வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கடல்வெள்ளத்தினால் ( சுனாமியால் ) சிவகளை‘ மலைத்தொடர் உருவானது

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 8 )
பெரும் பிரளயத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (சுனாமியில்)  
‘சிவகளை‘ மலைத்தொடர் உருவானது :



“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“. (104). “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள“ என்கிறது சிலப்பதிகாரம்.
“அப் பெரும் சலதி வெள்ளத்து அழுந்தின அழிவு இல்லாத
எப் பெரும் பொழிலும் ஏழு தீபமும் இவற்றுள் அடங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னிப்
பர்ப்பத வகையும் ஈறு பட்டனவாக அங்கண்“
(திருவிளையாடற் புராணப் பாடல்)
“அந்தப் பெரும் கடல்வெள்ளத்துள் மூழ்கி அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவற்றுள் தங்கி நிற்பன செல்வ ஆன திணைகளும், உயர்ந்த முடிகளை உடைய மலைவகைகளும் ஒழிந்தன“ என்கிறது திருவிளையாடல் புராணம்.



“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“  உண்மையா?  தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) அழித்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் காணக் கிடைக்கின்றனவா? 
ஆம், கிடக்கின்றன! 
பிரளயத்தின் போது வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சுமார் ஒரு இலட்சம் சதுர கீலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பூமிக்குள் மூழ்கியுள்ளது.  இதனால் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி சேர சோழ பாண்டிய நாடுகள் அனைத்தும் அழிந்து போயின. கிழக்கே வங்கக்கடலில் தோன்றிய இந்த மாபெரும் கடல்வெள்ளம் தமிழகத்தை அழித்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளது. 
கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.

ஆறுபடைவீடுகளில், முருகனுக்கு வேல் (வேலாயுதம்) வழங்கப்பெற்ற இடம் திருச்செந்தூர்.  முருகன்வடிவேல் எறிந்துகொண்டு சூரனை அழித்த இடம் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர்.



வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார்‘ தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளது.  இதனால் திருச்செந்தூர் வள்ளிகுகை அருகே கடற்கரையை ஒட்டியுள்ள உள்ள பாறைகள் பிளவுபட்டுத் தெற்கு நோக்கி நிமிர்ந்து உள்ளன.  கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ஏரல் அருகே உள்ள ‘சிவகளை‘ என்ற ஊரின் வடமேற்கேயும் பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளன. இந்த இரண்டு மண்மலைகளும் தமிழகத்தைக் கடல்கொண்டதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.





தமிழகம் எங்கும் அடுக்கடுக்காக மண் புதைந்து உள்ளதற்கும், குன்றுகள் மற்றும் மலைகளின் மேலே மண் படிந்துள்ளதற்கும், இதுபோன்ற மண்மலைகள் தோன்றியுள்ளதற்கும் காரணம் என்னவாக இருக்க முடியும்?  பிரளயம் கடல்வெள்ளம் இவற்றைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்?

தொல்லியலாளர் போற்றுவோம்.
திருச்சீரலைவாய் போற்றுவோம்.
தமிழரின் தொன்மை போற்றுவோம்.
பெருங்குளம் அருள்மிகு ‘கோமதி சமேத திருவழுதீசுவரர்‘ திருவருளைச் சிந்தித்து,
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
(kalairajan26@gmail.com ஆவணி 14 (30.08.2017) புதன்கிழமை.)

சனி, 25 ஆகஸ்ட், 2018

பூமியில் இறங்கிய கங்கை

பூமியில் இறங்கிய கங்கை

How and Where the Ganga (a Celestial Sedimentary Water Planet) fell on the Earth?
A study on Puranam with reference to Google Map



"ஆகாசத்திலிருந்து சிவனுடைய சிரஸிலும் அங்கிருந்து பூமியிலும் விழுந்ததால் அந்த ஜலம் பயங்கரமான சப்தத்துடன் வந்தது.  மீன் ஆமை சிம்சுமாரம் முதலை முதலிய ஜல கூந்துக்கள்  அதில் துள்ளி விழுந்து கொண்டிருந்தபடியால் பூமி நன்றாக விளங்கிற்று. ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் ஆச்சரியத்தைப் பார்க்கத் தேவ, ரிஷி, கந்தவர்வ, யக்ஷ, ஸித்த கணங்கள்நகரங்களைப் போன்ற விமானங்களிலும்  குதிரைகளிலும் யானைகளிலும் கூட்டங் கூட்டமாய் அங்கே வந்தார்கள்.  அவர்களின் தேஹ காந்தியாலும் ஆபரணங்களின் பிரகாசத்தாலும் எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம் மேகங்களில்லாமல் ""ஜ்வாலித்தது."". என்கிறது புராணம்.




கங்கை என்னும் பனிநீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தால் அதில் இருந்த எரியக்கூடிய வஸ்துகள்  ஜ்வாலித்து (எரிந்து) பூமியின் மேலே விழுந்தன.  இந்த ஜுவாலைகள் விழுந்த இடங்களில் இருந்த தாவரம் முதலான எரியக்கூடிய வஸ்துகள் எல்லாம் அதீத வெப்பத்தால் எரிந்து போயின.  


இதனால் கங்கை பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிய இடத்திலிருந்து, அது பூமியில் விழுந்த "டக்ளிமேகன்" பாலைவனம் முடிய உள்ள இடம் எல்லாம் ஜுவாலைகள் விழுந்த காரணத்தினால் பாலைவனமாக மாறியுள்ளன - என்பது எனது கருத்து.

கங்கை என்ற விண்ணீர் வியனுலகு பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிய பாதையையும், அதனால் உண்டான
ஜுவாலைகள் விழுந்து பாலைவனமான பூமிப் பகுதியைக் காட்டும் படத்தை இணைத்துள்ளேன்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

கடல்கோள் என்றால் என்ன?



பிரளயம் என்றால் என்ன?
நிலத்திட்டுகள் பெயர்த்து விழுதல். 
மலைகளில் நிலங்கள் பெயர்ந்து விழுவது போன்று கடலுக்கு அடியில் உள்ள நிலங்கள் (fault) பெயர்ந்து சரிந்து விழுவதைப் பிரளயம் என்கிறது புராணம்.
சுனாமி என்றால் என்ன?
கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து பிரண்டு விழுகின்றன. இவ்வாறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழுகின்ற காரணத்தினால் கடல்நீர் அடித்துச் செல்லப்படுகிறது. இதைச் சுனாமி என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். புராணங்களில் இது கடல்வெள்ளம் அல்லது சலதிவெள்ளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல்கோள் என்றால் என்ன? 
கடல்வெள்ளத்தினால் (சுனாமியினால்) கடல்மட்டத்திற்கு மேலே உள்ள நிலப்பரப்பானது மூடப்படுவதை அழிக்கப்படுவதைக் கடல்கோள் என்று புராணம் குறிப்பிடுகிறது. (தண்ணீரை ஊற்றி வீட்டைக் கழுவி விடுவது போன்று, கடல்நீரால் தரைப்பகுதி கழுவிவிடப்படுகிறது.)
ஊழி, ஊழிக்காலம் என்றால் என்ன?பெரும் அழிவுகளை ஊழி என்றும், பெரும் அழிவுகள் நிகழ்ந்த காலத்தை ஊழிக்காலம் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

வடதிசையதுவே வான்தோய் இமயம்

வடதிசையதுவே வான்தோய் இமயம்

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். 
பாடப் பட்டோன் : ஆய் அண்டிரன். 
திணை : பாடாண். 
துறை : இயன்நிலை.
(வடதிசையதுவே வான்தோய் இமயம், தென் திசை ஆய்குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர் தலை உலகே என, அண்டிரனது குடிச்சிறப்பைக் கூறுகின்றனர் புலவர்)

முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளி னேனே! 
ஆழ்க, என் உள்ளம் போழ்க என் நாவே! 
பாழ்ஊர்க் கிணற்றின் துர்க, என் செவியே! 
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி 
குவளைப் பைஞ்சுனை பருகி, அயல 5 
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசையதுவே வான்தோய் இமயம்; 
தென்திசை ஆஅய் குடி இன்றாயின், 
பிறழ்வது மன்னோ, இம் மலர்தலை உலகே.

வடதிசையிலே இமயம் உள்ளது. தென்திசையிலே ஆய்குடி இல்லையாயின், இவ்வுலகமே நிலைகலங்கிக் கெடும். வேந்தே! எவரினும் முன்னதாக நினைக்கவேண்டிய நின்னைப் பின்பே நினைத்தேன் யான். என் உள்ளம் அமிழ்வதாக! என் செவி ஊர்ப் பாழ்ங்கிணறு போலத் தூர்வதாக! நின்னையன்றிப் பிறரைப் புகழ்ந்த என் நாவும் கிழிக்கப்படுவதாக (ஆய்குடி பொதியமலைச் சாரலின்கண் சிற்றுாராகத் திகழ்கிறது)

சொற்பொருள்: 2 என் உள்ளம் ஆழ்க அவ்வாறு நினைந்த குற்றத்தால் எனது உள்ளம் அமிழ்ந்திப் போவதாக, போழ்க - கருவியாற் பிளக்கப்படுவதாக 3 என் செவி - அவன் புகழன்றிப் பிறர் புகழைக் கூறக் கேட்ட எனது செவி, 3. நரந்தை ஒரு வகைப் புல். கவரி - கவரிமான். 6. தகரத் தண்ணிழல் - தகர மரத்தினது குளிர்ந்த நிழலின் கண். வதியும் - தங்கும். 9. பிறழ்வது - கீழ்மேலதாகிக் கெடுவது.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்