திண்டுக்கல்லில் இருந்து தாண்டிகுடி செல்லும் மலைப்பாதையில் உள்ள பாறைகளை வெட்டி யெடுத்துச் சாலையை அகலப்படுத்தி உள்ளனர். இந்தப் பாதை வழியாக கடந்த 21 மே 2017 தாண்டிகுடி செல்லும் போது படத்தில் உள்ள பாறைகளை கண்டேன்.
இவ்வகையான பாறைகள் பற்றி பல்வேறுவிதமான அறிவியல் கருத்துகள் சொல்லப்படுகின்றன.
ஆனால் இந்தப் பாறைகள், பெரும் கடல்வெள்ளத்தில் (பெருஞ் சுனாமியில்) உண்டான களிமண் அல்லது சவடு மண்ணினால் (Tsunami deposited clay) உருவானவை என்பது எனது கருத்து.
பண்டைக் காலத்தில் பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்தையும் குமரிக் கோட்டையும் பண்டைய பாண்டிய நாட்டையும் அழித்த மாபெருஞ் சுனாமியினால் பெருமளவு கடல்சவடு அல்லது கடல்களிமண் அடித்து வரப்பட்டுள்ளது. சுனாமியின் போது இத்தகைய கடல்களிமண் நிலத்தில் பரவும் போது ஏதோ சில பொருட்கள் கடல்களிமண்ணைத் தடுத்துள்ளன. பல காலத்திற்குப் பின்னர் இவைகள் பாறைகளாக மாறியுள்ளன.
எனது இந்தக் கருத்துகளை அறிவியில் அடிப்படையில் ஆராய்ந்து நிறுவிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக