வியாழன், 11 அக்டோபர், 2018

லாடனேந்தலில் பழமையான உறைகிணறு கண்டெடுப்பு

திருப்புவனம் அருகே லாடனேந்தலில்
2 ஆயிரம் ஆண்டு பழமையான
உறைகிணறு கண்டெடுப்பு

தினகரன் செய்தி
 2018-10-10@ 20:20:20


திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழடியில் தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடந்த ஆய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் கீழடியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள், நகரங்கள் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கீழடி கண்மாயில் நேற்றுமுன் தினம் பழமையான உறைகிணறு கண்டறியப்பட்டது.

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது உறைகிணறு தென்பட்டது. இதுகுறித்து கீழடியில் உள்ள தமிழக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறையினர் உறைகிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இயந்திரம் தோண்டும்போது உறை கிணற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘லாடனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு 2 ஆயிரம் ஆண்டு பழமையானது’ என்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=442295

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக