தரணி ஆண்ட தமிழர்
தடாதகை, தரணி ஆண்ட தடாதகைத் தாய் |
அன்னை தடாதகையும், பண்டைத் தமிழ் மன்னர்களும் பாரத தேசம் முழுமையையும் ஒரு குடையின் கீழ் அரசாண்டுள்ளன.
“தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஓன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவ துண்டு பக லாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழு தாண்டோர் வழி காவல.” ( புறநானூறு – 17 )
எனக் குறுங்கோழியூர்கிழாரும்.
“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்.
……. ……. ……. …..
உருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன் போல ஒருதிறம்
பற்றலி லியரோ நிற்றிறம் சிறக்க!” ( புறநானூறு – 6)
எனக் காரிகிழாரும், மதுரைக்காஞ்சியில்,
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப” ( வரி 70-72)
என மாங்குடி மருதனாரும் கூறுவதனால் தமிழரே தரணியை ஆண்டுள்ளனர் என்பது உறுதி ஆகிறது.
மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடியாம்,
தமிழரின் தொன்மை போற்றுவோம்,
தமிழரின் வீரம் போற்றுவோம்,
தமிழரின் விவேகம் போற்றுவோம்,
தமிழர் தரணியை ஆள்வோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
---------------------------------------------------------------------
குடகடலை ஏன் தொன்றுமுதிர் பௌவம் என்கிறார் புலவர்?
கங்கை பூமியில் இறங்குவதற்கு முன்பே இந்தியாவின் மேற்கே உள்ள அரபிக்கடலானது ஓர் நன்னீர்க்கடலாக இருந்திருக்க வேண்டும். கங்கை பூமியில் இறங்கியதால் பாதிப்படையாத ஓர் கடற்பகுதியாக இந்த முதிர்பௌவம் இன்றும் இருக்க வேண்டும்.
என்பது கங்காபுராணத்தின் அடிப்படையில் எனது யூகம்.
இந்தக் கடலின் உப்பின் அளவானது மற்றைய கடல்களின் உப்பின் அளவைவிடக் குறைவாக இருந்தால் எனது யூகம் சரியானதாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக