்ட நகரத்திற்கும் மதுரை என்று பெயர். எனவே பெயரில் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக இந்தத் தொன்மையான நகரத்திற்கு மணவூர் என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்.
எனவே கீழடி என்ற ஊரின் அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டுபிடித்துள்ள நகரின் பண்டைய பெயர் “மணவூர்“ ஆகும். சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன். இவன் மணவூரில் பிறந்த காந்திமதியை மணம் செய்து கொண்டான். இதன் காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது. பின்னர் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் குலசேகர பாண்டியன். இவன் மதுரை மாநகரைத் திட்டமிட்டு உருவாக்கி அங்கே மணவூர் மக்களை எல்லாம் குடியமர்த்தினான் என்கிறது திருவிளையாடற் புராணம்.
அப்படியானால், பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன? கீர்த்திபூடண பாண்டியன் ஆட்சிக் காலத்தில், மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்றும், அது அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயம் தோன்றி மீண்டும் அழித்தது என்றும் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதாகச்“ சிலப்பதிகாரம் கூறுகிறது(சிலம்பு. 11. 19-20).
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்து, மண்ணை மூடிக் கவர்ந்துள்ளது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! தமிழகத்தில் உள்ள குன்றுகளின் மேற்குப் பகுதிகளில் எல்லாம் கடல்மண் கிடப்பதைக் காணமுடிகிறது.
கடல் வௌவிய மண்படிமங்கள் காணக்கிடக்கின்றனவா?
மேலே உள்ள படத்தில், திண்டுக்கல் பழநி சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள ஏற்றத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்க இடையில் “மலிதிரை ஊர்ந்து கடல் வௌவிய மண்“ படிந்துள்ளதாகக் கட்டுரையாளர் கருதுகிறார்.
ஆம், கிடக்கின்றன! தமிழகத்தில் உள்ள குன்றுகளின் மேற்குப் பகுதிகளில் எல்லாம் கடல்மண் கிடப்பதைக் காணமுடிகிறது.
கடல் வௌவிய மண்படிமங்கள் காணக்கிடக்கின்றனவா?
மேலே உள்ள படத்தில், திண்டுக்கல் பழநி சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள ஏற்றத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்க இடையில் “மலிதிரை ஊர்ந்து கடல் வௌவிய மண்“ படிந்துள்ளதாகக் கட்டுரையாளர் கருதுகிறார்.
மேலே உள்ள இரண்டு படங்களிலும், சிவகங்கை மாவட்டம் திருமலையில் உள்ள பாறை இடுக்குகளில் கடல்மண் படிந்துள்ளதா? என்ற தேடுதல் தொடர்கிறது ... ...
கிரானைட் பாறைகளின் இடையே படிந்துள்ள இந்தவகையான பொக்குப் பாறைகள் சுனாமியினால் அடித்து வரப்பட்ட கடல்களிமண்ணால் உருவானை எனக் கருதுகிறேன்.
கிரானைட் பாறைகளின் இடையே படிந்துள்ள இந்தவகையான பொக்குப் பாறைகள் சுனாமியினால் அடித்து வரப்பட்ட கடல்களிமண்ணால் உருவானை எனக் கருதுகிறேன்.
(குறிப்பு – மண்மாதிரிகளை அறிவியல் அடிப்படையில் ஆராயும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.)
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
------------------------------------------------
சங்கப் பாடல்களில் மதுரையும் கூடலும்
சங்கப்பாடல்களில் மதுரை என்ற சொல் 9 வரிகளிலும்.......
கூடல் என்ற சொல் 38 வரிகளிலும் இடம் பெற்றுள்ளன....
கூடல் என்ற சொல் 38 வரிகளிலும் இடம் பெற்றுள்ளன....
(நன்றி - http://tamilconcordance.in/sangconc)
சங்கப்பாடல்களில் மதுரை -
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5
சங்கப்பாடல்களில் கூடல் (38) -
மாடம் மலி மறுகின் கூடல் குட-வயின் - திரு 71
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்/நாள்_அங்காடி நனம் தலை கம்பலை - மது 429,430
மலி ஓதத்து ஒலி கூடல்/தீது நீங்க கடல் ஆடியும் - பட் 98,99
பெரும் பெயர் கூடல் அன்ன நின் - நற் 39/10
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் - நற் 298/9
மூன்று உடன் கூடிய கூடல் அனையை - பதி 50/7
குன்றத்தான் கூடல் வரவு - பரி 8/28
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்/மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ - பரி 8/29,30
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்/ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் - பரி 10/40,41
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்/வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை - பரி 10/112,113
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்/அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை - பரி 10/129,130
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்/உரைதர வந்தன்று வையை நீர் வையை - பரி 12/31,32
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல்/கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை - பரி 19/8,9
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு - பரி 19/15
கூடல் விழையும் தகைத்து தகை வையை - பரி 20/26
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல்/கடி மதில் பெய்யும் பொழுது - பரி 20/106,107
காமரு வையை கடுகின்றே கூடல்/நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி 24/4,5
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்/மணி எழில் மா மேனி முத்த முறுவல் - பரி 24/46,47
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே - கலி 31/25
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்/தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் - கலி 57/8,9
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்/வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை - கலி 92/11,12
வாடா வேம்பின் வழுதி கூடல்/நாள்_அங்காடி நாறும் நறு நுதல் - அகம் 93/9,10
பொய்யா விழவின் கூடல் பறந்தலை - அகம் 116/14
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது - அகம் 149/14
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் - அகம் 231/13
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய - அகம் 253/6
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய - அகம் 296/12
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் - அகம் 315/7
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் - அகம் 346/20
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்/விலங்கு இடு பெரு மரம் போல - புறம் 273/5,6
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - புறம் 347/6
பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்/முற்று இன்று வையை துறை - பரி 24/26,27
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் - பரி 34/2
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை - கலி 30/11
கூடலொடு பரங்குன்றின் இடை - பரி 17/23
நெடு மாட கூடற்கு இயல்பு - பரி 35/6
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும்/கை ஊழ் தடுமாற்றம் நன்று - பரி 17/45,46
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக