முல்லைக்கலி – 104வது பாடல்
இப்பாடலில் பாண்டிநாட்டைக் கடல்கொண்ட நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இது பாண்டிநாட்டில் கடல்கோள் நிகழ்ந்ததற்குச் சான்றாக உள்ளது.
“தென் மதுரையும் கபாடபுரமும் கடலால் கொள்ளப்பட்ட காரணத்தால் பாண்டிய அரசன் சோழ நாட்டுப் பகுதியையும் பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொள்கிறான்.
கடலின் மிகுந்த அலைகள் பாண்டிநாட்டினுள் புகுந்து அழித்ததால், நாட்டின் பரப்பைக் கூட்டவேண்டி, மனத்தில் சேர்வின்றி, பகைவரைத் (சேரனையும், சோழனையும்) தன் வலிமையால் வென்று மேலே சென்று சோழனின் புலி இலச்சினையையும், சேரனின் வில் இலச்சினையையும் அழித்து, விளங்கும் மீன் இலச்சினையை அங்கே பொறித்த புகழையுடைய பாண்டியனின் பழைய புகழை நிலைபெறச் செய்த குடியுடன் தோன்றிய முல்லை நிலத்தில் ஆயர் (இடையர் குலத்தினர்) வாழ்கின்றனர் என்கிறது இந்தப் பாடல்.
மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வௌவலின்
மெலிவின்றி, மேல் சென்று மேவார்நாடு இடம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்இசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர் ….
எனத் தொடரும் இப்பாடல் 80 வரிகளைக் கொண்டது.
பாடியவர் - சோழன் நல்லுருத்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக