சனி, 18 ஜனவரி, 2020

கங்கை பூமியில் இறங்கியது (பாகம் 2 - கங்காபுராணம்)

கங்கை பூமியில் இறங்கியது   (பாகம் 2)
அறிவியல் ஆய்வா?
ஆன்மிகக் கதையா?
கட்டுரை ஆசிரியர் – காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

கங்கை தோன்றியது பற்றிய கட்டுரை. பாகம் 1 :
https://m.facebook.com/story.php?story_fbid=1401334783272649&id=100001884215718
இந்த முதலாம் பகுதியில் விஞ்ஞானிகளின் கருத்துக்களைக் கண்டோம்.  இதன் தொடர்ச்சியாக இந்திய மெய்ஞானிகள் கூறியுள்ள கங்காபுராணக் கதையை இனிக் காண்போம்.




கங்கை தோன்றியது பற்றிய கட்டுரை. பாகம் 2 :

கங்கா புராணம் கூறும் ஆன்மிகக் கதை -
சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன், அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள். தன் தேசம் சிறியதாய் இருப்பதல் தன் பிள்ளைகளுக்காகத் தன் தேசத்தை விரிவு படுத்த எண்ணினான். அதனால் அவன் அசுவமேத யாகம் செய்தான். அசுவமேத யாகம் நடைபெற்றால் தனது பதவி பறிபோய்விடும் என இந்திரன் பயந்து, அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாரிஷி ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் கடுந்தவத்தில் இருந்த கபில ரிஷியைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்கள் அனைவரையும் மற்றும் அவர்களுடன் வந்த சேனைகளையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டுக் கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகா ரிசிகள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை. ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான்.
அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால் கடும் வேகத்துடன் கங்கை பூமியில் இறங்கும் போது, அதன் வேகத்தைப் பூமியால் தாங்க முடியாது. பூமி அழிந்துவிடாமல், பூமியில் கங்கையை இறக்கிடச் சிவபெருமானை வேண்டிக் கொள்ளுமாறும் ரிஷிகள் மன்னனுக்கு அறிவுரை கூறினர்.

ஸ்ரீ ராமசந்த்ராய நம :


பாலகாண்டம் – 43ஆவது ஸர்க்கம்
கங்கை பூமிக்கு வந்தது

தேவதேவே கதே தஸ்மின் ஸோங்குஷ்டாக்ர நிபீடிதாம்
க்ருத்வா வஸுமதீம் ராம ஸம்வத்ஸர முபாஸத :
பிறகு பகீரதன் கால் கட்டை விரலைப் பூமியில் ஊன்றி, கைகளை உயரத் தூக்கிக் கொண்டு யாதொரு பற்றுமின்றி, வாயுவே ஆகாரமாய், கட்டையைப் போல் அசையாமல் இரவும் பகலும் பரமசிவனைக் குறித்துத் தவம் செய்தார். பிறகு மஹாதேவன் பார்வதியுடன் அவருக்குப் பிரஸன்னமாய், “ராஜச்ரேஷ்ட, உன் தபஸால் திருப்தியடைந்தேன். உன்னிஷ்டப்படி பர்வதராஜ புத்திரியான கங்கையைத் தலையில் தரிக்கிறேன்“ என்றார். அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை, பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.

“என் வேகத்தைத் தாங்கக் கூடியவர்களுமுண்டோ, இந்த சங்கரனையும் அடித்துக் கொண்டு பாதாளத்திற்குப் போவேன்“ என்றாள். அவளுடைய கர்வத்தை அறிந்து ருத்ரன் கோபங்கொண்டு அவளை மறைக்க நினைத்தார். அவருடைய புண்ணியமான சிரஸில் விழுந்தவுடன் ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள். “பரமசிவனுடைய தலையில் கங்கை விழுவதைப் பார்த்தேன். உடனே பூமிக்கு வரவேண்டியதல்லவா? இவ்வளவு காலமாகியும் ஏன் இன்னும் வெளிப்படவில்லை? ஸர்வேச்வரனான சங்கரனைச் சரணமடைய வேண்டும்“ என்று மறுபடியும் அவரைக் குறித்துத் தவம் செய்தார். அதனால் பகவான் ஸந்தோஷித்து பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார். அவள் அப்போது ஏழு ப்ரவாகங்களாய்ப் பூமியில் விழுந்தாள். அவைகளில் ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும் ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின. ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது. அந்த ராஜ ச்ரேஷ்டர் திவ்யமான ரதத்தில் ஏறிக் கொண்டு முன்னே போனார். கங்கைக்கு த்ரிபதகா என்ற பெயர் வந்த விதத்தைச் சொன்னேன். அவளுடைய அற்புதமான செய்கைகளைச் சொல்லுகிறேன்.
ஆகாசத்திலிருந்து சிவனுடைய சிரஸிலும் அங்கிருந்து பூமியிலும் விழுந்ததால் அந்த ஜலம் பயங்கரமான சப்தத்துடன் வந்தது. மீன் ஆமை சிம்சுமாரம் முதலை முதலிய ஜல கூந்துக்கள் அதில் துள்ளி விழுந்து கொண்டிருந்தபடியால் பூமி நன்றாக விளங்கிற்று. ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் ஆச்சரியத்தைப் பார்க்கத் தேவ, ரிஷி, கந்தவர்வ, யக்ஷ, ஸித்த கணங்கள் நகரங்களைப் போன்ற விமானங்களிலும் குதிரைகளிலும் யானைகளிலும் கூட்டங் கூட்டமாய் அங்கே வந்தார்கள். அவர்களின் தேஹ காந்தியாலும் ஆபரணங்களின் பிரகாசத்தாலும் எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம் மேகங்களில்லாமல் ஜ்வலித்தது. கங்கையில் மீன், சிம்சுமாரம் முதலிய ஜல ஜந்துக்கள் அங்குமிங்கும் துள்ளுவதால் மின்னல்கள் பாய்வது போலிருந்தது. நான்கு புறங்களிலும் பலவிதமாய் வாரியிறைக்கப்பட்ட நுரைகளாலும் நீர்த் திவலைகளாலும் ஹம்ஸக் கூட்டங்களுடன் கூடிய வெண்மையான சரத்கால மேகங்களால் ஆகாசம் நிறைந்தது போலிருந்தது. அந்த நதியின் ஜலம் சில இடங்களில் அதி வேகமாயும், சில இடங்களில் கோணலாயும், சில இடங்களில் நேராகவும்,
பள்ளங்களிலும் கீழாகவும், கல் முதலியவைகளால் தடுக்கப்பட்டபொழுது மேல் முகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும், சில இடங்களில் அலைகளின் வேகத்தால் ஜலத்துடன் ஜலம் மோதிக்கொண்டு அடிக்கடி எதிர்த்துக் கொண்டும் பூமியில் விழுந்தது. பரமசிவனுடைய தலையில் விழுந்து அங்கிருந்து பூமியில் வந்ததால் நீர்மலாய்ப் பாபங்களைப் போக்கும் புண்ணிய தீர்த்தமாயிற்று.

தேவர்களும், ரிஷிகளும், கந்தவர்வர்களும், பூமியிலுள்ளவர்களும் “பரமசிவனே இதைத் தலையால் தாங்கினதால் இது மஹா பரிசுத்தமான தீர்த்தம். அவருடைய தேஹத்தில் பட்டுப் பூமியில் விழுந்ததால் இதற்கு விசேஷ சுத்தியுண்டாயிற்று“ என்று அதில் ஸ்தானம் செய்தார்கள். சாபத்தால் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களும் அதில் ஸ்நானஞ் செய்து பாபங்கள் நீங்கிப் புண்ணிய லேகங்களுக்குப் போனார்கள். பூமியிலுள்ளவர்கள் அதில் ஸ்தானம் செய்து பாபங்கள் விலகிப் பரமானந்தம் அடைந்தார்கள்.

ராஜரிஷியான பகீரதர் திவ்ய ரதத்தில் ஏறிக் கொண்டு முன்னே சென்றார். கங்கை அவரைப் பின்தொடர்ந்தாள். தேவ, ரிஷி, தைத்ய, தானவ, ராக்ஷஸ, கந்தவர்வ, யக்ஷ, கின்னர, உரக, அப்ஸரஸ் கணங்களும் ஜல ஜந்துக்களும் பகீரதரைப் பின்தொடரும் கங்கையைப் பின் தொடர்ந்தார்கள். அவர் போகும் வழியெல்லாம் கங்கையும் போய் ஸமஸ்த பாபங்களையும் நாசஞ் செய்தது. வழியில் ‘ஜன்ஹுரிஷி‘ யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில் பரவி யாகபதார்த்தங்களை அடித்துக் கொண்டு போயிற்று. அவளுடைய கர்வத்தால் அந்த ரிஷி கோபங்கொண்டு அந்த ஜலம் முழுவதையும் குடித்துவிட்டார். அந்த ஆச்சர்யத்தால் தேவ, ரிஷி கணங்கள் பிரமித்து அந்த மஹாத்மாவைப் பலவிதமாய்ப் பிரார்த்தித்து, “ஸ்வாமி, கங்கையின் அபராதத்தைப் பொறுக்க வேண்டும். தங்களுடைய தேஹத்திலிருநது வெளிப்படுவதால் அவள் தங்களுக்குப் பெண்ணாகட்டும்“ என்றார்கள். அதனால் அவர் ஸந்தோஷித்து கங்கா ப்ரவாஹத்தைத் தன் காதின் வழியாய் வெளியில் விட்டார்.

அன்று முதல் அவளுக்கு ஜான்ஹவி (ஜன்ஹுவின் புத்ரி) என்று பெயராயிற்று. பிறகு அவள் பகீரதரைப் பின் தொடர்ந்து, ஸமுத்திரத்திற்கு வந்து, அங்கிருந்து பாதாளத்திற்குப் போனாள். தன் முன்னோர்கள் எரிந்து கிடக்கும் இடத்திற்கு அவர் அவளை அழைத்துக் கொண்டுபோய் அவர்கள் சாம்பலாயிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார். அந்தப் புண்ணிய ஜலம் சாம்பல் மேடை நனைத்தவுடன் ஸகர புத்திரர்கள் பாபம் ஒழிந்து உத்தமலோகங்களை அடைந்தார்கள்.

அத தத்பஸ்மனாம் ராசிம் கங்கா ஸலில முத்தமம்
ப்லாவயத் தூதபாப்மான: ஸ்வர்க்கம் ப்ராப்தா ரகூத்தம (43)

கட்டுரையின் முதலாம் பகுதியில் விஞ்ஞானிகளின் கருத்துக்களையும், இரண்டாம் பகுதியில் பாரதபுராணங்கள் கூறும் மெஞ்ஞானிகள் கருத்துகளையும் அறிந்து கொண்டோம்.  மேற்கண்ட விஞ்ஞான மெஞ்ஞானக் கருத்துக்களுடன் அஞ்ஞானியான நான் உணர்ந்து கொண்டதை கட்டுரையின் மூன்றாம் பகுதியாக இணைத்து வெளியிடுகிறேன்.


அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்


It is widely believed that millions of years ago, a comet or asteroid impacted the Earth.
The blast sent molten shrapnel back into outer space, which the came back with devastating results for animals and plants in the vicinity.
Photo Credits : NHK, Japan

(மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வால்மீன் அல்லது சிறுகோள் பூமியை பாதித்தது என்று பரவலாக நம்பப்படுகிறது.
அது மோதியதால் சிதறி உண்டான சிறு துகள்களை மீண்டும் விண்வெளிக்குச் சென்று பூமியில் விழுந்துள்ளன.  இதனால் பூமியில் வாழ்ந்திருந்த விலங்குகளும் தாவரங்களும் அழிந்துள்ளன.)

சனி, 9 நவம்பர், 2019

கல்லா? கல்மரமா?

கல்லா? கல்மரமா?


சிவகங்கை மாவட்டத்தில் கல்லாகி போன காதலர்களின் கதை 
முகநூல்பதிவு -  Sugar Jayabalan  9 நவம்பர், 2018, பிற்பகல் 7:55


நூற்றாண்டுகளை கடந்து இன்றும் இப்பகுதி மக்களால் நினைவு கூறப்படுகிறது. மானாமதுரை- சிவகங்கை சாலையில் வேலூர் விலக்கு ரோட்டில் ஒரு கி.மீ. தூரம் சென்றால், அதிகரை எனும் கிராமத்திற்கு கிளைச்சாலை பிரிகிறது. நத்தைபுரக்கி கிராமத்தை அடுத்த அதன் அருகே உள்ள பொட்டல் வெளியில் ஐந்தரை அடி உயரத்தில் தூண் போல ஒரு கல்லும், நான்கடி உயரத்தில் சாய்ந்த நிலையில் ஒரு கல்லும் உள்ளன. இந்த கற்தூண்கள் காதல் தோல்வியால் கல்லாகி போன காதலர்கள் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

மேலும், அந்தக் கற்களின் காதல் கதை என அப்பகுதி மக்கள் பிளாஷ்பேக் ஒன்றையும் சொல்கிறார்கள். அதாவது, பழங்காலத்தில் சகோதர சகோதரி உறவு உள்ள இளைஞனும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்களது காதலை அவர்கள் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வந்து, கண்ணீர் சிந்தியபடி கடவுளை வேண்டி கல்லாக மாறி விட்டனர் என்கிறார்கள் அவர்கள். அதோடு, இந்த தூண்களை வழிபட்டால் தங்களின் காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இப்பகுதி காதலர்களின் மத்தியில் நிலவுகிறது.

இதனால் பல நூறாண்டுகள் கடந்தும் உறுதியாக கல்லாக நிற்கும் இந்த காதலர்களை வழிபட இன்றைய இமெயில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் காதலர்கள் படையாக வந்து கொண்டிருக்கின்றனர். இங்கு வழிபட்டு, காதல் நிறைவேறி திருமணம் முடித்துக் கொண்ட ஜோடிகளும் மீண்டும் வருகின்றனர்.

இதையெல்லாம் மிஞ்சும் விதமாக நல்ல காதலன் அல்லது நல்ல காதலி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வருபவர்களும் இங்கு வருவது உண்டாம்.

கடந்த சில ஆண்டுகளாக இங்கு நிறைய காதல் ஜோடிகள் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவ்வாறு வருபவர்களில் சிலர், இந்தக் கற்களின் கீழ் வளையல், மஞ்சள், பொட்டு, காசு வைத்து சாமி கும்பிட்டு விட்டு செல்கின்றனராம். இரண்டே இரண்டு கற்கள், வெயில், மழையில் நனைந்தபடி.. காதல் சின்னமாக இதை சிலர் சொல்லப் போக.. இந்த கல்வட்ட கல்லுக்குள் புதைந்துள்ள மர்மம் என்னவோ.. தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து விளக்கினால்தான் உண்டு!
-சிவகங்கை சீமை-

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

பரிபாடலில் புவி அறிவியல் கோட்பாடு

பரிபாடலில் புவி அறிவியல் கோட்பாடு

சங்கப்புலவர் கீரந்தையார் பரிபாடலில் திருமலை வாழ்த்திப் பாடியுள்ளார்.
அந்தப் பாடலில் ஊழிக் காலங்கள் பற்றிய மிகவும் சிறப்பாகச் சொல்லுகிறார்.


தொன்முறை இயற்கையின் மதியொ .....
......     .....   ....   ...    மரபிற்றாகப்
பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்ஊழ்செல்லக் (formation of a black hole)
கருவளர் வானத் திசையின் தோன்றி ( spacetime starts to deform)
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்,  (that black hole was so strong that nothing—no particles or even electromagnetic radiation such as light—can escape from it)
உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும், (birth of primordial sound (Om), associated with the creation of universe,solar system, the earth etc. from that black hole.)
செந்தீச் சுடரிய ஊழியும், (colletion of Gangan on Earth)
பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும், (landing of Gangai on Himalaya)
அவையிற்று உண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு ( destructive tsunamis)
மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும் (land slumping into the ocean are retreated)
உள்ளீ டாகிய இரு நிலத்து ஊழியும், (Continental collision)
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மையில் கமலமும், வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை (Eras passed)
கேழல் (பன்றி, varagham) திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ (திருமாலே), நின் பேணுதும் தொழுது.
.......
.......

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 10 (27.10.2019) ஞாயிறு கிழமை.

(குறிப்பு - ஆங்கில மொழிபெயர்ப்பில் பிழை யிருந்தால் அன்புடன் சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறேன்.)

தீபாவளி - பன்றியை வாழ்த்தி வணங்குவோம்

தீபாவளித் திருநாளில் 
ஊழிக்காலத்தில் உலகைக் காத்த
பன்றியை வாழ்த்தி வணங்குவோம்


இந்தப் பூமி (நிலப்பகுதி) முழுவதையும்
ஊழிக்காலத்தில் கடல்கொண்டது (பெருஞ் சுனாமி).
பெருநிலங்களும் கடலால் மூழ்கடிக்கப்பட்டன.
அந்நாளில்,
ஆழி முதல்வனே,
நீ, பன்றிபோல் தோன்றினாய்,
கடல்வெள்ளத்தில் மூழ்கிய நிலப்பகுதியைத் தூக்கி நிறுத்தினாய்,
பூமி (நிலப்பகுதி) இப்போதிருக்கும் நிலையில் நிலைபெற்றது.
அதனால், பன்றியே,
உன்னுடைய திருவடியை என் தலையினால் வணங்குகிறேன்.
கலி இல் நெஞ்சினேம், ஏத்தினேம், வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்,
கொடும்பாடு அறியற்க எம் அறிவு.

இப்படிக்கு,
கீரந்தையார்
முத்தமிழ்ச் சங்கப் புலவன்.
------------------------------------------------------
பரிபாடல்  - 2 திருமால் வாழ்த்து
பாடியவர்: கீரந்தையார்
பண் அமைத்தவர் : நன்னாகனார்
பண் : பண்ணுப்பாலையாழ்

தொன்முறை இயற்கையின் மதியொ .....
......     .....   ....   ...    மரபிற்றாகப்
பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழூழ் செல்லக் (formation of a black hole)
கருவளர் வானத் திசையின் தோன்றி ( spacetime starts to deform)
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்,  (that black hole was so strong that nothing—no particles or even electromagnetic radiation such as light—can escape from it)
உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும், (birth of primordial sound (Om), associated with the creation of universe,solar system, the earth etc. from that black hole.) 
செந்தீச் சுடரிய ஊழியும், (colletion of Gangan on Earth)






பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும், (landing of Gangai on Himalaya)



அவையிற்று உண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு ( destructive tsunamis)
மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும் (land slumping into the ocean are retreated)
உள்ளீ டாகிய இரு நிலத்து ஊழியும், (Continental collision)


நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மையில் கமலமும், வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை (Eras passed)
கேழல் (பன்றி, varagham) திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ (திருமாலே), நின் பேணுதும் தொழுது.
.......
.......
........                ............. நின் அடி
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும்,
கலி இல் நெஞ்சினேம், ஏத்தினேம், வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே.
-------------------------------------------------------------------
சங்கத் தமிழ் போற்றுவோம்,
சங்கப் புலவர் போற்றுவோம்,
பரிபாடல் போற்றுவோம்.

தீபாவளி நல்வாழ்த்துகள்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 10 (27.10.2019) ஞாயிறு கிழமை.

(குறிப்பு - ஆங்கில மொழிபெயர்ப்பில் பிழை யிருந்தால் அன்புடன் சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறேன்.)

புதன், 16 அக்டோபர், 2019

இனி சுனாமி வருமா? வராதா?

இனி சுனாமி வருமா? வராதா?


26 டிசம்பர், சுனாமி நினைவு நாள் வருகிறது.
இதுபோல் சுனாமி இனிமேல் வருமா? வராதா?

மனிதர்கள் யாரும் மறக்கமுடியாத நாள் 26 டிசம்பர் 2004.  சுனாமி.  1,74,296 பேர் இறந்துவிட்டனர்.  1,08,221பேர் காணவில்லை. ஆக மொத்தம் 2,82,517 இல்லாமல் போய்விட்டனர்.  இதில் இந்தியாவில் மட்டும் 16,389 பேர்  இல்லாமல் போய்விட்டனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.  இந்தப் பேரழிவுச்  சுனாமி இனிமேலும் வருமோ? என்ற அச்சம் எல்லோர் மனத்திலும் உள்ளது.
இனி சுனாமி எப்போது வரும்? எங்கே வரும்? என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

என்னிடம் கேட்டால்,
நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து வரும் கடல்கோளும் (சுனாமியும்) பிரளயத்தால் உண்டாகின்றன.  பிரளயம் என்றால் நிலத்திட்டுகள் பிரள்வது, அல்லது புரண்டு விழுவது.  இந்தோனேசியா நிலத்திட்டு அடுக்கடுக்கான பொக்குப்பாறைகளால் உருவானது.

கடலில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்துக்கிடப்பது போல் அடுக்கடுக்கான பொக்குப்பாறைகளால் ஆன bedding நிலமைப்பைக் கொண்டது.  பாம்பின் தோல்களில் செதில்கள் இருப்பதைப் போன்று, இந்தோனேசியா நிலத்திட்டில் பாறை யடுக்குகளுக்கு இடையே செதில்கள் (fault)உள்ளன.  இந்தச் செதில்கள் பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கமும் கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன.

நிலநடுக்கமும், கடல்கோள் (சுனாமியும்) எப்போது உண்டாகும்?
இதை உறுதியாகக் கூற இயலாது.  செதில் (fault)எப்போது பெயர்ந்து விழும்? என்பதை உறுதியாக யாராலும் கணித்துச் சொல்லவே முடியாது.   இதைக் கணித்தே ஆக வேண்டும் என்றால்,  இதுவரை பிரளயம் (நிலநடுக்கம், சுனாமி) நடைபெற்ற நாட்களைத் தொகுக்க வேண்டும்.  நிலநடுக்கமும் சுனாமியும் உண்கியுள்ள நாட்களில், சூரிய சந்திரன் முதலான ஒன்பது கோள்களின் நிலைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றிற்கும் சுனாமிக்கும் தொடர்பு  (correlation)உள்ளதா?  எனக் கணக்கிட்டுக் கண்டறிய வேண்டும்.
இவ்வாறான கணிதமுறையினால் ஆன கணிப்பினால் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரளயம் கடல்கோள் நிகழ வாய்ப்பு உள்ளதா? என அறிவியல் அடிப்படையில் கூறிடமுடியும்.

மற்றபடி,  இந்தோனேசியா நிலத்திடு உருவாகி வெகுகாலம் ஆகி விட்டது.  நிலம் நன்றாக இறுகி விட்டது.   இந்த நிலத்திட்டில் விழும் நிலையில் இருந்த செதில்கள் (faults)மிகுதியும் ஏற்கனவே விழுந்துவிட்டன.  எனவே இனி வரும் காலங்களில் நிலத்திட்டுகள் பிரள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
எனவே நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து கடல்கோள்களும் (சுனாமிகளும்) உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

அடிக்கடி கடல்கோள் (சுனாமி) உண்டாகாது.
அச்சமில்லாமல் இக்கலாம்,
ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அன்பன்,
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.
புரட்டாசி 29 (16.10.2019) புதன் கிழமை

(நன்றி -- படம் இணையத்தில் இருந்து எடுத்தது.  இந்தப் படத்தை இணையத்தில் பதிவு செய்தோருக்கு நன்றி)

புதன், 9 அக்டோபர், 2019

கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

கீழடி அகழாய்வு, 
தொல்லியலாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்.


தமிழக தொல்லியல்துறையின் அறிக்கையை ஆங்கிலம் சீனம் உருது இந்தி மற்றும் கீழை நாடுகளின் மொழிகளில் வெளியிட வேண்டும்.  இந்த அறிக்கையை இந்த மொழிகளில் ஆவணப்படமாகமாகவும் வெளியிட வேண்டும்.  இவ்வாறு செய்தால் மற்றோரும் தமிழரின் தொன்மையை மற்றோரும் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.

கூலிக்கு ஆட்களைக் கூட்டி வந்துதான் அகழாய்வு செய்யவேண்டும் என்பதில்லையே. மதுரையில் உள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்தாலே போதும். 100 ஏக்கரையும் மிகவும் குறைந்த செலவில் விரைவாக அகழாய்வு செய்திடலாமே.

கட்டுமானங்கள் கண்டறியப்படும்போது கொத்தனார்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். சுடுமண் பானைகள் கண்டறியுப்படும்போது குயவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்.  சும்மா பார்வையாளராக வருவோரின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்.  பல்வேறு அறிஞர்களும் அவரவர் கருத்துக்களை கூறிட வேண்டும்.  அனைவரின் கருத்துக்களையும் தொல்லியல் துறையினர் வரவேற்க வேண்டும்.  எல்லோர் கருத்துக்களையும் தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எனது விரும்பம்.  இவ்வாறு அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிவதே சங்கம். இதுவே தமிழரின் பண்பாட்டுக் கூறு.

என்ன, நான் சொல்வது சரிதானே 😏

ஆலவாய் போற்றுவோம்,
கூடல் மாநகர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 1 அக்டோபர், 2019

What is the timeline of the tsunami event according to you?

I checked your blog. Your theory about ganga (or tarim basin?) is some thing very unique.  What is the timeline of the tsunami event according to you?
balasundaram ramaswamy

மனிதர்கள் யாரும் மறக்கமுடியாத நாள் 26 டிசம்பர் 2004.  சுனாமி.  1,74,296 பேர் இறந்துவிட்டனர்.  1,08,221பேர் காணவில்லை. ஆக மொத்தம் 2,82,517 இல்லாமல் போய்விட்டனர்.  இதில் இந்தியாவில் மட்டும் 16,389 பேர்  இல்லாமல் போய்விட்டனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.  இந்தப் பேரழிவுச்  சுனாமி இனிமேலும் வருமோ? என்ற அச்சம் எல்லோர் மனத்திலும் உள்ளது.

இனி சுனாமி எப்போது வரும்? எங்கே வரும்? என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
என்னிடம் கேட்டால்,


நான் புவியியல் அறிஞனல்ல.  ஆனால் புராணம் கூறும் கடல்கோள்கள் பற்றிப் படித்துள்ளேன் என்றேன்.  நீங்கள் படித்தறிந்ததன் அடிப்படையிலேயே கூறுங்கள், இனி சுனாமி வரும் வாய்ப்புகள் உள்ளனவா? எப்போது வரும்? என்று மீண்டும் கேட்டார்.

நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து வரும் கடல்கோளும் (சுனாமியும்) பிரளயத்தால் உண்டாகின்றன என்கின்றது புராணம்.   
பிரளயம் என்றால் நிலத்திட்டுகள் பிரள்வது, அல்லது புரண்டு விழுவது.  கங்கை என்ற வீண்ணீர்க்கோள் பூமியில் இறங்கி, அதிலிருந்த மண்ணும் நீரும் மற்றும் பல வேதிப்பொருட்களும் பூமியெங்கும் பரவியுள்ளன.  இவ்வாறு பரவி இந்தோனேசியா நிலத்திட்டு உருவாகியுள்ளது. கங்கைநீர் பாய்ந்தோடி இந்த நிலத்திட்டு உருவாகியுள்ளதால் இது  அடுக்கடுக்கான (bedding)நிலமைப்பைக் கொண்டுள்ளது.  அடுக்குகளுக்கு இடையே செதில்கள் (fault) உள்ளன.  இந்தச் செதில்கள் பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கமும் கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன. 


ஆன்மிக அடிப்படையில் விளக்குவது என்றால், கடலில் பாம்பின்மீது பள்ளிகொண்டுள்ள பெருமாளை நினைவிற் கொள்ள வேண்டும்.  பெருமாள் படுத்திற்கும் பாம்பு போன்று இந்தோனேசியா நிலத்திட்டு உள்ளது. இந்தோனேசியா நிலத்திட்டு சுருண்டு படுத்துள்ள பாம்பின் உடலைப் போன்று ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்கான நிலத்திட்டுக்களைக் கொண்டுள்ளது.  பாம்பின் தோலில் உள்ள செதில்கள் போன்று, இந்தோனேசியாபெருந்திட்டில் (indonesia plate)சிறுசிறு ஒழுங்கற்ற நிலத்திட்டுகள் (faults) உள்ளன.  இவ்வாறு உள்ள சிறுசிறு செதில்கள் எப்போதாவது பெயர்ந்து விழுகின்றன.  இவ்வாறு கடலுக்கு உள்ளே சிறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழும்போது நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன. 





நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து வரும் கடல்கோளும் (சுனாமியும்) பிரளத்தால் உண்டாகின்றன என்கின்றது புராணம்.   பிரளயம் என்பது நிலத்திட்டுகள் பிரள்வது, அல்லது புரண்டு விழுவது. கங்கை என்ற வீண்ணீர்க்கோள் பூமியில் இறங்கி, அதிலிருந்த மண்ணும் நீரும் மற்றும் பல வேதிப்பொருட்களும் பூமியெங்கும் பரவியுள்ளன.

இவ்வாறு பரவியதால்தான் இந்தோனேசியா நிலத்திட்டு முழுவதும் உருவாகியுள்ளது. கங்கை என்ற வீண்ணீர்க் கோளினால் உருவான இந்த நிலத்திட்டு bedding முறையிலான அமைப்பைக் கொண்டது.  இதில் fault உள்ள இடங்கள் பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கமும் கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன. 


நிலநடுக்கமும், கடல்கோள் (சுனாமியும்) எப்போது உண்டாகும்?  
இதை உறுதியாகக் கூற இயலாது.
செதில் (fault)எப்போது பெயர்ந்து விழும்? என்பதை உறுதியாகச் சொல்லவே முடியாது.  சொல்லியே ஆக வேண்டும், இதைக் கணித்தே ஆக வேண்டும் என்றால்,  இதுவரை பிரளயம் (நிலநடுக்கம், சுனாமி) நடைபெற்ற நாட்களைத் தொகுக்க வேண்டும்.  நிலநடுக்கமும் சுனாமியும் உண்கியுள்ள நாட்களில், ஒன்பது கோள்களின் ( sun, moon, .....raghu, kethu - 9 planets) நிலைகளுக்கும் தொடர்புகள்  (correlation)ஏதேனும் உள்ளதா?  எனக் கணக்கிட்டுக் கண்டறிய வேண்டும்.

இவ்வாறான கணிதமுறையினால் ஆன கணிப்பினால் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரளயம் கடல்கோள் நிகழ வாய்ப்பு உள்ளதா? என அறிவியல் அடிப்படையில் கூறிடமுடியும்.

மற்றபடி,  கங்கை பூமியில் இறங்கி,  அதனால் இந்தோனேசியா நிலத்திடு உருவாகி வெகுகாலம் ஆகி விட்டது.  நிலம் நன்றாக இறுகி விட்டது.  இந்த நிலத்திட்டில் விழும் நிலையில் இருந்த செதில்கள் (faults)மிகுதியும் ஏற்கனவே விழுந்துவிட்டன.

எனவே இனி வரும் காலங்களில் நிலத்திட்டுகள் பிரள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.  எனவே நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து கடல்கோள்களும் (சுனாமிகளும்) உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு.  அடிக்கடி கடல்கோள் (சுனாமி) உண்டாகாது.
அச்சமில்லாமல் இக்கலாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அன்பன்,
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.
புரட்டாசி 14 ( 01.10.2019) செவ்வாய்கிழமை

https://www.facebook.com/topentertainment2/videos/529182420959030/