“இந்திய உபகண்டம் 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்தி வெகு வேகமாக ஆசியக் கண்டத்தை நோக்கி வந்து மோதியது. இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 10 செ.மீ. நகர்கிறது. 10 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு 1000 கி.மீ. நகர்ந்திருக்கும். default -1
2000 கி.மீ. நீளத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட கண்டங்கள் மோதிக் கொண்டதாம்,
கடலில் இருந்த படிமங்கள் எல்லாம் காணக் கிடைக்கிறதாம்.
ஆனால் 2000 கி.மீ. தூரத்தில் எங்கும் கடற்கரைமணல் மட்டும் காணக் கிடைக்கவில்லையாம்.(கோணல் 1)
இது எப்படிச் சாத்தியமாகும் ?
......... ....... .......
இந்தக் கடற்கரைகளில் மணல் இருக்கிறதா?
இந்தக் கடற்கரைகள் எந்த இடத்தில் உள்ளன?
2000கி.மீ. நீளத்தில் ஒருஇடத்தில்கூட கடற்கரைமணல் இல்லாமல் இருக்க முடியாது என்பது எனது கருத்து.
அதுமட்டும் இமயமலையின் மேற்பகுதிக்கு வந்துவிட்டது ! கடற்மணல் வரவில்லையா ? என்பதே எனது ஐயம்.
default -2
வருடந்தோரும் இந்தியத்துணைக் கண்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து ஆசியாக் கண்டத்துடன் மோதுகிறதாம். அதனால் இமயமலை உருவாகி உயர்ந்துகொண்டே வருகிறதாம்.
(படங்களை இணைத்துள்ளேன்).
ஆனால் இமயமலையின் CHD, AHT, MCT, MBT முதலான அடுக்குகள் அங்குலம் அங்குலமாக உயராமல் அப்படியே layer by layer ஆக bedding அமைப்பில் அமைந்துள்ளதாம்.
(கோணல் 2)
இது எப்படிச் சாத்தியமாகும் ?
அறிந்தோர் அன்புடன் விளக்கி உதவிட வேண்டுகிறேன்.




















