சுனாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுனாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 நவம்பர், 2024

மலி திரை ஊர்ந்து பிரான்மலையைக் கடல் வௌவியதா?

மலி திரை ஊர்ந்து பிரான்மலையைக் கடல் வௌவியதா?

“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்”
- என்கிறது கலித்தொகை 104.

“வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி!“
- என்கிறது சிலப்பதிகாரம் காடுகாண்காதை 17 -22

மேற்கண்ட சிலப்பதிகார வரிகளாலும் கலித்தொகைப் பாடலாலும் பாண்டியநாட்டினைக் கடல்கொண்டதை அறியமுடிகிறது.  இவ்வாறு பாண்டிய நாட்டினைக் கடல் வௌவிய காலத்திலேதான் கடல்அலைகளால் அரித்துவரப்பட்ட மண்ணானது மதுரையில் மேடாகச் சேர்ந்து மண்(நாக)மலையாகத் தோற்றுவித்திருக்க வேண்டும்.

கலித்தொகையும், சிலப்பதிகாரமும் கூறும் இக்கூற்றையே திருவிளையாடற் புராணமும் திருப்பூவணப்புராணமும் கூறுகின்றன.

....பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்  குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ளும் அளவிற்குக் கடல்நீர் தோன்றி அளித்துள்ளது.  அப்படி யென்றால் குமரிக்கோட்டுடன் ஒன்றாக ஒட்டியிருந்த இருந்த தற்போதைய 
‘கன்னியாகுமரி‘ எவ்வளவு பாதிக்கப் பெற்றிருக்கும்?  
எப்படியெல்லாம் பாதிக்கப் பெற்றிருக்கும்?

கடல் பொங்கி ஏதோ 10 அல்லது 15 கி.மீ. தூரத்திற்கு வரவில்லை!  மாறாக
கிழக்கிலிருந்து கடல் பொங்கி எழுந்து அலைகள் மேற்குத் தொடர்ச்சி மலையையே தாண்டிச் சென்று இருப்பதைக் காணலாம்.
தமிழகம் முழுவதையும் அழித்துள்ளது.

கிழக்கிலிருந்து கடல் பொங்கி எழுந்து வந்திருந்தால், கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள...
சிவங்கை மாவட்டம் பிரான்மலையைக் கடல் சூழ்ந்த காட்சியைக் காண்போம்..
சிவங்கை மாவட்டம் பிரான்மலையைக் கடல் வவ்விய காட்சி....
.

Inline image 1 

Inline image 2
பிரான்மலையின் உயரம் சுமார் 2.கீ.மீ. 
இவ்வளவு உயரத்திற்கு கடல் பொங்கி வந்துள்ளது!

அதாவது குமரிக்கோட்டினைக் கடல் கொள்ளும் போது, பொங்கி வந்த கடல்நீரின் உயரம் 2.கி.மீ.
அதன் நீளம் சுமார் 1500 கி.மீ.

மேற்குத் தொடர்ச்சி மலைமேல் உள்ள வால்பாறையைக் கடல் வவ்விய காட்சி....அடுத்த பதிவில்....

வியாழன், 10 பிப்ரவரி, 2022

கல்வெட்டில் கடல்கோள்

கல்வெட்டில் கடல்கோள்

முகநூல் நண்பர் Rachinn Rachinn Rachinn அவர்களின் பதிவு இது.

7 பிப்ரவரி, முற்பகல் 6:43க்கு  · 

நினைவுச் சாலை:பாண்டியர்கள் யாரால் முடிவுக்கு வந்தனர். தெளிவாக சித்தரிக்கின்றன இந்தக் கல்வெட்டுச் செய்திகள்.

கம்பணர் ஆட்சிக்குபின்பும் நாயக்கர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பும் இருந்த இடைக்காலத்தில் பாண்டிய நாடு வாணாதிராயர் ஆட்சியில் இருந்நததாக கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.Òமஹாவலி வாணதரையர்சீர்மையானமதுரை மண்டலாம்Ó&ஸ்ரீவில்லிபுத்தூர்கல்வெட்டு.கக

''மால்விட்ட படை  துரந்து வடுகெறிந்த

மகதேசன் வடிவேல் வாங்கக்

கால்விட்ட கதிர்முடியே யிந்திரனைப்

புடைத்தது முன் கடல்போய் வற்ற

வேல்விட்டதொகுதிறலுமுகிலிட்ட

தனி விலங்கும் வெற்பி லேறச்

சேல்விட்ட பெருமலியு மாங்கேலிட்டுடைந்தான் தென்னவர்கோவே''

''இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றன்

றிழைத்த வழுகுலேயால்&தழைத்த குடை

மன்னர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த தென்னவர்கோன் போன திசைÓ&புதுக்கோட்டை''-குடுமியான்மலைக் கல்வெட்டுக்கள் இரண்டு, பாண்டியர்  தோல்வியையும், வாணாதிராயர் வெற்றியையும் (செய்யுள் நடையில் கூறியுள்ளன.

முனைவர் மா.இராசமாணிக்கனார்

(கல்வெட்டுகளும் தமிழ் சமூக வரலாறும்)

இதன் வழியாக நாம் அறிய வேண்டிய செய்திகள் உள்ளன.பாண்டியர்கள்  வாணாதிராயர்களால் வீழ்த்தப்பட்டனர்.வாணாதிராயர்கள் யார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

திங்கள், 14 செப்டம்பர், 2020

கடல்கோள்களும் கிழக்கு மேற்குக் கடற்கரைகளும்

கடல்கோள்களும் 

கிழக்கு மேற்குக் கடற்கரைகளும்

மகாராஷ்டிராவில் நர்மதை, தபதி என்ற இரண்டு நதிகள் மற்றும் கேரளமாநிலத்தில் பெரியாறு ஆகிய மூன்று நதிகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்காகப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன்.  இந்த மூன்று நதிகளைத் தவிர இந்தியாவில் பாயும் அனைத்து நதிகளும் கிழக்கே உளள வங்காளவிரிகுடாவில்தான் கலக்கின்றன.

இந்த நதிகள் எல்லாம் வண்டல்மண்ணை அடித்துவந்து கடலில் சேர்க்கின்றன.   ஆனாலும் இந்தியாவின் கூகுள் புவிப்படத்தைப் பார்த்தால்,  கிழக்குக் கடற்கரையோரம் நெடுகிலும் மணல் மிகவும் குறைவாகவே படிந்துள்ளதைக் காணமுடிகிறது.  ஆனால் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிக அதிகமான அளவில் மணல் படிந்து கடற்கரையே மணல்மேடாகக் காணப்படுகிறது.

இவ்வாறு, கிழக்குக் கடற்கரையில் குறைவாக மணல் படிந்து இருப்பதற்கும்,  மேற்குக் கடற்கரையில் மிகக் கூடுதலாக மணல் படிந்துள்ளதற்கும் காரணம் என்ன?

வங்கக்கடலில் அந்தமான் தீவையொட்டி இருந்த நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து கடலில் மூழ்கி அடுத்தடுத்து மிகப்பெரிய கடல்கோள்கள் (big tsunamis) உண்டாகியுள்ளன.   இந்தக் கடல்கோள்களால் உண்டான கடல்வெள்ளம்  கிழக்குக் கடற்கரையைத் தாக்கி அழிந்து, இந்தியத் தீபகற்ப நிலப்பகுதியைத் தாண்டிச் சென்று மேற்குக் கடற்கரையில் படிந்துள்ளது.    இதன் காரணமாகவே இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் மணல் குறைவாகவும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் மணல் கூடுதலாகவும் உள்ளது என்பது எனது கருத்து.

இலங்கையிலும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குறைவான அளவில் மண் படிந்துள்ளதும், மேற்குக் கடற்கரையில் கூடுதலான மண் படிந்துள்ளதற்கும், இதுபோல் உலகெங்கும் கடற்கரையோரங்களில் அதிகமான மணல் படிந்துள்ளதற்கும்  கடல்கோளால் உண்டான கடல்வெள்ளமே (tsunamis) காரணம் என்பது எனது கருத்து.

இதுபற்றிப் புவியியல் அறிஞர்களின் கருத்துக்களையும், கடல்கோள்கள் ஆர்வலர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஆவணி 29 (14.09.2020) திங்கள் கிழமை.

வியாழன், 3 செப்டம்பர், 2020

மதுரைக்கு வந்த சுனாமி வந்ததா? எப்போது வந்தது? எப்படி வந்தது?

மதுரைக்கு வந்த சுனாமி வந்ததா?  

எப்போது வந்தது? 

எப்படி வந்தது?


ஆழிப்பேரலை (சுனாமி) மீண்டும் வருமா?

வந்தால் என்ன செய்வது? எப்படிச் செய்வது?

அனைத்து வல்லரசுகளும் பயப்படுகின்றன.

உலகமக்கள் எல்லாம் உயிருக்கு அஞ்சுகின்றனர்.

சப்பான் நாட்டில் சுனாமியால் அணுஉலை எரிந்தது.

தமிழ்நாட்டிலும் இதுபோல் சுனாமி வந்தால், கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர்.  எனவே அணுமின்நிலையத்தை அரைகிலோமீட்டர் தள்ளிக் கட்டவேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் மதுரைக்கு சுனாமி வந்துள்ளது!

எப்போது வந்தது? எப்படி வந்தது? என்ன என்ன அழிந்தன? யார் யார் பிழைத்தார்கள்?


எப்போது வந்தது?

அதுலகீர்த்தி என இருபத்திரண்டு மைந்தர் வழிவழியாக, பாண்டிய நாட்டைக் காத்துவந்தனர்.  இவர்களுள், பழிதவிர் அதுலகீர்த்திபாண்டியன் என்னும் மன்னனின் மகன் கீர்த்திபூசணன் செங்கோலோச்சி ஆட்சி செய்து வந்த காலத்தில் ஒருநாள் ஆழிப்பேரலை பொங்கி மதுரை வரை வங்கக்கடல் வந்துள்ளது.

எப்படி வந்தது?

கருங்கடல் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலே எழுந்து,  பெரிய உருவம் பெற்று,  சீறிப் பாய்ந்து, வெகுண்டு ஆரவாரித்து, காவல் கரையைக் கடந்து வந்தன. விண்ணுலகையும், மண்ணுலகையும், இணைக்கின்ற  பெரிய பொன்னையுடைய எட்டு மலைகளும், பெருங்கடி நேமி(சக்கரம்) வரை(பாதுகாப்புச் சுவர்) யும்,  பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும் தங்களது நிலையிலிருந்து பெயர்ந்தன.  பிரளயத்தின்மீது இன்னுமொரு பிரளயம் கோர்த்து வந்தது.

இவை அனைத்தும், அப்பெருஞ் சலதி வெள்ளத்தின்  உள்ளே சென்று விட்டன. கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவு இலாத  பெரிய பூமியும், ஏழு தீபகற்பங்களும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த மலைவகைகளும் கடல் அலைகளுள் சென்றன.

என்ன என்ன அழிந்தன? யார் யார் பிழைத்தார்கள்?

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

சங்க காலத்திலே, பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே  அழித்து மேற்கே சென்றுள்ளது. பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன.  அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்றமலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையும் திருப்பரங்குன்ற மலையும் மூழ்கடித்துள்ளன.  மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது. 

மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும்சகதியுமாக இருந்துள்ளது.  இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.

பிரளயம் வற்றிய போது கடல்நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேடாக உள்ளது.  இதனால் இந்த இடம் “முகவை“ என்றும் சேதுக்கரை என்றும் பெயர் பெறலானது.  இந்த இடங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழரின் தொன்மைச் சான்றாதாரங்கள் எளிதில் கிடைக்கும்.


அன்பன்
முனைவர் நா.ரா.கி. காளைராசன்

18 பிப்ரவரி 2013

மதுரைக்கு வந்த சுனாமி நாகமலை தோன்றியது எப்படி?

மதுரைக்கு வந்த சுனாமி
நாகமலை தோன்றியது எப்படி? 


ஆழிப்பேரலை (சுனாமி) மீண்டும் வருமா?
வந்தால் என்ன செய்வது? எப்படிச் செய்வது?
அனைத்து வல்லரசுகளும் பயப்படுகின்றன.
உலகமக்கள் எல்லாம் உயிருக்கு அஞ்சுகின்றனர்.

சப்பான் நாட்டில் சுனாமியால் அணுஉலை எரிந்தது.
தமிழ்நாட்டிலும் இதுபோல் சுனாமி வந்தால், கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர்.  எனவே அணுமின்நிலையத்தை அரைகிலோமீட்டர் தள்ளிக் கட்டவேண்டும் என்றும்
கூறுகின்றனர்.

ஆனால் மதுரைக்கு சுனாமி வந்துள்ளது!
எப்போது வந்தது?
எப்படி வந்தது?
என்ன என்ன அழிந்தன?
யார் யார் பிழைத்தார்கள்?

எப்போது வந்தது?
அதுலகீர்த்தி என இருபத்திரண்டு மைந்தர் வழிவழியாக, பாண்டிய நாட்டைக் காத்துவந்தனர்.  இவர்களுள், பழிதவிர் அதுலகீர்த்திபாண்டியன் என்னும் மன்னனின் மகன் கீர்த்திபூசணன் செங்கோலோச்சி ஆட்சி செய்து வந்த காலத்தில் ஒருநாள் ஆழிப்பேரலை பொங்கி மதுரை வரை வங்கக்கடல் வந்துள்ளது.

எப்படி வந்தது?
கருங்கடல் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலே எழுந்து,  பெரிய உருவம் பெற்று,  சீறிப் பாய்ந்து, வெகுண்டு ஆரவாரித்து, காவல் கரையைக் கடந்து வந்தன. விண்ணுலகையும், மண்ணுலகையும், இணைக்கின்ற  பெரிய பொன்னையுடைய எட்டு மலைகளும், பெருங்கடி நேமி(சக்கரம்) வரை(பாதுகாப்புச் சுவர்) யும்,  பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும் தங்களது நிலையிலிருந்து பெயர்ந்தன.  பிரளயத்தின்மீது இன்னுமொரு பிரளயம் கோர்த்து வந்தது.

இவை அனைத்தும், அப்பெருஞ் சலதி வெள்ளத்தின்  உள்ளே சென்று விட்டன. கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவு இலாத  பெரிய பூமியும், ஏழு தீபகற்பங்களும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த மலைவகைகளும் கடல் அலைகளுள் சென்றன.

என்ன என்ன அழிந்தன?
யார் யார் பிழைத்தார்கள்?

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
சங்க காலத்திலே, பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே  அழித்து மேற்கே சென்றுள்ளது. பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன.  அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்றமலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையும் திருப்பரங்குன்ற மலையும் மூழ்கடித்துள்ளன.  மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது. 

நாகமலை தோன்றியது

மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும்சகதியுமாக இருந்துள்ளது.  இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.  ஆனால், ஒரேயொரு விருட்சம் (மரம்) மட்டும் இவ்வளவு பெரிய  பிரளயத்திலும் ஆடாமல் அசையாமல் பூமிஉருண்டையின் மேல் ஒரு ஆணியை அடித்து வைத்தது போல், அப்படியே நிலையாக ஆழிப்பேரலையை (சுனாமியை) எதிர்த்து நின்றது.  



தண்ணீர் பாய்ந்து ஓடும் ஒரு மணற்பரப்பின் நடுவில் ஒரு குச்சியை நிலையாக நிறுத்தி வைத்தால், நீரோட்டத்தினால் அடித்துவரப்படும் மணல்கள் அந்தக் குச்சிக்குப் பின்புறம் சென்று நீண்டதொரு மேட்டினை உருவாக்கும்.  அலைகள் மிகுந்த கடற்கரையில் நாம் நின்றால், அலையானது நமது கால்களைத் தாண்டிச் செல்லும் போது, நமது கால்களுக்குப் பின்புறமாக ஒரு நீண்ட மணல்மேட்டினை உருவாக்குவதைக் காணலாம்.  இதனைச் செயற்கையாகவும் நாம் சோதனை செய்தும் பார்க்கலாம்.
இதுபோன்றே, கடல் அலையால் அரிந்து வரப்பட்ட  பொருட்கள் இந்த விருட்சத்தில் மேல் மோதி நிலைகொண்டு விருட்சத்திற்குப் பின்புறமாகச் சென்று,   மணலும் சேறும் சகதியும் நிறைந்த ஒரு நீண்ட நெடிய மேட்டினை உருவாக்கிவிட்டது.   இந்த மேட்டில் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட கடல்நீர், மணல், சகதி மற்றும் வரும் வழியில் இருந்த அனைத்து வகையான மரம் செடிகொடுகளும், மற்றும் உயிரினங்களும் படிந்து விட்டன.
இவ்வாறு உண்டான மணல்மேட்டுப் படிமம் பலமைல் தூரத்திற்கு நீண்டு சென்றுள்ளது.   


இப்போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் பல கழிந்து, யுகங்கள் மாறிவிட்டன.  இத்தனை ஆண்டுகளில், பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட அழுத்தத்தினாலும் மற்றும்பல இயற்கைக் காரணங்களாலும் இந்தப் படிமமானது அப்படியே பாறைபோல் மாறிவிட்டது.  இப்போது இந்த மேடானது, “நாகமலை“ என்று அழைக்கப்படுகிறது.  யானைமலையும் திருப்பரங்குன்றமலையும் கடும்பாறைகளாக இருக்க, நாகமலைமட்டும் கடும் பாறையாக இல்லாமல், மணற்குன்றாக இருப்பதை இன்றும் காணலாம்.   இதே போன்று பழமுதிர்சோலைமலையையும் (அழகர்கோயில்மலை) ஆழிப்பேரலையானது தாங்கியுள்ளதால் அங்கேயும் இதுபோன்ற படிமங்களைக் காணலாம்.  

ஆழிப்பேரலையாலும் அசைக்க முடியாமல் பூமியின் மேல் ஆப்புப் (ஆணி அடித்தது) போன்று அசையாமல் நின்ற அந்த விருட்சமானது, காலப்போக்கில் படிமம் ஆகியுள்ளது.  இப்போது “ஆப்புடையார்“ என்று அழைக்கப்படுகிறது.  மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ளது பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று.
திருஆப்புடையார் போன்று, திருப்பரங்குன்றமலையும் ஆழிப்பேரலையை எதிர்த்து நின்றதால், திருப்பரங்குன்றமலைக்கு மேற்குப் பகுதியிலும் நாகமலைக்கு இணையாக ஒரு சிறிய படிம மலைத் தொடர் இருப்பதைக் காணலாம்.

தமிழர்களின் தொன்மையான சான்றுகள் அனைத்தும் நாகமலையில் புதையுண்டு கிடக்கின்றன.  நாகமலையை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால்,  தமிழரின் தொன்மையான வரலாறுச் சான்றுகள் எளிதில் கிடைக்கும்.

பிரளயம் வற்றிய போது கடல்நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேடாக உள்ளது.  இதனால் இந்த இடம் “முகவை“ என்றும் சேதுக்கரை என்றும் பெயர் பெறலானது.  இந்த இடங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழரின் தொன்மைச் சான்றாதாரங்கள் எளிதில் கிடைக்கும்.

ஆடாமல் அசையாமல் நின்று அருள்மிகு திருவாப்புடையாரை வணங்கினால், பிரளயம்போல் தோன்றும் வினைகளையும் எதிர் கொள்ளும் சக்தியைப் பெறலாம். 

திருச்சிற்றம்பலம்.
18 பிப்ரவரி 2013

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

மதுரைக்கு வந்த சுனாமியும் அரியலூருக்கு வந்த சுனாமியும்

மதுரைக்கு வந்த சுனாமியும்
அரியலூருக்கு வந்த சுனாமியும்

மதுரையானது கடற்கரையில் இருந்து சுமார் 100 கி.மீ. அப்பால் உள்ளது. எனவே மதுரைவரை சுனாமி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.     

அரியலூரில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.  அரியலூர் கடற்கரையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது.  



கடற்கரையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள  டால்மியாபுரத்தில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன.
 
கடற்கரையில் இருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள அரியலூர் மற்றும் டால்மியாபுரம் முதலான ஊர்களுக்குக் கடல்கோளினால் உண்டான கடல்வெள்ளம் வந்துள்ளது என்பது உறுதி.   அதே கடல் வெள்ளம் கடற்கரையில் இருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள மதுரைக்கும் வந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.  




பிரளயம் ஏற்பட்டுக் கடல்கோள் உண்டானபோது,  கடல்வெள்ளம் மதுரைவரை வந்ததாகவும்,  கடல்வாழ் சுரிவளை (RASTELLUM CARINATUM)  யைக் கடல்வெள்ளம் அடித்து உதைத்து மதுரையில் உள்ள வாவியில் சேர்த்ததாகவும் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

சுரிவளையின் படிமங்கள் அரியலூரிலும்  டால்மியாபுரத்திலும் கிடைத்துள்ளன. எனவே முறையான ஆய்வுகள் நடைபெற்றால், மதுரையின் உள்ள தொன்மையான பள்ளமான நீர்நிலைகளில் கடல்கோளின்போது அடித்துவரப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.    

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


1) https://worldfossilsociety.org/2015/09/ariyalur-fossilsrastellum-carinatum/


2) திருவிளையாடற் புராணம் பாடல்கள் 

888.       துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட  உதைத்து

வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக்  கொட்பத்

தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை

அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும்.  

889.       காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்

கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்

பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால் 

அவன் அடி சென்று அடைந்தார் போல்  அடங்கியது ஆல்.               


3) கூகுள் புவிப்படத்தில் எழுகடல் தெரு

W4CF+66 Madurai, Tamil Nadu


செவ்வாய், 23 ஜூன், 2020

ஓசூருக்கு வந்த சுனாமி - கடல்கோள்

கடல்கோள்  - ஓசூருக்கு வந்த சுனாமி 

பஃறுளி யாற்றையும் பன்மலை யடுக்கத்தையும் (இலட்சத்தீவுக் கூட்டத்தையும்) குமரிக் கோட்டையும்  கொடுங்கடல் கொண்டது.  அப்போது (சுனாமியால்) உண்டான கடல்நீர் கரையைக் கடந்து தென்னிந்தியா முழுவதையும் அழித்துள்ளது.  கடல்நீரால் அடித்துவரப்பட்ட களிமண் தென்னிந்தியா முழுவதும் உள்ள பாறை இடுக்களில் படிந்துள்ளதைக் காண முடிகிறது.  

கடல்கோள்


தென்னிந்தியா முழுவதும் பாறை இடுக்குகளில் கடல்கோளால் அடித்துவரப்பட்ட களிமண் படிந்து இருப்பதைக் காணமுடிகிறது. 

கடல்கோள், Tsunami, Theory of Tsunami,

அன்பன்
காசிசீர், முனைவர், கி. காளைராசன்

வெள்ளி, 22 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)





“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது” என்கிறது கலித்தொகை .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்” படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்” என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் பொக்குப் பாறைகளைக் காண முடிகிறது.
திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா, பெனுகொண்டா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...

தெலுங்கானாவில் புத்பூர் அருகே உள்ளே ஜனாம்பேட் என்ற ஊரில் தேசியநெடுஞ்சாலை வழிநெடுக “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய” மண்படிமங்கள் மலிந்து காணக்கிடக்கின்றன. அருகில் உள்ள ஆற்றுமணல் மலைமேல் ஏறிப் படிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மலைமேல் படிந்துள்ள மண் ஆற்றிற்கு அடித்துச் செல்லப்படுகிறது என்பது உறுதியாகிறது. இந்த இடத்தில் உள்ள மலைகளிலெல்லாம் மண்படிந்துள்ளதற்குக் காரணம் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளத்தைத் (சுனாமியைத்) தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
திண்டுக்கல் அருகே சிறுமலையில் அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
Kalairajan Krishnan
22 மே, 2017 ·

செவ்வாய், 19 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (பெனுகொண்டா)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (பெனுகொண்டா)


“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் பொக்குப் பாறைகளைக் காண முடிகிறது.


திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...
பெங்களூரு கைதராபாத் மார்க்கத்தில் பெனுகொண்டா என்ற ஊருக்கு அருகே உள்ள சிறு மலைக் குன்றில் “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.



ஆந்திராவில் புத்பூர் மற்றம் ராஜ்பூர் இடையே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
Kalairajan Krishnan
20 மே, 2017 ·

புதன், 16 அக்டோபர், 2019

இனி சுனாமி வருமா? வராதா?

இனி சுனாமி வருமா? வராதா?


26 டிசம்பர், சுனாமி நினைவு நாள் வருகிறது.
இதுபோல் சுனாமி இனிமேல் வருமா? வராதா?

மனிதர்கள் யாரும் மறக்கமுடியாத நாள் 26 டிசம்பர் 2004.  சுனாமி.  1,74,296 பேர் இறந்துவிட்டனர்.  1,08,221பேர் காணவில்லை. ஆக மொத்தம் 2,82,517 இல்லாமல் போய்விட்டனர்.  இதில் இந்தியாவில் மட்டும் 16,389 பேர்  இல்லாமல் போய்விட்டனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.  இந்தப் பேரழிவுச்  சுனாமி இனிமேலும் வருமோ? என்ற அச்சம் எல்லோர் மனத்திலும் உள்ளது.
இனி சுனாமி எப்போது வரும்? எங்கே வரும்? என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

என்னிடம் கேட்டால்,
நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து வரும் கடல்கோளும் (சுனாமியும்) பிரளயத்தால் உண்டாகின்றன.  பிரளயம் என்றால் நிலத்திட்டுகள் பிரள்வது, அல்லது புரண்டு விழுவது.  இந்தோனேசியா நிலத்திட்டு அடுக்கடுக்கான பொக்குப்பாறைகளால் உருவானது.

கடலில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்துக்கிடப்பது போல் அடுக்கடுக்கான பொக்குப்பாறைகளால் ஆன bedding நிலமைப்பைக் கொண்டது.  பாம்பின் தோல்களில் செதில்கள் இருப்பதைப் போன்று, இந்தோனேசியா நிலத்திட்டில் பாறை யடுக்குகளுக்கு இடையே செதில்கள் (fault)உள்ளன.  இந்தச் செதில்கள் பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கமும் கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன.

நிலநடுக்கமும், கடல்கோள் (சுனாமியும்) எப்போது உண்டாகும்?
இதை உறுதியாகக் கூற இயலாது.  செதில் (fault)எப்போது பெயர்ந்து விழும்? என்பதை உறுதியாக யாராலும் கணித்துச் சொல்லவே முடியாது.   இதைக் கணித்தே ஆக வேண்டும் என்றால்,  இதுவரை பிரளயம் (நிலநடுக்கம், சுனாமி) நடைபெற்ற நாட்களைத் தொகுக்க வேண்டும்.  நிலநடுக்கமும் சுனாமியும் உண்கியுள்ள நாட்களில், சூரிய சந்திரன் முதலான ஒன்பது கோள்களின் நிலைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றிற்கும் சுனாமிக்கும் தொடர்பு  (correlation)உள்ளதா?  எனக் கணக்கிட்டுக் கண்டறிய வேண்டும்.
இவ்வாறான கணிதமுறையினால் ஆன கணிப்பினால் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரளயம் கடல்கோள் நிகழ வாய்ப்பு உள்ளதா? என அறிவியல் அடிப்படையில் கூறிடமுடியும்.

மற்றபடி,  இந்தோனேசியா நிலத்திடு உருவாகி வெகுகாலம் ஆகி விட்டது.  நிலம் நன்றாக இறுகி விட்டது.   இந்த நிலத்திட்டில் விழும் நிலையில் இருந்த செதில்கள் (faults)மிகுதியும் ஏற்கனவே விழுந்துவிட்டன.  எனவே இனி வரும் காலங்களில் நிலத்திட்டுகள் பிரள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
எனவே நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து கடல்கோள்களும் (சுனாமிகளும்) உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

அடிக்கடி கடல்கோள் (சுனாமி) உண்டாகாது.
அச்சமில்லாமல் இக்கலாம்,
ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அன்பன்,
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.
புரட்டாசி 29 (16.10.2019) புதன் கிழமை

(நன்றி -- படம் இணையத்தில் இருந்து எடுத்தது.  இந்தப் படத்தை இணையத்தில் பதிவு செய்தோருக்கு நன்றி)

செவ்வாய், 1 அக்டோபர், 2019

What is the timeline of the tsunami event according to you?

I checked your blog. Your theory about ganga (or tarim basin?) is some thing very unique.  What is the timeline of the tsunami event according to you?
balasundaram ramaswamy

மனிதர்கள் யாரும் மறக்கமுடியாத நாள் 26 டிசம்பர் 2004.  சுனாமி.  1,74,296 பேர் இறந்துவிட்டனர்.  1,08,221பேர் காணவில்லை. ஆக மொத்தம் 2,82,517 இல்லாமல் போய்விட்டனர்.  இதில் இந்தியாவில் மட்டும் 16,389 பேர்  இல்லாமல் போய்விட்டனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.  இந்தப் பேரழிவுச்  சுனாமி இனிமேலும் வருமோ? என்ற அச்சம் எல்லோர் மனத்திலும் உள்ளது.

இனி சுனாமி எப்போது வரும்? எங்கே வரும்? என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
என்னிடம் கேட்டால்,


நான் புவியியல் அறிஞனல்ல.  ஆனால் புராணம் கூறும் கடல்கோள்கள் பற்றிப் படித்துள்ளேன் என்றேன்.  நீங்கள் படித்தறிந்ததன் அடிப்படையிலேயே கூறுங்கள், இனி சுனாமி வரும் வாய்ப்புகள் உள்ளனவா? எப்போது வரும்? என்று மீண்டும் கேட்டார்.

நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து வரும் கடல்கோளும் (சுனாமியும்) பிரளயத்தால் உண்டாகின்றன என்கின்றது புராணம்.   
பிரளயம் என்றால் நிலத்திட்டுகள் பிரள்வது, அல்லது புரண்டு விழுவது.  கங்கை என்ற வீண்ணீர்க்கோள் பூமியில் இறங்கி, அதிலிருந்த மண்ணும் நீரும் மற்றும் பல வேதிப்பொருட்களும் பூமியெங்கும் பரவியுள்ளன.  இவ்வாறு பரவி இந்தோனேசியா நிலத்திட்டு உருவாகியுள்ளது. கங்கைநீர் பாய்ந்தோடி இந்த நிலத்திட்டு உருவாகியுள்ளதால் இது  அடுக்கடுக்கான (bedding)நிலமைப்பைக் கொண்டுள்ளது.  அடுக்குகளுக்கு இடையே செதில்கள் (fault) உள்ளன.  இந்தச் செதில்கள் பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கமும் கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன. 


ஆன்மிக அடிப்படையில் விளக்குவது என்றால், கடலில் பாம்பின்மீது பள்ளிகொண்டுள்ள பெருமாளை நினைவிற் கொள்ள வேண்டும்.  பெருமாள் படுத்திற்கும் பாம்பு போன்று இந்தோனேசியா நிலத்திட்டு உள்ளது. இந்தோனேசியா நிலத்திட்டு சுருண்டு படுத்துள்ள பாம்பின் உடலைப் போன்று ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்கான நிலத்திட்டுக்களைக் கொண்டுள்ளது.  பாம்பின் தோலில் உள்ள செதில்கள் போன்று, இந்தோனேசியாபெருந்திட்டில் (indonesia plate)சிறுசிறு ஒழுங்கற்ற நிலத்திட்டுகள் (faults) உள்ளன.  இவ்வாறு உள்ள சிறுசிறு செதில்கள் எப்போதாவது பெயர்ந்து விழுகின்றன.  இவ்வாறு கடலுக்கு உள்ளே சிறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழும்போது நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன. 





நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து வரும் கடல்கோளும் (சுனாமியும்) பிரளத்தால் உண்டாகின்றன என்கின்றது புராணம்.   பிரளயம் என்பது நிலத்திட்டுகள் பிரள்வது, அல்லது புரண்டு விழுவது. கங்கை என்ற வீண்ணீர்க்கோள் பூமியில் இறங்கி, அதிலிருந்த மண்ணும் நீரும் மற்றும் பல வேதிப்பொருட்களும் பூமியெங்கும் பரவியுள்ளன.

இவ்வாறு பரவியதால்தான் இந்தோனேசியா நிலத்திட்டு முழுவதும் உருவாகியுள்ளது. கங்கை என்ற வீண்ணீர்க் கோளினால் உருவான இந்த நிலத்திட்டு bedding முறையிலான அமைப்பைக் கொண்டது.  இதில் fault உள்ள இடங்கள் பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கமும் கடல்கோளும் (சுனாமியும்) உண்டாகின்றன. 


நிலநடுக்கமும், கடல்கோள் (சுனாமியும்) எப்போது உண்டாகும்?  
இதை உறுதியாகக் கூற இயலாது.
செதில் (fault)எப்போது பெயர்ந்து விழும்? என்பதை உறுதியாகச் சொல்லவே முடியாது.  சொல்லியே ஆக வேண்டும், இதைக் கணித்தே ஆக வேண்டும் என்றால்,  இதுவரை பிரளயம் (நிலநடுக்கம், சுனாமி) நடைபெற்ற நாட்களைத் தொகுக்க வேண்டும்.  நிலநடுக்கமும் சுனாமியும் உண்கியுள்ள நாட்களில், ஒன்பது கோள்களின் ( sun, moon, .....raghu, kethu - 9 planets) நிலைகளுக்கும் தொடர்புகள்  (correlation)ஏதேனும் உள்ளதா?  எனக் கணக்கிட்டுக் கண்டறிய வேண்டும்.

இவ்வாறான கணிதமுறையினால் ஆன கணிப்பினால் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரளயம் கடல்கோள் நிகழ வாய்ப்பு உள்ளதா? என அறிவியல் அடிப்படையில் கூறிடமுடியும்.

மற்றபடி,  கங்கை பூமியில் இறங்கி,  அதனால் இந்தோனேசியா நிலத்திடு உருவாகி வெகுகாலம் ஆகி விட்டது.  நிலம் நன்றாக இறுகி விட்டது.  இந்த நிலத்திட்டில் விழும் நிலையில் இருந்த செதில்கள் (faults)மிகுதியும் ஏற்கனவே விழுந்துவிட்டன.

எனவே இனி வரும் காலங்களில் நிலத்திட்டுகள் பிரள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.  எனவே நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து கடல்கோள்களும் (சுனாமிகளும்) உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு.  அடிக்கடி கடல்கோள் (சுனாமி) உண்டாகாது.
அச்சமில்லாமல் இக்கலாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அன்பன்,
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.
புரட்டாசி 14 ( 01.10.2019) செவ்வாய்கிழமை

https://www.facebook.com/topentertainment2/videos/529182420959030/

திங்கள், 30 செப்டம்பர், 2019

தமிழ் அறிந்த வையையும் வைகையும்




தமிழ் அறிந்த
வையையும் வைகையும்
(மறைந்த அன்புநிறைந்த எனது நண்பர் ஐயா சிங்கநெஞ்சம் அவர்களுக்கு 
இந்தக் கட்டுரை சமர்பணம்)


தமிழ்நாட்டில் 98 ஆறுகள் ஓடுகின்றனவாம்.  இத்தனை ஆறுகளுக்குள் ஒரு ஆற்றிற்கு மட்டுமே தமிழ் தெரியுமாம்.  ஆமாம் தமிழ்மொழி அறியுமாம் வைகை ஆறு. இதனைத் “தமிழ் அறி வைகைப் பேர்யாறு” (பாடல் எண் 3338) என்கிறது திருவிளையாடற் புராணம்.   வையை வைகை வேகவதி கிருதமாலை என்ற நான்கு பெயர்களால் திருவிளையாடல் புராணம் வைகை ஆற்றைக் குறிப்பிடுகிறது.
            ஆனால், தமிழ் இலக்கியத்தைச் சங்ககாலப் பாடல்கள் என்றும், பக்தி இலக்கியப் பாடல்கள் என்றும் பிரித்துப் பார்த்தால்,  சங்கப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில் வையை என்ற பெயர் மட்டுமே 92 பாடல்வரிகளில் இடம் பெற்றுள்ளது.  வைகை வேகவதி கிருதமாலை என்ற பெயர்கள் காணப்பெறவில்லை.
இதற்கு நேர்மாறாகத் தேவாரப் பாடல்களில் வைகை என்ற பெயர் மட்டுமே 19 பாடல்வரிகளில் இடம் பெற்றுள்ளது. வையை வேகவதி கிருதமாலை என்ற பெயர்கள் இடம் பெறவில்லை.
திருவிளையாடற் புராணத்தில் மட்டுமே வையை, வைகை, வேகவதி, கிருதமாலை என்ற நான்கு பெயர்களும் இடம் பெற்றுள்ளன.  திருவிளையாடற் புராணத்தில்,  வையை என்ற பெயர் 3 பாடல்களில் இடம் பெற்றுள்ளன.  வைகை என்ற பெயர் 42 பாடல்களில் இடம் பெற்றுள்ளன.  வேகவதி என்ற பெயர் 2 பாடல்களில் இடம் பெற்றுள்ளன.  கிருதமாலை என்ற பெயர் 1 பாடலிலும் இடம் பெற்றுள்ளது.  பாடல் எண் 875இல் மட்டும் வைகை வேகவதி கிருதமாலை என்ற மூன்று பெயர்களும் இடம் பெற்றுள்ளன.  

நூல்
வையை
வைகை
பரிபாடலில் 
65

கலித்தொகை
8

அகநானூறு
3

புறநானூறு
1

மதுரைக்காஞ்சியில்
2

முத்தொள்ளாயிரம்
2

சிலப்பதிகாரம்
11

தேவாரம்

9
பெரியபுராணம்

7
திருப்புகழ்

3
திருவிளையாடற் புராணம்
3
42
மொத்தம்  = 156
95
61


சங்கப் பாடல்களும் சிலம்பதிகாரமும் வையைப் பாடியுள்ளன. பக்திஇலக்கியங்கள் வைகையைப் பாடியுள்ளன.  திருவிளையாடற் புராணம் வையை வைகை வேகவதி கிருதமாலை என்ற நான்கு பெயர்களையும் பாடுகிறது.
இதனால் சங்ககாலத்தில் ஓடிய வையை ஆறானது, வழிமாறி தடம்மாறி உருமாறி, வையை என்ற பெயரும் மாறி, வைகை என்ற பெயருடைய ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற கருத வேண்டியுள்ளது.



அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 14 (01.10.2019) செவ்வாய்கிழமை.
(குறிப்பு – எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம் கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)


வையையும் வைகையும் பாடற் தொகுப்பு

பரிபாடலில் வையை
1.      
வகை சாலும் வையை வரவு - பரி 6/13
2.      
வரை சிறை உடைத்ததை வையை வையை/  திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் - பரி 6/22,23
3.      
தமிழ் வையை தண்ணம் புனல் - பரி 6/60
4.      
பெருக்கு அன்றோ வையை வரவு - பரி 6/70
5.      
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை

பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை - பரி 6/73,74
6.      
இன் இளவேனில் இது அன்றோ வையை நின் - பரி 6/77
7.      
வையை வயம் ஆக வை - பரி 6/78
8.      
வையை உடைந்த மடை அடைத்த_கண்ணும் - பரி 6/82
9.      
யாறு உண்டோ வையை யாறு - பரி 6/93
10.   
வையை யாறு என்ற மாறு என்னை கையால் - பரி 6/94
11.   
வாடற்க வையை நினக்கு - பரி 6/106
12.   
வந்தன்று வையை புனல் - பரி 7/10
13.   
தானையான் வையை வனப்பு - பரி 7/50
14.   
வையை பெருக்கு வடிவு - பரி 7/60
15.   
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை
16.    
நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க - பரி 7/84,85
17.   
இனி மணல் வையை இரும் பொழிலும் குன்ற - பரி 8/51
18.   
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் - பரி 8/61
19.   
வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் - பரி 8/71
20.   
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை/வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் - பரி 8/104,105
21.   
போந்தது வையை புனல் - பரி 10/8
22.   
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் - பரி 10/40
23.   
நெரிதரூஉம் வையை புனல் - பரி 11/15
24.   
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை/வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற - பரி 11/39,40
25.   
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் - பரி 11/43
26.   
பாய் தேரான் வையை அகம் - பரி 11/61
27.   
நீர் ஒவ்வா வையை நினக்கு - பரி 11/73
28.   
வையை நினக்கு மடை வாய்த்தன்று - பரி 11/87
29.   
நீ உரைத்தி வையை நதி - பரி 11/92
30.   
தண்டு தழுவா தாவு நீர் வையையுள்/கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க - பரி 11/106,107
31.   
நறு நீர் வையை நய_தகு நிறையே - பரி 11/140
32.   
வளி வரல் வையை வரவு - பரி 12/8
33.   
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு - பரி 12/10
34.   
உரைதர வந்தன்று வையை நீர் வையை/கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் - பரி 12/32,33
35.   
வல்லதால் வையை புனல் - பரி 12/75
36.   
நன் பல நன் பல நன் பல வையை/நின் புகழ் கொள்ளாது மலர் தலை உலகே - பரி 12/101,102
37.   
பூத்தன்று வையை வரவு - பரி 16/19
38.   
வறாஅற்க வையை  நினக்கு - பரி 16/25
39.   
வாய்த்தன்றால் வையை வரவு - பரி 16/31
40.   
தேன் இமிர் வையைக்கு இயல்பு - பரி 16/38
41.   
கொடி தேரான் வையைக்கு இயல்பு - பரி 16/47
42.   
தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும்/கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும் - பரி 17/44,45
43.   
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை/தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று - பரி 20/11,12
44.   
கூடல் விழையும் தகைத்து தகை வையை/புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் - பரி 20/26,27
45.   
வையை மடுத்தால் கடல் என தெய்ய - பரி 20/42
46.   
வையை தொழுவத்து தந்து வடித்து இடித்து - பரி 20/60
47.   
ஊடினார் வையை அகத்து - பரி 20/67
48.   
தென்னவன் வையை சிறப்பு - பரி 20/97
49.   
பூ மலி வையைக்கு இயல்பு - பரி 20/111
50.   
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன் - பரி 22/32
51.   
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் - பரி 22/35
52.   
தீம் புனல் வையை திருமருத முன்துறையால் - பரி 22/45
53.   
காமரு வையை சுடுகின்றே கூடல் - பரி 24/4
54.   
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி 24/5
55.   
முற்று இன்று வையை துறை - பரி 24/27
56.   
அகல் அல்கும் வையை துறை - பரி 24/33
57.   
தணிவு இன்று வையை புனல் - பரி 24/50
58.   
மழுபொடு நின்ற மலி புனல் வையை/விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி - பரி 24/80,81
59.   
தான் தோன்றாது வையை ஆறு - பரி 24/87
60.   
வழி நீர் விழு நீர அன்று வையை/வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் - பரி 24/90,91
61.   
உரு கெழு கூடலவரொடு வையை/வரு புனல் ஆடிய தன்மை பொருவும்_கால் - பரி 24/92,93
62.   
தண் வரல் வையை எமக்கு - பரி 25/4
63.   
பரி_மா நிரையின் பரந்தன்று வையை - பரி 26/2
64.   
வையை உண்டாகும் அளவு - பரி 32/4
65.   
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் - பரி 35/1

கலித்தொகையில் வையை
66.   
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் - கலி 27/20
67.   
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் - கலி 28/7
68.   
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் - கலி 30/16
69.   
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் - கலி 35/9
70.   
தார் முற்றியது போல தகை பூத்த வையை தன் - கலி 67/3
71.   
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை/கரை அணி காவின் அகத்து - கலி 92/12,13
72.   
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை/வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை - கலி 98/10,11
73.   
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை - கலி 98/31

அகநானூற்றில் வையை
74.   
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை - அகம் 36/9
75.   
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை/ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து - அகம் 256/10,11
76.   
பெரு நீர் வையை அவளொடு ஆடி - அகம் 296/5

புறநானூற்றில் வையை
77.   
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் - புறம் 71/10

மதுரைக்காஞ்சியில் வையை
78.   
அவிர் அறல் வையை துறை_துறை-தோறும் - மது 340
79.   
வையை அன்ன வழக்கு உடை வாயில் - மது 356

முத்தொள்ளாயிரத்தில் வையை
80.   
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் - முத்தொள் 84/3
81.   
வரி வளை நின்றன வையையார் கோமான் - முத்தொள் 80/3

சிலப்பதிகாரத்தில் வையை
82.   
வையை என்ற பொய்யா குல_கொடி - மது 13/170
83.   
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை - மது 14/72
84.   
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த - மது 18/4
85.   
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் - மது 20/103
86.   
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு - மது 23/185
87.   
வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் - மது 23/212
88.   
வையை ஒருவழிக்கொண்டு - வஞ்சி 29/62
89.   
வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார்/ கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை - வஞ்சி 29/118,119
90.   
வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை - வஞ்சி 29/120
91.   
வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை/சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே - வஞ்சி 29/124,125
92.   
வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் - வஞ்சி 30/108

தேவாரத்தில் வைகை

திருஞானசம்பந்தர் - திருமுறை 1,2,3
93.   
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து - தேவா-சம்:692/3
94.   
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே - தேவா-சம்:693/4
95.   
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே - தேவா-சம்:697/4
96.   
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து - தேவா-சம்:698/3
97.   
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய - தேவா-சம்:958/1
98.   
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து - தேவா-சம்:3145/2
99.   
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற - தேவா-சம்:3147/2
100.                
கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் - தேவா-சம்:3149/1


தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்) - திருமுறை 4,5,6 -
101.                
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை - தேவா-அப்:2272/2,3

பெரியபுராணத்தில் வைகை   
102.                
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் - 6.வம்பறா:1 799/3
103.                
ஏடுகள் வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் - 6.வம்பறா:1 807/1
104.                
வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் - 6.வம்பறா:1 810/3
105.                
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் - 6.வம்பறா:1 811/4
106.                
பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு - 6.வம்பறா:1 812/4
107.                
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும் - 6.வம்பறா:1 846/3
108.                
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் - 6.வம்பறா:1 1230/4

திருப்புகழில் வைகை
109.                
வேற்று உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம் - திருப்:756/11
110.                
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் - திருப்:960/11
111.                
ஆசித்தார் மனதில் புகும் உத்தம கூடற்கே வைகையில் கரை கட்டிட - திருப்:1317/13

--------------------------------------------------------------

திருவிளையாடற் புராணத்தில்  
வையை வைகை வேகவதி கிருதமாலை.

' வையை ' என்ற சொல் உள்ள பாடல்கள்
968.       
வையைக் கிழவன் தன் அருமை குமரன் தனக்கு மணம் புணர்ச்சி
செய்யக் கருதும் திறம் நோக்கி அறிஞரோடும் திரண்ட அமைச்சர்
மை அற்று அழியா நிலத் திருவும் மரபும் குடியும் புகழ்மையும் நம்
ஐயற்கு இசையத் தக்க குலத்து அரசர் யார் என்று அளக்கின்றார்.        
2457.    
சுருப்புக் கமழ் தேம் கண்ணித் தொடுபைங் கழல் ஆடவரும்
கருப்புச் சிலை மன்னவனால் கருவிப் படை அன்னவரும்
விருப்புற்று எறிநீர் வையை வெள்ளைத் தரளம் தெள்ளிப்
பொருப்பில் குவிக்கும் புளினம் புறம் சூழ் சோலை புகுவார்.      
2660.    
சூழும் வார் திரை வையை அம் துறை கெழு நாட்டுள்
கீழையார் கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர்
ஆழ நீள் கரும் கழி அகழ் வளைந்து கார் அளைந்த
தாழை மூது எயில் உடுத்தது ஓர் தண் துறைப் பாக்கம்.   

---------------------------------------------------

'வைகை' என்ற சொல் உள்ள பாடல்கள்
108.       
குமிழ் அலர்ந்த செந்தாமரைக் கொடி முகிழ் கோங்கின்
உமிழ் தரும் பா ஞானம் உண்டு உமிழ்ந்த வாய் வேதத்
தமிழ் அறிந்து வைதிகம் உடன் சைவமும் நிறுத்தும்
அமிழ்த வெண் திரை வைகையும் ஒரு புறத்து அகழ் ஆம்.             
113.       
மகர வேலை என்று யானை போல் மழை அருந்து அகழிச்
சிகர மாலை சூழ் அம் மதி திரைக் கரம் துழாவி
அகழ ஓங்கு நீர் வைகையால் அல்லது வேற்றுப்
பகைவர் சேனையால் பொரப் படும் பாலதோ அன்றே.  
171.       
பெண் முத்தம் அனைய பேதைச் சிறுமியர் பெருநீர் வைகை
வெண் முத்தம் இழைத்த சிற்றில் சிதை பட வெகுண்டு நோக்கிச்
கண் முத்தம் சிதறச் சிந்தும் கதிர் முத்த மாலைத் தட்பத்
எண் முத்தின் நகைத்துச் செல்வச் சிறார்கள் தேர் உருட்டுவார்கள்.    
239.       
சுர நதி சூழ் காசிமுதல் பதிமறுமைக்கு கதி அளிக்கும் தூநீர் வைகை
வரநதி சூழ் திருவால வாய் சீவன் முத்தி தரும் வதிவோர்க்கு ஈது
திரன் அதிகம் பரகதியும் பின்கொடுக்கும் ஆதலின் இச் சீவன் முத்தி
புரன் அதிகம் என்பது எவன் அதற்கு அதுவே ஒப்பாம் எப் புவனத்து உள்ளும்.
330.       
புலி முனியும் பணி முனியும் தொழ வெள்ளி மன்றுள் நடம் புரிந்த வாறும்
வலி கெழு தோள் குண்டு அகட்டுக் குறட்கு அன்னக் குன்று அளித்த வகையும் பின்னும்
நலி பசி நோய் கெட அன்னக் குழி அசைத்துக் கொடுத்து நீர் நசைக்கு வைகை
அலைபுனல் கூய் அருத்தியதும் பொன்மாலைக் எழு கடலும் அழைத்த வாறும்.
470.       
குடவயின் அயிரா வதப் பெரும் தீர்த்தம் குடைந்து அயிராவத கணேசக்
கடவுளைத் தொழுது ஐராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத்
தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர் சுராதிபன் களிறு செல் ஏறிபோய்
இடர் கெட வைகை படிந்து தென் கரையில் இந்திரேச் சுரன் அடி பணிவோர்.
875.       
தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால்  சிவகங்கை
தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான
தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர் ஆல்.
953.       
காற்றினும் கடிய மாவில் காவதம் பல போய் மீண்டும்
கூற்றினும் கொடிய சீற்றக் குஞ்சரம் உகைத்தும் வைகை
ஆற்றின் உய்யானத்து ஆவி அகத்தின் உள் இன்பம் துய்த்தும்
வேல் திறன் மைந்தரோடு மல் அமர் விளைத்து வென்றும்.            
1010.    
அங்கு அது கேடோர் யாரும் அகம் களி துளும்ப இப்பால்
கொங்கு அலர் நறும் தார் குஞ்சி உக்கிர குமரன் போந்து
மங்கல வரிசை மாண மத்த மான் சுமந்த வைகைச்
சங்கு எறி துறை நீராடித் தகும் கடி வனப்புக் கொள்வான்.            
1148.    
அறத்துறை அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்
புறத்துறை அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்
நிறத்துறை அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள  முத்தின்
நிறத்துறை வைகை நீத்து நெடு மதில் வாயில் புக்கான்.
1290.    
நறிய நெய் ஆதி ஆர நறும் குழம்பு ஈறா ஆட்டி
வெறிய கர்ப்புர நீர் ஆட்டி அற்புத வெள்ளம் பொங்க
இறைவனை வியந்து நோக்கி ஏத்துவான் எறிநீர் வைகை
துறைவ நீ என் கர்ப்பூர சுந்தரனேயோ என்றான்.
1344.    
பருவம் மாரிய பருவத்தில் வைகை நீர் பரந்து
வருவது ஆக்கியும் மீளவும் வறந்திடச் செய்தும்
பொருவி தீம் சுவையோடு அடையும் பொய்கையும் உவர்ப்புத்
தருவ ஆக்கியும் உவரியின் சுவையவாத் தந்தும்.  
1596.    
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.       
1797.    
கல்லும் ஆர் அழல் அத்தமும் பல கலுழியும் குண கனை கடல்
செல்லும் மா நதி பலவும் வான் நிமிர் கன்னலும் செறி செந் நெலும்
புல்லு மாநிலனும் கழிந்து புறம் கிடக்க நடந்து போய்
வல்லு மா முலையார் கணம் பயில் வைகை அம் துறை எய்தினான்.  
1798.    
குறுகு முன்னர் அதிர்ந்து வைகை கொதித்து அகன் கரை குத்திவேர்
பறிய வன் சினை முறிய விண் தொடு பைந் தருக்களை உந்தியே
மறுகி வெள்ளம் எடுத்து அலைத்தர மன்னவன் கரை தன்னில் நின்று
இறுதியில் அவனைத் தொழற்கு இடையூறு இது என்று அஞர் எய்துவான்.     
1799.    
இழுதொடும் சுவை அமுது பென் கலன் இட்டு உணாது இரு கண் கணீர்
வழிய வந்து விலக்குவாரின் வளைந்தது ஆறு பகல் செய்யும்
பொழுது எழும் பொழுதோ மறுக்கம் விளைக்குமே இகல் பூழியன்
வழுதி அன்றியும் வைகையும் பகை ஆனது என்று வருந்தினான்.          
1806.    
மண்ணினை வளர்க்கும் வைகை வடகரை அளவு நண்ணிப்
புண்நிய நீற்றுக் காப்புப் புண்டர நுதலில் சாத்தி
உள் நிறை கருத்துக்கு ஏற்ப உறுதுணை உனக்கு உண்டாகி
நண்ணுக என்று பொன்னி நாடனை விடுத்து மீண்டு.        
1854.    
அறவன் நீ அல்லையோ உன் அகத்தினுக்கு இசைந்த செய்கென
இறைவனது அருளால் வானின் எழுமொழி கேட்டு  வைகைத்
துறைவனும் அறத்தின் ஆற்றால் சோழனைச் சிலமால் யானை
மற வயப் பரிபூண் மற்றும் வழங்கினான் விடுத்தான் பின்னர்.
1857.    
பரும் கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண் திரைக் கரங்களால் ஈர்ம் புனல் வைகை
மருங்கில் நந்தனம் மலர்ந்த பன் மலர் தூ உய்ப் பணியப்
புரம் கடந்தவன் இருப்பது பூவண நகரம்.      
1982.    
பூசத் துறையில் புகுந்து ஆடியப் பொன்னித் தென்சார்
வாசத்து இடை மா மருதைப் பணிதற்கு வைகைத்
தேசத்தவன் கீழ்த்திசை வாயில் கடந்து செல்லப்
பாசத் தளையும் பழியும் புற நின்ற அன்றே.
2194.    
முறை என இமையோர் வேண்ட முளைத்த நஞ்சாய் இன்று சான்றாய்
உறை என மிடற்றில் வைத்த உம்பரான் மதுரைக்கு ஆரம்
திறை என எறி நீர் வைகைத்து எற்கது குரு இருந்த
துறை என உளது ஓர் செல்வத் தொல் மணி மாடமூதூர்.  
2298.    
தேக்கு நீர் வைகை நாட்டு ஒரு தென் புலத்து
ஆக்கும் மாடவை வைப்பு ஒன்று உள அவ்வயின்
வீக்கு யாழ் செயும் வண்டுக்கு வீழ் நறவு
ஆக்கு தாமரை வாவி ஒன்று உள்ளது ஆல்.    
2387.    
பிணத்தினைக் கோலி புண் நீர் ஆற்றினை பெருக்கி உண் பேய்க்
கணத்தினை உதைத்து நூக்கிக் கரை உடைத்து ஒருவன் பூதம்
நிணத்தொடும் வரும் அந் நீத்தம் நேர் பட விருந்து கையால்
அணைத்து வாய் மடுக்கும் வைகை அருந்திய பூதம் என்ன.       
2445.    
தரை கிழித்து எழுநீர் வைகைத் தடம் கரை எக்கர் அல்குல்
அரமே கலை சூழ்ந்து என்ன அலர்ந்து தாது உகுப்ப ஞாழல்
மரகதம் தழைத்து வெண் முத்து அரும்பிப் பொன் மலர்ந்து வாங்கும்
திரை கடல் பவளக்காடு செய்வன கன்னிப் புன்னை.
2621.    
போன இடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்து உவகை பொலியும் ஆற்றான்
ஞான மயம் ஆகிய தன் இலிங்க உரு மறைத்து உமையா நங்கை யோடும்
வானவர் தம் பிரான் எழுந்து புறம் போய் தன் கோயிலின் நேர் வடபால் வைகை
ஆன நதித் தென்பால் ஓர் ஆலம் கண்டு அங்கண் இனிது அமர்ந்தான் மன்னோ.
2627.    
சிலர் வந்து மன்னா ஓர் அதிசயம் கண்டனம் வைகைத் தென் சாராக
அலர் வந்தோன் படைத்த நாள் முதல் ஒரு காலமும் கண்டது அன்று கேள்வித்
தலை வந்த புலவரொடு ஆலவய் உடைய பிரான் தானே செம்பொன்
மலைவந்த வல்லியொடும் வந்து இறை கொண்டு உறை கின்றான் மாதோ என்றார்.        
2628.    
அவ்வுரை தன் செவி நுழைந்து புகுந்து ஈர்ப்ப எழுந்து அரசன் அச்சத்து ஆழ்ந்து
தெவ்வர் முடித் தொகை இடறும் கழல் காலான் அடந்து ஏகிச் செழுநீர் வைகை
கௌவை நெடும் திரைக் கரத்தால் கடிமலர் தூய உய்ப்ப பணியத் தென் கரைமேல் வந்து
மௌவல் இள முகை மூரல் மாதி னொடும் இருக்கின்ற மணியைக் கண்டான்.
2634.    
தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் செம் பொன் கூடல்
மன்னவன் கேட்டா ஆகாய வாணியால் வைகை நாட
உன்னது சோத்த நாம் கேட்டு உவந்தனம் இனிய தாயிற்று
இன்னம் ஒன்று உளது கேட்டி என்றனன் அருளிச் செய்வான்.     
2714.    
தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர் போல
அடுத்த வயல் குளம் நிரப்பி அறம் பெருக்கி அவனி எலாம்
உடுத்த கடல் ஒருவர்க்கும் உதவாத உவரி என
மடுத்து அறியாப் புனல் வைகைக் கரை உளது வாதவூர்.
2926      
ஞான நாயகன் அணையா நரி பரி வெள்ளம்
ஆன வாரு உரை செய்து மீண்டு அப் பரி நரியாய்ப்
போன வாறு கண்டு அமைச்சரைப் புரவலன் கறுப்ப
வான ஆறு போல் வைகை நீர் வந்தவாறு உரைப்பாம்.     
2977.    
கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்.    
2978.    
தும்பைச் சடை முடியான் ஒரு சொல்லாடவும் முன்னாள்
வம்பைப் பெரு முலையால் வரி வளையால் வடு அழுத்தும்
கொம்பைத் தவம் குலைப்பான் கடும் கோபம் கொடு நடக்கும்
கம்பை பெரு நதியில் கடும் கதியால் வரும் வைகை.
2982.    
வரை உந்திய மது முல்லையின் எய்பாற அயிர் மருதத்
தரை உந்திய கரும்பின் குறை சாறு ஓடு உவர் ஆறோடு
இரையும் தெழு தூர் நிர் வைகை இந் நகர் வைகும்
திரையும் தெழு கடல் தம்மிடம் சென்றால் அவை போலும்.          
2992.    
பண் சுமந்த மறை நாடரும் பொருள் பதம் சுமந்த முடியார் மனம்
புண் சுமந்த துயர் தீர வந்த பரி நரிகளாய் அடவி போன பின்
விண் சுமந்த சுர நதி எனப் பெருகு வித்த வைகை இது விடையவன்
மண் சுமந்து திரு மேனிமேல் அடி வடுச் சுமந்த கதை ஓதுவாம்.              
3006.    
குறட்கு நீர் அருத்தி வைகைக் குடிஞையாய் ஒழுகும் கங்கை
அறம் குழல் பிரிவின் ஆற்றாது அன்பினால் அவளைக் காண்பான்
மறக் கயல் நெடும் கணாளை வஞ்சித்து வடிவம் மாறிப்
புறப்படு வாரைப் போலப் போதுவார் போத மூர்த்தி.         
3040.    
ஆண் தகை வனப்பை நோக்கி அடிக்கவும் இல்லேம் அஞ்சி
ஈண்டினேம் என்று கூற இம் என அமைச்ச ரோடும்
பாண்டியன் எழுந்து நாம் போய்ப் பங்கு அடை பட்ட எல்லாம்
காண்டும் என்று எறிநீர் வைகைக் குடிஞை அம் கரையைச் சார்ந்தான்.         
3160.    
கையர் மாளவும் நீற்றினால் கவுரியன் தேயம்
உய்வது ஆகவும் இன்று நும் அருளினால் ஒலி நீர்
வைகை நாடன் மேல் வெப்பு நோய் வந்ததால் அதனை
ஐய தீர்த்திடல் வேண்டும் என்று அடியில் வீழ்ந்து இரந்தார்.         
3171.    
ஐய இச்சுரம் ஆற்றரிது ஆற்றரிது என்னா
வைகை நாடவன் வல் அமண் மாசு தீர்ந்து அடியேன்
உய்ய வேண்டுமேல் அதனையும் அடிகளே ஒழித்தல்
செய்ய வேண்டும் என்று இரந்தனன் சிரபுரக் கோனை.   
3217.    
உங்களேடும் எங்கள் ஏடும் உம்பர் வானளாய் விரைஇப்
பொங்கி ஓடும் வைகை நீரில் இடுக இட்ட போது தான்
அங்கு நீர் எதிர்க்கும் ஓலை வெல்லும் ஓலை அன்றியே
துங்க வேலை செல்லும் ஓலை தோற்கும் ஓலை யாவதே.
3223.    
ஊகம் தவமும் பழு மரத்தை உதைத்துக் கரை மாறிட ஒதுக்கிப்
பூகம் தடவி வேர் கீண்டு பொருப்பைப் பறித்துப் புடை பரப்பி
மாகம் துழாவிக் கடுகிவரும் வைகைப் புனலை மந்திரத்தால்
வேகம் தணிவித்து ஏடு எழுதி விடுத்தார் முன் போல் வெள்காதார்.     
3338.    
இந் நதி வெண் முத்து ஆரம் எனக் கிடந்து இலங்கும் சென்னி
மன்னவன் நாடு ஈது என்ப தமிழ் அறி வைகைப் பேர்யாறு
அந்நதி துறக்க மண்மேல் வழுக்கி வீழ்ந்தாங்குத் தோற்றித்
தென்னவன் நாடு சேய்த்தாத் தெரிவதே காண்மின் என்றான். 
3345.    
கொண்டல் படியும் திருவாப்பனூரும் தொழுது குளிர்திரைக்கை
வண்டு படியும் கமலமுக வைகைப் பிராட்டி எதிர் வண்ங்கிக்
கண்டு பணிந்து திசை எட்டும் விழுங்கி அண்டம் கடந்து உலகம்
உண்ட நெடியோன் என உயர் கோபுரம் முன் இறைஞ்சி உள்புகுதா.   
--------------------------------------------------------

'வேகவதி' என்ற சொல் உள்ள பாடல்கள்
875.       
தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால்  சிவகங்கை
தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான
தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர்  ஆல்.          

3228.    
பொருப்பே சிலையாய் புரம் கடந்த புனிதனே எத்தேவர்க்கும்
விருப்பேய் போகம் வீடுதரும் மேலாம் கடவுள் என நான்கு
மருப்பேய் களிற்றான் முடி தகர்த்தான் மருமான் அறியக் குருமொழி போல்
நெருப்பே அன்றி வேகவதி நீரும் பின்னர்த் தேற்றியதால்.

'கிருதமாலை ' என்ற சொல் உள்ள பாடல்கள்
875.       
தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால்  சிவகங்கை
தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான
தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர்  ஆல்.

நன்றி – தொடரடைவு   http://tamilconcordance.in

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 14 (01.10.2019) செவ்வாய் கிழமை.