திருவிளையாடல் புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவிளையாடல் புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 மார்ச், 2019

எழுகடல் தெரு - பெயர்க்காரணம்

எழுகடல் தெரு - பெயர்க்காரணம்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள தெருவிற்கு “அம்மன் சந்நிதி தெரு” என்று பெயர் வைத்துள்ளனர்.  ஆனால் சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள தெருவிற்குச் “சுவாமி சந்நிதி தெரு” என்ற பெயரில்லை.  சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள தெருவிற்கு “எழுகடல்தெரு ” என்று பெயர் வைத்துள்ளனர். 

சுவாமிக்கு உரிய இடத்தில் சுவாமியின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எழுகடல்தெரு என்று கடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பெயர் வைத்துள்ளதர்கான காரணம் என்ன?

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள், தமிழகக் கடற்கரை ஊர்களைச் சுனாமி தாக்கி அழித்ததை அனைவரும் அறிவோம்.  பண்டைக்காலத்தில் மதுரைவரை கடல்வெள்ளம் (சுனாமி) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. 

விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து, வெள்ளி போன்று நுரைகள் ததும்ப, கடற் சங்குகள் ஓசையிடுவது போன்ற சத்தத்துடன், ஆண் சுறாமீன்களையும் முத்துச் சிப்பிகளையும் அள்ளிக் கொண்டு, கடல்அலைகள் வரிசையாக ஏழு நிறங்களுடன் மதுரைவரை வந்து, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குக் கிழக்கே உள்ள குளத்தில் தங்கின என்கிறது திருவிளையாடற் புராணம்.   எழுகடலும் பொங்கி வந்த இடத்தை எழுகடல்தெரு என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.  இங்கே காஞ்சனமாலைக்குக் கோயிலும் அருகே குளமும் உள்ளன.  இந்தக் குளத்தில், கடல்வெள்ளத்தினால் உருவான ஏழுநிறங்களினால் ஆன பாறைகள் மற்றும் சிப்பிகள் சங்குகள் சுறாமீன்கள்  இவற்றின் எச்சங்கள் கிடைத்திடும் வாய்ப்புகள் உள்ளன. எனவே எழுகடல் தெருவில் உள்ள குளத்தை முறையான அகழாய்விற்கு உட்படுத்துவதால், பண்டைக்காலத்தில் மதுரைவரை கடல்வெள்ளம் (சுனாமி) வந்த நிகழ்ச்சியை உறுதிப் படுத்தலாம்.

தென்னகம் எங்கும் பல்வேறு வண்ணங்களில் பொக்குப்பாறைகள் விரவிக் கிடக்கின்றன.  இந்தப் பொக்குப்பாறைகளை முறையான ஆய்விற்கு உட்படுத்தினால் அறிவியல் அடிப்படையில் புராணம் கூறும் செய்தியை உறுதி செய்யலாம்.

------------------------------------------------------------------------------------------------

திருவிளையாடற் புராணம்
(8). எழுகடலை அழைத்த படலம்

தடாதகைப் பிராட்டியை மணந்து சிவபெருமான் சுந்தரபாண்டியராகி உலகை ஆண்டுவந்தபோது, முனிவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து சிவபெருமானைத் தரிசித்துச் சென்றனர்.  மதுரைக்கு கௌதம முனிவரும் வந்தார்.  அவரைத் தடாதகைப் பிராட்டியாரின் தாயார் காஞ்சனமாலை அழைத்து வரவேற்றாள். தன் பிறவித் துன்பத்தை நீக்க வல்ல தவம் யாது? என வினவினாள்.  அதற்குக் கௌதம முனிவர், மானதம் வாசிகம் காயிகம் என்னும் மூவகைத் தவங்களில் காயிகங்களே சிறந்தவை என்றும், அவைகளில் தீர்த்த யாத்திரைகள் சிறந்தவை என்றும் கூறினார். அத் தீர்த்தங்களுள் கங்கை நதியே சிறந்தது என்றும், அந்த நதிகளில் தனித்தனியே போய் நீராடுதல் அரிது ஆகையால் அந்நதிகள் எல்லாம் வந்துகூடும் கடலில் நீராடுதல் சாலச் சிறந்தது என்றும் அவர் கூறினர். இதனைக் கேட்டு உணர்ந்த காஞ்சனமாலை தானும் கடலில் நீராடி விரும்பினாள்.   தனது விருப்பத்தைத் தன் மகளான தடாதகைப் பிராட்டியாரிடம் கூறினாள்.  பிராட்டியார் இறைவனிடம் கூறினார்.  தேவியின் திருமொழியினைக் கேட்ட சுந்தர பாண்டியராகிய சிவபெருமான், ‘‘ஒருகடல் என்ன, ஏழு கடலையுமே கூவி அழைப்போம்’’ என்று கூறி அவை வரும்படி எண்ணினார்.

இறைவனது திருவுளம் அறிந்த ஏழு கடல்களும் ஆரவாரித்து, சந்திரனைத் துண்டு செய்தது போன்ற வடிவத்தை உடைய, சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் வாய்விட்டுச் சத்தம் எழுப்பும் படியாக அவற்றைத் தள்ளிக் கொண்டு,  மிக வெள்ளிய நுரைகள் ததும்ப, ஆண் சுறாக்கள் மேலே சுழல, குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசிக் கொண்டு,  அலையலையாக வரிசையாக, அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவும் அளவிற்கு உயர்ந்து  எழுந்தன.  கடல் பொங்கி எழுந்து வருவதைக் கண்ட மதுரை நகர மக்கள் நடுங்கினர்.  கலியுக முடிவின் போது பிரமனுடைய படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல கடல்கள் பொங்கி எழுத்தன.   பொங்கி எழுந்த ஏழு கடல்களும்,  பாம்பினையணிந்த சிவபெருமானது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, கிழக்கே இருந்த குளத்தில் சென்று அடங்கின.  இதனால், பொன்னிறமுடைய தாமரை மலர்ந்து இருந்த அந்தக் குளத்தில், ஏழு கடலின் வெவ்வேறு நிறங்களும் கலந்து சிவபெருமானுடைய எட்டு வகையான வண்ணங்களில்  அந்த குளம் விளங்கியது.

885. 
என்று முனி விளம்பக் கேட்டு இருந்த காஞ்சன மாலை
துன்று திரைக் கடல் ஆடத் துணிவுடைய விருப்பினள் ஆய்த்
தன் திருமா மகட்கு உரைத்தாள் சிறிது உள்ளம் தளர்வு எய்திச்
சென்று இறைவற்கு உரைப்பல் எனச் செழியர் தவக் கொழுந்து அனையாள்.

886. 
தன் தன்னை உடைய பெரும் தகை வேந்தர் பெருமான்
முன் சென்று அன்னம் என நின்று செப்புவாள் குறள் வீரர்க்கு
அன்று அன்னக் குழியு னொடு ஆறு அழைத்த  அருட்கடலே
இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று இரந்தாள்.     
                           
887.     
தேவி திரு மொழி கேட்டுத் தென்னவராய் நிலம் புரக்கும்
காவி திகழ் மணி கண்டர் கடல் ஒன்றோ எழு கடலும்
கூவி வர அழைத்தும் என உன்னினார் குணபால் ஓர்
வாவி இடை எழுவேறு வண்ணமொடும் வருவன ஆல். 

888.     
துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட  உதைத்து
வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக்  கொட்பத்
தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை
அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும்.  

889.     
காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்
கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்
பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால்
அவன் அடி சென்று அடைந்தார் போல்  அடங்கியது ஆல்.             

890.     
தன் வண்ணம் எழு கடலின் தனி வண்ணமொடு கலந்து
பொன் வண்ண நறும் பொகுட்டுப் பூம் பொய்கை பொலிவு எய்தி
மின் வண்ணச் சடைதாழ வெள்ளி மணி மன்று ஆடும்
மன் வண்ணம் என எட்டு வண்ண மொடும் வயங்கியது ஆல்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

நன்றி
(திருவிளையாடற் புராணம்  பாடல்கள் - தமிழ் இணையப் பல்கலைக்கழகம் http://www.tamilvu.org/slet/l41d0/l41d0son.jsp?subid=2599 )

வியாழன், 27 டிசம்பர், 2018

பிரளயம் பிளந்த பாறைகள் மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 6)

பிரளயம் பிளந்த பாறைகள் 

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 6)

2004 ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கியுள்ளன.  அந்நிகழ்ச்சியைப் திருவிளையாடல் புராணம் விரிவாகக் கூறுகிறது.  
சுனாமி பற்றிக் குறிப்பிடும் திருவிளையாடற் புராணப் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் உள்ளன.

அந்தமான் நிக்கோபார் நிலப்பரப்பை ஒட்டிப் பெரும் நிலத் திட்டுகள் இருந்துள்ளன. இப் பெரும் நிலத்திட்டுகள் அவற்றின் நிலையிலிருந்து புரண்டு (நிலச்சரிவு) கடலில் மூழ்கியுள்ளன.   இதனால் சுனாமி உருவாகியுள்ளது.  இவ்வாறு நிலத்திட்டுகள் பிரள்வதைப் பிரளயம் என்கிறது திருவிளையாடற் புராணம்.  

அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் பிரளயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுற்றிலும் உள்ள நிலப்பகுதிகளில் பெரும் நிலநடுக்கங்கள் உண்டாகியுள்ளன.  இந்த நிலநடுக்கம் மதுரை உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறன. இந்த நிலநடுக்கங்களினால் பாறைகள் பிளவு பட்டுள்ளன.  இவ்வாறு பாறைகள் பிளவு பட்ட காரணத்தினால், இந்தப் பாறைகளிடையே பெரும் சந்துகள் (இடைவெளிகள்) உருவாகி இருக்கின்றன.  

இங்கே பெரும் நிலநடுக்கத்தால் பாறைகள் பிளவுபட்டுப் பாறைகளிடையே பெருஞ்சந்துகள் உருவாகிக் கொண்டிருந்த அதேநேரத்தில், அந்தமான் நிக்கோபார் பகுதியில் ஏற்பட்ட பிரயத்தைத் தொடர்ந்து பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகியுள்ளது.  அந்த பெருஞ் சுனாமியானது அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பர்மா, இந்தோனேசியா முதலான நாட்டு நிலப்பரப்புகளையும், மதுரையை மையமாகக் கொண்டு தென்னிந்தியாவையும தாக்கி அழித்துள்ளது.  

பிரளயத்தினால் ஏற்பட்ட பெரும் கடல்வெள்ளம் கரையைக் கடந்து தமிழகத்தைத் தாக்கும் போது, கடல்நீரால் அடித்துவரப்பட்ட கழிவுகள் திரண்டு மாபெரும் கழிவுவெள்ளம் ஒன்று தோன்றிச் சுனாமி அலைகளுக்கு முன்னே வந்துள்ளது.  இந்தக் கழிவுவெள்ளமானது முன்னர் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டிருந்த பெரும் சந்துகளில் சென்று சேர்ந்து அடைக்கிறது.  

மண்கடல் வௌவ
பெரும் நிலநடுக்கத்தினால் பாறைகள் பிளவுபட, பிளவுபட்ட பாறைகளுக்கு இடையே சுனாமியின் கழிவுகள் சென்று சேர்ந்து பிளவுகளை அடைத்துள்ளன.  காலப்போக்கில் இவ்வாறு சுனாமிக் கழிவுகளும் பாறைகளுடன் இறுகிப் பாறைகளாக மாறிவிடுகின்றன.
பாறைகளுக்கு இடையே மண்புதைந்த இந்த நிகழ்ச்சியை “மண்புதைக்க, திசைபுதைக்க .... “ கடல்வெள்ளம் வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  

திருவிளையாடற் புராணத்தில் கூறியுள்ளபடி, பிளவு பட்ட பாறைகளிடையே மண்புதைந்து கிடக்கும் “பிரளயப் பிளவுப் பாறைகள்“ இருப்பதைத் தமிழகதில் பழநி அருகே விருப்பாச்சி என்ற இடத்தில் நன்கு காணும்படியாக உள்ளது.

இதைப் போன்று, தமிழகத்தை ஒட்டிய ஆந்திரமாநிலத்திலும் பிரளயத்தினால் பிளவு பட்டு மண்புதைந்து கிடைக்கம் “பிரளயப் பிளவுப் பாறைகள்“ இருப்பதை நன்கு காணமுடிகிறது.
புராணங்கள் எல்லாம் பொய் எனப் பலரும் கூறிவரும் இந்நாட்களில், புராணத்தில் பாடப்பெற்றுள்ள பாடல் வரிகளுக்குப் பொருள்கூறும் வகையிலான “பிரளயப் பிளவுப் பாறைகள்“ பல தமிழகத்திலும் ஆந்திராவிலும் காணக்கிடைக்கின்றன.

பிரளயப் பிளவுப் பாறைகள் 0882.JPG

கொடைக்கானல் மலையில் “குணா குகை“ என்று அழைக்கப்படும் பாறைப்பிளவும் பிரளய காலத்தில் உண்டான மாபெரும் நிலநடுக்கத்தில் தோன்றியதாக இருக்குமோ?

திருவிளையாடல் புராணம் 
பாடல் எண்1299.
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும்
அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்

பாடல் எண் 1302.
மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல்  வருநீத்தம்
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப்
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா

பாடல் எண் 1305.
நிவப்பு உற எழுந்த நான்கு மேகமும் நிமிர்ந்து வாய் விட்டு
உவர்பு உறு கடலை வாரி உறிஞ்சின உறிஞ்ச லோடும்
சிவப் பெரும் கடவுள் யார்க்கும் தேவ் எனத் தெளிந்தோர் ஏழு
பவப் பெரும் பௌவம் போலப் பசை அற வறந்த அன்றெ

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன், 
kalairajan26@gmil.com
ஆடி 25 (10 Aug 2017)

திங்கள், 14 மே, 2018

திருவிளையாடல் புராணம் ஊழி குறித்த 19 பாடல்களின் தொகுப்பு

ஞாலம் முடித்த ஊழி 

(ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 
19 பாடல்களின் தொகுப்பு இது)

ஊழ் குறித்து ஓர் அதிகாரமே இருந்தாலும், ஊழி குறித்து ஒரேயொரு குறள் மட்டுமே உள்ளது.
“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி யெனப்படு வார் “
என்று ஊழியையும் ஆழியையும் தொடர்பு படுத்திக் குறள் கூறுகிறது. திருக்குறள் போன்றே திருவிளையாடல் புராணமும் ஊழியையும் ஆழியையும் சேர்த்தே பாடுகிறது.

ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 19 பாடல்களின் தொகுப்பு இது.

1) 202.
புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்
பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள் 
உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்.
2) 265.
அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்த ஆழி ஊழிப்
பௌவ நீர்
என்ன ஓங்கப் பாணியால் அமைத்து வேணித் 
தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து மா தீர்த்தம் ஆக்கிக் 
கை வரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்.
3) 625.
சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி 
கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர் 
வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே 
ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.
4) 630.
சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி 
பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில் 
ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்
காலம் கலிக்கும் கடல்
போன்ற களமர் ஆர்ப்பு.
5) 709.
இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின வெண் கொடி ஞாலம்
முடிக்கும் ஊழி நாள்
உளர் கடும் கால் என மூச் செறி விடநாகம் 
துடிக்க வாய் விடு முவண வண் கொடி முதல் சூழ்ந்து சேவகம் செய்யும் 
கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.
6) 1037.
பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என 
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள் 
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து 
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்.
7) 1039.
கொதித்தலைக் கரங்கள் அண்ட கூடம் எங்கும் ஊடு போய் 
அதிர்த்து அலைக்க ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தம் ஆய் 
மதித் தலத்தை எட்டி முட்டி வரும் ஓர் அஞ்சனப் பொருப்பு 
உதித்தல் ஒத்து மண்ணும் விண்ணும் உட்க வந்தது உத்தியே.
8) 1154.
ஐம் பெரும் பூத நிலை திரிந்து ஈர் ஏழ் அடுக்கிய உலகொடு மயன் மால் 
உம்பர் வான் பதமும் உதித்தவாறு ஒடுங்க உருத்தது ஓர் ஊழி வந்து எய்தச் 
செம் பொருள் மறையும் ஒடுங்கிய வழி நாள் செம் சுடர் கடவுள் முன் மலரும் 
வம்பு அவிழ் கமலம் என அரன் திருமுன் மலர்ந்ததால் அகிலமும் மாதோ.
9) 1301.
சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திரு விளையாட்டின் 
சீலமோ நாம் இழைத்த தீ வினையின் திறம் இது வோ 
ஆலமோ உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக்
காலமோ
எனக் கலங்கிக் கடி நகரம் பனிப்பு எய்த.
10) 1313.
ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப் 
பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி 
ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நெளிய திக்கில் 
சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம் கொள்ள.
11) 1608.
அத்து அழன்று எரி குண்டம் நின்றும் அகன் பிலத்து எழுவான் என 
பத்து துஞ்சிருள் வாயும் வாய் இருபாலும் வலிய பகிர் மதிக்கு 
ஒத்தும் நஞ்சு இனம் ஒழுகு பற்களும் ஊழி ஆரல் விழிகளும் 
வைத்து அசைந்து ஒரு வெற்பு வந்து என வந்துளான் ஒரு தானவன்.
12) 1761.
மின் அலங்கள் வாகை வேல் விழுப் பெரும் குலத்தினில் 
தென்னவன் தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டும் நாள் 
முன்னை வைகல் ஊழி தோறும் ஒங்கும் மொய்வரைக்கணே 
மன்னு தண் பராரை ஆல நிழல் மருங்கு மறை முதல்.
13) 1844.
விளை மத ஊற்று மாறி வெகுளியும் செருக்கும் மாறித் 
துளை உடைக் கைமான் தூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த 
உளர் தரு ஊழிக் காலினோடும் ஆம் புரவி எய்த்துத் 
தளர் நடை உடைய வாகித் தைவரும் தென்றல் போன்ற.
14) 2074.
வாழிய உலகின் வானோர் மனிதர் புள் விலங்கு மற்றும் 
ஆழிய கரணம் எல்லாம் அசைவு அற அடங்க ஐயன் 
ஏழ் இசை மயமே ஆகி இருந்தன உணர்ந்தோர் உள்ளம்
ஊழியில் ஒருவன் தாள் புக்கு
ஒடுங்கிய தன்மை ஒத்த.
15) 2637.
அறைந்தவித் தெய்வத்து ஆன அனைத்தும் ஓர் ஊழிக் காலத்து
இறந்த நம் தோழன் கண்ட இலிங்கமாம்
அதனால் இங்கே
உறைந்தனம் உறைதலாலே உத்தர ஆலவாய் ஆய்ச் 
சிறந்திடத் தகுவது இன்று முதல் இந்தத் தெய்வத் தானம்.
16) 2977.
கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச் 
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா 
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும் 
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்.
17) 3082.
வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப் 
பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து 
முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி
எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர்
சேர்ந்தார்.
18) 3123.
ஏழ் இசை மறை வல்லாளர் சிவபாத இதயர் என்னக் 
காழியில் ஒருவர் உள்ளார் கார் அமண் கங்குல சீப்ப 
ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா 
ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார்.
19) 3325.
அடி முடி விலங்கும் புள்ளும் அளந்திடாது அண்டம் கீண்டு 
நெடுகிய நெருப்பு நின்ற நிலை இது முள்வாய்க் கங்க 
வடிவு எடுத்து இருவர் நோற்கும் மலை இது பல்வேறு ஊழி
இடை உற முன்னும் பின்னும் இருக்கும்
இக் குன்றைக் காண்மின்.

‘ஊழிற் பெருவலி யாவுள‘ 
அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்
சித்திரை 31 (14.05.2017) ஞாயிற்றுக் கிழமை.

வெள்ளி, 23 மார்ச், 2018

Theory of Tsunamis மதுரைக்கு வந்த சுனாமி ( எழுகடல் தெரு )

 Theory of Tsunamis
மதுரைக்கு வந்த கடல்வெள்ளம்
( மதுரைக்கு வந்த சுனாமி )
எழுகடல் தெரு - பெயர்க்காரணம்
Madurai Tsunami

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள், தமிழகக் கடற்கரை ஊர்களைச் சுனாமி தாக்கி அழித்ததை அனைவரும் அறிவோம்.  பண்டைக்காலத்தில் மதுரைவரை கடல்வெள்ளம் (சுனாமி) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  

விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து, வெள்ளி போன்று நுரைகள் ததும்ப, கடற் சங்குகள் ஓசையிடுவது போன்ற சத்தத்துடன், ஆண் சுறாமீன்களையும் முத்துச் சிப்பிகளையும் அள்ளிக் கொண்டு, கடல்அலைகள் வரிசையாக ஏழு நிறங்களுடன் மதுரைவரை வந்து, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குக் கிழக்கே உள்ள குளத்தில் தங்கின என்கிறது திருவிளையாடற் புராணம்.   எழுகடலும் பொங்கி வந்த இடத்தை எழுகடல்தெரு என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.  இங்கே காஞ்சனமாலைக்குக் கோயிலும் அருகே குளமும் உள்ளன.  இந்தக் குளத்தில், கடல்வெள்ளத்தினால் உருவான ஏழுநிறங்களினால் ஆன பாறைகள் மற்றும் சிப்பிகள் சங்குகள் சுறாமீன்கள்  இவற்றின் எச்சங்கள் கிடைத்திடும் வாய்ப்புகள் உள்ளன. எனவே எழுகடல் தெருவில் உள்ள குளத்தை முறையான அகழாய்விற்கு உட்படுத்துவதால், பண்டைக்காலத்தில் மதுரைவரை கடல்வெள்ளம் (சுனாமி) வந்த நிகழ்ச்சியை உறுதிப் படுத்தலாம்.
Tsunami rocks in different colours (as mentioned in Thiruvillayadal Puranam)

Different colour rocks
Tsunami rocks in different colours (as mentioned in Thiruvillayadal Puranam)

மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
------------------------------------------------------------------------------------------------

திருவிளையாடற் புராணம்8. எழுகடலை அழைத்த படலம்

தடாதகைப் பிராட்டியை மணந்து சிவபெருமான் சுந்தரபாண்டியராகி உலகை ஆண்டுவந்தபோது, முனிவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து சிவபெருமானைத் தரிசித்துச் சென்றனர்.  மதுரைக்கு கௌதம முனிவரும் வந்தார்.  அவரைத் தடாதகைப் பிராட்டியாரின் தாயார் காஞ்சனமாலை அழைத்து வரவேற்றாள். தன் பிறவித் துன்பத்தை நீக்க வல்ல தவம் யாது? என வினவினாள்.  அதற்குக் கௌதம முனிவர், மானதம் வாசிகம் காயிகம் என்னும் மூவகைத் தவங்களில் காயிகங்களே சிறந்தவை என்றும், அவைகளில் தீர்த்த யாத்திரைகள் சிறந்தவை என்றும் கூறினார். அத் தீர்த்தங்களுள் கங்கை நதியே சிறந்தது என்றும், அந்த நதிகளில் தனித்தனியே போய் நீராடுதல் அரிது ஆகையால் அந்நதிகள் எல்லாம் வந்துகூடும் கடலில் நீராடுதல் சாலச் சிறந்தது என்றும் அவர் கூறினர். இதனைக் கேட்டு உணர்ந்த காஞ்சனமாலை தானும் கடலில் நீராடி விரும்பினாள்.   தனது விருப்பத்தைத் தன் மகளான தடாதகைப் பிராட்டியாரிடம் கூறினாள்.  பிராட்டியார் இறைவனிடம் கூறினார்.  தேவியின் திருமொழியினைக் கேட்ட சுந்தர பாண்டியராகிய சிவபெருமான், ‘‘ஒருகடல் என்ன, ஏழு கடலையுமே கூவி அழைப்போம்’’ என்று கூறி அவை வரும்படி எண்ணினார்.

இறைவனது திருவுளம் அறிந்த ஏழு கடல்களும் ஆரவாரித்து, சந்திரனைத் துண்டு செய்தது போன்ற வடிவத்தை உடைய, சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் வாய்விட்டுச் சத்தம் எழுப்பும் படியாக அவற்றைத் தள்ளிக் கொண்டுமிக வெள்ளிய நுரைகள் ததும்ப, ஆண் சுறாக்கள் மேலே சுழல, குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசிக் கொண்டுஅலையலையாக வரிசையாக, அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவும் அளவிற்கு உயர்ந்து  எழுந்தன.  கடல் பொங்கி எழுந்து வருவதைக் கண்ட மதுரை நகர மக்கள் நடுங்கினர்.  கலியுக முடிவின் போது பிரமனுடைய படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல கடல்கள் பொங்கி எழுத்தன.   பொங்கி எழுந்த ஏழு கடல்களும்பாம்பினையணிந்த சிவபெருமானது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, கிழக்கே இருந்த குளத்தில் சென்று அடங்கின.  இதனால், பொன்னிறமுடைய தாமரை மலர்ந்து இருந்த அந்தக் குளத்தில், ஏழு கடலின் வெவ்வேறு நிறங்களும் கலந்து சிவபெருமானுடைய எட்டு வகையான வண்ணங்களில்  அந்த குளம் விளங்கியது.

different colour rocks
தேவகோட்டை அருகே நிலத்தடியில் கிடந்த சில பாறைகள்

885.   
என்று முனி விளம்பக் கேட்டு இருந்த காஞ்சன மாலை 
துன்று திரைக் கடல் ஆடத் துணிவுடைய விருப்பினள் ஆய்த் 
தன் திருமா மகட்கு உரைத்தாள் சிறிது உள்ளம் தளர்வு எய்திச் 
சென்று இறைவற்கு உரைப்பல் எனச் செழியர் தவக் கொழுந்து அனையாள்.

886.   
தன் தன்னை உடைய பெரும் தகை வேந்தர் பெருமான்
முன் சென்று அன்னம் என நின்று செப்புவாள் குறள் வீரர்க்கு
அன்று அன்னக் குழியு னொடு ஆறு அழைத்த  அருட்கடலே
இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று இரந்தாள்.       
                             
887.       
தேவி திரு மொழி கேட்டுத் தென்னவராய் நிலம் புரக்கும்
காவி திகழ் மணி கண்டர் கடல் ஒன்றோ எழு கடலும்
கூவி வர அழைத்தும் என உன்னினார் குணபால் ஓர்
வாவி இடை எழுவேறு வண்ணமொடும் வருவன ஆல்.   

888.       
துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட  உதைத்து
வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக்  கொட்பத்
தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை
அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும்.  

889.       
காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்
கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்
பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால் 
அவன் அடி சென்று அடைந்தார் போல்  அடங்கியது ஆல்.               

890.       
தன் வண்ணம் எழு கடலின் தனி வண்ணமொடு கலந்து
பொன் வண்ண நறும் பொகுட்டுப் பூம் பொய்கை பொலிவு எய்தி
மின் வண்ணச் சடைதாழ வெள்ளி மணி மன்று ஆடும்
மன் வண்ணம் என எட்டு வண்ண மொடும் வயங்கியது ஆல். 

புதன், 26 அக்டோபர், 2016

Theory of Tsunamis கூடல் இலங்கு குருமணி (கீழடியில் புதையுண்டுள்ள கோயில்)

Theory of Tsunamis 
கூடல் இலங்கு குருமணி
(கீழடியில் புதையுண்டுள்ள கோயில்)

மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 12கி.மீ. தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற ஊருக்கு அருகே உள்ள பள்ளிச்சந்தை என்ற இடத்தில் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து பூமிக்குள் புதைந்துள்ள மிகவும் தொன்மையான நகர் ஒன்றைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ளனர்.
சிறப்பாகச் செயல்பட்டு தமிழரின் தொன்மையான நகரைக் கண்டறிந்து உலகறியச் செய்த தொல்லியல் துறையினருக்கு நமது நன்றிகைளைத் தெரிவித்துக் கொள்வோம்.

தொல்லியல் துறையினர் இந்த அகழாய்வு நடைபெறும் இடம் மணலூர் கண்மாயின் மேற்குப் பகுதியாகும்.  மணலூர் மிகவும் தொன்மையான ஊராகும்.  இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்தவூருக்கு மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.

உக்கிரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பிரளயம் ஏற்பட்டு சுனாமி உண்டாகி மதுரை நகர்வரை வந்துள்ளது. அப்போது மணவூரை மண்மூடி விட்டது.

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணப் பாடல்களில் உள்ளன.  இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த குலசேகரபாண்டியன் என்ற மன்னனே தற்போதுள்ள மதுரை நகரைத் திட்டமிட்டு உருவாக்கினான். மதுரை நகரில் மக்கள் அனைவரையும் குடியேற்றம் செய்தான்.

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் கீழ்க்கண்ட மூன்று பாடல்களில் உள்ளன.

இன்ன ரம்புள ரேழிசை யெழான்மிடற் றளிகள்
கின்ன ரம்பயில் கடம்பமா வனத்தினின் கீழ்சார்த்
தென்னர் சேகர னெனுங்குல சேகர னுலக
மன்னர் சேகர னரசுசெய் திருப்பது மணவூர்.  (திருவிளையாடற் புராணப் பாடல்)

தீந்தண் புனல்சூழ் வடபுலத்து மணவூ ரென்னுந் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திருமரபின் விளங்குஞ் சோம சேகரனென்
றாய்ந்த கேள்வி யவனிடத்துத் திருமா தென்ன வவதரித்த
காந்தி மதியை மணம்பேச விருந்தா ரற்றைக் கனையிருள்வாய்.  (திருவிளையாடற் புராணப் பாடல்)

நென்ன லெல்லை மணம்பேச நினைந்த வாறே யமைச்சர்மதி
மன்னர் பெருமான் றமரோடு மணவூர் நோக்கி வழிவருவார்
அன்ன வேற்தன் றனைக்கண்டா ரடல்வேற் குமர னனையானெந்
தென்னர் பெருமான் குமரனுக்குன் றிருவைத் தருதி யெனவனையான்.  (திருவிளையாடற் புராணப் பாடல்)

தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர்.  புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன.  மணவூரின் தொன்மையையும் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.

அன்பன்
கி.காளைராசன்