ஞாயிறு, 24 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை)


மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை) 



மாமல்லபுரத்தில் சீனஅதிபர் ஷி ஜின்பிங் அவர்களும் இந்தியப்பிரதமர் மோடி அவர்களும் சந்தித்த இடத்திற்கு அருகில் கிருஷ்ணனின் வெண்ணைய்ப் பந்து என்று ஒரு உருண்டைக் கல் உள்ளது. சரிவான பாறையின் மேல் உள்ள இந்த உருண்டைக்கல் உருண்டு கீழே விழாமல் உள்ளது. முதலாம் நரசிம்ம வர்மன் இந்த உருண்டைக் கல்லை உருட்டிவிட முயற்சி செய்து பின் கை விட்டுவிட்டார்.  சென்னை கவர்னாக இருந்த ஆர்தர் ஹேவ்லாக் (Arthur Havelock)என்பவர் யானைகளைக் கொண்டு இந்தப் பாறையை உருட்டவிட முயற்சி செய்து பின் கைவிட்டுள்ளார்.
மகாபலிபுரத்தில் உள்ள பாறைபோன்று, எத்தனையோ இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், சிறிதும் ஆடாமல் அசையாமல் சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் இரண்டு பாறைகள் நிற்கின்றன.

இந்தப் பாறையைப் போன்ற சிறுசிறு கட்டிகட்டியான பாறைகளை மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலும் மற்றும் கிரானைட் குன்றுகளின் உச்சியிலும், பூமிக்கு அடியிலும் காணலாம்.  கடல்கோளால் குமரிக்கோடு அழிந்தபோது உண்டான கடல்வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட கடற்களிமண்  இறுகிப் பாறையாகி இந்தப்  பொக்குப்பாறை உருவாகி உள்ளது என்பது எனது கருத்து. 



சிவகங்கை மாவட்டத்தில் உள்ளோர் அனைவரும் ஒருமுறையேனும் இந்தப் பாறையை நேரில் சென்று பார்த்து வர வேண்டும்.

இருப்பிடம் - மதகுபட்டியிலிருந்து அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் செல்லவும்.. தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..
சிவகங்கை, மதகுபட்டி அருகே, அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் சென்றால்..... தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..

பாறை படம் -
நன்றி = Ramesh Gemini Kalaiyarkoil
https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/96720839_3497314020283611_4818404860263137280_o.jpg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=DUBNT-zu7z0AX92EDQ0&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=b48fb439b980fb321fc7ea676367d09c&oe=5EF221EC

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 11 (25/05/2020) ஞாயிற்றுக் கிழமை.

வெள்ளி, 22 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (வத்தலக்குண்டு)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (வத்தலக்குண்டு)

மதுரைக்கு வந்த சுனாமி, வத்தலக்குண்டு, மண்மலை

மதுரைக்குக் கிழக்கே வங்கக்கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே பிரளயம் ஏற்படுட்டு அங்கிருந்த நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து கடலில் மூழ்கின.  அதனால் கடல்வெள்ளம் (பெருஞ்சுனாமி) உண்டாகித் தென்னிந்தியா முழுவதையும் தாக்கி அழித்துள்ளது.  இந்தக் கடல்கோள் அழிவின்போது  பஃறுயாற்றுப் பன்மலை அடுக்கமும், குமரிக்கோடும் அழிந்து போயின.   மதுரை மாநகரம் அழிந்துவிட்டது, அதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற புதிய பெயர் உண்டானது.

கடல்கோளால் உண்டான கடல்வெள்ளம் தமிழகக் கடற்கரையைக் கடந்து உள்ளே வரும் போது மிகப்பெரிய அளவில் மண்ணை அள்ளிக்கொண்டு வந்து சேர்த்துள்ளன.   ஏதேனும் தடைகள் ஏற்பட்ட இடங்களில் மண்மலைகள் உண்டாகியுள்ளன.   தென்னிந்தியா முழுவதும் உள்ள மண்மலைகள் இவ்வாறு கடல்கோளால் உண்டானவையே.

மேலேயுள்ள படத்தில் வட்டம் காட்டப்பட்டுள்ள இடத்தில் உள்ள பொருள் (இது சுயம்புலிங்கமா இருக்கலாம், அல்லது பெரிய பாறையாக இருக்கலாம்) ஒன்று கடல்வெள்ளத்தைத் தடுத்துள்ளது.  இதனால் கடல் வெள்ளத்தினால் (பெருஞ்சுனாமியினால்) அடித்துவரப்பட்ட மண்ணானது இந்த இடத்தில் ஒரு மலைபோல் குவியத் தொடங்கி ஒரு மேடான இடத்தை உருவாக்கியுள்ளது.

மதுரைக்கு வந்த சுனாமி, வத்தலக்குண்டு


Add captionமதுரைக்கு வந்த சுனாமி, வத்தலக்குண்டு, மண்மலை
மதுரைக்கு வந்த சுனாமி, வத்தலக்குண்டு, மண்மலை

மதுரைக்கு வந்த சுனாமி, வத்தலக்குண்டு, மண்மலை
வத்தலக்குண்டில் உள்ள செம்மண்மலைகள் கடல்கோளால் உண்டான பெருஞ்சுனாமியினால் அடித்து வரப்பட்ட மண்ணால் ஆனது.  வத்தலக்குண்டில் வட்டமிட்டுக் காட்டப்பெற்றுள்ள இந்த இடத்தில் என்ன உள்ளது ?  கோயில் ஏதும் உள்ளதா ?  சுயம்புலிங்கம் ஏதும் உள்ளதா?

அறிந்தோர் அன்புடன் கூறி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்களது நண்பர்களிடமும் பகிர்ந்து கேட்டறிந்து கூற வேண்டுகிறேன்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)





“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது” என்கிறது கலித்தொகை .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்” படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்” என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் பொக்குப் பாறைகளைக் காண முடிகிறது.
திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா, பெனுகொண்டா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...

தெலுங்கானாவில் புத்பூர் அருகே உள்ளே ஜனாம்பேட் என்ற ஊரில் தேசியநெடுஞ்சாலை வழிநெடுக “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய” மண்படிமங்கள் மலிந்து காணக்கிடக்கின்றன. அருகில் உள்ள ஆற்றுமணல் மலைமேல் ஏறிப் படிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மலைமேல் படிந்துள்ள மண் ஆற்றிற்கு அடித்துச் செல்லப்படுகிறது என்பது உறுதியாகிறது. இந்த இடத்தில் உள்ள மலைகளிலெல்லாம் மண்படிந்துள்ளதற்குக் காரணம் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளத்தைத் (சுனாமியைத்) தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
திண்டுக்கல் அருகே சிறுமலையில் அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
Kalairajan Krishnan
22 மே, 2017 ·

வியாழன், 21 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (பெரச்சந்திரா)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (பெரச்சந்திரா)


“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.

திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...
பெங்களூரு கைதராபாத் மார்க்கத்தில் பெரச்சந்திரா என்ற ஊருக்கு அருகே உயரம் குறைந்த சிறுசிறு மலைத்தொடர்களை வெட்டி எடுத்துத் தேசிய நெடுஞ்சாலை அமைத்துள்ளனர். இந்த மலைத்தொடர்களில் உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
கடினமான கிரானைட் பாறைகள் மேலேயும் கீழேயும் இருக்க, இவற்றிற்கு இடையே பொக்குப்பாறை என்று அழைக்கப்படும் கடல்வௌவிய மண் திட்டுக்கள் அமைந்துள்ளன. இந்த இடங்களில் சாலையில் செல்லும் போதே எளிதில் நன்றாகக் காணமுடிகிறது.
இதில் சிறப்பு என்னவென்றால், பெரச்சந்திரா அருகே காணப்படும் மண்படிமங்களும் மணவூர் (கீழடி) அகழ்வாராய்ச்சியில் காணப்படும் மண்படிமங்களும் ஒத்த நிறத்தில் உள்ளன.



ஆந்திராவில் பெனுகொண்டா அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
Kalairajan Krishnan
19 மே, 2017 · Karaikkudi

செவ்வாய், 19 மே, 2020

வங்கக் கடலில் உருவான கடல்கோள்


வங்கக் கடலில் உருவான கடல்கோள்



இது மாபெரும் கடல்கோள்...

பன்மலையடுக்கம் அழிந்து இலட்சத்தீவுகளாக மாறிவிட்டன.
கபாடபுரம் அழிந்து டிகோகார்சிகா தீவாக மாறிவிட்டது.
கிழக்குக் கடற்கரையில் (கடலூர் போன்று) வளைவான கடற்கரைகள் தோன்றியுள்ளன.
தென்னிந்தியாவில் உள்ள ஆறுகள் எல்லாமும் வழித்தடம் மாறியுள்ளன.
வையை என்ற நதி மறைந்து வைகை என்ற நதி உருவாகியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைமேல் அளவற்ற மண் படிந்து ள்ளது.
விந்தியசாத்பூரா மலைமேல் அளவற்ற மண்படிந்து அதன் உயரம் குறைந்துள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள மண்மலைகள் எல்லாம் இந்தக் கடல்கோளின்போது புதிதாக உருவானவை
---------------------------------------------------------------------

1) வங்கக்கடலில் உண்டான கடல்வெள்ளம் மதுரை மீது வந்தது,  சூரிய கிரகணத்தின் போது சூரியனை இருள் விழுங்கியது போன்று இருந்தது என்கிறது திருவிளையாடற் புராணம் பாடல் எண் 1040

வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்
கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்
வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்
அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.”


2) பெரிய ஊழிக்காலத்தில் வங்கக்கடல் மதுரைக்கு வந்தது போன்று வைகையை வருமாறு சிவபெருமான் அழைத்தார் என்கிறது திருவிளையாடற் புராணம் பரி நரியாக்கி வைகை அழைத்த படலம் பாடல் எண் 2977.

“கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்”.
-----------------------------------------------------------------

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 7 (20/05/2020) புதன்கிழமை

மதுரைக்கு வந்த சுனாமி (பெனுகொண்டா)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (பெனுகொண்டா)


“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் பொக்குப் பாறைகளைக் காண முடிகிறது.


திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...
பெங்களூரு கைதராபாத் மார்க்கத்தில் பெனுகொண்டா என்ற ஊருக்கு அருகே உள்ள சிறு மலைக் குன்றில் “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.



ஆந்திராவில் புத்பூர் மற்றம் ராஜ்பூர் இடையே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
Kalairajan Krishnan
20 மே, 2017 ·

மண் கடல் வௌவலின் (சூளகிரி) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)

மண் கடல் வௌவலின் (சூளகிரி)
மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)


தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.

பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?


ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.

கிருஷ்ணகிரி ஓசூர் இடையே நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.


இந்த இடத்தில் மேலும் கீழும் கடினமான கிரானைட் பாறைகள் இருக்கின்றன. இந்தப் பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறை என்று அழைக்கப்படும் கடல்வௌவிய மண் திட்டுக்கள் எளிதில் நன்றாகக் காணக் கிடைக்கின்றன.   அடுத்து ஆந்திராவில் பெரச்சந்திரா அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

புதன், 13 மே, 2020

Theory of Tsunamis, திருச்செந்தூருக்கு வந்த சுனாமி

Theory of Tsunamis,

திருச்செந்தூருக்கு வந்த சுனாமி 
பிரளயம் பேர்த்த பாறைகள் 
(பகுதி 3 அ)


திருச்செந்தூருக்கு வந்த சுனாமி  -  மதுரையை ஆண்ட பாண்டியர்கள் கடல்கோளின் போது இறைவனிடம் வேண்டிக்கொண்ட ஆன்மிகச் செய்திகளைத் திருவிளையாடற் புராணம் வெகுவாகக் கூறுகிறது.
இறைவனின் திருவருளைக் கூறும்போது, பிரளயத்தின் போது ஏற்பட்ட புவி மாற்றங்களையும் புராணம் கூறுகிறது.   புராணம் கூறும் பெரும்சுனாமிகளின் அழிவுகளுக்குச் சான்றாகத் தமிழகம் எங்கும் பாறைகள் பெயர்ந்து காணப்படுகின்றன.

“ கருங்கடல் ஏழும் காவல் கரை கடந்து, ஆர்த்துப் பொங்கி,
ஒருங்கு எழுந்து, உருத்துச் சீறி, உம்பரோடு இம்பர், எட்டுப்
பொரும் கடகரியும், எட்டுப் பொன் நெடும் கிரியும், நேமிப்
பெருங்கடி வரையும், பேரப், பிரளயம் கோத்த வன்றே”
....
....
“ கொதித்து எழுந்து, தருக்கள் அறக் கொத்தி எடுத்து, எத்திசையும்
அதிர்த்து, எறிந்து, வரைகள் எல்லாம் அகழ்ந்து, திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து, எறிந்து, மாடநிரை பெயர்த்து, எறிந்து, பிரளயத்தில்
உதித்து, எழுந்து, வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்”
இந்தப் புராணப் பாடல்களுக்குச் சான்றாக, அழகர்கோயில்மலையில் உள்ள பாறைகள் சிலவற்றையும்,  பழனி அருகே விருப்பாச்சி பாறையையும் இதற்கு முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
இந்தப் பதிவில் திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள வள்ளிகுகை வாயில் அருகேயுள்ள பிரளம் பேர்த்த பாறையின் படம் இணைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அந்தமான்தீவிற்கு அருகே பிரளயம் (அயனங்கள் பிரள்வது, அல்லது கடலுக்கு அடியில் நிலச்சரிவுகள் உண்டாவது) ஏற்பட்டது.  அதனால் கடல்வெள்ளம் (ஆழிப்பேரலை அல்லது பெருஞ்சுனாமி) உண்டாகித் தமிழகத்தைத் தாக்கி அழிந்துள்ளது.

கடல்கோளால் உண்டான கடல் அலைகள் கரையைக் கடக்கும்போது, கடற்கரையோரம் இருந்த பாறைகளைப் பெயர்த்தெடுத்துப் போட்டுள்ளது.  இவ்வாறு பாறைகள் புடைபெயர்ந்து கிடப்பதைத் தமிழகம் ஆந்திரம் மற்றும் கிழக்குக் கடற்கரையோரம் எங்கும் காணலாம்.


திருச்செந்தூரில் வள்ளிகுகை அருகே உள்ளபாறைகளைப் போன்றே,  பழனி செல்லும் வழியில் விருப்பாச்சியில் உள்ள பாறைகளும் இருப்பதைக் காணலாம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Kalairajan Krishnan
13 மே, 2017, முற்பகல் 5:03 · Tiruchendur ·