Theory
of Tsunamis
பசியாபுரம்
தொல்லியல் தடையங்கள் கண்டுபிடிப்பு
தினமலர்செய்தி -
திருப்புவனம், அக்.7--2018
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பசியாபுரம் அருகே கண்மாயில் அழகிய
வேலைப்பாடுடன் கூடிய பழங்காலத்து உறைகிணற்றை சிறுவர்கள்
கண்டறிந்துஉள்ளனர்.திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் 4ம் கட்ட அகழாய்வு
முடிவடைந்து விட்டது. கீழடியில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளபசியாபுரம்
அருகே கிராம கண்மாயில் நேற்று சிறுவர்கள் மணல் அள்ளிய பள்ளங்களில் விளையாடினர்.
அப்போது பழங்கால மண்பானையை கண்டு கீழடியில் இருந்த தமிழக தொல்லியல் துறை
அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம்
தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ததில் மூன்று அடுக்குகள் கொண்ட உறைகிணறும்
தண்ணீர் எடுக்க பயன்படுத்திய மூன்று மண் பாத்திரங்களும் இருந்தன. ஒரு மண் பானை
சேதமடையாமல் முழுமையாக கிடைத்துஉள்ளது. கீழடியில் கிடைத்த உறைகிணறுகள்
சாதாரணமானகிணறுகள். பசியாபுரம் அருகே கண்மாயில் வேலைப்பாடுடன் கூடிய கிணறும்
தண்ணீர் எடுக்க பயன்படும் பாத்திரங்களும் கிடைத்துள்ளன.
பசியாபுரம் - இருப்பிடம்
தொல்லியல்துறையினர் அகலாய்வு செய்து வரும் இடத்திற்குச் செல்லும் பாதையில் பசியாபுரம் உள்ளது. பசியாபுரத்தில் இருந்து 1கி.மீ. தொலைவில் தொல்லியல்துறையினர் அகலாய்வு செய்து வரும் இடம் உள்ளது.
இந்தக் கிணற்றைக் கண்டு பிடித்த ஆதீஸ்வரன், சாந்தமுருகன், ஈஸ்வரபாண்டி ஆகிய மூவரையும், அதிகாரிகளும், மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.
http://www.seithipunal.in/tamilnadu/3-boys-found-an-ancient-well-near-keeladi
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக