சனி, 17 அக்டோபர், 2020

நேமியும் ஊழியும்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் 

நேமியும் ஊழியும்



"நேமி" 29 இடங்களில் காணப்படுகின்றது.

ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு - சிறு. அடி 253

நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு - முல்லை. அடி 1

நேர் கொள் நெடு வரை நேமியின் தொடுத்த - மலை. அடி 238

நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் - மலை. அடி 525

வன் பரல் முரம்பின் நேமி அதிர - நற்றிணை 394/5

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி - குறுந் தொகை 189/3

பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி - குறுந் தொகை 227/1

கடு மா நெடும் தேர் நேமி போகிய - குறுந் தொகை 336/4

பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய - பரி பாடல் 1/55

எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை - பரி பாடல் 1/61

தாமரை பொகுட்டு நின் நேமி நிழலே - பரி பாடல் 3/94

நோனார் உயிரொடு முரணிய நேமியை - பரி பாடல் 4/9

தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால் - பரி பாடல் 13/6

நேமியும் வளையும் ஏந்திய கையான் - பரி பாடல் 13/9

தொலையா நேமி முதல் தொல் இசை அமையும் - பரி பாடல் 15/3

வலம்புரி வய நேமியவை - பரி பாடல் 15/59

என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி - பரி பாடல் 19/46

பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமி - கலித் தொகை 104/9

வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல - கலித் தொகை 105/9

ஆடு கொள் நேமியான் பரவுதும் நாடு கொண்டு - கலித் தொகை 105/71

இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர - கலித் தொகை 119/3

செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல் - கலித் தொகை 127/4

கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி - அக நானூறு 14/19

நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் - அக நானூறு 175/14

புனை தேர் நேமி உருளிய குறைத்த - அக நானூறு 251/13

நேமி உய்த்த நேஎ நெஞ்சின் - புற நானூறு 3/4

இனிது உருண்ட சுடர் நேமி - புற நானூறு 17/7

நீல் நிற உருவின் நேமியோனும் என்று - புற நானூறு 58/15

நிலம் தவ உருட்டிய நேமியோரும் - புற நானூறு 270/3
_--------+

"ஊழி" 34 இடங்களில் காணப்படுகின்றது.
தாமரை பயந்த தா இல் ஊழி - திரு. அடி 164

ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி - பொரு. அடி 106

நல் ஊழி அடி படர - மதுரை. அடி 21

வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே - மதுரை. அடி 782

உரு கெழு தாயம் ஊழின் எய்தி - பட்டின. அடி 227

செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி - நற்றிணை 93/6

வாழலென் வாழி தோழி ஊழின் - நற்றிணை 364/6

வீழ் உறை இனிய சிதறி ஊழின் - குறுந் தொகை 270/2

வெள்ள வரம்பின் ஊழி போகியும் - ஐங்குறு நூறு 281/1

நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே - ஐங்குறு நூறு 482/4

நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக - பதிற்றுப் பத்து 21/31

ஊழி உய்த்த உரவோர் உம்பல் - பதிற்றுப் பத்து 22/11

ஆயிர வெள்ள ஊழி - பதிற்றுப் பத்து 63/20

திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி - பதிற்றுப் பத்து 71/24

நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக - பதிற்றுப் பத்து 89/8

ஊழி அனைய ஆக ஊழி - பதிற்றுப் பத்து 90/53

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல - பரி பாடல் 2/4

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் - பரி பாடல் 2/6

உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும் - பரி பாடல் 2/7

செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு - பரி பாடல் 2/8

தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று - பரி பாடல் 2/9

உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் - பரி பாடல் 2/12

ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு - பரி பாடல் 2/17

ஊழி யாவரும் உணரா - பரி பாடல் 2/18

ஊழி ஆழி கண் இரு நிலம் உரு கெழு - பரி பாடல் 3/23

நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை - பரி பாடல் 3/80

தானையின் ஊழி தா ஊக்கத்தின் - பரி பாடல் 22/10

மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் - கலித் தொகை 99/5

தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால் - கலித் தொகை 129/1

அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் - கலித் தொகை 130/4

ஊழிற்று ஆக நின் செய்கை விழவின் - புற நானூறு 29/22

அன்ன ஆக நின் ஊழி நின்னை - புற நானூறு 135/19

கூழும் சோறும் கடைஇ ஊழின் - புற நானூறு 160/20

ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் - புற நானூறு 237/1

நன்றி  http://tamilconcordance.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக