வியாழன், 12 ஆகஸ்ட், 2021

திருவிளையாடல் புராணத்தில் கடல்கோள் பதிவுகள் (சலதி வெள்ளம் - Tsunami)

 

திருவிளையாடல் புராணத்தில்

கடல்கோள் பதிவுகள்

 (சலதி வெள்ளம் - Tsunami)

(கட்டுரையாளர் - காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்) [1]

 

            நமக்குத் தேவைப்படும் மருந்து நாம் சாப்பிடும் வடிவத்தில் அப்படியே கிடைக்காது, அதை அப்படியே விற்கவும் முடியாது.  மருந்துத் தயாரிப்பாளர் உற்பத்தி செய்த மருந்தை முதலில் ஒரு கூடு (capsule) போட்டு பத்திரப்படுத்தி, 10 எண்ணிக்கையில் கூட்டுமருந்தை ஒரு அட்டையில் அடைத்து, 10 அட்டைகளை ஒரு அட்டைப்பெட்டியில் அடைத்து வைத்து விற்பார்கள். இதுபோல் தான் புராணக்கதைகளும், பல்வேறு படிநிலைகளைத் தாண்டி, அது எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பயன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நாம் அட்டைகளை நீக்கி விட்டு கூட்டு மாத்திரையைச் சாப்பிடுவது போன்று, திருவிளையாடல் புராணத்தில் “எல்லாம் இறைவன் செயல்” என்று கூறப்பட்டுள்ள கதைகளுக்குள் தமிழரின் அறிவுசார் மரபுவழியிலான மனிதவாழ்வியில், புவியியல், கடல்கோள் பற்றிய செய்திகள் ஏராளமாகப் புதைந்திருப்பதைக் காணலாம். திருவிளையாடற் புராணத்தில் ஆங்காங்கே கூறப்பட்டுள்ள கடல்கோள் பதிவுகளைத் தொகுத்துச் சுருக்கி இக் கட்டுரை வழங்கப்படுகிறது.

            2004ஆம் வருடம் கடல் கரையைக் கடந்து, கடற்கரை ஓரம் வசித்த இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கரையைக் கடந்து நிலத்திற்குள் புகுவதைச் “சுனாமி (Tsunami)” என்ற சப்பானியச் சொல்லாலும், “கடல்கோள், ஆழிப்பேரலை என்ற தமிழ்ச் சொற்களாலும் குறிப்பிடுகின்றனர்.  திருவிளையாடற் புராணத்தில், சலதி பௌவம் முந்நீர் உததி என்ற சொற்களால் கடல் குறிப்பிடப்படுகிறது.  கடல்கோளை அல்லது கடல்வெள்ளத்தைச் (சுனாமியைச்) “சலதிவெள்ளம்” என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.   பரஞ்சோதி முனிவர் ‘சங்கரசங்கிதை‘ என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்துத் தமிழிலில் திருவிளையாடல் புராணம் பாடியுள்ளார்.  

            திருவிளையாடற் புராணத்தில், சலதி என்ற சொல் 13 பாடல்களின் இடம் பெற்றுள்ளது[2]. ஊழிக் காலத்தில் ஏழுகடல்களும் பொங்கி, ஏழு கண்டங்களும் கடலில் மூழ்கின என்று திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது[3].

            எனினும், பாண்டியநாட்டின் தலைநகராகிய  மதுரையில் நடைபெற்ற திருவிளையாடல்களை மட்டுமே திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகின்ற காரணத்தினால், பாண்டியநாடும் மதுரையும் சலதிவெள்ளத்தால் (கடல்கோளால்) அழிந்த நிகழ்வுகள் மட்டுமே விரிவாகப் பாடப்பெற்றுள்ளன.

            திருவிளையாடற் புராணமானது, மதுரைக்காண்டம் கூடற்காண்டம் திருவாலவாய்க்காண்டம் என்று மூன்று காண்டங்களாகக் கடல்கோள் நிகழ்வுகளின் அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன, எத்தனையோ இலக்கியங்கள் உள்ளன. ஆனால், இவ்வாறு கடல்கோளின் அடிப்படையில் காண்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள ஒரே இலக்கியமாகத் திருவிளையாடல் புராணம் மட்டுமே இணைத்தில் காணக் கிடைக்கிறது.

 

1)பேரழிவுகளை உண்டாக்கிய பெருஞ்சுனாமி எது?

(What was the deadliest tsunami in history?)

“டிசம்பர் 26, 2004 அன்று, இந்தோனேசியாவின் சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமான சுனாமி ஒன்று நடந்தது. 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம். 11 நாடுகளின் கடற்கரைகளில் மோதிய 15 மீட்டர் (50 அடி) உயர அலைகளைத் தூண்டியது. சுனாமியின் நேரடி விளைவுகளில் 275,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.  தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, முதலான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  சுனாமிக்குப் பின்னர், பல இலட்சம் மக்கள் தங்குவதற்கு இடமில்லாமலும், உணவு உடை இல்லாமலும், நோயால் பாதிக்கப்பட்டனர்” என்கிறது புவியியல் புள்ளிவிபரங்கள்[4].

            ஆனால், 2004 ஆம் வருடம் தோன்றிய சுனாமியைவிடப் பன்மடங்கு பெரிய அழிவை ஏற்படுத்திய கடல்கோள் (A deadliest mega tsunami) பற்றித் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

 

 

            இந்தக் கடல்கோளில் அழிந்தவை - ஊழிக்காலத்தில், பிரளயத்தினால்[5] வங்கக்கடலில் தோன்றிய பெரிய கடல்வெள்ளத்துள், அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கி நிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த முடிகளை(முகடுகளை) உடைய மலைவகைகளும், மூழ்கி ஒழிந்தன என்கிறது புராணம்[6]. 

            இந்தக் கடல்கோளில் அழியாமல் இருந்தவை - அருள்மிகு மதுரை மீனாட்சி திருக்கோயிலும், வானினின்று இறங்கிய இந்திரவிமானமும், பொற்றாமரை குளமும், இடபமலையும் (அழகர்மலையும்), யானைமலையும், நாகமலையும், பசுமலையும், பன்றிமலையும் முதலிய இடங்களும், அந்தக் கடல்வெள்ளத்தால் அழியாதனவாக இருந்தன என்கிறது புராணம்[7].  அதாவது மலைகளும் கற்றளிகளும் மட்டுமே சுனாமியினால் அடித்துச் செல்லப்படாமல் இருந்தன என்கிறது புராணம்.

            இந்தக் கடல்கோளுக்குப் பின் தோன்றியவை - கடல்வெள்ளம் வற்றிய பிறகு, சிவபெருமான், முன் இருந்த தன்மை போலவே உலகந் தோன்றுமாறு அருள்புரிந்தார்.  தேவர்களையும் மக்களையும் மற்றைப் பறவைகளையும் விலங்குகளையும் தோற்றுவித்தார்.  சந்திரன் சூரியன் தீ ஆகிய மூன்றும் உலகிற்கு ஒளி வழங்குகின்றன.  சிவபெருமான் இந்த மூன்றின் மரபில், முன்போலவே, திங்கள் மரபினர் பாண்டியரும், ஞாயிற்றின்மரபினர் சோழரும், அங்கி மரபினர் சேரரும் என மூன்று தமிழ் மன்னர்களையும் தந்தருளினான்” என்கிறது புராணம்[8].  அதாவது புற்பூண்டு மரஞ்செடிகொடி மாக்கள் மனிதர் என எல்லா உயிர்களும் இந்தக் கடல்கோளுக்குப் பின்னர் மீண்டும் தோன்றின என்கிறது புராணம்.

2) எத்தனை கடல்கோள்கள் பதிவாகி உள்ளன?

(How many recorded tsunamis have there been?)

            மதுரையில் நடைபெற்ற திருவிளையாடல்களைக் குறிப்பிடும் திருவிளையாடற் புராணமானது, பாண்டியநாட்டின் தலைநகரான மதுரையுடன் தொடர்புடைய நான்கு கடல்கோள்களைப் (கடல்வெள்ளங்களைப்) பற்றிக் குறிப்பிடுகிறது.

            புராணம் குறிப்பிடும் கடல்கோள் 1 - திருவிளையாடற் புராணம் 4ஆவது படலமாகிய “தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலத்தில் ” மதுரைக்கு ஏழுகடல்களும் வந்தன என்றொரு குறிப்பு கூறப்பட்டது.   மலையத்துவச பாண்டியன்[9]  என்ற பாண்டி மன்னனின் மனைவி காஞ்சனமாலை.  இவர்களது மகள் தடாதகைப் பிராட்டியார்.  தடாதக் பிராட்டியாரை மணந்துகொண்டு அருள்மிகு சோமசுந்தரேசுவரர் மதுரையை ஆண்டுவந்தார்.  அப்போது ஒருநாள் காஞ்சனமாலை கடலில் நீராடவேண்டும் என விரும்பினாள். காஞ்சனமாலை கடலில் நீராடுவதற்காகச் சிவபெருமான் அழைத்ததனால் ஏழு கடல்களும் மதுரைக்கு வந்தன(சுனாமி) என்கிறது இந்தப் புராணக்கதை.

புராணம் குறிப்பிடும் கடல்கோள் 2 -   திருவிளையாடற் புராணம் 13ஆவது படலமாகிய “கடல்சுவற வேல்விட்ட படலத்தில்”, சுந்தரபாண்டியனின் மகனான உக்கிர குமாரன் ஆட்சிக்காலத்தில், மதுரைக்குக் கடல்வெள்ளம் (சுனாமி) வந்ததாம்.   உக்கிரகுமாரன் வேல் எறிந்து அந்தக் கடல்வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தினான் என்கிறது இந்தப் புராணக் கதை. 

            உக்கிர குமாரன் என்ற சுந்தர பாண்டியனின் மனைவி காந்திமதி ஆவாள்.  இவள் மதுரைக்கு அருகில் இருந்த மணவூரைச் (கீழடி அருகே உள்ள ஊர்) சேர்ந்தவள் என்கிறது புராணம்.   இந்நாளில் கீழடியருகே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ள நகரமான பண்டைய பாண்டியர்களின் தலைநகரமான மதுரையாக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் இந்தத் தொன்மையான நகரம் கடல்கோளால் அழிந்துள்ளது என்றும் இந்தப் புராணக் கதையின் வழியாக அறியமுடிகிறது.

            புராணம் குறிப்பிடும் கடல்கோள் 3 -   திருவிளையாடற் புராணம் 18 ஆவது படலமாகிய “வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலத்தில்”, கடல்கோளுக்குப் பின்னர் உண்டான பெருமழை பற்றிய செய்தியைக் கூறுகிறது இந்தப் புராணக்கதை.

            வீரபாண்டியன் என்ற உக்கிரபாண்டியனின் மகன் அபிடேகபாண்டியன்.  அபிடேகபாண்டியனது ஆட்சிக்காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி (சுனாமி) மதுரையை அழிக்க வந்ததது.  பாண்டியனது வேண்டுகோளுக்கு இணங்கிச் சிவபெருமான் நான்குமேகங்களை அனுப்பிக் கடல்நீரை உறிஞ்சுமாறு செய்தார்.  நான்கு மேகங்களும் சந்து இல்லாமல் கூடிநின்று கடல்நீரை உறிஞ்சியதால் கடல்நீர் முற்றிலுமாக வற்றிப்போனது.  பூமியானது பழைய இயல்பிற்குத் திரும்பியது என்கிறது புராணம்[10].             

            புராணம் குறிப்பிடும் கடல்கோள் 4 -   திருவிளையாடற் புராணம் 49 ஆவது படலமாகிய “திருவாலவாயான படலத்தில்”, அழகுமிக்க அதுலகீர்த்தி என்னும் பாண்டியனின் மகனாகிய கீர்த்திபூடண பாண்டியன் செங்கோலோச்சி வரும் காலத்தில், பிரளயம் ஏற்பட்டு, கரிய கடல்கள் ஏழும், ஒருசேரப் பொங்கி மேலெழுந்து, வெகுண்டு சீறி ஆரவாரித்து, காவலாகிய எல்லையைக்கடந்து, விண்ணுலகும் மண்ணுலகும், போர்செய்யும் மதத்தையுடைய எட்டு யானைகளும், பெரிய பொன்னையுடைய எட்டு மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும், நிலைபெயருமாறு, பிரளயமாக ஒன்றோடொன்று கோத்தன[11].  அந்தப் பெரிய கடல் வெள்ளத்துள் (பெருஞ் சுனாமியுள்) மூழ்கி, அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த முடிகளையுடைய மலைவகைகளும், ஒழிந்தன[12] என்கிறது புராணம்.

            கடல்கோளிற்குப் (சுனாமிக்குப்) பின்னர் தோன்றிய, வங்கிய சேகர வழுதி மன்னன் மதுரை நகரை மீண்டும் அமைத்தான்[13] என்கிறது புராணம்.

             

 

3) கொதித்து எழுந்த கடல் -

How big is a tsunami?

“அலாஸ்காவின் லிட்டூயா விரிகுடாவில் 1720 அடி உயரத்தில் சுனாமி ஏற்பட்டது.  ஜூலை 9, 1958 இரவு, அலாஸ்கா பன்ஹான்டில் நடந்த நிலநடுக்கம் லிட்டூயா விரிகுடாவின் வடகிழக்கு கரையிலிருந்து சுமார் 30.6 மில்லியன் கன மீட்டர் பாறை, சுமார் 914 மீட்டர் உயரத்தில் இருந்து நீரில் மூழ்கி சுனாமியை உருவாக்கியது.  அலைகளின் சக்தி அனைத்து மரங்களையும் தாவரங்களையும் கடல் மட்டத்திலிருந்து 1720 அடி (524 மீட்டர்) உயரத்தில் இருந்து அகற்றியது. கோடிக்கணக்கான மரங்கள் பிடுங்கப்பட்டு அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. இது இதுவரை அறியப்படாத மிக உயர்ந்த அலை” என்கின்றது புவியியல் புள்ளிவிபரம்[14].    

            ஆனால் சுந்தரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் உண்டான கடல்கோளின் போது, கடல்அலையானது அண்டத்தின் (Universe) முகட்டினைத் தடவும் உயரத்திற்கு எழுந்தது என்கிறது புராணம்.   “சந்திரனது துண்டத்தின் தொகுதி போலும், சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் வாய்விட்டு ஒலிக்குமாறு தள்ளி, மிக வெள்ளிய நுரைகள் ததும்பவும், ஆண் சுறாக்கள் மேலே சுழலவும், குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசுகின்ற, அலை வரிசைகள், அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவவும், ஏழு கடல்களும் ஆரவாரித்து எழுந்தன[15].  

            எழுகடல் தெரு - அதைக் கண்ட மதுரை மக்கள் நடுங்க, கலியுக முடிவின்கண் பிரமனது படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல, பொங்கி எழுந்த ஏழு கடல்களும், பாம்பினையணிந்த சிவபெருமானது, எல்லாப் புவனங்களையும் கீழ்ப்படுத்திய திரு ஆணையினாலே, அவ்விறைவனது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, தீர்த்தக் குளத்தில் சென்று அடங்கின[16].  எட்டு நிறத்தில் பொற்றாமரைக் குளத்தில் கடல்நீர் - ஏழுகடல் களின் கடல்நீரும் பொன்நிறமுடைய மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் வந்து சேர்ந்து தங்கிய காரணத்தினால், பொற்றாமரைக் குளமானது பொன்நிறமும் சேர்ந்து மொத்தம் எட்டு நிறங்களுடன் காட்சியளித்தது என்கிறது புராணம்[17].

            கப்பல்கள் செல்லும் கடல்நீரானது மதுரை மாளிகைகள் மீது செல்லுதல் - படகுகள் செல்லும் கடலின் வெள்ளமானது, மாடங்களையுடைய மதுரைப்பதியின் மீது வருகின்ற தன்மை, சூரியனுடன் சேர்ந்துள்ள சந்திரன் மேல், நஞ்சு பொருந்திய வாயினையுடைய, கரிய உடலையும் வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராகு என்னும் பாம்பானது, அதனை விழுங்குதற்கு விரைந்து வருதலைப் போலும், மேகங்கள்  மதுரையை மறைத்தற்கு வருதலை ஒத்திருந்தது. இதை வேறு எவ்வாறு சொல்வது?[18]

 

 

பாண்டியனுடன் போருக்கு வந்த கடல் -  வட்டமாகிய ஆமைகள் கேடகங்களாக, வாள்கள் எறிகின்ற வாளை மீன்கள் வாட் படைகளாக, சுறா மீன்கள் நெற்றிப் பட்டத்தையுடைய யானைகளாக, பரந்த அலைக்கூட்டங்கள் தாவுகின்ற குதிரைக் கூட்டங்களாக, ஓடவிட்ட தோணிகள் தேர்களாக, இத் தன்மையன விரவிய சேனையோடு, கடலானது எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று இருந்தது.

 

4) கடல்வெள்ளத்தின் (சுனாமியின்) ஒலி

                      ஊழிக்காலத்தில் கடலுக்குள் உண்டான நிலச்சரிவினால் (பிரளயத்தினால்) ”இரண்டு கடல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிப் போர் செய்தனவாம்”.    தாடாதகைப் பிராட்டியார் மதுரையிலிருந்து படை நடத்தி இமயம்வரை சென்று வெற்றி பெறுகிறார்.  மேலும் திருக்கைலாயத்தின் மீதும்                 படையெடுக்கத் துணிந்து செல்கிறார்.  இச்செய்தி அறிந்த நந்திதேவர்  பூதகணங்களை போருக்கு ஏவுகிறார்.  தடாதகைப் பிராட்டியாரின் படைகளும் நந்திதேவர் ஏவிய பூதிகணங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிப் போர் செய்கின்றன. அச்செயலானது, கடலுங் கடலும் மோதிப் போர் செய்வது போன்று இருந்ததாம்[19].   சூலப்படைகளையும், மழுவாட் படைகளையும், பெரிய ஈட்டிகளையும், சக்கரப் (திகிரிப்) படைகளையும், எறிபடைகளையும், சிறிய ஈட்டிகளையும், வாட்படைகளையும், தண்டங்களையும், கலப்பைகளையும், நஞ்சினைக் கொட்டுகின்ற வேற்படைகளையும், வீரர்கள் (ஒருவர்மேல் ஒருவர்) வீசி ஆரவாரிக்கும் ஆரவாரங்கள், ஊழிக்காலத்தில் ஒலிக்கும் கடலின் ஒலிகளை ஒத்தன[20] என்கிறது புராணம்.

 

5) ‘சுர்’ என வற்றிய சுனாமி -  

            பிரளயத்தினால் நிலச்சரிவுகள் உண்டாவதை முன்னமே கணித்துக் கண்டறிய இயலாது. பிரளயத்தினால் உண்டாகும் கடல்கோள்களைத் தடுக்கவும் இயலாது. ஆனால் கடல்வெள்ளத்தினால் பெரிதும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகக் கடற்கரை ஓரங்களில் “சுனாமி தடுப்புச் சுவர்கள்“ அமைத்துக் கடல்வெள்ளத்தின் சீற்றத்தைக் குறைக்க முற்படுகின்றனர்.

பாண்டிய நாட்டிற்குள் கடல்வெள்ளம் வந்துகொண்டிருந்த போது, உக்கிரபாண்டியன் “வேல் எறிந்து” கடல்வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தினான் என்கிறது புராணம்.  வளை வேல் செண்டு என்ற மூன்று ஆயுதங்களை உக்கிரபாண்டியனுக்கு அவனது தந்தையான சுந்தரபாண்டியன் வழங்கினார் என்றும், கடல்வெள்ளத்தின் மீது வேல் எறிந்து தடுத்தான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.
           

(Seaturtle.org - MTN 130:22-24 Marine Turtles Stranded by the Samoa Tsunami)

 

உக்கிரப் பெருவழுதியாகிய பாண்டியன் கூறிய வேலாயுதத்தை எடுத்து வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று[21] என்று புராணம் குறிப்பிடுகிறது. கோளை உக்கிரபாண்டியன் “வேல் எறிந்து” தடுத்து நிறுத்தினான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.     உக்கிரபாண்டியன் பயன்படுத்திய இந்த “வேலாயுதம்” கூரிய முனையை உடையது என்றும் அதை வலமாகச் சுழற்றி வீசினான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.  வாளைச் சுழற்றலாம், வேலைச் சுழற்ற முடியுமா?  கடலில் வேல் எறிந்தால் சுர் என்று கடல்வற்றுமா? வேல் பற்றிய பிற விளக்கங்கள் ஏதும் திருவிளையாடற் புராணத்தில் காணக் கிடைக்காத காரணத்தினால், கடல்வெள்ளத்தைத் (சுனாமியைத்) தடுத்து நிறுத்தத் தமிழ் மன்னர் “வேல்” என்றொரு ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை மட்டும் திருவிளையாடற் புராணத்தின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

 

6) கடல்கோளுக்குப் (பெருஞ் சுனாமிக்குப்) பின்னர்?

What will happen after Tsunami?

            பிரளயத்தினால் கடல்கோள் உண்டாகிக் கடல்வெள்ளத்தினால் நாடுநகரங்கள் அடித்துச் செல்லப்பட்ட பின்னர், எங்கும் பள்ளங்கள் தோன்றி அவற்றில் கடல்நீர் தேங்கி யிருந்தன என்றும், மேகங்கள் கூடிக் கடுமையான பெருமழை பெய்து கடல்நீரை யெல்லாம் போக்கின என்கிறது புராணம்[22].              ஏழு முகில்கள் தோன்றி, கடல் வற்றியது என்று சொல்லுமாறு நீரினைக் குடித்து மேலெழுந்து, உடல் கறுத்து, மின்னல் வீசி, இடித்து மழையினைப் பொழிந்தது என்கிறது புராணம்[23].

            கடல்வெள்ளத்தினைத் (சுனாமியைத்) தொடர்ந்து பெருமழை பெய்யும் என்கிறது புராணம்.

            திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ள கடல்கோள் கடல்வெள்ளம் பற்றிய செய்திகள் பலவும் புனைவுகளாகவே கருதப்பெற்று வந்தன.   2004 நடைபெற்ற கடல்கோளிற்குப் (சுனாமிக்குப்) பின்னர் திருவிளையாடற் புராணக் கருத்துகள் அந்நாளில் பாண்டியநாட்டில் நடந்த நிகழ்வுகளைத்தான் கூறுகிறது என்பது தெளிவாகிறது.   கடல்வெள்ளம் (சுனாமி) பற்றிய விரிவான விளக்கம் அடங்கிய நூலாகத் திருவிளையாடற் புராணம் விளங்குகிறது.

கட்டுரையாளர்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

           

நன்றி - இக்கட்டுரையில் எடுத்தாளப் பெற்றுள்ள திருவிளையாடற் புராணம் பாடல்கள் அனைத்தும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் (TAMIL VIRTUAL ACADEMY) இணையதளத்திலிருந்து எடுக்கப் பெற்றுள்ளன.  தமிழ் இணையக் கல்விக்கழகத்தினருக்கு நன்றி.   http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

இயற்கைப் பேரழிவுகளும் மீட்டெடுப்புகளும்

நிலம், நீர், தீ, வளி (காற்று), விசும்பு (ஆகாயம்) என்ற பஞ்ச பூதங்களால் ஆனது இந்தப் புவிவாழ்வியல்.   இந்த ஐந்தில் ஏதொன்றினால் இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய பேரழிவை மனிதர்களுக்கும் ஏனைய பிற உயிரினங்களுக்கும் உண்டாக்கி விடுகின்றன.  நிலப்பிளவுகள் நிலச்சரிவுகள், ஆற்றுவெள்ளம் கடல்வெள்ளம் (சுனாமி), போர் மற்றும் இராசாயண அணுஉலை விபத்துகள், மற்றும் காட்டுத்தீ, விண்கற்கள் வால்நட்சத்திரங்கள் முதலியவைகளால் அழிவுகள் உண்டாகின்றன.

            பஞ்ச பூதங்களாலும் மனிதர்களாலும் எத்தனையோ இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் அந்தந்த இடத்தில் உள்ள மனிதர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பெரிதும் பாதிக்கின்றன.  ஆனால், கடல்வெள்ளத்தால் (சுனாமியினால்) உண்டாகும் அழிவுகளே மிகவும் ஆபத்தானவைகளாக உள்ளன?  ஐந்தாறு நிமிடங்களில் தொடங்கி ஐந்தாறு மணி நேரத்திற்குள் எல்லாம் அழிந்து முடிந்துவிடுகிறது.  கடல்தாண்டியுள்ள நாடு நகரங்களில் உள்ளவர்களையும் அழித்துவிடுகிறது.

 

கடல்வெள்ளத்தினால் (சுனாமியினால்) உண்டாகும் பேரழிவுகளில் இருந்து மனித உயிர்களைக் காப்பது எப்படி?

 

 

 

1) கடல்வெள்ளத்தில் (சுனாமியில்) இருந்து தப்பித்து விடலாமா?

Can you outrun a tsunami?

            பெரிதும் வாய்ப்பில்லை. நிலப்பகுதியில் ஆறுகள் ஓடும் இடங்களே பள்ளமாக இருக்கும்.  கடல்வெள்ளமானது (சுனாமியானது) முதலில் ஆறுகள் கடலில் கலக்கும் கழிமுகத்துவாரங்களின் வழியாகவே நிலத்தினுள் பரவும்.  எனவே கடல்வெள்ளம் ஏற்படும்போது கடற்கரை மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர்.  கடலின் நடுவேயுள்ள கப்பல்களில் இருப்பவர்களுக்கும், மலைகளில் வாழ்பவர்களுக்கும் கடல்கோளால் பாதிப்பு இருக்காது, அல்லது மிகவும் குறைவாக இருக்கும். 

 

 

கடல்கோள் நிகழும்போது, உயரமான இடங்களுக்கு வேகமாகப் பயணம் செய்து தப்பிக்கலாம்.

            கடல்கோள் கடல்வெள்ளம் பற்றி விரிவாகக் கூறும் திருவிளையாடற் புராணத்தில் கடல்கோளின்போது யாரும் தப்பிப் பிழைத்ததாகக் குறிப்புகள் ஏதும் வாசிக்கக் கிடைக்கவில்லை. 

            கடல்வெள்ளம் உண்டாகித் தரையைத் தாக்கி அழித்து, அதன் சீற்றம் குறைந்திடச் சிலமணி நேரங்களே ஆகும்.  இந்தச் சிலமணி நேரங்கள் மட்டும் கடல்வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப் பிழைத்துக் கொண்டால் போதும். 

 


           

எப்படித் தப்பிப் பிழைப்பது?

            இப்போதிருக்கும் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சிலமணிநேரங்கள் வரை மனிதன் வாழக்கூடிய வகையிலான மிகப்பெரிய பலூன்களைத் தயாரிக்கலாம்.  இந்நாட்களில் மகிழுந்துகள் விபத்திற்கு உள்ளாகும்போது, விபத்தில் நசுங்கிவிடாமல் தப்பிப்பதற்காகப் பலூன்களை வடிவமைத்துள்ளனர்.  அதுபோன்று கடல்வெள்ளம் தாக்கும் போது, மிகப்பெரிய பலூன்களின் உள்ளே சென்று பாதுகாப்பாகத் தங்கிடலாம்.  கடல்வெள்ளத்தின் (சுனாமியின்) சீற்றம் குறைந்த பின்னர் அந்தப் பலூன்களிலிருந்து வெளியே வரலாம்.  இதை போன்றதொரு அமைப்பை அறிவியலாளர்கள் உருவாக்கலாம்.   இது சாத்தியமான ஒன்றே ஆகும். 

            கோடானுகோடி பணத்தைச் செலவு செய்து கடல்கோள் (சுனாமி) எச்சரிக்கைக் கருவிகளை அமைத்துள்ளனர்.  அத்துடன் கடற்கரை யோரம் உள்ள ஒவ்வொருவருக்கும் இதுபோன்றதொரு பலூனை வழங்கி, அவர்களுக்குப் பயிற்சியும் அளித்தால், கடல்வெள்ளத்தினால் உயிர்ச்சேதம் என்பது மிகமிகக் குறைய வாய்ப்புகள் உள்ளன.

 

 

2) கடல்கோளை முன்கூட்டியே கண்டறிய இயலுமா?

Can you predict a tsunami?

வாய்ப்பில்லை.

            கடலுக்கு அடியில் அயனங்கள் எப்போது புரளும், எப்போது பிரளயம் ஏற்படும் என்று கருவிகளால் கணிப்பது அரிது.  எனவே பிரளயம் நிலநடுக்கம் மற்றும் கடல்வெள்ளம் இவற்றை அறிவியல் அடிப்படையில் முன்னரே கணித்திட வாய்ப்புகள் இல்லை.  கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்றபட்ட பின்னரே அதை உணர்ந்து கொள்ள இயலும். 

            புராணத்தில் கடல்கோள்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டதாகக் குறிப்புகள் ஏதும் வாசிக்கக் கிடைக்கவில்லை.

            நிலநடுக்கங்கள் ஏற்பட்ட இடத்தில் அன்றைய கோள்நிலைக் கணக்கில் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் ஒருவேளை கோள்நிலைகளுக்கும் நிலநடுக்கங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியலாம்.

 

 

3) பெரும் அழிவை உண்டாக்கக்கூடிய கடல்கோள் மீண்டும் ஒருமுறை நிகழ வாய்ப்புள்ளதா?  Is a mega tsunami possible?

            ஆமாம், உள்ளது.  புவியியல் அடிப்படையில் மீண்டும் கடல்கோள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.   திருவிளையாடற் புராணமும் “பாண்டியருக்கு எதிரி கடல்” என்று கூறுகிறது.

            புவியியல்- தென்னிந்தியாவை அழிக்க வல்ல மற்றொரு கடல்கோள் உண்டாவற்கு வாய்ப்புகள் உள்ளன.  அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குக் கிழக்கே இருந்த மாபெரும் நிலத்திட்டு கடலில் மூழ்கி அழிந்துள்ளது.  இதன் காரணமாகவே கடல்கோள்கள் ஏற்பட்டு தமிழகத்தைத் தாக்கியுள்ளது.  அந்தமான் நிக்கோபார் நிலத்திட்டுகளில் எஞ்சியுள்ள திட்டுகளும் சரிந்து விழுந்து கடலில் மூழ்கினால், தென்னிந்தியா ஸ்ரீலங்கா வங்காளதேசம் மியான்மார் ஆகிய நாடுகளை அழிக்கவல்ல ஓர் மாபெரும் கடல்கோள் நடைபெறச் சாத்தியம் உள்ளது.

            புராணம்- சுந்தரபாண்டியன் அவனது மகனான உக்கிரபாண்டியனுக்கு மணவூரைச் (தற்போது அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடி அருகேயுள்ள ஊர்) சேர்ந்த காந்திமதியைத் திருமணம் செய்து வைத்து, நாட்டை ஆளுமாறு பட்டம் சூட்டி வைக்கிறான்.  அப்போது சுந்தரபாண்டியன் உக்கிரபாண்டியனுக்கு, வளை(பூமராங்) வேல் செண்டு என்ற மூன்று ஆயுதங்களைக் கொடுத்து உபதேசம் வழங்குகிறான். “புதல்வனே, கேட்பாயாக, தேவேந்திரனும் கடலும் நினக்குப் பெரிய பகையாகும்; அழகிய மேருமலை இறுமாப்புறும், அப்போது இந்திரன் முடி சிதறுமாறு, இந்த வளையினைக்கொண்டு எறிவாய். கடலின் கண் இந்த வேற்படையை விடுவாய், இந்தச் செண்டினால், மேருவைத் (இமயமலையைத்) தாக்குவாய்” என்று கூறி, அம் மூன்று ஆயுதங்களையும் எடுத்துக் கொடுத்தருளினான்[24] என்கிறது புராணம்.   அதாவது, பாண்டியருக்குக் கடல் பகையாகும் என்று புராணம் குறிப்பிடுகிறது.  திருவிளையாடற் புராணத்தின் இந்தக் கருத்தின் அடிப்படையில் மீண்டும் கடல்கோள் தமிழகத்தைத் தாக்க வாய்ப்புகள் உள்ளன.

            கடலின் நடுவே பாம்பின்மீது பள்ளிகொண்டுள்ள அனந்தசயனப் பெருமாளை நினைவிற் கொள்ள வேண்டும்.  பெருமாள் படுத்திற்கும் பாம்பு போன்று, அடுக்கடுக்கான நிலத்திட்டுக்களைக் கொண்டது இந்தோனேசியா நிலத்திட்டு. பாம்பின் தோலில் உள்ள செதில்கள் போன்று, இந்தோனேசியாபெருந்திட்டில் (indonesia plate) சிறுசிறு ஒழுங்கற்ற நிலத்திட்டுகள் (faults) உள்ளன.  இவ்வாறு உள்ள சிறுசிறு செதில்கள் எப்போதாவது பெயர்ந்து விழுகின்றன.  இவ்வாறு கடலுக்கு உள்ளே சிறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழும்போது நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன.

           

நிலநடுக்கமும், கடல்கோள் (சுனாமியும்) எப்போது உண்டாகும்?

            இதை உறுதியாகக் கூற இயலாது. செதில் போன்ற அமைப்புடைய நிலத்திட்டுக்கள் (fault)எப்போது பெயர்ந்து விழும்? என்பதை உறுதியாகச் சொல்லவே முடியாது.  இதுவரை பிரளயம் (நிலநடுக்கம், சுனாமி) நடைபெற்ற நாட்களைத் தொகுக்க வேண்டும்.  நிலநடுக்கமும் சுனாமியும் உண்கியுள்ள நாட்களில், கோள்களின் நிலைகளுக்கும் தொடர்புகள் (correlation)ஏதேனும் உள்ளதா?  எனக் கணக்கிட்டுக் கண்டறிய வேண்டும். இவ்வாறான கணிதமுறையினால் ஆன கணிப்பினால் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரளயம் கடல்கோள் நிகழ வாய்ப்பு உள்ளதா? என அறிவியல் அடிப்படையில் கூறிடமுடியும்.

            மற்றபடி, கங்கை பூமியில் இறங்கிக் கங்கையின் கசடுகள் படிந்து, அதனால் இந்தோனேசியா நிலத்திட்டுகள் உருவாகிப் பல யுகங்கள் ஆகிவிட்டன.  நிலம் நன்றாக இறுகி விட்டது.  இந்த நிலத்திட்டில் விழும் நிலையில் இருந்த செதில்கள் (faults)மிகுதியும் ஏற்கனவே விழுந்துவிட்டன.  எனவே இனி வரும் காலங்களில் நிலத்திட்டுகள் பிரள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.  எனவே நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து கடல்கோள்களும் (சுனாமிகளும்) உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு.  அடிக்கடி கடல்கோள் (சுனாமி) உண்டாகாது.  அச்சமில்லாமல் இக்கலாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கட்டுரையாளர்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

---------------------------------------

 

 

 


 

ஊழிதோறும் ஓங்கும் ஓங்கல்[25]

கடல்கோள்களும் (சுனாமிகளும்) மலைகளும்

 

இந்தியத் துணைக்கண்டம் ஆசியக்கண்டத்துடன் மோதுவதால் இமயமலை உயர்ந்துகொண்டே இருக்கிறதா? என்று புவியியலாளர்கள் ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.  ஆனால் இமயமலையானது ஊழிக்காலங்களில் உயர்கிறது என்கிறது திருவிளையாடற் புராணம்.

 

ஊழ், ஊழி, ஊழிக்காலம் என்றால் என்ன?

            “ஊழ்” என்றால் விதி அல்லது நியதி என்று பொருள்.   புவியியல் விதிகள் மாறும்படிப் பெரும் அழிவுகள் உண்டாவதை “ஊழி” என்றும், புவியியல் மாற்றம் அடையும்படிப் பெரும் அழிவுகள் நிகழும் காலத்தை “ஊழிக்காலம்” என்றும் புராணம் குறிப்பிடுகிறது.

            திருக்குறளில் ஊழ் என்று ஓர் அதிகாரமே உள்ளது.  இருந்தாலும், ஊழி குறித்து ஒரேயொரு குறள் மட்டுமே உள்ளது.  “ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி யெனப்படு வார்“ என்று எல்லாவற்றையும் அழித்துவிடும் ஊழியையும்,  எந்த ஊழியிலும் அழியாமல் நிற்கும் ஆழியையும் தொடர்பு படுத்திக் குறள் கூறுகிறது. திருக்குறள் போன்றே திருவிளையாடல் புராணமும் ஊழியையும் ஆழியையும் சேர்த்தே பாடுகிறது.  திருவிளையாடல் புராணத்தில் 19 பாடல்களில் 'ஊழி' இடம் பெற்றுள்ளது[26].

 

1) ஊழி தோறும் ஓங்கும் இமயமலை

            “இந்தியத் துணைக்கண்டம் ஆசியக்கண்டத்துடன் மோதுகின்ற காரணத்தினால் இமயமலைத்தொடரானது உயர்ந்துகொண்டே உள்ளது” என்கின்றனர் புவியியல் அறிஞர்கள்.  ஆனால் எந்தவிதமான அறிவியல் உபகரணங்களும் கண்டறியப்படாத புராண காலத்தில் எழுதப்பெற்ற திருவிளையாடற் புராணத்தில், இமயமலைத்தொடரானது ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் ஓங்கி உயர்கிறது என்றொரு புவியியல் கோட்பாடு கூறப்பட்டுள்ளது.

 

1) இமயலைத் தொடரில் திருக்கையலாயத்தின் சிறப்பினைக் குறிப்பிடும் திருவிளையாடற் புராணத்தின் 202 பாடலனது, திருக்கைலாயத்தை “ஓங்கியகல்” (ஓங்கல்) என்று குறிப்பிடுகிறது.  இந்த பூமி நிலைகெட்டு அழியும் நாளிலும், இமயமலையானது அதனுடைய வலிமை (உரம்) குன்றாது ஓங்கி நின்று ஊழி நிகழ்வுகளின் போதெல்லாம் மேலும் உயர்ந்து ஓங்கி நிற்கும் இந்த ஓங்கி உயர்ந்த கல்லினால் ஆன இமயமலை என்கிறது புராணம்.

“புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்

பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்

வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள்

உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்”

 

 


2) தடாதகைப் பிராட்டியார் இமயமலைவரை படையெடுத்துச் சென்ற செய்தியைக் குறிப்பிடும் 625ஆவது பாடலும் திருக்கைலாயத்தை “ஊழிதோறும் ஓங்கும் ஓங்கல்” என்று குறிப்பிடுகிறது.
குதிரைகள் பூட்டிய பெரிய தேரினையுடைய தடாதகைப் பிராட்டியார், ஒலிக்கின்ற பல இயங்களின் ஒலியையும், யானைகளும், தெய்வத் தன்மையையுடைய வலிய தேர்களும், கருத்தறிந்து செல்லும் குதிரைகளும், வீரர்களும், செல்கின்ற ஒலியையும் ஏற்றுக் கொண்டு எதிரொலி செய்யுமாறு,
ஊழிக்காலந் தோறும் வளர்கின்ற கயிலை மலையை அடைந்தார்.

 

“சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி

கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்

வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே

ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்”

 

            உலகின் மிகமிக உயரமான பல சிகரங்களை உடையதான நீண்டதொரு மலைத்தொடராக இமயமலை உள்ளது.  அதனால் கடல் காற்று ஆகியவன்றினால் ஊழிக்காலத்தில் அழிவுகள் ஏற்பட்டாலும் அந்த அந்த அழிவுகளின் எச்சம் இமயமலையின் மீது படிந்து இமயமலையின் உயரம் உயர்ந்து கொண்டே செல்லும். 

           

2) மலைகளின் மையம் மதுரை

            மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், சிவலிங்கத்திற்குத் தென்கிழக்கே உள்ள பொற்றாமரைத் தீர்த்தமானது பரமேசுவனால் உருவாக்கப்பட்டது என்றும், சிவபெருமான் மூன்றுதலையையுடைய சூலத்தை எடுத்துத் கீழே ஊன்றினான் என்றும்,  அது இந்தப் பூமியின் “முதுபார் கீண்டு[27]” (முதுமையான நிலத்திட்டைப் பிளந்து) பாதாலங் கீண்டு (பூமியின் அடியில் உள்ள நிலத்திட்டையும் பிளந்து), எட்டுக் கைகளை யுடைய நான்முகனது அண்ட கடாகத்தையும்[28] ஊடுருவிச் சென்றது என்றும்,   இதனால் பூமியை சுற்றிலும் இருந்த கடல்நீரானது “ஊழிக் காலத்தில் பொங்கி எழுந்த கடல்நீர்” போன்று பொற்றாமரைக் குளத்தில் பொங்கி மேலாங்கி வந்தது என்றும் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது[29]. 

            பொற்றாமரைக் குளத்தின் ஆழம் அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அறியப்பெற வேண்டிய ஒன்று. ஆனால் மதுரைக்குக் கிழக்கு வடக்கு மேற்கு திசைகளில் முறையே மலம்பட்டி மலையும், அரிட்டாபட்டி யானைமலைகளும், நாகமலையும் உள்ளன.  இந்த மலைகளின் நீட்சியானது மதுரையில் சந்திக்கின்றன.  அதாவது இந்த மலைகளின் அடிப்பகுதி அல்லது தொடக்கம் மதுரையின் கீழே பாதாளத்தில் உள்ளது.  இந்த மலைகளின் நீட்டியானது மதுரையில் இருப்பதைக் கூகுள் புவிப்படத்தின் வழியாகக் காணக்கூடியதாக உள்ளது.

 

 

           

3) கடல்வெள்ளத்தினால் ( சுனாமியால் ) சிவகளை மலைத்தொடர் உருவானது

 

 மலிதிரை ஊர்ந்து மண்கடல் வெளவலின்

மெலிவின்று மேற்சென்று மேவார் நாடிடம்படப்

புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாசீர்த் தென்னவன் -(கலி. 104)

            “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது” என்றால் அதற்கான தடையங்கள் தமிழகத்தில் காணக்கிடைக்கின்றனவா?

            ஆம், கிடக்கின்றன!   மதுரைக்குக் கிழக்கே உண்டான பிரளயத்தினால் வங்கக் கடலில் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி அனைத்தும் அழிந்து போயின என்கிறது திருவிளையாடற் புராணம்.  கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.

 

 

            வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதற்கான வழித்தடத்தைக் கூகுள் புவிப்படத்தில் காணும்படி கிடைக்கிறது.  கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ‘ஏரல்’ அருகே உள்ள ‘சிவகளை என்ற ஊருக்கு வடமேற்கேயும், பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளதைக் காணமுடிகிறது.

 

 

 

 

முருகன் அசுரனை வெற்ற இடமான திருச்செந்தூர் கடற்கரையோரம் உள்ளது. திருச்செந்தூர் அருகே கரையைக் கடந்த கடல்வெள்ளத்தினால், இந்த இரண்டு மண்மலைகளும் தோன்றித் தமிழகத்தைக் கடல்கொண்டதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

            தென்னிந்தியா முழுவதும் குறிப்பாகத் தமிழகம் எங்கும் அடுக்கடுக்காக மண் புதைந்து உள்ளதற்கும், மண்குன்றுகள் தோன்றியிருப்பதற்கும், கிரானைட் மலைகளின் மேலே மண்கட்டிகள் அல்லது பொக்குப்பாறைகள் படிந்துள்ளதற்கும் காரணம் என்னவாக இருக்க முடியும்?  பிரளயம் கடல்வெள்ளம் இவற்றைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்?

கட்டுரையாளர்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

 

--------------------------------------

 



[1] கட்டுரையாளர் - காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

(மேனாள் துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம்)

28 அ, குருநாதர் கோயில் தெரு,  கோட்டையூர் - 630 106

தொடர்பு எண்கள் - 824 826 6418, 944350 1912

மின்னஞ்சல்-kalairajan26@gmail.com /முகநூல்-kalairajan.krishnan

[3] “கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி

ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்

பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்

பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த தன்றே” (திருவிளையாடற் புராணம் 2330)

[5] பிரளயம் - மலைகளின் நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து சரிந்து விழுவதை “மலைச்சரிவு” என்கின்றனர்.  இது போன்று கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுக்கள் (fault) புரண்டு பெயர்ந்து சரிந்து விழுவதைப் “பிரளயம்” என்கிறது புராணம்.

 

[6] “அப்பெருஞ் சலதி வெள்ளத் தழுந்தின வழிவி லாத

எப்பெரும் பொழிலு மேழு தீபமு மிவற்றுட் டங்கி

நிற்பன செல்வ வான திணைகளு நீண்ட சென்னிப்

பர்ப்பத வகையு மீறு பட்டன வாக வங்கண்” (திருவிளையாடற் புராணம் 2331)

 

[7] “தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்

வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த

கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்

ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத” (2332)

 

[8][8] வெள்ளநீர் வறப்ப வாதி வேதியன் ஞால முன்போல்

உள்ளவா றுதிப்ப நல்கி யும்பரோ டிம்ப ரேனைப்

புள்ளொடு விலங்கு நல்கிக் கதிருடற் புத்தேண் மூவர்

தள்ளரு மரபின் முன்போற் றமிழ்வேந்தர் தமையுந் தந்தான். (2333)

 

[9]  “மலையத்துவ பாண்டியன்” என்ற பெயரால் மலையைத் துவசம் செய்த (அழித்த, சிதைத்த) பாண்டியன் என்பது பொருளாகிறது.  பன்மலையடுக்கத்துப் பஃறுளியாறும் இவன் காலத்தில் அழிந்திருக்கலாம். மலைக ளெல்லாம் அழிந்த ஊழிக் காலத்தில் இவன் ஆட்சி செய்தவனாக இருக்கலாம்.

[10] “முறையிட்ட செழியனெதிர் முறுவலித்தஞ் சலையென்னாக்

கறையிட்டு விண்புரந்த கந்தரசுந் தரக்கடவுள்

துறையிட்டு வருகடலைச் சுவறப்போய்ப் பருகுமெனப்

பிறையிட்ட திருச்சடையியற் பெயனான்கும் வரவிடுத்தான்” (1304).

 

“நிவப்புற வெழுந்த நான்கு மேகமு நிமிர்ந்து வாய்விட்

டுவர்ப்புறு கடலை வாரி யுறிஞ்சின வுறிஞ்ச லோடுஞ்

சிவப்பெருங் கடவுள் யார்க்குந் தேவெனத் தெளிந்தோ ரேழு

பவப்பெரும் பௌவம் போலப் பசையற வறந்த தன்றே” (1305).           

 

[11] “கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி

ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்

பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்

பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த வன்றே”

 

[12]அப்பெருஞ் சலதி வெள்ளத் தழுந்தின வழிவி லாத

எப்பெரும் பொழிலு மேழு தீபமு மிவற்றுட் டங்கி

நிற்பன செல்வ வான திணைகளு நீண்ட சென்னிப்

பர்ப்பத வகையு மீறு பட்டன வாக வங்கண்”

[13] திருவிளையாடற் புராணம் பாடல் எண் 2334.

[14] https://geology.com/records/biggest-tsunami.shtml

[15]துண்டமதித் திரளனைய சுரிவளைவாய் விடவுதைத்து

வெண்டவள நுரைததும்பச் சுறாவேறு மிசைகொட்பத்

தண்டரள மணித்தொகுதி யெடுத்தெறியுந் தரங்கநிரை

அண்டநெடு முகடுரிஞ்ச வார்த்தெழுந்த கடலேழும்” (888)

 

[16]காணுமா நகர்பனிப்பக் கலிமுடிவி னயன்படைப்புக்

கோணுமா றெழுந்ததெனக் கொதித்தெழுந்த கடலரவம்

பூணுநா யகனகில புவனமெலாங் கடந்ததிரு

ஆணையா லவனடிசென் றடைந்தார்போ லடங்கியதால்”. (889)

 

[17] “தன்வண்ண மெழுகடலன் றனிவண்ண மொடுகலந்து

பொன்வண்ண நறும்பொகுட்டுப் பூம்பொய்கை பொலிவெய்தி

மின்வண்ணச் சடைதாழ வெள்ளிமணி மன்றாடும்

மன்வண்ண மெனவெட்டு வண்ணமொடும் வயங்கியதால்”.(890)

 

[18] வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்

கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்

வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்

அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.(1040)

[19] வென்றிக் கணத்தை விடுத்தான் கனமீது* பெய்த

குன்றிக் கணம்போற் கழல்கண்ணழல் கொப்ப ளிப்பச்

சென்றிக் கனைய மொழியாள்பெருஞ் சேனை யோடும்

ஒன்றிக் கடலுங் கடலும்பொரு தொத்த தன்றே.(629)

 

[20] சூலங் கண்மழுப் படைதோமர நேமி பிண்டி

பாலங் கள்கழுக் கடைவாட்படை தண்ட நாஞ்சில்

ஆலங் கவிழ்க்கின்ற வயிற்படை வீசி யூழிக்

காலங் கலிக்குங் கடல்போன்ற களம ரார்ப்பு. (630)

[21] “எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை

மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட

அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்

கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே”. (1046)

[22] கதிர்மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருண னேய

அதிர்கடல் வறப்பச் செய்த வாடலீ தனையா னேய

முதிர்மழை யேழின் மேலு முன்னைநான் முகிலும் போக்கி

மதுரைநான் மாடக் கூட லாக்கிய வண்ணஞ் சொல்வாம் “.(1309)

 

[23]நளிர்புனன் மதுரை மூதூர் நாயக னாட றன்னைத்

தெளிகில னாகிப் பின்னுஞ் செழுமுகி லேழுங் கூவிக்

குளிர்கடல் வறந்த தென்னக் குடித்தெழுந் திடித்துப் பெய்யா

ஒளிவளர் மதுரை முற்று மொல்லெனக் களைமி னென்றான்” (1311.)

 

[24] “மைந்த கேட்டி யிந்திரனுங் கடலு முனக்கு வான்பகையாஞ்

சந்த மேருத் தருக்கடையுஞ் சதவேள் விக்கோன் முடிசிதற

இந்த வளைகொண் டெறிகடலி லிவ்வேல் விடுதி யிச்செண்டால்

அந்த மேருத் தனைப்புடையென் றெடுத்துக் கொடுத்தா னவைமூன்றும்” (1027).

 

[25] கட்டுரையாளர் - காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

(மேனாள் துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம்)

28 அ, குருநாதர் கோயில் தெரு,  கோட்டையூர் - 630 106

தொடர்பு எண்கள் - 824 826 6418, 944350 1912

மின்னஞ்சல்-kalairajan26@gmail.com /முகநூல்-kalairajan.krishnan

[27] கீண்டு = கீழ்ந்து

[28] கடாகம் = அண்ட கோளகத்தின் புறவோடு

[29] அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்த ஆழி ஊழிப்
பௌவ நீர் என்ன
ஓங்கப் பாணியால் அமைத்து வேணித்
தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து மா தீர்த்தம் ஆக்கிக்
கை வரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்.  (265.)

 

வியாழன், 15 ஜூலை, 2021

கீழடியில் கிடைப்பன உறைகிணறுகளா ? செப்டிக்டேங்குகளா?

கீழடியில் கண்டறியப்படுவன

உறைகிணறுகளா? அல்லது

மனிதக் கழிவுநீர்த் தொட்டிகளா(septic tank)?

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகரத்தில் மட்டும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. 6ஆம் கட்ட அகழாய்வில் 28 அடுக்குகள் கொண்ட உறைகிணற்றின் அருகே, தற்போது, 7ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக ஒரு உறைகிண கண்டறியப்பட்டுள்ளது. இதில் அகரத்தில் 6வது குழியில் 20 முதல் 25 செ.மீ உயரமுள்ள உறைகள் கொண்ட 3 அடுக்குகளுடன் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. உறைகிணறுகளின் உள்ளே எந்த பொருளும் கிடைக்க வில்லை. ஆனால் உறைகிணறுகளின் அருகே மண் பாத்திரங்கள் கிடைத்துள்ளன. அதனை வைத்து உறைகிணறுகளில் தண்ணீர் எடுத்து இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.

அகலம் குறைவான இந்தத் தொட்டிகளில் உள்ளே உடைந்த மண்பாண்டங்கள் ஏதும் கிடைக்காத காரணத்தினால், கீழடியில் தோண்டிக் கண்டறியப்படும் உறைகிணறுகள் உண்மையில் கிணறுகளாக இருக்க வாய்ப்பில்லை. அவை மனிதக் கழிவுநீர்த் தொட்டிகளாக இருக்கலாம். அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

படித்தது 1) https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2021/jul/15/கீழடி-அகழாய்வில்-சுடுமண்-உறைகிணறு-கண்டுபிடிப்பு-3660277.html

படித்தது 2) மெசொபடோமியாவில் உர் (Ur, Mesopotamia) அருகே கண்டறியப்பட்டுள்ள கிமு 4000 க்கு முந்தைய நாகரிகமும் கீழடி நாகரிகமும் ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

British archaeologist Leonard Woolley and his wife Catherine at the moment of the discovery of pottery pipes that were used as a sewage and rainwater network in what is considered the first water drainage system in history before about 4000 BC.
Within the archaeological excavations of the ancient city of Ur (Mesopotamia) in 1930.

திங்கள், 12 ஜூலை, 2021

கீழடி வழிபாடும், பூரி ஜெகநாதர் வழிபாடும் ஒன்றா?

கீழடி வழிபாடும், பூரி ஜெகநாதர் 

வழிபாடும் ஒன்றா?


 கீழடி அருகே சங்ககால கூடல் என்ற மதுரையைத் தோண்டிக் கண்டறிந்துள்ளனர் தொல்லியலாளர்கள்.

படத்தில் உள்ள இந்த சுடுமண்உருவம் கீழடியில் கிடைத்தது.

எனக்கென்னவோ, கீழடியும் (சங்ககால கூடல் என்ற மதுரையும்) பூரி ஜெகநாதர் வழிபாடும் ஒரே நாகரிகம் என்றே தோன்றுகிறது.




வியாழன், 1 ஜூலை, 2021

கயிலைமலை என்றால் என்ன பொருள்?

கயில் என்றால் பூரணம், உடைத்த தேங்காய்ப் பாதி என்றும் “பிடரி” என்றும் பொருள்.  ( https://ta.wiktionary.org/s/1q9j)

சங்க இலக்கியத்தில் கயில் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது.

“வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை” - ஐங் 72/1

“கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்” - பரி 12/18






கைலாசம்,  கைலாயம், கயிலாய மலை, கைலை மலை, கைலாச மலை, திருக்கயிலாய மலை, சிமகிரி, இமகிரி,  என்ற பெயர்களால் இமயமலை அழைக்கப்படுகிறது.

கயிலைமலை என்றால் என்ன பொருள்? 

கயிலைமலை என்றால் “உடைத்த பாதித் தேங்காய் போன்ற வடிவத்தை உடைய மலை”  என்று பொருள்.  இமயமலையானது உடைத்த பாதித் தேங்காய் போன்று வட்ட வடிவத்தில்,   அதன் நடுப்பகுதியானது பெரும் பள்ளத்தாக்காக உள்ள காரணத்தினால் இமயமலைக்குக் கயிலைமலை என்ற காரணப்பெயர் உண்டாகியுள்ளது.


கயில் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள்

சங்க இலக்கியம் - எட்டுத்தொகை - ஐங்குறுநூறு - 72

வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை

திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்

குவளை உண்கண் ஏஎர் மெல் இயல்

மலர் ஆர் மலிர் நிறை வந்து என

புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே.


சங்க இலக்கியம் - எட்டுத்தொகை - பரிபாடல்  # 1 திருமால் 

“....... அம் தண் புனல் வையை யாறு என கேட்டு 10

மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்

பொன் அடர் பூ புனை திருத்துவோரும்

அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற

புகை கெழு சாந்தம் பூசுவோரும்

கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும் 15

வேர் பிணி பல் மலர் வேயுமோரும்

புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்

கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்

வாச நறு நெய் ஆடி வான் துகள் ....... ”

----------------------------------------------------------- 

கம்பராமாயணத்தில் கயில், கயிலை என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்வரிகளின் தொகுப்பு -  நன்றி http://tamilconcordance.in

கயில் விரி வயிர பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான் - அயோ-மிகை:8 4/2

கயில் விரிவு அற வரு கவசமும் உருவி - யுத்4:37 85/1

அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன் - ஆரண்:10 43/1

கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர் - ஆரண்:11 19/1

எல் இட்ட வெள்ளி கயிலை பொருப்பு ஈசனோடும் - ஆரண்:13 29/1

உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் - கிட்:15 25/4

நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் - யுத்1:12 7/3

கண்டு நின்று கயிலை இடந்தவன் - யுத்2:15 94/2

பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும் - யுத்2:15 165/1

காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை - யுத்2:15 223/2,3

கடம் ஏய் கயிலை கிரி கண்ணுதலோடு - யுத்2:18 56/1

நடுக்கம் உற்றிட நல் அறம் ஏங்கிட கயிலை எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான் - யுத்2-மிகை:15 32/3,4

உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் - யுத்3:24 43/4

ஈது அவர் சொல கயிலை ஈசனும் நகைத்து இமையவர்க்கும் ஒளி வான் - யுத்3-மிகை:31 45/1

வான் கயிலை ஈசன் அயன் வானவர் கோன் முதல் அமரர் வாழ்த்தி ஏத்த - யுத்4-மிகை:38 1/1

வளம் கெழு கயிலை ஈசன் மலர் அயன் மறைகள் நான்கும் - யுத்4-மிகை:41 297/1

காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும் - யுத்3:27 86/3,4

கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் - சுந்:1 11/4

தூர்த்தான் அகன் கயிலையில் தொலைவு இலோனும் - சுந்:1 73/3

பத்து எனும் திசையும் வென்று கயிலையில் பரனை எய்தி - யுத்3-மிகை:29 3/1

கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம் - யுத்4-மிகை:42 19/1

கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த - சுந்:3 82/3

கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன் - சுந்:12 15/1

கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் - சுந்:7 20/4

முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது - யுத்1:2 32/2

கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள் - யுத்2-மிகை:15 16/3

ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி - பால:19 3/3

வசை உற கயிலையை மறித்து வான் எலாம் - ஆரண்:10 12/2

கந்தர கயிலையை நிகர்க்கும் காட்சியான் - ஆரண்:13 6/4

கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும் குறுகி முன் - கிட்:5 5/1,2

ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான் - சுந்:2 20/4

மேல் உயர் கயிலையை எடுத்த மேலை_நாள் - யுத்1:2 80/1

வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய் - யுத்2:16 36/4

கந்தனார் தந்தையாரை கயிலையோடு ஒரு கை கொண்ட - யுத்3:27 166/3

இம்மை இ உரு இயைந்து எழில் கயிலையோடு ஈசன் - யுத்4-மிகை:35 4/3

-----------------------------------------------

8. கயிலைமலைக் கெய்தியங்குக் காமுற் றுறைநாட்

குயிலை மலைக்கரசன் கொம்பைப் - பயில்வொரீஇ - திருப்பூவணநாதருலா

--------------------------------

திருவிளையாடற் புராணத்தில் 'கயிலை' என்ற சொல் இடம்பெற்றுள்ள பாடல்கள்  (பாடல்கள் தொகுப்பு உதவிக்கு நன்றி  - http://www.tamilvu.org/ta/library)

184.
மடங்கல் இன்றி விண் பிளந்து மேல் வளர்ந்து வெள் ஏற்று
விடங்கர் வெள்ளி மன்று இமைத்து எழு வெண்சுடர் நீட்டம்
முடங்கல் வெண் பிறைக் கண்ணியான் கயிலை மூ உலகும்
ஒடுங்கு கின்ற நாள் ஓங்கிய ஓக்கமே ஒக்கும்.
201.
வரங்கள் தந்து அருள் என முது வானவர் முனிவோர்
கரங்கள் தந்தலை முகிழ்த்திடக் கருணை செய்து அவிச்சை
உரம் கடந்து உரை உணர்வு எலாம் கடந்து அரு மறையின்
சிரம் கடந்தவன் இருப்பது திருக் கயிலாயம்.
204.
வெந்த நீற்று ஒளி வெண்மையும் விமலனை அகம் கொண்டு
அந்தம் இன்றியே அசைவற இருக்கையும் அருவி
வந்த கண்களும் கொண்டு அவண் இருக்கும் மாதவர்க்குத்
தந்தால் அரன் கயிலை யின் தனது சாரூபம்.
216.
மேரு மந்தரம் கயிலைப் பர்ப்பதம் முதல் விடைமேல்
ஊரும் அந்தர நாடவன் உறைபதி அனந்தம்
ஆரும் அந்தம் இல் போகம் வீடு அடைவது என்று அவற்றின்
காரணங் களோடு உரைத்தனை கருத்தினுக்கு இசைய.
252.
கைத்தலம் நான்கு இரண்டு உடைய மலர்க்கடவுள் மேல் ஒருநாள் கயிலை ஆதி
எத்தலமும் ஒரு துலை இட்டு இத்தலமும் ஒரு துலை இட்டு இரண்டும் தூக்க
உத்தமம் ஆம் திருவாலவாய் மிகவும் கனத்தது கண்டு உலகின்மேலா
வைத்த தலம் இது என்றால் இதன் பெருமை யாவரே வழுத்தர் பாலார்.
412.
வாம்பரி உகைத்துத் தன்னால் வழிபடு குரவன் வானோர்
தாம் பரிவோடும் சூழத் தராதலத்து இழிந்து செம்பொன்
காம்பரி தோளி பங்கன் கயிலை மால் வரையைத் தாழ்ந்து
தேம் பரி அலங்கல் மார்பன் தென்திசை நோக்கிச் செல்வான்.
558.
பால் அனைய மதிக் கவிகை மிசை நிழற்ற மதி கிரணம் பரப்பி அன்ன
கோல மணி கவரி புடை இரட்ட மலர் மழை தேவர் குழாம் உடூற்றக்
காலை இளம் கதிர் கயிலை  உதித்து என வெண் கடா யானைக் கழுத்தில் வேப்ப
மாலை முடிப் பெண் அரசை மங்கல துரியம் முழங்க வலம் செய்வித்தான்.
624.
இவ்வாறு மற்றைத் திசைக் காவலர் யாரையும் போய்த்
தெவ் ஆண்மை சிந்தச் செருச் செய்து திறையும் கைக் கொண்டு
அவ்வாறு வெல்வாள் என மூன்று அரண் அட்ட மேருக்
கைவார் சிலையான் கயிலைக் கிரி நோக்கிச் செல்வாள்.
626.
வானார் கயிலை மலையான் மகள் தன்னை நீத்துப்
போனாள் வந்தாள் என்று அருவிக் கண் புனலுக்கு அந்நீர்
ஆனா ஒலியால் அனை வா என்று அழைத் தன் தேசு
தான நகையால் தழீஇ எதிர் ஏற்பச் சென்றாள்.
692.
விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி
அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப்
பரவு தூளியில் புதைபடு கயிலை  அம் பருப்பதம் பகல் காலும்
இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய இந்து மண்டலம் மானும்.
805.
பிறை தவழ் கயிலைக் குன்றம் பிரமரந் திரமாம் வேதம்
அறைதரு துவாத சாந்த மதுரை ஈது அதிகம் எந்த
முறையினால் என்னின் முன்னர் தோன்றிய முறையால் என்றக்
கறை அறு தவத்த ரோடு கவுரியன் கோயில் புக்கான்.
806.
தன் அருள் அதனால் நீத்த தன்னையே தேடிப் போந்த
மின்னவிர் கயிலை தானோ விடை உரு மாறி மன்றாய்
மன்னியது ஏயோ திங்கள் மண்டல மேயோ என்னப்
பொன் அவிர் விமானக் கீழ்பால் வெள்ளி அம் பொது உண்டாக.
1788.
தேவதேவு உபதேசித்த சித்தியைச் சிலம்பன் செல்வி
பாவனை வலத்தால் நன்கு பயின்றுவான் வழிக் கொண்டு ஏகிப்
பூவலர் கதுப்பின் நல்லார் அறுவரும் புரம் மூன்று அட்ட
காவலன் விரும்பி வைகும் கயிலை மால் வரையில் புக்கார்.
2552.
போதையார் உலகம் ஈன்ற புனிதையார் பரஞானப் பூம்
கோதையார் குழற்குத் தீங்கு கூறிய கொடிய நாவின்
தீதை யார் பொறுப்பரேயோ அவர் அன்றித் திருக்காளத்திக்
காதையார் குழையினாரைக் காளத்தி கயிலை என்னா.
3065.
மந்தரம் கயிலை  மேருப் பருப்பதம் வாரணாசி
இந்த நல் இடங்கள் தோறும் இக பர போகம் யார்க்கும்
தந்து அருள் செய்து எம் போல்வார் தம் மனம் புறம் போகாமல்
சிந்தனை திருத்தி ஞானத் திருஉரு ஆகி மன்னும்.
---------------------------------------------------------------

வியாழன், 3 டிசம்பர், 2020

இமயமலையா? அல்லது சிமையமலையா?

இமயமலையா? அல்லது சிமையமலையா?


இம என்றால் பனி என்று பொருள். இமயமலை என்றால் பனிமலை என்று பொருள்.

சிமையம் என்றால் Knap,குன்றின் குடுமி, மேட்டுச்சரிவான நிலம், Mount, மலைக்குவடு, சிமையம், Peak, மலைமுகடு என்று பொருள்.

இமயமலையானது பனிபடர்ந்த உயர்ந்த குன்றுகள் நிறைந்த மலைத்தொடர் ஆகும்.

இதை நமது சங்கப் புலவர்கள் நன்கு அறிந்திருந்துள்ளனர்.

சங்கப்பாடல்களில், "இமய" 15 இடங்களில் காணப்படுகின்றது.  "சிமைய" 39 இடங்களில் காணப்படுகின்றது.

-----------------------

"இமய" 15 இடங்களில் காணப்படுகின்றது.

கூடுதல் விளக்கம் வேண்டின் அந்த வரிகளை அழுத்தவும்

வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த - சிறு. அடி 48

பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி - நற்றிணை 356/3

இமயமும் துளக்கும் பண்பினை - குறுந் தொகை 158/5

ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் - பதிற்றுப் பத்து 11/23

வட திசை எல்லை இமயம் ஆக - பதிற்றுப் பத்து 43/7

நிலனும் நீடிய இமயமும் நீ - பரி பாடல் 1/51

நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை - பரி பாடல் 5/48

பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும் - பரி பாடல் 8/11

இமய குன்றினில் சிறந்து - பரி பாடல் 8/12

கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி - பரி பாடல் 23/83

முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து - அக நானூறு 127/4

பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே - புற நானூறு 2/24

வட திசையதுவே வான் தோய் இமயம் - புற நானூறு 132/7

கழை வளர் இமயம் போல - புற நானூறு 166/33

மாறி பிறவார் ஆயினும் இமயத்து - புற நானூறு 214/11


---------------------------


சங்கப்பாடல்களில் "சிமைய" 39 இடங்களில் காணப்படுகின்றது.

1) நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை - திரு. அடி 253

2) இமையவர் உறையும் சிமைய செ வரை - பெரு. அடி 429

3) தேன் தூங்கும் உயர் சிமைய - மதுரை. அடி 3

4) பனி வார் சிமைய கானம் போகி - மதுரை. அடி 148

5) கலை தாய உயர் சிமையத்து - மதுரை. அடி 332

6) நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா - நெடு. அடி 27

7) மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் - பட்டின. அடி 138

8) கணம் கொள் சிமைய உணங்கும் கானல் - குறுந் தொகை 372/3

9) மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் - ஐங்குறு நூறு 100/2

10) வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் - ஐங்குறு நூறு 268/3

11) நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல் - பதிற்றுப் பத்து 66/11

12) வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை - பதிற்றுப் பத்து 88/34

13) துளியின் உழந்த தோய்வு அரும் சிமை தொறும் - பரி பாடல் 7/13

14) வளி பொரு சேண் சிமை வரை அகத்தால் - பரி பாடல் 8/90

15) உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட - பரி பாடல் 9/3

16) தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து - பரி பாடல் 23/2

17) வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் - அக நானூறு 3/6

18) தேம் படு சிமய பாங்கர் பம்பிய - அக நானூறு 94/1

19) மை தோய் சிமைய மலை முதல் ஆறே - அக நானூறு 119/20

20) அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் - அக நானூறு 138/8

21) மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் - அக நானூறு 143/13

22) உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் - அக நானூறு 145/9

23) பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை - அக நானூறு 153/11

24) விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை - அக நானூறு 159/13

25) விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் - அக நானூறு 179/1

26) உயர் சிமை நெடும் கோட்டு உகள உக்க - அக நானூறு 182/15

27) அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் - அக நானூறு 185/10

28) அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை - அக நானூறு 190/6

29) உரும் இறைகொண்ட உயர் சிமை - அக நானூறு 192/14

30) தேம் முதிர் சிமைய குன்றம் பாடும் - அக நானூறு 208/2

31) விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர் - அக நானூறு 215/1

32) பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து - அக நானூறு 218/5

33) பிரசம் தூங்கும் சேண் சிமை - அக நானூறு 242/21

34) பாறு கிளை சேக்கும் சேண் சிமை - அக நானூறு 247/12

35) ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் - புற நானூறு 120/18

36) உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந - புற நானூறு 139/8

37) விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் - புற நானூறு 151/2

38) சுரத்து இடை நல்கியோனே விடர் சிமை - புற நானூறு 152/30

39) அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை - புற நானூறு 158/11

நன்றி .. பாடல் தொகுப்பு உதவி http://tamilconcordance.in/

புதன், 2 டிசம்பர், 2020

சிம்சுமார சக்கரம்

 சிம்சுமார சக்கரம்

===============

"மைத்ரேயரே! ஸ்ரீ ஹரி பகவானின் சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலத் தோன்றுகின்ற நட்சத்திரக் கூட்டமாகிய ரூபத்தின் வால்பகுதியில் துருவன் இருக்கிறான். அங்கிருந்து துருவன் சுற்றிக்கொண்டு, சந்திர சூரியாதி கிரகங்களையெல்லாம் சுற்றித் திருப்ப அவைகளும் சக்கரத்தைப் போல அவனைச் சுற்றி சுழல்கின்றன. சந்திர சூர்யர்களும் மற்றுமுள்ள கிரகங்களும், நட்சத்திரங்களும் காற்றின் வடிவமான கயிறுகளினால் கட்டப்பட்டு துருவனிடம் இணைந்துள்ளன. ஆகாயத்திலிருக்கும் நட்சத்திரக்கூட்டம் யாவும், சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலக் காணப்படும். அதன் இதயத்திலே சகல தேஜோலோகங்களுக்கும் ஆதார பூதனான ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளியிருக்கிறான். உத்தானபாதனுடைய மகனான துருவன் அந்த உலகநாதனை ஆராதித்து, நட்சத்திரமயமான அந்தச் சிம்சுமாரத்தின் வாலினிடத்தில் இருக்கை பெற்றான். அந்த சிம்சுமாரத்திற்கு ஆதாரம் ஸ்ரீயப்பதியேயாகும். அந்தச் சிம்சுமாரமோ துருவனுக்கு ஆதாரம். அந்தத் துருவனோ, சூரியனுக்கு ஆதாரம், அந்த சூரியனோ தேவ, மனுஷ்யாதி சகலத்துக்கும் ஆதாரம். அது எவ்விதமெனில் சூரியன் ரசவத்தான ஜகங்களை எட்டு மாதங்களில் இழுத்துப் பொழிய அந்த வர்ஷத்தினாலே சகல உயிரினங்களுக்கும் உபயோகமான உணவுகள் உண்டாகின்றன. அன்னத்தாலே தான் சகலமும் உண்டாகி வளர்கின்றன. மேலும் சூரியன் தனது உக்கிரமான கிரணங்களினால், லோகத்திலிருந்து தண்ணீரை ஆகர்ஷித்து, சந்திரனிடம் பெய்ய, அந்தச் சந்திரனும் வாயு நாடி மயங்களான வழிகளினால் புகையும் காற்றும் நெருப்புமான வடிவுள்ள மேகங்களிலே விட, அந்த மேகங்களிலிருந்து நீரானது உலகில் பொழிகிறது. அந்த மேகங்களிலிருந்து தண்ணீர் நழுவி விழாமையினால் அம்மேகங்களுக்கு அப்பிரங்கள் என்று பெயர் வந்தது. ஆனாலும் காற்றினால் அம்மேகங்கள் அலைக்கப்படும் காலத்தால் உண்டான பரிபாகத்தினால் தண்ணீர் நிர்மலமாகி விழுகிறது. ஆறுகள், பூமி, கடல்கள், பிராணிகள் ஆகியவற்றிலுள்ள நால்வகை ஜலத்தையும் கவர்ந்துதான் சூரியன் வர்ஷிக்கிறான். மேலும் ஆகாய கங்கையின் ஜலத்தைத் தனது கிரணங்களால் கொண்டு, மேகங்களிற் சேர்க்காமலே வர்ஷிப்பதும் உண்டு. அந்தத் தூய்மையான நீர் படுவதனால் மனிதனது பாவந்தீரும். அவன் நரகமடைவதில்லை. அந்த ஸ்நானம் திவ்ய ஸ்நானம் என்று வழங்கப்படும்."

"முனிவரே! சூரியன் காணப்படும் போதே எந்த நீர் மேகமின்றி ஆகாயத்திலிருந்து விழுகிறதோ அதுதான் ஆகாய கங்கையின் நீர் என்று சொல்லப்படும். அன்றியும் கிருத்திகை முதலான ஒற்றைப்பட்ட நட்சத்திரங்களிலே சூரியன் விளங்கிக் கொண்டேயிருக்க, ஆகாயத்திலிருந்து விழுகிற நீரானது, திக்கஜங்களினாலே பொழியப்படும். ஆகாய கங்கா ஜலமாகச் சொல்லப்படும், ரோகிணி முதலிய இரட்டைப்பட்ட நட்சத்திரங்களிலே சூரியன் விளங்கிக் கொண்டேயிருக்க, வானத்திலிருந்து மேகமின்றிப் பொழியும் தண்ணீரானது சூரியன் பெய்யும் ஆகாய கங்கா ஜலமாகக் கூறப்படும். எந்தத் தண்ணீரானது மேகங்களினாலே வர்ஷிக்கப்படுகின்றதோ, அது பிராணிகளின் பிழைப்புக்காக ஓஷதிகளைப் போஷித்து அமுதமென்று சொல்லப்படும். இவ்விதமாக மழையினாலே ஓஷதிகள் பயன் கொடுக்குமளவும் போஷிக்கப்பட்டனவாகி நிற்க, அவற்றைக் கொண்டு, சாஸ்திர நோக்கமுடைய மனிதர்கள் விதிப்படிப் பலவகைப்பட்ட யக்ஞங்களைச் செய்து, தேவதைகளைத் திருப்தி செய்கிறார்கள். இவ்விதமாக யாகங்களும், வேதங்களும், பிராமணாதி ஜாதிகளும், தேவதைகளும், பறவைகளுமான இந்த உலகம் எல்லாம் மழையினாலேயே காக்கப்படுகின்றன. ஏனெனில் உணவை விளைவிப்பதே மழையல்லவா? அந்த மழையை உண்டாக்குவோன் சூரியன்! அந்த சூரியனுக்கு ஆதாரமானவன் துருவன்! அந்த துருவனுக்கு ஆதாரமாக இருப்பது சிம்சுமார சக்கரம்! அந்த சக்கரத்துக்கு ஆதாரம் ஸ்ரீமந்நாராயணன். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணன் அந்தச் சிம்சுமார சக்கரத்தின் இதயத்தில் இருந்து கொண்டு, சகல பிராணிகளையும் தரிக்கும்படித் தாங்கிக் கொண்டிருக்கிறான்."

தொடரும்...

அகிலம் போற்றும் பாரதம்
27 அக்டோபர், 2018  · 
🐚🐚🐚 விஷ்ணு புராணம் - பகுதி 32 🐚🐚

சனி, 28 நவம்பர், 2020

பன்றி

நண்பரின் முகநூல்பதிவு இது. நன்றி

உதயகிரி குகைகள்:

குகை 5 என்பது மற்ற குகையை விட பிரபலமான இடமாகும், மேலும் உதயகிரி குகைகளில் மிகவும் புகழ்பெற்ற வராஹா அவதாரத்தின் சிறப்புகளை கொண்டது. விஷ்ணு தனது வராஹா அவதாரத்தில் பூமியை இன்னல்களிள் இருந்து மீட்கும் கதை இது. இந்த சிற்பங்களை "உதயகிரியின் நடுநாயகமாகவும், கண்களை கவரக்கூடியதாக உள்ளது" என்று வில்லிஸ் விவரித்தார். இந்து புராணக்கதை வேத இலக்கியங்களான டைட்டாரியா சம்ஹிதா மற்றும் சதாபத பிராமணத்தில் வேர்களைக் கொண்டுள்ளது, மேலும் பல வேதத்திற்கு பிந்திய நூல்களில் இது காணப்படுகிறது. புராணக்கதை தெய்வம் பூமியை (பூமாதேவி, பிருதிவி)  மிகுந்த இன்னல்களை சித்தரிக்கிறது, அவர் அடக்குமுறை அரக்கன் ஹிரண்யக்ஷாவால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டபின், அவளோ அவள் சுதந்திர  வாழ்க்கையை வாழ முடியாது. அவள் அண்டக் கடலில் மூழ்கடித்து இருக்கிறாள். விஷ்ணு வராஹா அவதாரம் வடிவில் வெளிப்படுகிறார். அவர், புராணக்கதையில் கதாநாயகன்னாக, கடலில் இறங்கி, அவளைக் கண்டுபிடித்து, அவள் அவரது கொம்பு  மீது அமர்ந்து கொள்கிறாள், அவர் அவளை பாதுகாத்து வெளியே தூக்குகிறார். மகத்தான வெற்றி பெற்று, பூமாதேவியின்  இன்னல்கள்  முடிவுக்கு வந்தது.

விஷ்ணு மீண்டும் தனது கடமையை நிறைவேற்றுகிறார். வராஹா புராணக்கதை இந்து உரையில் பல வரலாற்று புராணக்கதைகளில் இதுவும் ஒன்றாகும், இது சரி மற்றும் தவறு, நல்லது மற்றும் தீய அடையாளங்களை மற்றும் அடி ஆழத்திற்குச் சென்று நல்ல, சரியான தர்மத்தை மீட்பதற்கு  தேவையானதைச் செய்ய விரும்பும் ஒருவரின் மன ஆற்றலை எழச் செய்கிறது. வராஹா அவதார புராணத்தில்  விவரிக்கும் பூமாதேவியை  அந்தரத்தில் தொங்கும் பெண்ணாகவும், கதாநாயகன் மற்றும் கொடூரமான அரக்கனை உருவகப்படுத்தப்படுகிறது. அவரது வெற்றி 4 ஆம் நூற்றாண்டில் மதிப்பிடப்பட்ட மற்றும் போற்றப்படும் தெய்வீக மற்றும் மனித கதாபாத்திரங்களின் ஒரு விண்மீன் மூலம் உற்சாகப்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட கதாபாத்திரங்களின் அவர்களின் உருவப்படம் இந்து நூல்களில் காணப்படுகிறது.

நீங்கள் பார்க்கக்கூடிய படத்தில் எண் இணைக்கப்பட்டு படத்தை புரிந்துகொள்ள உதவுகிறது:

01. வராஹாவாக விஷ்ணு
02. பிருதிவியாக பூமாதேவி 
03. பிரம்மா (தாமரையில் அமர்ந்து)
04. சிவன் (நந்தியில் அமர்ந்து)
05. ஆதித்யாஸ் (அனைவருக்கும் சூரிய ஒளிவட்டங்கள் உள்ளன)
06. அக்னி (நெருப்பில் முடி)
07. வாயு (முடி காற்றோட்டமானது, பொங்கியது)
08. அஷ்டவாசஸ் (6 & 7 உடன், விஷ்ணு புராணம்)
09. ஏகதாச ருத்ராஸ் அல்லது பதினொரு ருத்ராக்கள் (இத்திஃபாலிக், மூன்றாவது கண்)
10. கணதேவதாஸ்
11. ரிஷிகள் (வேத முனிவர்கள், மரங்களின் பட்டைகளை அணிந்து, ஒரு தாடி, தண்ணீர் பானை மற்றும் தியானத்திற்காக ஜெபமாலை)
12. சமுத்ரா
13. குப்தா பேரரசு அமைச்சர் விரசேனா
14. குப்தா பேரரசின் மன்னர் சந்திரகுப்தா II
15. நாகதேவா
16. லட்சுமி
17. அதிகமான இந்து முனிவர்கள் (முழுமையற்ற புகைப்படம்; இவர்களில் வேத சப்தரிஷிகளும் அடங்கும்)
18. முனிவர் நாரதா மகாதி (தம்புரா) விளையாடுகிறார்
19. முனிவர் தம்புரு வீணா விளையாடுகிறார் கதாபாத்திரங்கள் பாரம்பரிய உடையில் அணிந்திருக்கின்றன.

ஆண் தெய்வங்கள் வேட்டி அணிந்தும் பெண் தெய்வங்கள் புடவை அணிந்து இருப்பது போல் ​​வராஹா சிற்பங்கள் காட்சி தருகிறாது.

Udayagiri Caves:

Cave 5 is a shallow niche more than a cave and contains the much-celebrated colossal Varaha panel of Udayagiri Caves. It is the narrative of Vishnu in his Varaha avatar rescuing goddess earth in crisis. Willis has described the relief as the "iconographic centre-piece of Udayagiri".

The Hindu legend has roots in the Vedic literature such as Taittariya Samhita and Shatapatha Brahmana, and is found in many post-Vedic texts. The legend depicts goddess earth (Bhudevi, Prithivi) in an existential crisis after she has been attacked and kidnapped by oppressive demon Hiranyaksha, where neither she nor the life she supports can survive. She is drowning and overwhelmed in the cosmic ocean. Vishnu emerges in the form of a Varaha avatar. He, as the hero in the legend, descends into the ocean, finds her, she hangs onto his tusk, he lifts her out to safety. The good wins, the crisis ends, and Vishnu once again fulfills his cosmic duty. The Varaha legend has been one of many historic legends in the Hindu text embedded with right versus wrong, good versus evil symbolism, and of someone willing to go to the depths and do what is necessary to rescue the good, the right, the dharma. The Varaha panel narrates this legend. The goddess earth is personified as the dangling woman, the hero as the colossal giant. His success is cheered by a galaxy of the divine as well as human characters valued and revered in the 4th-century. Their iconography of individual characters is found in Hindu texts.

The panel shows (the number corresponds to the attached image):

01. Vishnu as Varaha
02. Goddess earth as Prithivi
03. Brahma (sitting on lotus)
04. Shiva (sitting on Nandi)
05. Adityas (all have solar halos)
06. Agni (hair on fire)
07. Vayu (hair airy, puffed up)
08. Ashtavasus (with 6&7, Vishnu Purana)
09. Ekadasa Rudras or eleven Rudras (ithyphalic, third eye)
10. Ganadevatas
11. Rishis (Vedic sages, wearing barks of trees, a beard, carrying water pot and rosary for meditation)
12. Samudra
13. Gupta Empire minister Virasena
14. Gupta Empire king Chandragupta II
15. Nagadeva
16. Lakshmi
17. More Hindu sages (incomplete photo; these include the Vedic Saptarishis)
18. Sage Narada playing Mahathi (Tambura)
19. Sage Tumburu playing Veena

The characters are dressed in traditional dress. The gods wear dhoti, while the goddess is in a sari, in the Varaha panel.