தொல்லியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொல்லியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மார்ச், 2020

வேதாரண்யம் முதுமக்கள்தாழி

வேதாரண்யம் அருகே 
முதுமக்கள்தாழி கண்டெடுப்பு



தினத்தந்தி செய்தி  -  வேதாரண்யம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
பதிவு: மார்ச் 19,  2020 05:30 AM  வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செட்டிப்புலம் கிராமத்தில் நடுக்காடு பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வாய்க்காலின் ஒரு பகுதியை பணியாளர்கள் தோண்டியபோது அங்கு 2 மண் பானைகள் மண்ணில் புதைந்திருப்பது தெரியவந்தது.
அதில் ஒரு பானை உடைந்த நிலையில் இருந்தது. மற்றொரு பானை உடையாமல் காட்சி அளித்தது. அந்த பானையில் மனித எலும்பு துண்டுகள், பற்கள் மற்றும் தட்டு, கிண்ணங்கள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் இருந்தன. அந்த பொருட்களை மட்டும் பணியாளர்கள் கவனமாக வெளியே எடுத்து பத்திரப்படுத்தினர்.

‘வாட்ஸ்-அப்’ மூலமாக... இதுகுறித்து வேதாரண்யம் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தாசில்தார் சண்முகம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று மண்ணில் புதைந்த நிலையில் இருந்த பானைகளை பார்வையிட்டனர். இதையடுத்து பானைகளின் புகைப்படம் ‘வாட்ஸ்-அப்’ மூலமாக நாகையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
செட்டிப்புலம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டு இருப்பது முதுமக்கள் தாழிகள் ஆகும். அவற்றில் உள்ள சில குறியீடுகளை வைத்து பார்க்கும்போது அவை 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகளாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உடையாத நிலையில் உள்ள முதுமக்கள் தாழி, இன்று (வியாழக்கிழமை) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
நன்றி - https://www.dailythanthi.com/News/Districts/2020/03/19003231/2500yearold-adult-corridor-near-Vedaranyam.vpf

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

நீங்கள் தமிழரா?  தமிழரின் தொன்மையைக் காண்பதில் விருப்பம் உள்ளவரா?
சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டமா? அல்லது மதுரை வாசியா?  அல்லது மதுரை - இராமேசுவரம் நெடுஞ்சாலையில் பயணிப்பவரா?
ஒரு முறை லாடனேந்தல் சென்று தமிழரின் தொல்லியல் அடையாளங்களைக் கண்டு வாருங்கள்.

தமிழர் தொன்மையான நாகரிகம் உடையவர்கள். பிரளயங்களில் தோன்றிய கடல்வெள்ளங்களிலும் (பெருஞ்சுனாமியிலும்) மூழ்கிப் பிழைத்தவர்கள் தமிழர்கள்.
பண்டைய தமிழகத்தைக் கடல்கொண்டதைப் பல்வேறு தமிழ் இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன.   பண்டைத் தமிழரது நாகரிகத்தை மெய்ப்பிக்கும் வகையில் கீழடி அருகே தொல்லியல்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். கீழடிக்குக் கிழக்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் இராமேசுவரம் சாலையோரம் உள்ள லாடனேந்தல் கிராமத்திற்கு அருகே தொடரித் தண்டவாளத்திற்குக் கீழே பாதையொன்று (இரயில்வே கீழ்ப்பாலம்) கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அதற்காகப் பூமியைத் தோண்டும் போது, அங்கே சுமார் 15 அடிக்கும் கீழே சுமார் 5அடி அகலத்திற்கும் 4 அடி உயரத்திற்கும் செங்கற் கட்டுமானம் இருப்பதைக் கண்டுள்ளனர்.
கூகுள் புவிப்படத்தில் - https://goo.gl/maps/YF3t6Tf8X8M2

நாங்கள் கடந்த மார்கழி 28 (12.01.2019) சனிக்கிழமை அன்று சென்று பார்த்து வந்தோம்.  அங்கே கிடைத்த சில செங்கற்களையும் பானையோடுகளையும் சுண்ணாம்புக் கட்டிகளையும் எடுத்து வந்தோம்.

செங்கற்கள்
ஒவ்வொரு செங்கற்கல்லும் 25 செ.மீ. நீளமும், ஒருபுறம் 13.5 செ.மீ. அகலமும், மற்றொரு புறம் 11 செ.மீ. அகலமும், 4.8 செ.மீ. உயரமும் கொண்டதாக இருந்தன.




பானைஓடுகள்
ஒருபுறம் கருப்பு நிறத்திலும், மறுபுறம் சிவப்பு நிறத்திலுமான பானைஓடுகள் அங்கே கிடைந்தன.  அங்கே J.G.B. இயந்திரம் தோண்டிக் கொண்டிந்த போது நேரில் பார்த்த நண்பர் ஒருவர் உள்ளே ஒரு முழுப்பானை அப்படியே புதைந்து கிடப்பதை நேரில் பார்த்ததாகக் கூறினார்.




சுண்ணாம்புக் கட்டிகள்
அடுக்கடுக்காக (bedding) முறையில் மணற்திட்டுகள் காணப்பட்டன.  அதில் சுண்ணாம்புக் கட்டிகள் கலந்து மணற்திட்டுகளும் இருந்தன.



குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டபோது, கடல்வெள்ளத்தால் மதுரை அழிந்ததா? லாடனேந்தலில் புதைந்து கிடக்கும் தொல்லியல் தடையங்கள் வழியாக அறிந்து கொள்வது என்ன?

தமிழரின் தொன்மை போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்,

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மார்கழி 28 (12.01.2019) சனிக்கிழமை.
-----------------------------------------------------------
லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ள பற்றிய தினமலர் நாளிதழில் செய்தி இது - https://www.dinamalar.com/news_detail.asp?id=2186607&fbclid=IwAR0daJX9ZjxHbFjedBMDYDLXLgndL3bpBZIfje04vKfMBYkSzmORZpMJ2zY

செவ்வாய், 8 ஜனவரி, 2019

கீழடி அருகே பழங்கால சுவர் கண்டுபிடிப்பு

கீழடி அருகே 
லாடனேந்தலில் 
பழங்கால சுவர் கண்டுபிடிப்பு

தினமலர் செய்தி  Added : ஜன 08, 2019  00:01 


திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே லாடனேந்தலில் ரயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பழங்கால சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. லாடனேந்தலில் மதுரை- ராமேஸ்வரம் ரயில் பாதை குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. கடந்த மாதம் இப்பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொல்லியல் ஆய்வுக் குழுவினர், அப்பொருட்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.தற்போது பழங்கால கட்டட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சுவர்களில் உள்ள செங்கல் நீள்வாக்கிலும், உயரம் குறைந்தும் காணப்படுகிறது. சுவர் அருகே மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகளும் இருந்தன. தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை. கீழடியை தொடர்ந்து லாடனேந்தல், கீழடி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொள்வதுடன், சுரங்க பாதை பணியின் போது கிடைத்து வரும் பொருட்களை பாதுகாக்க வேண்டும்.

தினமலர் செய்தி https://www.dinamalar.com/news_detail.asp?id=2186607
-------------------------------------------------------------------------------------------------

ரெயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பண்டைய கால பொருட்கள் கண்டுபிடிப்பு
மாலைமலர் செய்தி
பதிவு: ஜனவரி 09, 2019 23:27

ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
ரெயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பண்டைய கால பொருட்கள் கண்டுபிடிப்பு
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தின் வழியாக டி.ஆலங்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையின் குறுக்கே மதுரை-ராமேசுவரம் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த வழியாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.1¼கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அப்போது வடக்கு பகுதியில் பழங்கால உறை கிணறும், தென்புறத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள் இருப்பதும், மேலும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதுகுறித்து கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் உறை கிணறு 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பண்டைய காலத்து கிணறு என்று தெரிவித்தனர். இதையடுத்து கீழடி போன்று லாடனேந்தல் பகுதியிலும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
https://www.maalaimalar.com/News/District/2019/01/09232736/1222131/ancient-discovery-of-inventory-during-the-railway.vpf
---------------------------------------------------------------------------------------------------------------

லாடனேந்தல் அருகே இருப்புப்பாதைக்காகத் தோண்டிய போது சிலமாதங்களுக்கு முன்னர் உறைகிணரு கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது, தொல்லியல் சுவர் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது.

தோண்டத் தோண்டத் தமிழரின் தொன்மையான வரலாற்றுச் சுவடுகள் காணக்கிடக்கின்றன. தமிழரின் தொன்மையைத் தமிழகஅரசு முறையாக ஆவணப்படுத்தி உலகறியச் செய்ய வேண்டும்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வியாழன், 11 அக்டோபர், 2018

லாடனேந்தலில் பழமையான உறைகிணறு கண்டெடுப்பு

திருப்புவனம் அருகே லாடனேந்தலில்
2 ஆயிரம் ஆண்டு பழமையான
உறைகிணறு கண்டெடுப்பு

தினகரன் செய்தி
 2018-10-10@ 20:20:20


திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழடியில் தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடந்த ஆய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் கீழடியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள், நகரங்கள் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கீழடி கண்மாயில் நேற்றுமுன் தினம் பழமையான உறைகிணறு கண்டறியப்பட்டது.

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது உறைகிணறு தென்பட்டது. இதுகுறித்து கீழடியில் உள்ள தமிழக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறையினர் உறைகிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இயந்திரம் தோண்டும்போது உறை கிணற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘லாடனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு 2 ஆயிரம் ஆண்டு பழமையானது’ என்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=442295