செவ்வாய், 5 டிசம்பர், 2017

Theory of Tsunamis மதுரைக்கு வந்த வங்கக் கடல் (கடல்வெள்ளம், பெருஞ் சுனாமி )

Theory of Tsunamis
மதுரைக்கு வந்த வங்கக் கடல்
(கடல்வெள்ளம், பெருஞ் சுனாமி )

திருவிளையாடல் புராணம் பிரளயம் ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து கடல்வெள்ளம் (சுனாமி) மதுரையை அழித்தது பற்றியும் பல பாடல்களில் மிகவும் தெளிவாகக் கூறுகிறது.

பிரளயத்தில் உண்டான வங்கக்கடல் வெள்ளமானது (பெருஞ் சுனாமியானது) மாடங்களையுடைய மதுரை மாநகரை மூழ்கடித்தது, இது எவ்வாறு இருந்தது என்றால்,  
ஞாயிறு (சூரியன்) டன் திங்கள் (சந்திரன்) இணைந்து இருக்கும் போது, நஞ்சு பொருந்திய வாயினையுடைய, கரிய உடலையும் வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராகு என்னும் பாம்பானது,  அதனை விழுங்குதற்கு விரைந்து வருதலைப் போன்று இருந்தது.  மேலும், கரிய   மேகங்கள் மதுரையை மறைத்ததைப் போன்று வங்கக்கடல் வெள்ளமானது மதுரைமேல் தோன்றி அழித்தது.  
மதுரைக்கு வந்த வங்கக்கடல்வெள்ளத்தை (பெருஞ் சுனாமியை) வேறு எந்த எடுத்துக் காட்டுகளால் கூறுவது?

அந்தமானை ஒட்டியிருந்த சுமர் 1,70,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள நிலப்பரப்பு கடலில் மூழ்கியுள்ளது.
இதனால் தோன்றிய கடல்வெள்ளம் மதுரையை மையமாகக் கொண்டு தென்னிந்தியா முழுவதையும் அழித்துள்ளது.


தொடர்புடைய 
திருவிளையாடல் பாடல்கள்

வங்கவேள்வெள்ளமாடமதுரைமீதுவருசெயல்
கங்குல்வாயதிங்கண்மீதுகாரிவாயகாருடல்
வெங்கண்வாளராவிழுங்கவீழ்வதொக்குமலதுகார்
அங்கண்மூடவருவதொக்குமல்லதேதுசொல்வதே.


கங்கைப்புனல்வடிவாகியகவ்வைதிரைவையைச்
சங்கச்சரியறலாமலர்த்தாரோதியைநோக்கா
வங்கக்கடல்பேரூழியில்வருமாறெனவெவரும்
இங்கற்புதமடையப்பெருகென்றானருள்குன்றான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக