கல்லும் மண்ணும் மணலும்
மணல் என்கிறதே நீரால் பாறை அரிக்கப்பட்டு உருவாவதுதானே?
கிரானைட் பாறைகள் தோன்றி பலநூறுகோடி வருடங்கள் ஆகிவிட்டன. கிரானைட் மலைகள் தோன்றிய காலத்தைக் “கல்தோன்றிய காலம்” என்று தமிழ் இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.1) கிரானைட் பாறைகள் சிறிதளவு சிதைவடையப் பலகோடி ஆண்டுகள் ஆகும். எனவே கிரானைட் பாறைகள் சிதைவடைந்து இவ்வளவு மண் தோன்றி யிருக்க வாய்ப்புகள் இல்லை.
2) வெயிலாலும் மழையாலும், கிரானைட் பாறைகள் சிதைந்துதான் இவ்வளவு மண் உண்டாகியுள்ளது என்று கொண்டால், தக்கானபீடபூமியில் உள்ள மண்ணின் அவளவிற்குப் பெரியதான மலைகள் இருந்தன என்பதையும் நிறுவ வேண்டியிருக்கும்.
3) மேலும் கிரானைட் பாறைகளுக்கு அருகாமையில் அந்தப் பாறையை ஒட்டியபடி உள்ள மண்ணின் இயற்பியல் வேதியல் தன்மைகள் மிகவும் மாறுபட்டுக் காணப்படுகின்றன.
மேற்கண்ட மூன்று காரணங்களாலும், கிரானைட் மலைகள் சிதைந்தே மண்தோன்றியுள்ளது எனக் கருத முடியாது.
மண் உருவானது எப்படி?
கிரானைட் பாறைகள் சிதைந்து மண் உருவாக வில்லை.
கீழே உள்ள படங்களில் காட்டப்பட்டுள்ள பொக்குப் பாறைகள் சிதைந்து மண் உருவாகி உள்ளது. பெருஞ்சுனாமியினால் அடித்துவரப்பட்ட மண்ணினால்தான் மண்மலைகள் (செம்மண் கிராவல் மலைகள்) தோன்றியுள்ளன. இத்தகைய மண்மலைகள் தோன்றிய காலத்தை “மண்தோன்றி
பொக்குப் பாறைகள் என்றால் என்ன?
கல்லும் மண்ணும் மணலும் சேர்ந்து உருவானதே பொக்குப் பாறைகள்.
கல்லும் மண்ணும் மணலும் சேர்ந்து உருவானதே பொக்குப் பாறைகள்.
பொக்குப் பாறைகள் கடல்கோள் சுனாமியின் தாக்கத்தினால் உருவானவை. தக்கானபீடபூமி முழுக்க இதுபோன்ற பொக்குப் பாறைகளைக் காணலாம். இத்தகைய பொக்குப் பாறைகள், ஆழ்கடலின் அடிப்பகுதியில் உள்ள கடற்களிமண்ணால் மண்ணும் மண்ணும் அல்லது கல்லும் கல்லும் அல்லது கல்லும் மண்ணும் ஒன்றோடு ஒட்டிக் கொண்டு பொக்குப் பாறைகள் உருவாகியுள்ளன.
பொக்குப் பாறைகளுக்குக் கடலூர் பாறைகள் இதற்குச் சிறந்த உதாரணம் ஆகும். பொக்குப் பாறைகளைக் வெறும் கையால் பிய்த்து எடுத்து விடலாம். உள்ளங்கையில் வைத்துக் கசக்கினால் இந்தப் பாறை மண்ணாக மாறிவிடும். இத்தகைய பொக்குப் பாறைகள் சிதைந்து மண் உருவாகியுள்ளது.
“பொய்அகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம்போர்த்த வயங்கு ஒலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”
- (புறப்பொருள் வெண்பா மாலை பாடல் 35)
“மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டுபிறர் அறியும் குடிவர வுரைத்தன்று”
- (புறப்பொருள் வெண்பா மாலை, கரந்தைப் படலம்: 13)
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு