Theory of Tsunamis
கூடல் இலங்கு குருமணி
(கீழடியில் புதையுண்டுள்ள கோயில்)
(கீழடியில் புதையுண்டுள்ள கோயில்)
மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 12கி.மீ. தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற ஊருக்கு அருகே உள்ள பள்ளிச்சந்தை என்ற இடத்தில் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து பூமிக்குள் புதைந்துள்ள மிகவும் தொன்மையான நகர் ஒன்றைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ளனர்.
சிறப்பாகச் செயல்பட்டு தமிழரின் தொன்மையான நகரைக் கண்டறிந்து உலகறியச் செய்த தொல்லியல் துறையினருக்கு நமது நன்றிகைளைத் தெரிவித்துக் கொள்வோம்.
தொல்லியல் துறையினர் இந்த அகழாய்வு நடைபெறும் இடம் மணலூர் கண்மாயின் மேற்குப் பகுதியாகும். மணலூர் மிகவும் தொன்மையான ஊராகும். இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்தவூருக்கு மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.
உக்கிரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பிரளயம் ஏற்பட்டு சுனாமி உண்டாகி மதுரை நகர்வரை வந்துள்ளது. அப்போது மணவூரை மண்மூடி விட்டது.
மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணப் பாடல்களில் உள்ளன. இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த குலசேகரபாண்டியன் என்ற மன்னனே தற்போதுள்ள மதுரை நகரைத் திட்டமிட்டு உருவாக்கினான். மதுரை நகரில் மக்கள் அனைவரையும் குடியேற்றம் செய்தான்.
இன்ன ரம்புள ரேழிசை யெழான்மிடற் றளிகள்
கின்ன ரம்பயில் கடம்பமா வனத்தினின் கீழ்சார்த்
தென்னர் சேகர னெனுங்குல சேகர னுலக
மன்னர் சேகர னரசுசெய் திருப்பது மணவூர். (திருவிளையாடற் புராணப் பாடல்)
தீந்தண் புனல்சூழ் வடபுலத்து மணவூ ரென்னுந் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திருமரபின் விளங்குஞ் சோம சேகரனென்
றாய்ந்த கேள்வி யவனிடத்துத் திருமா தென்ன வவதரித்த
காந்தி மதியை மணம்பேச விருந்தா ரற்றைக் கனையிருள்வாய். (திருவிளையாடற் புராணப் பாடல்)
நென்ன லெல்லை மணம்பேச நினைந்த வாறே யமைச்சர்மதி
மன்னர் பெருமான் றமரோடு மணவூர் நோக்கி வழிவருவார்
அன்ன வேற்தன் றனைக்கண்டா ரடல்வேற் குமர னனையானெந்
தென்னர் பெருமான் குமரனுக்குன் றிருவைத் தருதி யெனவனையான். (திருவிளையாடற் புராணப் பாடல்)
தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர். புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன. மணவூரின் தொன்மையையும் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.
அன்பன்
கி.காளைராசன்
புராணம் புளுகு இட்டுக்கட்டிய கதை. ஆனா வரலாறு உண்மை. இரண்டும் வேறு. சாட்சி இருந்தா வரலாறு.
பதிலளிநீக்குகட்டுரையைப் படித்துப் பார்த்துப் பதில் அளித்ததற்கு நன்றி.
நீக்குஆனால் புராணங்கள் புளுகு இட்டுக்கட்டிய கதை என்று எதனடிப்படையில் சொல்லுகின்றீர்கள் எனத் தெரியவில்லை. எந்தப் புராணத்தைப் படித்துள்ளீர்கள் அதில் கூறப்பட்டுள்ள எந்தக் கருத்தைப் புளுகு என்றும் இட்டுக் கட்டிய கதையென்றும் கூறுகின்றீர்கள் எனத் தெரியவில்லை.
வரலாற்றுக்கள் அனைத்தும் காலங்கள் செல்லச்செல்லச் சுருங்கி ஆதாரமற்றவைகளாக மாறிவிடும்.
நாம் நமது முன்னோர்களின் பெயர்களே ஒழுங்காக முறையாக அறிய மாட்டோம். ஆனால் அறியாத படிக்காத புராணங்களைப் புளுகு என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
...வரலாறு உண்மை. இரண்டும் வேறு. சாட்சி இருந்தா வரலாறு./..
பதிலளிநீக்குமிகவும் சரி.
ஆனால் நாம் நமது தாய்தந்தை, ஐயாஅப்பத்தா, பாட்டன்பாட்டி பெயர்களை அறிவோம். உங்களது பாட்டன் பெயரை நிறுவுவதற்கான சான்று கொடுங்கள் என்று கேட்டால் நாம் எதைக் கொடுக்க முடியும். வீட்டில் ஏதேனும் பழைய பத்திரங்கள் இருந்தால் காட்டலாம். இந்தப் பத்திரங்கள் போன்றவைதான் இன்றைய இதிகாசங்களும் புராணங்களும். காலஓட்டத்தில் எழுதி வைத்த எழுத்துக்கள் கூட மறைந்துவிடும். ஆனால் கருத்து மறையாமல் கதைகதையாக நமது வம்சத்தினரால் சொல்லப்பட்டுக்கி கொண்டே இருக்கும்.