பாரதமாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதமாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மே, 2018

பாரத தேசத்தை ஆண்ட பாண்டியர், இந்தியாவை ஆண்ட தமிழர்

பாரத தேசத்தை ஆண்ட பாண்டியர்

இந்தியாவை ஆண்ட தமிழர்

இந்தியாவைத் பண்டைத் தமிழர் ஆண்டுள்ளனர்.   ஏதோ இங்கிலாந்திலிருந்து வெள்ளைக்காரன் வந்த பின்னர்தான் இந்தியா என்ற நாடு உருவானது என்றும், அதற்கு முன் இந்தியா என்றொரு நாடு  இல்லையென்றும் நண்பர் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால் பண்டைய பாரதத்தை ஒன்றாகத் தமிழர் ஆண்டுள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.




1)
மதுரை குலசேகர பாண்டியமன்னனின் மகன்  மலயத்துவசன்.
மலயத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் செய்த புத்திரகாமேட்டி யாகத்தில் உமாதேவியார் மூன்று தனங்களையுடைய பெண்குழந்தையாகத் தோன்றினாள். அவளுக்குத் "தடாதகை" என்று பெயரிட்டனர். இவள் கன்னியான காலத்தில் இவளது தந்தை இறந்தான். இவளே மதுரையை ஆண்டாள். கன்னி ஆண்டதால் பாண்டியநாடு "கன்னிநாடு" என்ற பெயர் பெற்றது. தடாதகை பரதகண்டம் முழுவதையும் வென்று "பாரத மாதா" ஆனாள் என்கிறது திருவிளையாடற் புராணம்.



2)
“தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஓன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவ துண்டு பக லாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழு தாண்டோர் வழி காவல்.” ( புறநானூறு – 17 )
எனக் குறுங்கோழியூர்கிழாரும்.

3)
“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்.

உருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமனன் போல ஒருதிறம்
பற்றலி லியரோ நிற்றிறம் சிறக்க!” ( புறநானூறு – 6)
எனக் காரிகிழாரும்,

4)
மதுரைக்காஞ்சியில்,
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப” ( வரி 70-72)
என மாங்குடி மருதனாரும் பாடியுள்ளனர்.


இந்தியர் என்றால், இந்துக்கள். இந்து என்றால் சந்திரன், பாண்டியர் சந்திரகுலத்தவர்.  இந்தியர்கள் என்றால் பாண்டியர் என்று பொருள்.

பண்டைத் தமிழர்போன்று, பாரதம் முழுமையையும் தமிழர் ஆள வேண்டும்.
----------------------------------
குடகடலை (அரபிக்கடலை) ஏன் தொன்றுமுதிர் பௌவம் என்கிறார் புலவர்?

கங்கை பூமியில் இறங்குவதற்கு முன்பே இந்தியாவின் மேற்கே உள்ள அரபிக்கடலானது ஓர் நன்னீர்க்கடலாக இருந்திருக்க வேண்டும். கங்கை பூமியில் இறங்கியதால் அதிகம் பாதிப்படையாத ஓர் கடற்பகுதியாக இந்த முதிர்பௌவம் இன்றும் இருக்க வேண்டும், என்பது கங்காபுராணத்தின் அடிப்படையில் எனது யூகம்.
இந்தக் கடலின் உப்பின் அளவானது மற்றைய கடல்களின் உப்பின் அளவைவிடக் குறைவாக இருந்தால் எனது யூகம் சரியானதாக இருக்கலாம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

Indian Emperors and Foreign Emperors பாண்டியநாட்டிற்கு வருகை தந்த வேறுபிற நாட்டினர்

Indian Emperors and Foreign Emperors

தடாதகைப் பிராட்டியின் 
திருமணத்திற்கு வந்திருந்த அரசர்கள்

மதுரை குலசேகர பாண்டியமன்னனின் மகன்  மலயத்துவசன்.
மலயத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் செய்த புத்திரகாமேட்டி யாகத்தில் உமாதேவியார் மூன்று தனங்களையுடைய பெண்குழந்தையாகத் தோன்றினாள். அவளுக்குத் "தடாதகை" என்று பெயரிட்டனர். இவள் கன்னியான காலத்தில் இவளது தந்தை இறந்தான். இவளே மதுரையை ஆண்டாள். கன்னி ஆண்டதால் பாண்டியநாடு "கன்னிநாடு" என்ற பெயர் பெற்றது. தடாதகை பரதகண்டம் முழுவதையும் வென்று "பாரத மாதா" ஆனாள்.
இறுதியாகக் திருக்கயிலாயத்தை அடைந்து சிவனுடன் போரிடத் துணிந்தாள். சிவனைக் கண்டதும் தனது மூன்று தனங்களுள் ஒன்று மறைந்தது.  இதனால் சிவபெருமானிடம் காதல் கொண்டாள்.  

இகலோக நாயகி மதுரையில் பாண்டியனுக்கு மகளாகி முடிசூடி பாரததேசத்தைத் தன் குடைக்குக் கீழ்க் கொண்டு வந்த “தடாதகைப் பிராட்டிக்கும்“,  தாய் தந்தையின்றித் தனியொருவனான பரலோக நாகயகன் கைலாயநாதனும் திருமணம் நிச்சயத்தனர். 

திருமணத்திற்கு வரவேற்றுத் திருமுகம் ஓலையை உள்நாட்டு வெளிநாட்டு மன்னர்களுக் கெல்லாம் அனுப்பினர்.


பாண்டியர்களின் முடி போல்பவனாகிய மலயத்துவச பாண்டியன் திருப்புதல்வியாரின் திருமணங் குறித்த ஓலையை வரவேற்று மன்னர்கள், எதிர்கொண்டு வந்து வணங்கிக் கையில் வாங்கித் தம் மணிமுடி மேல் ஏற்றினர்.  அத்திருமுகச் செய்தியைக் கேட்டு, அதைக் கொண்டு வந்தவர்களுக்கு, அரிய அணிகளும் ஆடைகளும் அளித்து, முன் இழுத்துச் செல்லும் களிப்பு மிக, மனத்தினும் விரைந்து வழிக்கொண்டு செல்வார்கள்.

கொங்கர், சிங்களர், பல்லவர், வில்லவர் (சேரர்), கோசலர், பாஞ்சாலர், வங்கர், சோனகர், சீனர்கள், சாளுவர், மாளவர், காம்போசர், அங்கர், மகதர், ஆரியர், நேரியர் ( நேரி மலையையுடைய சோழர்),  அவந்தியர், வைதர்ப்பர் (விதர்ப்பர்), கங்கர், கொங்கணர், விராடர்கள், மராடர்கள், கருநடர், குருநாடர்,  கலிங்கர், சாவகர், கூவிளர், ஒட்டியர், கடாரர்கள் (பர்மா), காந்தாரர், குலிங்கர், கேகயர், விதேகர்கள், பௌரவர் (பூருமரபினர்) , கொல்லர்கள், கல்யாணர் (சளுக்கியர்),  தெலுங்கர், கூர்ச்சரர், மச்சர்கள், மிலேச்சர்கள், செஞ்சையர், முதலாக ஏனைப் புலம் கொள் மன்னரும் வழிகள் தோறும் நெருங்கி, பூமி மறையும்படி தடாதகைப் பிராட்டியின் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

அத்தன்மையை யுடைய பல நாட்டு மன்னர்களும், எள்ளிடவும் இடமில்லையாக நெருங்கி, பசிய கடலைப் போல, நிலமகள் முதுகு ஒடியுமாறு, எங்கும்  பரந்த சேனையை யுடையவராகி, தங்கள் தங்கள் நாட்டிலுள்ள, பலவகை வளங்களையும் எடுத்துக்கொண்டு, பல வழிகள் தோறும், மொய்த்து, பாண்டியர் மன்னனாகிய மலயத்துவசன் திருமகளாரது, மணமுரசு முழங்காநின்ற பழமையாகிய மதுரை நகர்க்கு, வந்திருந்தனர்.

பாரதம் முழுவதையும் ஆண்ட தடாதகைப் பிராட்டியே உண்மையான "பாரதமாதா" ஆவார். பாரதம் வல்லரசாக நல்லரசாக மாறிட, தமிழ் பாரததேசத்தின் பொதுமொழியாக நாம் நம் தடாதகைப் பிராட்டியை வணங்குவோம். ஓம்.

அன்பன்
காசிஸ்ரீ நா.ரா. கி.காளைராசன்

(தடாதகைப் பிராட்டியார்) 
திருமணப் படலம் பாடல்கள்

தென்னர்சேகரன்றிருமகடிருமணத்திருமுகம்வரவேற்று
மன்னர்வந்தெதிர்தொழுதுகைக் கொண்டுதம்மணிமுடிமிசையேற்றி
அன்னவாசகங்கேட்டனர்கொணர்ந்தவர்க்கருங்கலந்துகினல்கி
முன்னரீர்த்தெழுகளிப்புறமனத்தினுமுந்தினர்வழிச்செல்வார்

கொங்கர்சிங்களர்பல்லவர்வில்லவர்கோசலர்பாஞ்சாலர்
வங்கர்சோனகர்சீனர்கள்சாளுவர்மாளவர்காம்போசர்
அங்கர்மாகதராரியர்நேரியரவந்தியர்வைதர்ப்பர்
கங்கர்கொங்கணர்விராடர்கள்மராடர்கள்கருநடர்குருநாடர்

கலிங்கர்சாவகர்கூவிளரொட்டியர்கடாரர்கள்காந்தாரர்
குலிங்கர்கேகயர்விதேகர்கள்பௌரவர்கொல்லர்கள்கல்யாணர்
தெலுங்கர்கூர்ச்சரர்மச்சர்கள்மிலேச்சர்கள்செஞ்சையர்முதலேனைப்
புலங்கொண்மன்னருந்துறைதொறுமிடைந்துபார்புதைபடவருகின்றார்

இத்தகைப்பலதேயமன்னவர்களுமெண்ணிடம்பெறாதீண்டிப்
பைத்தவாழிபோனிலமகள்முதுகிறப்பரந்ததானையராகித்
தத்தநாட்டுளபலவகைவளனொடுந்தழீஇப்பலநெறிதோறும்
மொய்த்துவந்தனர்செழியர்கோன்திருமகள்முரசதிர்மணமூதூர்

அன்பன்