புதன், 31 அக்டோபர், 2018

வியாழன், 11 அக்டோபர், 2018

லாடனேந்தலில் பழமையான உறைகிணறு கண்டெடுப்பு

திருப்புவனம் அருகே லாடனேந்தலில்
2 ஆயிரம் ஆண்டு பழமையான
உறைகிணறு கண்டெடுப்பு

தினகரன் செய்தி
 2018-10-10@ 20:20:20


திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழடியில் தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடந்த ஆய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் கீழடியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள், நகரங்கள் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கீழடி கண்மாயில் நேற்றுமுன் தினம் பழமையான உறைகிணறு கண்டறியப்பட்டது.

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது உறைகிணறு தென்பட்டது. இதுகுறித்து கீழடியில் உள்ள தமிழக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறையினர் உறைகிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இயந்திரம் தோண்டும்போது உறை கிணற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘லாடனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு 2 ஆயிரம் ஆண்டு பழமையானது’ என்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=442295

செவ்வாய், 9 அக்டோபர், 2018

இமயமலை இப்படித்தான் உருவாகியுள்ளது.

இமயமலை இப்படித்தான் உருவாகியுள்ளது.


கங்கன் என்ற விண்கோள் விழுந்த காரணத்தினால் இமயமலைத் தொடர் உருவாகியுள்ளது.  இது விழுந்ததால் பூமியின் மறு பகுதியில் இருந்த நிலப்பகுதிகள் இல்லாமல் போயின.  பூமிக்குள் இருந்த தீக்குழம்புகள் வெளிவந்து "ring of fire" என்று அழைக்கப்படுகிற எரிமலைத் தொடர்களை உருவாக்கியுள்ளது. இதனால் பூமியின் நிலப்பரப்பு கண்டங்களாகப் பிளவு பட்டு,  பெயர்ச்சி அடைந்துள்ளன. இந்தியத் துணைக்கண்டம் இடம் பெயராமல் ஆசியக் கண்டத்துடன் இணைந்தே உள்ளது.

இணைப்பில் உள்ள படத்தைப் பார்க்கவும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1741675119238612&id=100001884215718

---------------------------------------

Ganga Puranam Theory :
1) கங்கை என்ற விண்ணீர்வியனுலகு பூமியில் வீழ்வதற்கு முன்பே, அதைவிட மிகப்பெரிய விண்கோள் ஒன்று பூமியில் அதே இடத்தில் விழுந்துள்ளது. 
2) இந்த மிகப்பெரிய விண்கோள் விழுந்த காரணத்தினால்தான் இமயமலை தோன்றியுள்ளது.
3) இந்த விண்கோள் பூமியில் மோதியபோதுதான் கண்டங்கள் இடம் பெயர்ச்சி அடைந்துள்ளன.
4) இந்தியா அதே இடத்தில்தான் என்றும் உள்ளது,  மற்றைய கண்டங்கள்தான் இடப் பெயர்ச்சி அடைந்துள்ளன.

The Himalayan mountain range formed due to a huge celestial planet fall on earth in that place.
The mountain range of Himalaya is existing, whereas the other parts of it were eroded by the Ganga’s (a celestial water ice planet’s) water flow.  The colluvium  & alluvium formed the Indonesia, japan, turkey lands.
----------------------------------------

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

Theory of Tsunamis பசியாபுரம் தொல்லியல் தடையங்கள் கண்டுபிடிப்பு


Theory of Tsunamis 
பசியாபுரம் 
தொல்லியல் தடையங்கள் கண்டுபிடிப்பு


தினமலர்செய்தி -
திருப்புவனம், அக்.7--2018
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பசியாபுரம் அருகே கண்மாயில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய பழங்காலத்து உறைகிணற்றை சிறுவர்கள் கண்டறிந்துஉள்ளனர்.திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் 4ம் கட்ட அகழாய்வு முடிவடைந்து விட்டது. கீழடியில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளபசியாபுரம் அருகே கிராம கண்மாயில் நேற்று சிறுவர்கள் மணல் அள்ளிய பள்ளங்களில் விளையாடினர். அப்போது பழங்கால மண்பானையை கண்டு கீழடியில் இருந்த தமிழக தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ததில் மூன்று அடுக்குகள் கொண்ட உறைகிணறும் தண்ணீர் எடுக்க பயன்படுத்திய மூன்று மண் பாத்திரங்களும் இருந்தன. ஒரு மண் பானை சேதமடையாமல் முழுமையாக கிடைத்துஉள்ளது. கீழடியில் கிடைத்த உறைகிணறுகள் சாதாரணமானகிணறுகள். பசியாபுரம் அருகே கண்மாயில் வேலைப்பாடுடன் கூடிய கிணறும் தண்ணீர் எடுக்க பயன்படும் பாத்திரங்களும் கிடைத்துள்ளன.  


பசியாபுரம் - இருப்பிடம்
தொல்லியல்துறையினர் அகலாய்வு செய்து வரும் இடத்திற்குச் செல்லும் பாதையில் பசியாபுரம் உள்ளது.  பசியாபுரத்தில் இருந்து 1கி.மீ. தொலைவில் தொல்லியல்துறையினர் அகலாய்வு செய்து வரும் இடம் உள்ளது.



இந்தக் கிணற்றைக் கண்டு பிடித்த ஆதீஸ்வரன், சாந்தமுருகன், ஈஸ்வரபாண்டி ஆகிய மூவரையும், அதிகாரிகளும், மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

http://www.seithipunal.in/tamilnadu/3-boys-found-an-ancient-well-near-keeladi


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்