புதன், 16 அக்டோபர், 2019

இனி சுனாமி வருமா? வராதா?

இனி சுனாமி வருமா? வராதா?


26 டிசம்பர், சுனாமி நினைவு நாள் வருகிறது.
இதுபோல் சுனாமி இனிமேல் வருமா? வராதா?

மனிதர்கள் யாரும் மறக்கமுடியாத நாள் 26 டிசம்பர் 2004.  சுனாமி.  1,74,296 பேர் இறந்துவிட்டனர்.  1,08,221பேர் காணவில்லை. ஆக மொத்தம் 2,82,517 இல்லாமல் போய்விட்டனர்.  இதில் இந்தியாவில் மட்டும் 16,389 பேர்  இல்லாமல் போய்விட்டனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.  இந்தப் பேரழிவுச்  சுனாமி இனிமேலும் வருமோ? என்ற அச்சம் எல்லோர் மனத்திலும் உள்ளது.
இனி சுனாமி எப்போது வரும்? எங்கே வரும்? என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

என்னிடம் கேட்டால்,
நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து வரும் கடல்கோளும் (சுனாமியும்) பிரளயத்தால் உண்டாகின்றன.  பிரளயம் என்றால் நிலத்திட்டுகள் பிரள்வது, அல்லது புரண்டு விழுவது.  இந்தோனேசியா நிலத்திட்டு அடுக்கடுக்கான பொக்குப்பாறைகளால் உருவானது.

கடலில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்துக்கிடப்பது போல் அடுக்கடுக்கான பொக்குப்பாறைகளால் ஆன bedding நிலமைப்பைக் கொண்டது.  பாம்பின் தோல்களில் செதில்கள் இருப்பதைப் போன்று, இந்தோனேசியா நிலத்திட்டில் பாறை யடுக்குகளுக்கு இடையே செதில்கள் (fault)உள்ளன.  இந்தச் செதில்கள் பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கமும் கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன.

நிலநடுக்கமும், கடல்கோள் (சுனாமியும்) எப்போது உண்டாகும்?
இதை உறுதியாகக் கூற இயலாது.  செதில் (fault)எப்போது பெயர்ந்து விழும்? என்பதை உறுதியாக யாராலும் கணித்துச் சொல்லவே முடியாது.   இதைக் கணித்தே ஆக வேண்டும் என்றால்,  இதுவரை பிரளயம் (நிலநடுக்கம், சுனாமி) நடைபெற்ற நாட்களைத் தொகுக்க வேண்டும்.  நிலநடுக்கமும் சுனாமியும் உண்கியுள்ள நாட்களில், சூரிய சந்திரன் முதலான ஒன்பது கோள்களின் நிலைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றிற்கும் சுனாமிக்கும் தொடர்பு  (correlation)உள்ளதா?  எனக் கணக்கிட்டுக் கண்டறிய வேண்டும்.
இவ்வாறான கணிதமுறையினால் ஆன கணிப்பினால் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரளயம் கடல்கோள் நிகழ வாய்ப்பு உள்ளதா? என அறிவியல் அடிப்படையில் கூறிடமுடியும்.

மற்றபடி,  இந்தோனேசியா நிலத்திடு உருவாகி வெகுகாலம் ஆகி விட்டது.  நிலம் நன்றாக இறுகி விட்டது.   இந்த நிலத்திட்டில் விழும் நிலையில் இருந்த செதில்கள் (faults)மிகுதியும் ஏற்கனவே விழுந்துவிட்டன.  எனவே இனி வரும் காலங்களில் நிலத்திட்டுகள் பிரள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
எனவே நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து கடல்கோள்களும் (சுனாமிகளும்) உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

அடிக்கடி கடல்கோள் (சுனாமி) உண்டாகாது.
அச்சமில்லாமல் இக்கலாம்,
ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அன்பன்,
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.
புரட்டாசி 29 (16.10.2019) புதன் கிழமை

(நன்றி -- படம் இணையத்தில் இருந்து எடுத்தது.  இந்தப் படத்தை இணையத்தில் பதிவு செய்தோருக்கு நன்றி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக