ஆலவாயும் அலைவாயும்
(திருவாலவாய் , திருச்சீரலைவாய் - பெயர்க்காரணம் )
அப்பன் சோமசுந்தரபாண்டியன் ஆளும் மதுரைக்குத் திருவாலவாய் (திரு ஆலவாய்) என்றொரு பெயரும் உண்டு. அப்பன்மகன் சுப்பனான உக்கிரபாண்டியன் ஆளும் திருச்செந்துருக்குத் திருச்சீரலைவாய் (திருச்சீர் அலைவாய்) என்றொரு பெயரும் உண்டு. இவை இரண்டும் காரணப் பெயர்கள் ஆகும்.
பிரளயம் - பிரளயம் என்றால் அயனங்கள் பிரள்வது அல்லது பெரும் நிலச்சரிவு என்று பொருள். கடலிலுள்ள பெரும் நிலத்திட்டுகள் சரிந்து விழுகின்றன. இதனால் கடல்நீர் அடித்துச் செல்லப்பட்டுக் கடல்கோள் (பெருஞ் சுனாமி, Tsunami) உண்டாகிறது.
----------------------------------------------------------------
ஆலவாய் -
பாண்டிய நாட்டிற்குக் கிழக்கே உள்ள வங்கக் கடலில் பிரளயம் ஏற்பட்டு அதனால் கடல்கோள் (கடல்வெள்ளம் அல்லது சுனாமி) ஏற்பட்டு மதுரையை அழித்துள்ளது. கடல்வெள்ளத்தினால் அடித்துவரப்பட்ட மண் படிந்து, மதுரைக்கு மேற்கே நாகமலை உருவாகியுள்ளது. கடல்வெள்ளம் (ஆலம்) வாய்வைத்த காரணத்தினால், இத்தலத்திற்கு “ஆலவாய்” என்ற காரணப்பெயரைத் தமிழர் சூட்டியுள்ளனர். திரு என்ற அடைமொழி சேர்ந்து திருவாலவாய் என்று பெயராகியுள்ளது.
-----------------------------------------------------------------------------
அலைவாய் -
வங்கக் கடலில் பிரளயம் ஏற்பட்டு அதனால் கடல்கோள் (கடல்வெள்ளம் அல்லது சுனாமி) உண்டாகிப் பண்டைய பாண்டிய நாட்டைத் தாக்கியுள்ளது. கடல்கோளில் உண்டான ‘கடலலைகள்’ திருச்செந்தூர் அருகே மோதித் தாக்கியுள்ளன. கடலின் அலைகள் வாய் வைத்த காரணத்தினால் இத்தலத்திற்கு “அலைவாய்” என்ற காரணப்பெயரைத் தமிழர் சூட்டியுள்ளனர். திரு என்ற அடைமொழி சேர்ந்து திருச்சீரலைவாய் என்று பெயராகியுள்ளது. இந்தக் கடல்வெள்ளத்தினால் (சுனாமி) அடித்துவரப்பட்ட மண் படிந்து, திருச்செந்தூருக்கு வடமேற்கே சிவகளை மலைகள் உருவாகியுள்ளன.
மதுரைக்குத் திருவாலவாய் என்ற பெயரும், திருச்செந்தூருக்குத் திருச்சீரலைவாய் என்ற பெயரும் காரணப் பெயர்களாகும். பிரளயம் கடல்கோள் கடல்வெள்ளம் (சுனாமி, Tsunami) ஆழிப்பேரலை பற்றியும் அதனால் உண்டான புவியில் மாற்றங்கள் பற்றியும் தெளிவாகத் தமிழர் அறிந்திருந்து உள்ளனர். ஆலவாய் அலைவாய் என்ற பெயர்கள் புவியியல் அடிப்படையிலான காரணப் பெயர்களாகும்.
நாகமலைத்தொடரிலும், சிவகளை மலைத்தொடரிலும் தமிழரின் தொன்மையான வாழ்வியல் எச்சங்கள் புதைந்து கிடக்கின்றன. இவற்றைத் தோண்டிக் கண்டறியும் தொல்லியலாளரைப் போற்றுவோம்.
நாகமலை சிவகளை போற்றுவோம்,
ஆலவாய் போற்றுவோம்,
அலைவாய் போற்றுவோம்,
தொல் தமிழர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.
அன்பன்
தொல் தமிழர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மாசி 26 (09.03.2020) திங்கள் கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக