திருப்பதி , கடப்பா, கர்ணூல், கந்திகொட்டா
மலைகளும்,
பென்னாறும்
உருவானது எப்படி ?
பாரதத்தில் மிகப் பெரிய பள்ளத்தாக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் இருக்கிறது. 'கந்திகோட்டா' என்ற கிராமத்தில் இருந்து இந்தப் பள்ளத்தாக்கைப் பார்க்கலாம். ‘கந்தி’ என்றால் தெலுங்கில் 'பள்ளத்தாக்கு' என்று பொருள் என்கின்றனர். 'கந்த' என்றால் 'கிழிந்த' என்று பொருள். மலையைக் கிழித்துக் கொண்டு ஆறு ஓடுகின்ற காரணத்தினால் இந்தப் பெயர் உண்டாகி யிருக்கலாம்.
இது மிகவும் அழகானது.
பென்னாறு நதி எர்ராமலையின் குறுக்கே மலையைப் பிளந்து கொண்டு ஓடுகிறது. இதனால் இந்தப் பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளது. இங்கே, பாறைகள் பல்வேறு வண்ணங்களில் மிகவும் அழகாக அடுக்கி வைத்தன போன்று காணப்படுகின்றன.

இரண்டு பக்கமும் உயர்ந்த மலைகளில் உள்ள பாறை அடுக்குகளுக்கு நடுவே அதலபாதாளத்தில் பென்னாறு ஓடுவது வியப்பாக இருக்கும். அவ்வளவு அற்புதமாக இருக்கும்!
இயற்கை அற்புதங்களில் ஒன்றான இந்தக் கந்திகோட்டா பள்ளத்தாக்கு எப்படி உருவானது ?
பென்னாறு கடினமான பாறைகளை எப்படி கிழித்துக் கொண்டு சென்றுள்ளது ?

புராதன காலத்தில் பிரளயம் உண்டாகி, அதனால் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) தோன்றி தமிழகத்தை அழித்ததாகத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன !
அப்போது தோன்றிய கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) கடலுக்குள் ஆழ்கடலின் அடியில் படிந்துகிடந்த 'கடற்களிமண்'ணை அடிந்து அள்ளிவந்து கரை சேர்த்துள்ளது. தரைக்கு அடித்துவரப்பட்ட கடல்நீர் மீண்டும் கடலுக்குத் திரும்பும் போது இந்தக் கடற்களிமண்மலை தடுத்துள்ளது. தேங்கி நின்ற கடல்நீர் இந்தக் கடற்களிமண் மலையைக் கிழித்துக் கொண்டு சென்று கடலில் கழந்துள்ளது. காலப்போக்கில் கடற்களிமண் காய்ந்து பாறைகளாக உருமாறி உள்ளன. கடல்நீர் கடந்து சென்ற பாதையானது 'பென்னாறு' என்ற பெயரில் ஆறாக மாறியுள்ளது.
https://youtu.be/Wl0NoHbQOP8

இந்த மலைத் தொடரின் வழியாக 2014 & 2015 ஆண்டுகளில் பாதயாத்திரை செல்லும் போது இந்த மலையைக் கண்டு வியந்தேன்.
திருப்பதி மலைக்கு மேலே உள்ள 'பாவவிநாசம்' மலைகளின் பாறைகளும் இதே போன்று கடற்களிமண்ணால் உருவானவைதான். காலப்போக்கில் கடற்களிமண் காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது.

தமிழரின் தொன்மை போற்றுவோம்.
பண்டைத் தமிழிலக்கியங்களின் உண்மை போற்றும்.

அன்பன்
கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக