புதன், 25 ஜூலை, 2018

கீழடியை அழித்தது வைகை ஆற்றுப் பெருக்கா ? அல்லது கடல்கோளா ?

கீழடியை அழித்தது வைகை ஆற்றுப் பெருக்கா ?
அல்லது
வைகை ஆற்றின் வழியாக ஊடுறுவிய வங்கக் கடல் பெருக்கா ?

"கடற்கரை யோரம் உள்ள பூம்புகார் கடலால் அழிந்துள்ளது" என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
"கூடல் என்ற மதுரை (கீழடி) அழிந்தது வைகை ஆற்றுப் பெருக்கால்" என்றால் ஏற்று க் கொள்ளலாமா ?
வைகை ஆறு மேற்கில் இருந்து கிழக்காக ஓடுகிறது.
வைகை ஆற்றுப் பெருக்கால் கூடல் என்ற மதுரை அழிந்துள்ளது என்று கொண்டால், அந்தத் தொன்மை யான நகரின் மீது படிந்துள்ள மணற் திட்டுகள் மேற்கிலிருந்து கிழக்காக இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் அப்படி இல்லையே !
கீழடியில் படிந்துள்ள மணற் திட்டுகள் கடல் உள்ள கிழக்கு திசையிலிருத்து மேற்காக அல்லவா படிந்துள்ளன.

இதானால் , கடலில் உண்டான சுனாமியானது, வைகை ஆற்றின் வழியாகக் கிழக்கிலிருந்து மேற்காக மண்ணை அடித்துச் சென்றுள்ளது என்பதுதானே சரியாக இருக்கும்.

கூடல் என்ற மதுரை (கீழடி)யில் படிந்துள்ள மண் திட்டுகள் கிழக்கிலிருந்து மேற்காக உள்ளதே அது பெரும் (சுனாமி) கடல்கோள் ஒன்றினால் அழிந்துள்ளது என்பதை உறுதிசெய்யப் போதுமான சான்றாகும்.

தமிழரின் தொன்மை போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.

வேண்டுகோள் :
புவியியலாளர் புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டு (கு)தர்க்கங்கள் பேசிக் கொண்டிருக்காமல்,  கீழடி சென்று அங்கு மண்திட்டுக்கள் எப்படி வந்து படிந்து இந்தப் பழைமையான நகரை அழிந்துள்ளன என ஆராய்ந்து கூறிட வேண்டிக் கொள்கிறேன்.

2 கருத்துகள்:

  1. பெரும்பாலும் ஆறுகளின் வெள்ளமிகையால் மண்படியும். சிந்துவெளியும் அவ்வாறே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆற்றுப் படுகைகளில் உள்ள ஊர்களை மட்டும் மண் மூடவில்லை. மலைப்பகுதிகளில் உள்ள ஊர்களையும் மண் மூடித்தான் உள்ளது.

      நீக்கு