திங்கள், 5 மார்ச், 2018

Theory of Tsunamis கூடல் இலங்கு குருமணி போற்றி


Theory of Tsunamis  
மதுரைக்குக் கூடல்என்ற பெயர்  
எதனால் உண்டானது?


மதுரை மாநகருக்குக் கடம்பவனம், ஆலவாய், சிவபுரம், மன்றல், மதுரா நகர், வான்நகர், வளநகர், விழவுநகர், திருநகர், கடிநகர், முதுநகர், முத்துநகர், தொல்நகர், தூங்கா நகர் முதலான பல்வேறு சிறப்புப் பெயர்கள் உள்ளன.  அவற்றுள் “நான்மாடக் கூடல்“ என்ற பெயரும் ஒன்று. 

கல்லாடம் நூலில் ”கூடல் பெருமான்” என்று அருள்மிகு சோமசுந்தரேசுவரர் சிறப்பித்துப் பாடப் பெற்றுள்ளார்.

பரஞ்சோதி முனிவர் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தில் உள்ள கீழ்க்கண்ட 105 பாடல்களில் நான்மாடக் கூடல்என்ற சொல் இடம் பெற்றுள்ளது.   இவற்றுள் 332 1309 மற்றும் 1332 ஆவது பாடல்களில் மதுரைக்குக் கூடல்என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது.  1596 ஆவது பாடலில் வைகைநீர் கூடல் செய்த இடம் மதுரை என்ற குறிப்பு உள்ளது.

பண்டைய பாண்டிய நாட்டை அபிடேகபாண்டியன்ஆட்சி செய்து வந்த காலத்தில்பேரூழி ஏற்பட்டது.  இதனால் கடல் பொங்கிச் சீற்றம் கொண்டு (Tsunami) , கடலலைகள் மதுரைவரை வந்தன.  அப்போது பூமியில் படிந்த கடல்நீர் எல்லாம் ஆவியாகி ஏழு மேகங்களாக மாறின. இம் மேகங்கள், பூசணிக்காய் போன்ற நீர்த்துளிகளுடன், பளிங்குத் தாரைபோன்ற நீர்த் தாரைகளுடன்  இடைவிடாது மழையாய் பெய்தன. இப் பெரு மழையில் மதுரை மாநகரம் அழியும் நிலை ஏற்பட்டது.  அப்போது, மதுரை அருள்மிகு சோமசுந்தரர் திருவருள் செய்து, தனது ஜடாமுடியிலிருந்து நான்கு மேகக் கூட்டங்களை அனுப்பினார்.  இந்த நான்கு மேகக் கூட்டங்களும் மதுரையை வளைத்து மாடங்களாகிச் சந்துவாய் தெரியாதவாறு, மதுரைக்கு மேலே ஒரு குடைபோல் காத்து நின்றன. இதனால் பெருமழையின்  அழிவிலிருந்து மதுரை மாநகரம் காப்பாற்றப் பெற்றது.  இந் நிகழ்ச்சியால் மதுரைக்குநான்மாடக் கூடல்என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம்.  மதுரையில் எழுகடல் தெருஎன்ற பெயரில் ஒரு வீதி உள்ளதும் இங்கு கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.
இப் புராணப் பாடல்களின் வாயிலாக, பண்டைக்காலத்தில் மதுரையானது சுனாமியால் பாதிப்பு அடைந்துள்ளது என்ற செய்தியையும், அதன் பின்னரே மதுரைக்குக் நான் மாடக் கூடல் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. 

அன்பன்
நா.ரா.கி.காளைராசன்

கல்லாடம் - 

எல்லாக் கல்வியும் இகழ்ச்சிசெய் கல்வியர்
பெருநகைக் கூட்டமும் கழிவுசெய்து இவ்விடை
மயக்குறு மாலை மாமகள் எதிர
ஒருவழிப் படர்ந்தது என்னத் திருமுகம் (20)
ஆயிரம் எடுத்து வான்வழிப் படர்ந்து
மண்ணேழ் உருவி மறியப் பாயும்
பெருங்கதத் திருநதி ஒருங்குழி மடங்க
ஐம்பகை அடக்கிய அருந்தவ முனிவன்
இரந்தன வரத்தால் ஒருசடை இருத்திய (25)
கூடல் பெருமான் குரைகழல் கூறும்
செம்மையர் போல கோடா


நம்மையும் நோக்கினர் சிறிதுகண் புரிந்தே. (28)

திருவிளையாடற் புராணம்

332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.
1309.
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.

1332.
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.

1596.
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.
திருவிளையாடற் புராணப் பாடல்களை இணையத்தில் வழங்கியுள்ள தமிழ் இணைப் பல்கலைக்கழகத்திற்கு http://www.tamilvu.org/ நன்றி.

மதுரைக்குக் “கூடல் என்ற பெயர் இடம் பெற்றுள்ள திருவிளையாடற் புராணப் பாடல்கள்
31.
அறு கால் பீடத்து உயர் மால் ஆழி கடைந்த அமுதை அரங்கேற்று மா போல்
அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை அரும் தமிழால் பாடி
அறுகால் பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில் அமரர் சூழும்
அறுகால் பீடத்து இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கு ஏற்றி னானே.
136.
தேர் ஒலி கலினப் பாய் மான் சிரிப்பு ஒலி புரவி பூண்ட
தார் ஒலி கருவி ஐந்தும் தழங்கு ஒலி முழங்கு கைம்மான்
பேர் ஒலி எல்லாம் ஒன்றிப் பெருகு ஒலி அன்றி என்றும்
கார் ஒலி செவி மடாது கடி மணி மாடக் கூடல்.
165.
தேசு அவிர் நீல மாடம் செம் மணிச் சென்னி மாடம்
காசறு கனக மாடம் சந்திர காந்த மாடம்
மாசு அற விளங்கு மின்ன மாட நீண் மாலைக் கூடல்
பாசிழை மடந்தை பூண்ட பன் மணிக் கோவை அன்ன.
253.
அத்திருமா நகரின் பேர் சிவ நகரம் கடம்ப வனம் அமர்ந்தோர் சீவன்
முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா ஞானம்
புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம் தென் கூடல்
பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால் பகர்வர் நல்லோர்.
312.
அற உருவன் ஆலவாயான் ஆமஞ் செவி மடுத்தால் அடைந்த பத்துப் 
பிறவி வினை அறு நினைந்தான் ஊறு பெரும் பவப் பாவப் பிணி போம் கூடல்
இறைவனை இன்று இறைஞ்சுதும் என்று எழுந்து மனைப்புறம் போந்தால் ஈரைஞ்நூறு
மறமுறு வெம் பவத்து இழைத்த பாதக வல் வினை அனைத்தும் மாயும் மன்னோ.
321.
ஒருகால் அட்டாங்கமுடன் பஞ்சாங்கமுடன் நாத ஒண் செம் கால் வெண்
குரு காலு மலர்த் தடம் சூழ் கூடல் நாயகற் பணிவோர் கோல் ஒன்று ஓச்சி
பொருகாலின் வரு பரித்தேர் மன்னவராய் வரும் தம் புடைவந்து எய்தி
இருகாலும் தலைவருட எக்காலும் தமை வணங்க இருப்பர் அன்றே.
325.
மான் மதச் சுந்தரன் கொடிய பழி அஞ்சு சுந்தரன் ஓர் மருங்கின் ஞானத்
தேன் மருவி உறை சோம சுந்தரன் தேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த
கான் மருவு தடம் பொழில் சூழ் ஆலவாய்ச் சுந்தரன் மீன் கணங்கள் சூழப்
பால் மதி சூழ் நான் மாடக் கூடல் நாயகன் மதுரா பதிக்கு வேந்தன்.
326.
சிர நாலோன் பரவரிய சமட்டி விச்சா புர நாதன் சீவன் முத்தி
புர நாதன் பூஉலக சிவ லோ காதிபன் கன்னி புரேசன் யார்க்கும்
வரம் நாளும் தரு மூல லிங்கம் என இவை முதலா மாடக் கூடல்
அரன் நாமம் இன்னம் அளப்பு இலவாகும் உலகு உய்ய வவ்வி லிங்கம்.

332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.

339.
வய ஏனக் குருளை களை மந்திரிகள் ஆக்கியதும் வலி உண்டாகக்
கயவாய்க்குக் குருமொழி வைத் அருளியது நாரைக்குக் கருணை நாட்டம்
தயவால் வைத்து அருண் முத்தி நல்கியதும் கூடல் நகர் தன்னைச் சித்தர்
புய நாகம் போய் வளைந்து திரு வால வாயாக்கிப் போந்த வாறும்.
1307.
பூதங்கள் அல்ல பொறி அல்ல வேறு புலன் அல்ல உள்ள மதியின்
பேதங்கள் அல்ல இவை அன்றி நின்ற பிறிது அல்ல என்று பெருநூல்
வேதம் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளி என்ப கூடல் மறுகில்
பாதங்கள் நோவ வளை இந்தன் ஆதி பகர் வாரை ஆயும் அவரெ.
1309.
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.
1332.
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.
1334.
தேட அரும் கதிர் மணி முடிச் செழியனும் பாண்டி
நாடரும் திரு எய்தி மேல் நல்ல வீடு எய்தக்
கூடல் அம் பதி மேவிய குணம் குறி கடந்த
வேடர் அங்கு ஒரு சித்த மெய் வேடராய் வருவார்.
1425.
பின்னும் சில் வரங்கள் நல்கப் பெற்று நான் மாடக் கூடல்
மன்னும் சின் மயனை வந்து வந்தித்து வருநாள் காமன்
என்னும் சில் மலர்ப் பூம் தண்தார் இராச சேகரனைப் பெற்று
மின்னும் சில்லியம் தேர் வேந்தன் மேதினி புரக்கும் மன்னோ.
1459.
தாய் இலாப் பிள்ளை முகம் தனை நோக்கித் தெருவின் இடைத் தளர்வாள் உள்ளம்
கோயிலாக் கொண்டு உறையும் கூடல் நாயகனை மனக் குறிப்பில் கண்டு
வேயில் ஆக்கிய தடம் தோள் கௌரி திரு மந்திரத்தை விளம்ப லோடும்
சேயிலாய்க் கிடந்து அழுத குழவி விசும்பு இடை மேல் தெரியக் கண்டாள்.
1492.
குரவன் செம்கோல் கைக் கொண்ட குலோத்துங்க வழுதி செம்கண்
அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை நித்தம்
பரவு அன்பின் வழிபாடு ஆனாப் பத்திமை நியமம் பூண்டான்
இரவு அஞ்சும் கதுப்பின் நல்லார் ஈர் ஐயா இரவர் உள்ளான்.

1504.
மாண்டவளைத் தன் வெந் இடை இட்டான் மகவு ஒக்கல்
தாண்ட அணைத்தான் தாய் முலை வேட்டு அழும் தன் சேயைக்
காண் தொறும் விம்மாக் கண் புனல் சோரக் கடிது ஏகா
ஆண் தகை மாறன் கூடல் அணைந்தான் அளி அன்றான்.

1555.
கொலை இரும் பழிக்கு அன்று அஞ்சும் கூடல் எம் பெருமான் கொன்றை
மிலை இரும் குஞ்சி வேங்கை மெல் இணர்க் கண்ணி வேய்ந்து
கலை இரு மருப்பில் கோடிக் காது அளவோடும் தாடி
சிலை இரும் தடக்கை வேடம் திரு உருக் கொண்டு தோன்றி.
1571.
ஆததாய் இயும் கண்டு ஆனா அற்புதம் அடைந்து கூடல்
நாதனார் நவின்ற ஆற்றான் நல்நெறி விரதச் செய்கை
மாதவ ஒழுக்கம் தாங்கி வரு முறை மதிய மூன்றில்
பாதகம் கழிந்து தெய்வப் பார்ப்பன வடிவம் ஆனான்.
1574.
அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து வேந்து அமைச்சர் ஊர் உள்ளார்
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம் யாது எனக் கண்ணீர்
வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார்.

1576.
கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி ஞாலம்
காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில் உடுத்த கூடல்
மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை
மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி வாழ்வான்.

1583.
அறம் கடை நின்றாள் உள்ளம் ஆற்றவும் கடையன் ஆகிப்
புறம் கடை நின்றான் செய்த புலமை தன் பதிக்கும் தேற்றாள்
மறம் தவிர் கற்பினாள் தன் மனம் பொதிந்து உயிர்கள் தோறும்
நிறைந்த நான் மாடக் கூடல் நிமலனை நினைந்து நொந்தாள்.

1584.
தாதக நிறைந்த கொன்றைச் சடையவன் புறம்பு செய்த
பாதகம் அறுக்கும் கூடல் பகவன் எவ்வுயிர்க்கும் தானே
போதகன் ஆகித் தேற்றும் புண்ணியன் புலைஞன் செய்த
தீது அகம் உணர்ந்து தண்டம் செய்வதற்கு உள்ளம் கொண்டான்.

1596.
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.

1598.
அம்மனை அருளிச் சொன்னபடி எலாம் அருளிச் செய்து
தெம் முனை அடுவாள் வீரர் சித்தனை மாய்த்தார் ஈது
மெய்மை ஆம் என்று கண்ட மைந்தரும் விளம்பக் கேட்டான்
எம்மை ஆளுடை கூடல் இறை விளையாடல் என்றான்.

1599.
கொடியை நேரிடையாள் ஓடும் கொற்ற வாள் இளைஞ ரோடும்
கடிய நான் மாடக் கூடல் கண்ணுதல் அடிக்கீழ்த் தாழ்ந்து
நெடியன் நான் முகனும் தேறா நெறியது சிறிய ஏழை
அடியனேன் அளவிற்றே நின் அருள் விளையாடல் என்றான்.

1613.
கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி தொழுது அடி கேள் அம்
கொண்டல் கண் வளர் மதில் வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம்
அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள் வாய்
விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன்.

1630.
குண்டு அழல் கணின் எழுந்த அக் கொடிய வெம் பசுவைப்
பண்டு போல் அவர் விடுத்தனர் கூடல் அம் பதிமேல்
உண்டு இல்லையும் எனத் தடுமாற்ற நூல் உரைத்த
பிண்டியான் உரை கொண்டு உழல் பேய் அமண் குண்டர்.

1648.
உலகு அறி கரியாத் தன் பேர் உருவினை இடபக் குன்றாக்
குல உற நிறுவிச் சூக்க வடிவினால் குறுகிக் கூடல்
தலைவனை வணங்க ஈசன் தண் அருள் சுரந்து பண்டை
இலகு உரு ஆகி இங்ஙன் இருக்க என இருத்தினானே.

1651.
அன்னது தெரிந்து விந்தம் அடக்கிய முனி அங்கு எய்தி
மன்னவற்கு ஆக்கம் கூறி மழவிடைக் கொடியோன் கூடல்
பன்னரும் புகழ்மை ஓது பனு வலை அருளிச் செய்ய
முன்னவன் பெருமை கேட்டு முகிழ்த்தகை முடியோன் ஆகி.

1680.
அடியவர் குறைவு தீர்த்து ஆண்டு அருள்வதே விரதம் பூண்ட
கொடி அணி மாடக் கூடல் கோ மகன் காமன் காய்ந்த
பொடி அணி புராணப் புத்தேள் புண்ணியன் அருளினாலே
இடி அதிர்விசும்பு கீறி எழுந்தது ஓர் தெய்வ வாக்கு.

1685.
பொருநரே அனையான் நேர்ந்து போந்து நான் மாடக் கூடல்
கருணை நாயகனைத் தாழ்ந்து கை தொழுது இரந்து வேண்டிப்
பரவி மீண்டு ஒளி வெண் திங்கள் பல் மணிக் குடைக்கீழ் ஏகிக்
குரு மதி மருமான் கோயில் குறுகுவான் குறுகும் எல்லை.
 
1702.
அறைந்தவர் கழல் கால் சேனை காவலன் அனிகம் தம்தம்
சிறந்த சேண் நாட்டில் செல்லத் செலுத்துவான் போன்று நிற்ப
நிறைந்த நான் மாடக் கூடல் நிருத்தன் அந் நிலை நின்று ஆங்கே
மறைந்தனன் மனித்த வேடம் காட்டிய மறவ ரோடும்.

1703.
கண்டனன் பொருனை நாடன் வியந்தனன் கருத்தா சங்கை
கொண்டனன் குறித்து நோக்கி ஈது நம் கூடல் மேய
அண்டர் தம் பெருமான் செய்த ஆடல் என்று எண்ணிக் கண்ணீர்
விண்டனன் புளகம் போர்ப்ப மெய்யன்பு வடிவம் ஆனான்.
1704.
தனக்கு உயிர்த் துணையா நின்ற சாமந்தன் தன்னை நோக்கி
உனக்கு எளி வந்தார் கூடல் உடைய நாயகரே என்றால்
எனக்கு அவர் ஆவார் நீயே என்று அவற்கு யாவும் நல்கி
மனக்கவல்பு இன்றி வாழ்ந்தான் மதி வழி வந்த மைந்தன்.

1710.
கோளா அரவம் அரைக்கு அசைத்த கூடல் பெருமான் குறை இரக்கும்
ஆளாம் அரசன் தவறு சிறிது அகம் கொண்டு அதனைத் திருச் செவியில்
கேளர் போல வாளாதே இருப்ப மனையில் கிடைத்த அமலன்
தாள் ஆதரவு பெற நினைந்து தரையில் கிடந்து துயில் கின்றான்.

1738.
பொய் தவ வடிவாய் வந்து நம் மனைப் பொன்னின் அன்னார்
மெய் தழை கற்பை நாண வேரொடும் களைந்து போன
கைதவன் மாடக் கூடல் கடவுள் என்று எண்ணித் தேர்ந்தார்
செய் தவவலியால் காலம் மூன்றையும் தெரிய வல்லார்.

1739.
கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீர் ஆழி
வெற்புத் திரிந்த மதில் கூடல் மேய வணிகர் கன்னியராய்ப்
பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு
அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர்.
 
1760.
கொத்து இலங்கு கொன்றை வேய்ந்த கூடல் ஆதி மாட நீள்
பத்தியம் பொன் மருகு அணைந்து வளைபகர்ந்த பரிசு முன்
வைத்து இயம்பினாம் இயக்க மாதர் வேண்ட அட்டமா
சித்தி தந்த திறம் இனித் தெரிந்த வாறு செப்புவாம்.
1825.
திரண்டு அதிர்ந்து எழுந்து வந்த சென்னி சேனை தன் நகர்க்
இரண்டு யோசனைப் புறத்து இறுக்கும் முன்னர் ஒற்றரால்
தெருண்டு தென்னனை மாட நீ கூடல் மேய சிவன் தாள்
சரண் புகுந்து வேண்டுக என்று சார்ந்து தாழ்ந்து கூறுவான்.

1848.
ஆயது ஓர் அமையம் தன்னில் அளவு இலா உயிர்க்கும் ஈன்ற
தாயனார் துலை போல் யார்க்கும் சமநிலை ஆய கூடல்
நாயனார் செழியன் தானை நனந்தலை வேத நாற்கால்
பாயதோர் தண்ணீர்ப் பந்தர் பரப்பி அப் பந்தர் நாப்பண்.
 
1889.
பலர் புகழ் சுந்தரேச பாத சேகரன் ஆம் தென்னன்
அலை புனல் உடுத்த கூடல் அடிகளுக்கு அன்பன் ஆகிக்
கொலை புணர் வேலால் வெம் கோல் குறும்பு எனும் களைகள் தீர்த்து
மலர் தலை உலகம் என்னும் வான் பயிர் வளர்க்கும் நாளில்.
 
1890.
பத்துமான் தடம் தேர் நூறு பனைக்கை மா நூற்றுப் பத்துத்
தத்துமான் அயுத மள்ளர் தானை இவ் அளவே ஈட்டி
இத்துணைக்கு ஏற்ப நல்கி எஞ்சிய பொருள்கள் எல்லாம்
சித்து உரு ஆன கூடல் சிவனுக்கே செலுத்தும் மன்னோ.

1898.
கடல் என வருமா ஊர்ந்து கைதவன் சேனை முன்போய்
அடல் அணி மேருக் கோட்டி ஆலவாய் நெடு நாண் பூட்டி
மடல் அவிழ் துழாய்க் கோன் ஆட்டி வாய் எரி புரத்தில் ஊட்டி
மிடல் அணி கூடல் கோமான் வேடு உருவாகி நின்றான்.

1906.
மீனவன் மதுரை மூதுர் மேல் திசைக் கிடங்கில் வீழ
மான வெம் புரவி யோடும் வளவனும் வீழ்ந்தான் கூடல்
கோன் அவன் அருளால் வானோர் குரை கடல் கடையத் தோன்றும்
ஆனையின் எழுந்தான் தென்னன் கோழிவேந்து ஆழ்ந்து போனான்.

1909.
பொடி ஆர்க்கும் மேனிப் புனிதர்க்குப் புனித ஏற்றுத்
கொடியார்க்கு வேதக் குடுமிக்கு இணையான கூடல்
படியார்க்கும் சீர்த்திப் பதி யேர் உழவோருள் நல்லான்
அடியார்க்கு நல்லான் அறத்திற்கும் புகழ்க்கும் நல்லான்.

1927.
கன்னி நான் மாடக் கூடல் கடி நகர் வணிக மாக்கள்
தன்னின் மா நிதிக் கோன் அன்னான் தனபதி என்னும் பேரான்
மன்னினான் அனையான் கற்பின் மடவரல் சுசீலை என்பாள்
பொன்னி நாள் முளரிச் சேக்கைப் புண்ணியத் திருவின் அன்னாள்.

1932.
விளை நிலன் அடிமை பைம் பூண் வெறுக்கை நல் பசுக்கள் ஏனை
வளனும் மாற்றவர் கைக் கொள்ள வன் சிறை இழந்த புள் போல்
தளர் உறு மகனும் தாயும் சார்பு இலாத் தம்மனோர்க்கு ஓர்
களை கணாய் இருக்கும் கூடல் கடவுளே சரணம் என்னா.

1961.
இம் எனப் பலரும் காண மறைந்தவர் இரும் தண் கூடல்
செம்மல் என்று அறிந்து நாய்கச் சிறுவனுக்கு உவகை தூங்க
விம்மிதம் அடைந்து வேந்தன் வரிசைகள் வெறுப்ப நல்கிக்
கைம் மறி வணிகர் கோயில் புதுக்கினான் கனகம் கொண்டு.

1973.
மறையோர்கள் பின்னும் பழி மேலிடு வண்ண நோக்கி
இறையோய் இது நான் முகன் சென்னி இறுத்த கூடல்
அற வேதியனைத் தினம் ஆயிரத் எண்கால் சூழல்
உறவே ஒழிக்கப் படும் இன்னம் உரைப்பக் கேட்டி.

1984.
நிரா மய பரமானந்த நிருத்த நான் மாடக் கூடல்
பராபர இமையா முக்கண் பகவ பார்ப்பதி மணாள
புராதன அகில நாத புண்ணிய மருதவாண
அரா அணி சடையா என்று என்று அளவு இலாத்துதிகள் செய்தான்.

1987.
திருப்பணி பலவும் செய்து தென் திசை வழிக் கொண்டு ஏகிச்
சுருப்பணி நெடு நாண் பூட்டுஞ் சுவைதண்டச் சிலையால்காய்ந்த
மருப்பணி சடையான் கோயில் வழி தொறும் தொழுது போற்றிப்
பொருப் பணி மாடக் கூடல் பொன்னகர் அடைந்தான் மன்னோ.

2037.
தென்னவர் பெரும யான் உன் திரு உள வலனும் கூடல்
முன்னவன் அருளும் ஊட்டும் முயற்ச்சியான் முயன்றுபாடி
அன்னவன் விருது வாங்கி அவனை வீறு அழிப்பன் என்றான்
மன்னவன் நாளைப் பாடு போ என வரைந்து சொன்னான்.

2064.
பாடல் மறையும் தெளியாப் பரமன்
கூடல் கோயில் கொண்டான் என்னே
கூடல் போலக் கொடி ஏனகமும்
ஆடல் அரங்கா அமர்ந்தான் என்னே.
2095.
ஏவல் மைந்தர் போய் விளங்கி வந்து இசைத்தலும் வீணைக்
காவலன் கனா நிகழ்ச்சியும் ஒத்தலில் கைக்கும்
பூ அலங்கலான் இஃது நம் பொன் நகர்க் கூடல்
தேவர் தம்பிரான் திரு விளையாட்டு எனத் தெளிந்தான்.

2103.
இத் தொழில் அன்றி வேறு தொழில் இவற்கு இன்மையாலே
பத்திரன் இலம்பாது எய்த பொறுப்பரோ பழனக் கூடல்
சித்தவெம் அடிகள் வேந்தன் பொன்னறைச் செல்வம் வௌவிப்
பத்தர் யாழ் இடத் தோள் ஏந்திப் பாடுவான் காணவைப்பார்.

2123.
மின் அவிரும் செம் பொன் மணி மாடக் கூடல் மேய சிவன் யாம் எழுதி விடுக்கும் மாற்றம்
நன்னர் முகில் எனப் புலவர்க்கு உதவும் சேர நரபாலன் காண்க தன் போல் நம்பால் அன்பன்
இன் இசை யாழ்ப் பத்திரன் தன் மாடே போந்தான் இருநிதியம் கொடுத்து வர விடுப்பதுஎன்னத்
தென்னர் பிரான் திரு முகத்தின் செய்தி நோக்கிச் சோர் பிரான் களிப்பு எல்லை தெரியான் ஆகி.

2141.
ஒண் நுதலாய் வெண் தலை கொண்டு உண் பலிக்கு நம் மனையின் ஊடேகூடல்
கண் நுதலார் உள் ஆளக் கானம் இசைத்து என் உள்ளம் கவர்ந்தார் போலும்
கண் நுதலார் பாடு அவி நயம் கண்டு ஆகம் கலப்பேன் பாதி
பெண் உருவமாய் இருந்தார் வெள்கி விழித்து ஆவி பெற்றேன் போலும்.

2149.
கூடல் அம் பதியில் ஆடக மேருக் கொடிய வில்குரிசில் அடியவனுக்குப்
பாடலின் பரிசில் ஆகிய செம் பொன் பலகை இட்டபடி பாடின மன்னான்
வீடரும் பொருவில் கற்புடையாள் ஓர் விறலி யைப் பரமன் இறை அருள் பற்றி
மாடகம் செறியும் யாழ் வழி பாதி வாது வென்ற வரலாறு இசைப்பாம்.

2156.
ஆடு அமைத் தடம் தோளினாய் அவளொடும் கூடப்
பாட வல்லையோ பகர் எனப் பாடினி பகர்வாள்
கோடரும் தகைக் கற்பும் இக் கூடல் எம் பெருமான்
வீடரும் கருணையும் எனக்கு இருக்கையால் வேந்தே.

2201.
என்னை ஆளுடைய கூடல் ஏக நாயகனே உங்கள்
அன்னையாய் முலைதந்து ஆவி அளித்து மேல் அமைச்சர் ஆக்கிப்
பின்னை ஆனந்த வீடு தரும் எனப் பெண் ஓர் பாகன்
தன்னை ஆதரித்தோன் சொன்னான் பன்னிரு தனயர் தாமும்.

2229.
நீநில் எனத் தன் பெடை தன்னை நிறுத்தி நீத்து என்
கானில் என வாழ் கருமாவின் கணங்கள் எல்லாம்
ஊனில் உயிர் உண்டனம் என்று இனி ஓடல் கூடல்
கோனில் என ஆர்ப்பவன் போலக் கொதித்து நேர்ந்தான்.

2235.
சத்திப் படைமேல் விடு முன்னர்த் தறுகண் வீரன்
பத்திச் சுடர் மாமணித் தார்ப் பரிமாவின் பின் போய்
மொத்திக் குடர் செம்புனல் சோர முடுகிக் கோட்டால்
குத்திச் செகுத்தான் பொறுத்தான் அலன் கூடல் வேந்தன்.

2258.
அனையராய் அவர் வைகு நாள் அறைபுனல் கூடல்
புனித நாயகன் அருள் திறம் உயிர்க்கு எலாம் பொதுவாய்
இனிய ஆவன என்பதை யாவரும் தேற
வனிதை பால் மொழி மங்கைதன் மணாளனை வினவும்.

2280.
ஓர் இடத்து இனைய மூன்று விழுப்பமும் உள்ளது ஆகப்
பார் இடத்து இல்லை ஏனை பதி இடத்து ஒன்றே என்றும்
சிர் உடைத்து ஆகும் கூடல் செழும் நகர் இடத்தும் மூன்றும்
பேர் உடைத்து ஆகும் என்றால் பிறிது ஒரு பதி யாது என்றான்.

2283.
ஆய் மலர்க் கான நீங்கி ஆடக மாடக் கூடல்
போய் மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனல் தோய்ந்து ஆம்பல்
வாய் மலர்க் கயல் உண் கண்ணாள் மணாளனை வலம் செய்து அன்பில்
தோய் மலர் கழல் இனானை அகத்தினால் தொழுது அர்ச்சித்தே.

2308.
தன் நிகர் தவத்தோர் யாரும் தடம் படிந்து ஏறி நித்த
மன்னிய கருமம் முற்றிச் சந்தியா மடத்தில் வைகி
மின்னிய மகுடம் சூடி வேந்தனாய் உலகம் காத்த
பொன்னியல் சடையான் கூடல் புராண நூல் ஒதுகின்றார்.

2309.
அண்ணல் எம் பெருமான் செய்த அருள் விளையாட்டும் ஆதிப்
பண்ணவன் சிறப்பும் கூடல் பழம் பதிச் சிறப்பும் தீர்த்தத்
தெண்ணரும் சிறப்பும் சேர்ந்தோர்க்கு எளிவரும் இறைவன் என்னும்
வண்ணமும் எடுத்துக் கூறக் கேட்டு அங்கு வதியும் நாரை.

2310.
மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.

2310.
மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.

2323.
வேதன் நெடு மால் ஆதி விண் நாடர் மண் நாடர் விரத யோகர்
மாதவர் யாவரும் காண மணி முறுவல் சிறிது அரும்பி மாடக் கூடல்
நாதன் இரு திருக் கரம் தொட்டு அம்மியின் மேல் வைத்தகையான் நாட்டச் செல்வி
பாதமலர் எழுபிறவிக் கடல் நீந்தும் புணை என்பர் பற்று இலாதோர்.

2324.
ஓலவாய் மறைகள் தேறா ஒருவன் தன் உலகம் தன்னைச்
சேலவாய் உழலும் நாரைக்கு அருளிய செயல் ஈது அம்ம
நீலவாய் மணி நேர் கண்ட நெடிய நான் மாடக் கூடல்
ஆலவாய் ஆகச் செய்த அருள் திறம் எடுத்துச் சொல்வாம்.

2388.
புரத்தினுள் உயர்ந்த கூடல் புண்ணியன் எழுதி எய்த
சரத்தினுள் அவிந்தார் சென்னிக்கு உற்றுழிச் சார்வாய் வந்த
அரத்தினை அறுக்கும் வை வேல் அயல் புல வேந்தர் நச்சு
மரத்தினை அடுத்து சந்துங் கதழ் எரி மடுத்தது என்ன.

2410.
மறையினால் ஒழுகும் பன்மாண் கலைகள் போல் மாண்ட கேள்வித்
துறையின் ஆறு ஒழுகும் சான்றோர் சூழ மீண்டு ஏகிக் கூடல்
கறையினார் கண்டத்தாரைப் பணிவித்துக் கரந்தார் ஒற்றைப்
பிறையினார் மகுடத் தோற்றத்தார் அறிஞராய் வந்த பெம்மான்.

2434.
மன்னவர் மன்னன் வங்கிய சூடா மணி மாறன்
தென்னவர் ஆகித் திகிரி உருட்டும் தென்கூடல்
முன்னவர் அன்னம் கண்டு அறியாத முடிக்கு ஏற்றப்
பன் மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணி பூண்டான்

2440.
அன்னது ஒர் நாமம் பெற்றனர் இன்று மணிக் கூடல்
முன்னவர் அந்தத் தாமம் அவர்க்கு முடிக்கு ஏற்றும்
இன்னது ஓர் நீரார் சண்பக மாறன் என்ற பேர்
மன்னி விளங்கினன் வங்கிய சூடா மணிதானும்.

2454.
நிலம் தரு திருவின் ஆன்ற நிழல் மணி மாடக் கூடல்
வலந்தரு தடம் தோள் மைந்தர் வானமும் வீழும் போக
நலம் தரு மகளிரோடு நாக நாடவர் தம் செல்வப்
பொலம் தரு அனைய காட்சிப் பூம் பொழில் நுகர் வான் போவார்.

2566.    
சம்பக மாறன் என்னும் தமிழ்நர்தம் பெருமான் கூடல்
அம்பகல் நுதலினானை அங்கயல் கண்ணி னாளை
வம் பக நிறைந்த செந்தா மரை அடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த அன்பால் பல் பணி நடாத்தி வைகும்.

2567.
கொன்றை அம் தெரியல் வேய்ந்த கூடல் எம் பெருமான் செம்பொன்
மன்றல் அம் கமலத்து ஆழ்ந்து வழிபடு நாவலோனை
அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம் இப்பால்
தென் தமிழ் அனையான் தேறத் தெருட்டிய திறனும் சொல்வாம்.

2568.    
முன்பு நான் மாடக் கூடல் முழு முதல் ஆணையால் போய்
இன்புற அறிஞர் ஈட்டத்து எய்தி ஆங்கு உறையும் கீரன்
வன்புறு கோட்டம் தீர்ந்து மதுரை எம் பெருமான் தாளில்
அன்பு உறு மனத்தன் ஆகி ஆய்ந்து மற்று இதனைச் செய்வான்.

2571.
மையறு மனத்தான் வந்து வழிபடு நியமம் நோக்கிப்
பை அரவாரம் பூண்ட பரஞ்சுடர் மாடக் கூடல்
ஐயனும் அணியன் ஆகி அகம் மகிழ்ந்து அவனுக்கு ஒன்று
செய்ய நல் கருணை பூத்து திரு உளத்து இதனைத் தேர்வான்.

2634.
தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் செம் பொன் கூடல்
மன்னவன் கேட்டா ஆகாய வாணியால் வைகை நாட
உன்னது சோத்த நாம் கேட்டு உவந்தனம் இனிய தாயிற்று
இன்னம் ஒன்று உளது கேட்டி என்றனன் அருளிச் செய்வான்.

2650.
அந்தம் இல் அழகன் கூடல் ஆலவாய் அமர்ந்த நீல
சுந்தரன் உலகம் ஈன்ற கன்னிஅம் கயல் கண்ணாள் ஆம்
கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு வேறு இடத்து வைகி
மந்தணம் ஆன வேத மறைப் பொருள் உணர்த்தும் மாதோ.

2656.
வரை பக எறிந்த கூர்வேல் மைந்தனும் தந்தை கையில்
உரை பெறு போத நுலை ஒல் எனப் பறித்து வல்லே
திரை புக எறிந்தான் ஆகச் செல்வ நான் மாடக் கூடல்
நரை விடை உடைய நாதன் நந்தியை வெகுண்டு நோக்கா.

2674.    
பிள்ளை இன்மை யெற்கு இரங்கி எம் பிரான் தமிழ்க் கூடல்
வள்ளல் நல்கிய மகவு இதுவே என வலத்தோள்
துள்ள அன்பு கூர் தொடுத்து திருத் தோள் உறப் புல்லித்
தள்ளரும் தகைக் கற்பினாள் தனது கைக் கொடுத்தான்.

2785.
எழுந்தார் உடைய பெருந்துறையார் இருந்தாள் பணிந்தார் இனி இப் பிறப்பில்
அழுந்தார் வழிக் கொண்டார் அடைந்தார் அகன்றார் நெறிகள் அவிர் திங்கள்
கொழுந்தார் சடையார் விடையார் தென் கூடல் அடைந்தார் பாடு அளி வண்டு
உழும் தார் வேந்தன் பொன் கோயில் உற்றார் காணப் பெற்றார் ஆல்.

2823.
என்று இரங்குவோர் இரங்கு ஒலி இளம் சிறார் அழுகை
சென்று தாயார் தம் செவித் துளை நுழைந்து எனச் செல்லக்
குன்று இரும் சிலை கோட்டிய கூடல் நாயகன் கேட்டு
அன்று வன் சிறை நீக்குவான் திரு உளத்து அமைத்தான்.

2867.
நெஞ்சே உரையே செயலே எல்லா நின வென்றாய்
வஞ்சே போலும் அஃதேல் இன்று வாராயோ
பஞ்சேர் அடியாள் பாகா கூடல் பரமேட்டீ
அஞ்சேல் என்னாய் இது வோ அருளுக்கு அழகு ஐயா.

2878.
பின் அவன் ஆணையாலே மறைப்பு உண்ட பெரு நீர்க் கூடல்
மன்னவன் அறிவு தோன்ற இன்று ஒரு வயமா வீரன்
தன்னை நாம் கண்டு எழுந்து தடம் கரம் கூப்பி நின்ற
என் எனத் தவிசின் மீள இருந்திட நாணி நின்றான்.

3001.    
வளைந்த மெய் உடைய அந்த மாதவ நரை மூதாட்டிக்கு
அளந்த பங்கு அடைப்பான் கூலி ஆள் கிடையாமல் ஆற்றத்
தளர்ந்து இனி என்னே மன்னன் தண்டிக்கின் என் செய்கேன் என்று
உளம் தடுமாறிக் கூடல் உடைய நாயகனை உன்னா.

3049.
வன்பு தாழ் மனத்தோர் வலி செய இன்ன மன்னான் மறுக்கம் உண்டேயோ
முன்பு போகிய ஆள் என் செய்தான் என்னாய் முடியுமோ இனி எனத் திரங்கி
என்பு போல் வெளுத்த குழலினாள் கூடல் இறைவனை நோக்கி நின்று இரங்க
அன்பு தேன் ஆக வருத்திய சிற்றூண் அமுது செய்து அருளினார் அருளால்.

3058.
அச்சம் உற்று உவகை ஈர்ப்ப அதிசய வெள்ளத்து ஆழ்ந்து
பொச்சம் இல் அன்பர் எங்கு உற்றார் எனப் புகுந்து தேடி
நச்சு அரவு அசைத்த கூடல் நாயகன் கோயில் நண்ணி
இச்சையில் இருக்கின்றாரைக் கண்டு போய் இறைஞ்சி வீழ்ந்தான்.

3110.
துண் துழாவும் கைம்மாவும் வெறுக்கைக் குவையும் மணிக் குவையும்
வண்டு வீழும் தார் அளக வல்லி ஆய மொடு நல்கிக்
கண்டு கூடல் கோமகனைக் காலில் வீழ்ந்து தன்னாடு
பண்டு போலக் கைக் கொண்டு போனான் தேன் ஆர் பனம் தாரான்.

3119.
பொய் உரை பிதற்றும் இந்தப் புன் சமண் களைகட்டு ஈண்டு
மெய் உரை வேத நீதி வியன் பயிர் தலைச் செய்து ஓங்கச்
செய்யுநர் எவரோ என்று சிந்தையில் கவலை பூண்டு
நையுநர் ஆகிக் கூடல் நாதனை வணங்கப் போனார்.

3121.
வேதியன் ஒருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யில்
பூதியன் புண்டரிக புரத்தினும் போந்தோன் கூடல்
ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க்கு அரசியாரும்
நீதிய அமைச்சர் ஏறு நேர்பட அவனை நோக்கா.

3137.    
செம்பியன் நாடு நீந்தித் தென்னவன் நாடு நண்ணி
வெம்பிய சுரமும் முல்லைப் புறவமும் மேக வில்லைத்
தும்பிகை நீட்டி வாங்கும் மலைகளும் துறந்து பாகத்
தம்பி கையுடையான் கூடல் நகர்ப் புறம் அனுகச் செல்வார்.

3150.    
சிட்டர் நோக்கி அத் தீயினை தென் தமிழ்க் கூடல்
அட்ட மூர்த்தியை அங்கு இருந்து அரு மறைப் பதிகம்
துட்டர் பொய் உரை மேற் கொண்டு தொல் முறை துறந்து
விட்ட வேந்தனைப் பற்று எனப் பாடினார் விடுத்தார்.

3230.
கண்டு கூடல் கோமகனும் கற்பும் நிறைந்த பொற்புடைய
வண்டு கூடும் தார் அளக வளவன் மகளும் மந்திரியும்
தொண்டு கூடி மடியாரும் காழிக்கு அரசைத் தொழுது துதி
விண்டு கூடற்கு அரிய மகிழ் வெள்ளத்து அழுந்தி வியந்தனர் ஆல்.

3237.    
இன்று நீர் இட்ட ஏடு இங்கு யாவரும் காண நேரே
சென்றதே எங்கே என்றான் அதனை யாம் செம்பொன் கூடல்
மன்றவர் அருளால் இன்னே வருவிப்பம் என்று வாது
வென்றவர் நதியின் மாடே மேல் திசை நோக்கிச் செல்வார்.

3250.    
வட புலது உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக்
கடவம் என்று எழுந்து கூடல் கண் நுதல் பெருமான் தன்னை
இடன் உறை கயல் கண்ணாளை இறைஞ்சிப் பல்வரனும் பெற்று
விடை கொடு தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு போவார்.

3300.
அல்லல் உற்று அழுங்கி நின்றாள் பரிவு கண்டு அம் தண் கூடல்
எல்லை இல் கருணை மூர்த்தி அருளினால் எவரும் காணத்
தொல்லையின் படியே அன்னாள் சொல்லிய கரிகள் மூன்றும்
ஒல்லை வந்து இறுத்த கோயில் உத்தர குணபால் எல்லை.

3313.
கோட்டம் சிலை குனித்த கூடல் பிரான் ஆடல்
கேட்ட அம் செவி படைத்த பேறு அடைந்தேம் கெட்ட படி
நாட்டம் களிப்ப நறுமலர் தூஉய்க் கண்டு இறைஞ்ச
வேட்டங்கள் யாங்கள் என ஓதினார் மெய்த் தவரே.

3318.
ஐம் புலனும் கூடல் பெருமான் அடி ஒதுக்கி
நம்பன் உரு ஐந்து எழுத்து நாவாடக் கை கூப்பித்
தம் புனித சைவ தவத் தெய்வத் தேர் மேல் கொண்டு
உம்பர் வழி நடக்கல் உற்றார்கள் நற்றவரே.


வெள்ளி, 2 மார்ச், 2018

சித்திரைத் திருவிழா 2018 நாட்களர

Madurai Chithirai Thiruvizha 2018 Schedule - Sri Meenakshi Amman Temple Chithirai Festival Dates

Madurai Sri Meenakshi Amman Temple Chithirai Thiruvizha begins on April 18, 2018 (Wednesday). Schedule is given below

18 April 2018 - Wednesday - Chithirai Thiruvizha Kodiyetram Kodiyetram (Flag Hoisting) - Karpaga Vriksha, Simha Vahanam

19 April 2018 - Thursday - Bootha, Anna Vahanam

20 April 2018 - Friday - Kailasa Parvadham, Kamadhenu Vahanam

21 April 2018 - Saturday - Thanga Pallakku

22 April 2018 - Sunday - Vedar Pari Leelai - Thanga Guthirai Vahanam

23 April  2018 - Monday - Saiva Samaya Sthabitha Varalatru Leelai - Rishaba Vahanam

24 April 2018 - Tuesday - Nantheekeshwarar, Yaali Vahanam

25 April 2018 - Wednesday -Sree Meenakshi Pattabhishekam - Velli Simhasana Ula

26 April 2018 - Thursday - Sree Meenakshi Digvijayam - Indira Vimana Ula

27 April 2018 - Friday - Sree Meenakshi Sundareshwarar Thirukalyanam (Celestial Wedding) - Yaanai Vahanam, Pushpa Pallakku

28 April 2018 - Saturday - Thiru Ther - Therottam (Ratha Utsavam, Chariot, Car Festival) - Sapthavarna Chapram

29 April 2018 - Sunday - Theertham, Velli Virutchaba Sevai

Kallazhagar (Kallalagar)

28 April 2018 - Saturday -Thallakulathil Edhir Sevai

29 April 2018 - Sunday - Sri Kallazhagar Vaigai Aatril Ezhuntharural - 1000 Ponsaprathudan - Night Saithyobacharam at Vandiyur

30 April 2018 - Monday - Thirumalirunsolai Sri Kal Azhagar - Vandiyur Thenur Mandapam - Sesha Vahanam in Morning - Garuda Vahanam in the Afternoon - Moksham for Manduga Maharishi - Dasavathara Katchi at Ramarayar Mandapam at Night

1 May 2018 - Tuesday - Morning Mohanaavatharam - Night Kallazhagar Thirukollam in Pushpa Pallakku at Mysore Mandapam

2 May 2018 - Wednesday - Sri Kal Azhagar Thirumalai Eluntharural

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

Theory of formation of Himalayas இமயம் தோன்றியது எப்படி? பூமியில் கல் தோன்றியது எப்படி?

Theory of formation of Himalayas
இமயம் தோன்றியது எப்படி?
பூமியில் கல் தோன்றியது எப்படி?

தமிழ் இலக்கியங்களில் இமயமலை பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன.  இமயமலையானது பெருங்கல் எனவும், அதன் மேல் பனி படர்ந்துள்ளது எனவும், அது சக்கரவடிவில் உள்ளது என்றும் குறிப்புகள் உள்ளன.

1) இமயமலையில் பனி படர்ந்துள்ளது
என்பதை அகநானூறு பதிவு செய்துள்ளது.
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் 
(அகநானூறு, 211:7-8)
2) இமயமலையின் வரை (விளிம்பு, rim) நேமி (சக்கரம்) வடிவில் ஆனது எனக்

கம்பராமாயணம் பதிவு செய்துள்ளது.
"நேமிமால் வரை " - கம்பராமாயணம்.

3) இமயமலை கடினமான கிரானைட் பாறைகளால் ஆனது என்ற கருத்தைப் புறநானூறும் மதுரைக் காஞ்சியும் ஒரே சொற்களால் பதிவு செய்துள்ளன.

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை (புறநானூறு,17:1-2)
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை (மதுரைக்காஞ்சி:70-71)
4) இமயமலையானது சிலம்பு வடிவில் உள்ளது

என்கிறது திருவிளையாடற் புராணத்தின் ஒரு பாடல்.
“கைய நாகமுங் காய்சின வுழுவையுங் கடுவாய்ப்
பைய நாகமுந் தங்கிளை பரவிய முக்கண்
ஐய னாகமெய் யருந்தவர் தமையடைந் தன்பு
செய்ய நாகமும் வையமும் புகழ்வதச் சிலம்பு.”
5) இமயமலையானது ஒவ்வொரு
ஊழிக்காலத்திலும் உயர்கிறது என்கிறது திருவிளையாடற் புராணத்தின் மற்றொரு பாடல்.
“புரந்த ராதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்.
-------------------------








1) கங்கன் என்ற 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் விழுந்த காரணத்தினால் இமயமலைத்தொடர் உருவாகியுள்ளது.
2) கண்டங்கள் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளன.
3) பூமியின் மேற்பரப்பில் சுமார் 30 சதம் நிலப்பரப்பே மட்டுமே தங்கியுள்ளது..
4) கங்கன் விழுந்த இடத்திற்கு நேர்எதிரே ring of fires உருவாகியுள்ளது.

5) பூமியின் பரிமாணம் மற்றும் எடை கூடியுள்ளன.


6) கங்கன் விழுந்த இடத்திற்கு நேர்எதிரே ring of fires  உருவாகியுள்ளது.
கங்கன் என்ற விண்கோள் பூமியில் மோதிய காரணத்தினால் இமயமலை தோன்றியுள்ளது.  பூமியில் உள்ள மிகவும் கடினமான கிரானைட் பாறைகள் எல்லாம் கங்கன் விழுந்தபோது தோன்றியவையே.  இதுவே பூமியில் "கல் தோன்றிய காலம்" என்பது எனது கருத்து.

“கங்கை அபரிமிதமான வேகத்துடன் பூமியில் இறங்கியுள்ளது.   அவ்வளவு வேகத்துடன் இறங்கிய கங்கை என்ற விண்ணீராலும் இமயமலையை அடித்துச் செல்லமுடியவில்லை” என்கிறது கங்கா புராணம்.  எனவே, இமயமலையின் அடிப்பகுதி rim மிகவும் கடினமான பாறையால் ஆனது என்றும் அதில் இம்மியளவு கூடப் பெயர்ச்சி இருக்காது என்பதே “கங்கா புராணக் கோட்பாட்டின் “ அடிப்படையிலான  அறிந்து கொள்ளலாம்.

இமயமலைத் தொடரில் (rim) உண்டாகும் எந்தவொரு நிலநடுக்கமும் ஆழமாக பகுதியில் இருந்து ஏற்படவில்லை.  

இமயமலையின் அடிப்பகுதி கங்கன் விழுந்ததால் உண்டானது.  இது கங்கை என்ற விண்ணீர் வேகமாக விழுந்தபோதும் நடுங்காமல் நின்றது.
இமயமலையின் மேற்பகுதி கங்கை என்ற விண்ணீர்க்கோளில் இருந்த களிமண் மற்றும் சவடுமண்ணால் ஆனது.  இது இமயமலையின் மீது போர்வைபோல் முடியுள்ளது.  இந்தப் பகுதிகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கம் உண்டாகிறது.
இந்தியா பிளேட் திபெத்துடன் மோதுதலால் நிகழவில்லை.

பூமியில் உள்ள மிகவும் கடினமான கிரானைட் பாறைகள் எல்லாம் கங்கன் பூமியில் விழுந்தபோது தோன்றியவையே. இதுவே பூமியில் "கல் தோன்றிய காலம்" என்பது எனது கருத்து.
கங்கன் மோதியதால் உண்டானது இமயமலை. கங்கன் மோதியதால் பூமியின் மேற்பரப்பு கண்டங்களாகப் பிளவு பெற்று கண்டப் பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா பெயர்ந்து செல்லவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கா பிரிந்து சென்றுள்ளது.  ஆப்பிரிக்காவும் அமெரிக்காவும் பிரிந்து சென்றுள்ளன.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

சனி, 10 பிப்ரவரி, 2018

தரணி ஆண்ட தமிழர்


தரணி ஆண்ட தமிழர் 

தடாதகை, தரணி ஆண்ட தடாதகைத் தாய்

அன்னை தடாதகையும்,  பண்டைத் தமிழ் மன்னர்களும் பாரத தேசம் முழுமையையும் ஒரு குடையின் கீழ் அரசாண்டுள்ளன.





“தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஓன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவ துண்டு பக லாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழு தாண்டோர் வழி காவல.”          ( புறநானூறு – 17 )
எனக் குறுங்கோழியூர்கிழாரும்.

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
 தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
 குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
 குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்.
 …….       …….         …….       …..
 உருவும் புகழு மாகி விரிசீர்த்
 தெரிகோன் ஞமன்ன் போல ஒருதிறம்
 பற்றலி லியரோ நிற்றிறம் சிறக்க!”              ( புறநானூறு – 6)
எனக் காரிகிழாரும், மதுரைக்காஞ்சியில்,

“தென்குமரி வடபெருங்கல்
 குணகுட கடலா எல்லைத்
 தொன்று மொழிந்து தொழில்  கேட்ப”  ( வரி 70-72)
என மாங்குடி மருதனாரும் கூறுவதனால் தமிழரே தரணியை ஆண்டுள்ளனர் என்பது உறுதி ஆகிறது.  

மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடியாம்,
தமிழரின் தொன்மை போற்றுவோம்,
தமிழரின் வீரம் போற்றுவோம்,
தமிழரின் விவேகம் போற்றுவோம்,
தமிழர் தரணியை ஆள்வோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
---------------------------------------------------------------------
குடகடலை ஏன் தொன்றுமுதிர் பௌவம் என்கிறார் புலவர்?

கங்கை பூமியில் இறங்குவதற்கு முன்பே இந்தியாவின் மேற்கே உள்ள அரபிக்கடலானது ஓர் நன்னீர்க்கடலாக இருந்திருக்க வேண்டும். கங்கை பூமியில் இறங்கியதால் பாதிப்படையாத ஓர் கடற்பகுதியாக இந்த முதிர்பௌவம் இன்றும் இருக்க வேண்டும்.
என்பது கங்காபுராணத்தின் அடிப்படையில் எனது யூகம்.


இந்தக் கடலின் உப்பின் அளவானது மற்றைய கடல்களின் உப்பின் அளவைவிடக் குறைவாக இருந்தால் எனது யூகம் சரியானதாக இருக்கலாம்.

வியாழன், 8 பிப்ரவரி, 2018

Theory of Tsunamis, சுனாமி, கோளப் பாறைகள்


திண்டுக்கல்லில் இருந்து தாண்டிகுடி செல்லும் மலைப்பாதையில் உள்ள பாறைகளை வெட்டி யெடுத்துச் சாலையை அகலப்படுத்தி உள்ளனர்.  இந்தப் பாதை வழியாக கடந்த 21 மே 2017  தாண்டிகுடி செல்லும் போது படத்தில் உள்ள பாறைகளை கண்டேன்.  

இவ்வகையான பாறைகள் பற்றி பல்வேறுவிதமான அறிவியல் கருத்துகள் சொல்லப்படுகின்றன.  

ஆனால் இந்தப் பாறைகள்,  பெரும் கடல்வெள்ளத்தில் (பெருஞ் சுனாமியில்) உண்டான களிமண் அல்லது சவடு மண்ணினால் (Tsunami deposited clay) உருவானவை என்பது எனது கருத்து.  

பண்டைக் காலத்தில் பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்தையும் குமரிக் கோட்டையும் பண்டைய பாண்டிய நாட்டையும் அழித்த  மாபெருஞ் சுனாமியினால் பெருமளவு கடல்சவடு அல்லது கடல்களிமண் அடித்து வரப்பட்டுள்ளது. சுனாமியின் போது இத்தகைய கடல்களிமண் நிலத்தில் பரவும் போது ஏதோ சில பொருட்கள் கடல்களிமண்ணைத் தடுத்துள்ளன.   பல காலத்திற்குப் பின்னர் இவைகள் பாறைகளாக மாறியுள்ளன.  

எனது இந்தக் கருத்துகளை அறிவியில் அடிப்படையில் ஆராய்ந்து நிறுவிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.




வியாழன், 1 பிப்ரவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (9) பழனி - திண்டுக்கல் சாலையில், விருப்பாச்சி அருகே

  Theory of Tsunamis

பண்டைத் தமிழகத்தைக் 

கடல்கொண்டதன் 

(சுனாமியின் )  சுவடுகளா இந்தப் பாறைகள் ?


பழனி - திண்டுக்கல் சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள மலையை வெட்டி சாலையை அகலப்படுத்தி உள்ளனர்.  இங்கே கடினமான பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறைகள் சேர்ந்து உள்ளதைக் காண முடிகிறது.  இந்தப் பொக்குப்பாறைகள் சுனாமியினால் அடித்துவரப்பட்ட களிமண் அல்லது சவடுமண்ணால் உருவானது என்பது எனது கருத்து.


.


பண்டைத் தமிழகத்தைக் கடல்கொண்டது எனத் தமிழ் இலக்கியங்கள் பலவும் கூறுகின்றன.  திருவிளையாடற் புராணம் கடல்வெள்ளத்தின் (சுனாமியின்)  தாக்கத்தைத் தெளிவாக விரிவாகக் கூறுகிறது.

திருவிளையாடல் புராணம் 1299.
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும் 
அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப் 
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில் 
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்

திருவிளையாடல் புராணம் 1302.
மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல்  வருநீத்தம் 
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி 
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப் 
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்