plate theory லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
plate theory லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 செப்டம்பர், 2019

Ganga Puranam Theory

Ganga Puranam Theory :













Ganga was a celestial sedimentary water ice planet. It was attracted by the earth and fall on at the place of takalamakan desert.
When its water flowed on earth, the colluvium & alluvium formed Thailand, Indonesia and Japan landscapes.

kalairajan26@gmail.com
Kalairajan Krishnan
18 செப்டம்பர், 2017 · Tiruppuvanam

திங்கள், 10 டிசம்பர், 2018

defaults in plate tectonic theory (1), Theory of formation of Himalayas

Theory of formation of Himalayas

Defaults in Plate Tectonic Theory (1)




இமயமலையின் தோற்றம் பற்றிய கருத்துகளில் உள்ள பிழைகள்.

“இந்திய உபகண்டம் 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்தி வெகு வேகமாக ஆசியக் கண்டத்தை நோக்கி வந்து மோதியது.  இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 10 செ.மீ. நகர்கிறது. 10 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு 1000 கி.மீ.  நகர்ந்திருக்கும். 




default -1

 2000
கி.மீ. நீளத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட கண்டங்கள் மோதிக் கொண்டதாம்,

 
கடலில் இருந்த படிமங்கள் எல்லாம் காணக் கிடைக்கிறதாம்.

 
ஆனால் 2000 கி.மீ. தூரத்தில் எங்கும் கடற்கரைமணல் மட்டும் காணக் கிடைக்கவில்லையாம்.(கோணல் 1)
 
இது எப்படிச் சாத்தியமாகும் ?
 ......... ....... .......


 
இந்தக் கடற்கரைகளில் மணல் இருக்கிறதா?

இந்தக் கடற்கரைகள் எந்த இடத்தில் உள்ளன?
2000
கி.மீ. நீளத்தில் ஒருஇடத்தில்கூட கடற்கரைமணல் இல்லாமல் இருக்க முடியாது என்பது எனது கருத்து.
மிகப் பெரிய கடல்வாழ் உயிரினத்தின் படிமம் இமயமலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  அவ்வளவு பெரிய உயிரினம் கடலில் எவ்வளவு ஆழத்தில் இருந்திருக்கும். அவ்வளவு ஆழத்தில் கடல்மணல் கிடையாதா?
அதுமட்டும் இமயமலையின் மேற்பகுதிக்கு வந்துவிட்டது ! கடற்மணல் வரவில்லையா ? என்பதே எனது ஐயம்.

default -2
 
வருடந்தோரும் இந்தியத்துணைக் கண்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து ஆசியாக் கண்டத்துடன் மோதுகிறதாம்.  அதனால் இமயமலை உருவாகி உயர்ந்துகொண்டே வருகிறதாம்.
 (
படங்களை இணைத்துள்ளேன்).

 
ஆனால் இமயமலையின் CHD, AHT, MCT, MBT முதலான அடுக்குகள் அங்குலம் அங்குலமாக உயராமல் அப்படியே layer by layer ஆக bedding அமைப்பில் அமைந்துள்ளதாம்.
 (
கோணல் 2)
 
இது எப்படிச் சாத்தியமாகும் ?
 
அறிந்தோர் அன்புடன் விளக்கி உதவிட வேண்டுகிறேன்.
default -3
இந்தியத் துணைக்கண்டமும் மடகாசுக்கர் தீவும் ஒன்றாக ஒட்டியிருந்தன.  கண்டங்கள் இடம் பெயர்ந்து நகரும்போது, 587,041 km² பரப்பளவு கொண்ட மடகாசுக்கர் தீவு சுமார் 2000 கி.மீ. நகர்ந்துள்ளதாம்,  ஆனால் ‎4,400,000 km2
பரப்பளவு கொண்ட இந்தியத் துணைக்கண்டம் சுமார் 6000 கி.மீ. நகர்ந்துள்ளதாம்.

அதாவது சற்றொப்ப 7.5 மடங்கு பெரியதான இந்தியத் துணைக்கண்டம் 3 மடங்கு கூடுதலான வேகத்துடன் நகர்ந்துள்ளதாம். 

------------------------------------------------

கங்கா புராணம் கோட்பாடு

விண்கோள் ஒன்று பூமியில் மோதிப் பூமியைத் துளைத்து உள்ளே சென்றுள்ளது.  இதனால் உண்டான வெளி விளிம்பு ( rim )  இமயமலைத் தொடராகும்.  இதைப் புராணம் “ நேமி மாலை வரை” எனக் குறிப்பிடுகிறது.   நேமி என்றால் சக்கரம் என்று பொருள்.  மால் என்றால் மிகப் பெரிய, மிக உயர்ந்த என்று பொருள்.  வரை என்றால்  தடுப்பு அல்லது மலை என்று பொருள்.

இமயமலையானது வட்ட வடிவிலானது எனப் புராணம் குறிப்பிடுகிறது.  






  


முடிவு (Conclusion) 
இந்தியத் துணைக்கண்டம் திபெத் நிலத்திட்டில் மோதி இமயமலையை உருவாக்கவில்லை.  கங்கன் என்ற பெயருடைய விண்கோள் ஒன்று பூமியில் மோதித் துணைத்துச் சென்ற காரணத்தினால் உண்டான விளிம்பு (Rim) இமயமலையாக உள்ளது.

கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்த காரணத்தினால் பூமியின் மேற்பரப்பு பிளவுபட்டு கண்டங்களாக மாறிக் கண்டப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.  

கங்கன் என்ற விண்கோள் பூமியைத் துளைத்துச் சென்ற காரணத்தினால் இந்தியத் துணைக் கண்டம் அப்படியே உள்ளது.  இந்தியத் துணைக் கண்டமும், திபெத் கண்டமும் கண்டப் பெயர்ச்சி அடையவில்லை.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



புதன், 4 ஏப்ரல், 2018

இமயமலையின் தோற்றம், கங்கா புராணக் கோட்பாடு

இமயமலையின் தோற்றம்  
(கங்கா புராணக் கோட்பாடு) 

மஹாதேவன் பார்வதியுடன் பகீரதனுக்குப் பிரஸன்னமாய், “ராஜச்ரேஷ்ட, உன் தபஸால் திருப்தியடைந்தேன். உன்னிஷ்டப்படி பர்வதராஜ புத்திரியான கங்கையைத் தலையில் தரிக்கிறேன்“ என்றார்.  அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.  விழுந்தவுடன்ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள். பின்னர் மஹாதேவன், பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார். "... ... ... என்கிறது கங்கா புராணம்.
இதனால், 
கங்கை என்ற விண்ணீர்வியனுலகு பூமியில் இறங்குவதற்கு முன்பே இமயமலை இருந்துள்ளது என்றும், 
கங்கை என்ற விண்ணீர் முழுவதையும் தேக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கான மிகப் பெரிய மலைத்தொடர்களும் பள்ளத்தாக்குகளும்  இருந்துள்ளன என்றும் கருத வேண்டியுள்ளது.
Collision of ‘Gangan’ (a celestial planet of 2000 k.m. radius) on Earth formed the Himalayan mountain Ranges.  (Himalaya is not formed due to collision of Indian plate with China Plate)

மிகப் பெரிய, சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் ஒன்று இப்போது இமயமலை இருக்கும் இடத்தில் விழுந்துள்ளது.  நாம் இதைக் "கங்கன்" என்ற பெயரால் அழைப்போம்.
கங்கன் விழுந்ததனால் இதைச் சுற்றிலும்  உயரமான வட்ட வடிவமான மலைத் தொடர்கள் உருவாகி யுள்ளன.  இப் பெரிய உயர நீண்ட மலைத் தொடரின் தென்பகுதியே தற்போதிருக்கும் இமயமலைத் தொடர் ஆகும்.
கங்கன் பூமியில் விழுந்து பலகாலம் கழித்து, இதே இடத்தில் கங்கை என்ற நீர்க்கோள் இறங்கியுள்ளது. 
இதில் இருந்த நீரால் இமயமலையின் கிழக்கு மேற்கு வடக்குப் பகுதிகள்
அடித்துச் செல்லப்பட்டுள்ளன.



pacific ring of fire formation of volcanoes

இமயமலைக் கோட்பாடு :
1)  சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் பூமியைத் (துப்பாக்கிக் குண்டு போல்) துளைத்துச் சென்றதால் உருவானது இமயமலைத் தொடர். 
2) இமயமலை ஒரு வட்டவடிவமான மலைத் தொடர்.
3) இதன் அடிப்பகுதி மிகவும் கடினமான கிரானைட் பாறைகளால் ஆனது.  இதைக் “கல் தோன்றிய காலம்” எனத் தமிழ் இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
4) இந்தப் பாறைகள் மிகவும் பழைமையானவை.
5) கண்டப் பெயர்ச்சியால் இமயமலை உருவாகவில்லை.
6) கங்கன் பூமியில் மோதிய காரணத்தினால் பூமியின் மேற்பரப்பில் 71சதம் நிலப்பரப்பு காணாமல் போய் விட்டது.
7) எஞ்சிய 29சதம் நிலப்பரப்பு கண்டங்களாக இடம் பெயர்ந்துள்ளன.
8) இந்தியத் துணைக்கண்டமும் சீனாவின் நிலப்பகுதியும் அதே இடத்தில்தான் உள்ளன.  
9) கங்கன் விழுந்த இடத்தின் மறுபக்கத்தில், அதாவது பூமியின் மறு புறத்தில் ஆழமான அட்லாண்டிக் பகுதி உருவானது
10) கங்கன் விழுந்த காரணத்தினால், 
பூமிக்குள் எரிந்து கொண்டிருந்த லாவா குழம்புகள் அட்லாண்டிக் கடலைச் சுற்றிலுமுள்ள  பகுதிகளில் எரிமலைத் தொடர்களாய் (Ring of Fires) உருவாகி உள்ளன.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

குறிப்பு
1) கங்கன் பூமியில் மோதிச் சேர்ந்த காலத்தில் பூமியின் பௌதிகத் தன்மையானது இப்போதுள்ள பூமியின் பௌதிகத் தன்மை போன்று இல்லை. கல்போன்று கடினமாக இல்லாமல்  தார் போன்று (Tar is a dark brown or black viscous liquid) கடினமான திரவநிலையில் இருந்திருக்க வேண்டும்.  இதனால் 2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் பூமியில் மோதிபோது, பூமியானது சிதறிப் போகாமல், கங்கன் என்ற விண்கோளை அப்படியே உள்வாங்கிக் கொண்டுள்ளது எனக் கருதுகிறேன்.
2) படங்களில் பூமி இப்போது வடிவம் உள்ளது. கங்கன் பூமியில் விழுந்த போது,  படங்களில் இருப்பது போல் இருந்திருக்க வில்லை என்பதையும், கண்டங்கள் எல்லாம் ஒன்றாய் ஒட்டி இருந்தன என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டுகிறேன்.
3) இமயமலை முன்னொரு காலத்தில் கடலாக இருந்தது என்ற கருத்து தவறானது.  இமயமலையில் கங்கை என்ற விண்ணீர்க்கோள் இறங்கியுள்ளது.  அதில் ஆமை சிம்சுமாரம் முதலான நீர்வாழ் உயிரினங்கள் இருந்ததாகப் புராணம் கூறுகிறது.  எனவே, இமலையில் காணப்படும் உயிரினங்கள் கடலில் வாழ்ந்தன அல்ல.  அவை கங்கையுடன் விண்ணில் இருந்து மண்ணிற்கு வந்த உயிரினங்கள் ஆகும்.