கீழடி அகழாய்வு,
தொல்லியலாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்.
தமிழக தொல்லியல்துறையின் அறிக்கையை ஆங்கிலம் சீனம் உருது இந்தி மற்றும் கீழை நாடுகளின் மொழிகளில் வெளியிட வேண்டும். இந்த அறிக்கையை இந்த மொழிகளில் ஆவணப்படமாகமாகவும் வெளியிட வேண்டும். இவ்வாறு செய்தால் மற்றோரும் தமிழரின் தொன்மையை மற்றோரும் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.
கூலிக்கு ஆட்களைக் கூட்டி வந்துதான் அகழாய்வு செய்யவேண்டும் என்பதில்லையே. மதுரையில் உள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்தாலே போதும். 100 ஏக்கரையும் மிகவும் குறைந்த செலவில் விரைவாக அகழாய்வு செய்திடலாமே.
கட்டுமானங்கள் கண்டறியப்படும்போது கொத்தனார்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். சுடுமண் பானைகள் கண்டறியுப்படும்போது குயவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். சும்மா பார்வையாளராக வருவோரின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். பல்வேறு அறிஞர்களும் அவரவர் கருத்துக்களை கூறிட வேண்டும். அனைவரின் கருத்துக்களையும் தொல்லியல் துறையினர் வரவேற்க வேண்டும். எல்லோர் கருத்துக்களையும் தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எனது விரும்பம். இவ்வாறு அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிவதே சங்கம். இதுவே தமிழரின் பண்பாட்டுக் கூறு.
என்ன, நான் சொல்வது சரிதானே 😏
ஆலவாய் போற்றுவோம்,
கூடல் மாநகர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக