புதன், 11 ஏப்ரல், 2018

Theory of Tsunamis சலதி வெள்ளம் ( கடல்வெள்ளம் ) பாடல்களின் தொகுப்பு


சலதி வெள்ளம் (tsunami)
திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்றுள்ள 
‘சலதி (கடல்) வெள்ளம்’ 
பற்றிய பாடல்களின் தொகுப்பு



2004ஆம் ஆண்டு கடல் கரையைக் கடந்து கடற்கரை ஓரம் உள்ள கிராமங்களில் வசித்த இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கரையைக் கடந்து நிலத்திற்குள் புகுவதைச் “சுனாமி (Tsunami)” என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகிறோம்.  கடல்நீர்  நிலத்திற்குள் புகுவதைக்  “கடல்கோள்” என்றும் “ஆழிப்பேரலை“ என்றும் குறிப்பிடுகின்றனர்.  “சலதிவெள்ளம்” என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  சலதி என்றால் கடல் என்று பொருள். பரஞ்சோதி முனிவர் ‘சங்கரசங்கிதை‘ என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்துத் தமிழிலில் பாடியுள்ள திருவிளையாடற் புராணத்தில், சலதி என்ற சொல் 13 பாடல்களின் இடம் பெற்றுள்ளது. 


                            
பிரளயம் என்றால் என்ன?
நிலத்திட்டுகள் பெயர்த்து விழுதல்.
மலைகளின் முகடுகள் புடைபெயர்ந்து சரிந்து விழுவதை “மலைச்சரிவு” என்கின்றனர்.  இது போன்று கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுக்கள் புரண்டு (fault) பெயர்ந்து சரிந்து  விழுவதைப் “பிரளயம்” என்கிறது புராணம்.

சுனாமி என்றால் என்ன?
கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து பிரண்டு விழுகின்றன.  இவ்வாறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழுகின்ற காரணத்தினால் கடல்நீர் அடித்துத் தள்ளப்படுகிறது.  இவ்வாறு தள்ளப்பட்ட கடல்நீரானது பெரும் கடல்அலையாக மாறி நிலத்தைத் தாக்குகின்றன. இதைச் சுனாமி என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகின்றனர்.  புராணங்களில் இது “கடல்வெள்ளம்” அல்லது “சலதிவெள்ளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல்கோள் என்றால் என்ன?
கடல்வெள்ளத்தினால் (சுனாமியினால்) கடல்மட்டத்திற்கு மேலே உள்ள நிலப்பரப்பானது மூடப்படுவதை அழிக்கப்படுவதைக் கடல்கோள் என்று புராணம் குறிப்பிடுகிறது.  (தண்ணீரை ஊற்றி வீட்டைக் கழுவி விடுவது போன்று, கடல்நீரால் தரைப்பகுதி கழுவிவிடப்படுகிறது.)

ஊழி, ஊழிக்காலம் என்றால் என்ன?
“ஊழ்” என்றால் விதி அல்லது நியதி என்று பொருள்.   புவியியல் விதிகள் மாறும்படிப் பெரும் அழிவுகள் உண்டாவதை “ஊழி” என்றும்,  புவியியல் மாற்றம் அடையும்படிப் பெரும் அழிவுகள் நிகழும் காலத்தை “ஊழிக்காலம்” என்றும் புராணம் குறிப்பிடுகிறது.


91.
உலகம் யாவையும் ஈன்றவளும் அருள் உயர்ந்த
திலக நாயகி, பரஞ்சுடர், சேய் என மூன்று
தலைவரால் முறை செய்த நாடு இஃது. அன்றிச் சலதி
சுலவு பாரின் உண்டகுமோ துறக்கத்தும் அஃதே.

331.
அந்தரர் கோன் ஆதனத்தில் உறை மலயத் துவசனை மீண்டும் அழைத்த வாறும்,
சுந்தர உக்கிர குமரன் அவதரித்த வாறும், வளை சுடர் வேல் செண்டு
தந்தை இடத்து அவன் பெற்ற வாறும், அவன் அவ்வடிமேல் சலதி வீறு
சிந்த விடுத்தது மகவான் முடியை வளை யெறிந்து இறைவன் சிதைத்த வாறும்.

341.
ஊமனால் புலவர் இகல் அகற்றியதும் இடைக் காடனுடன் போய்க் கொன்றைத்
தாமனார் வட வால வாய் அமர்ந்த பரிசும் வலை சலதி வீசிப்
பூமனாய் குழலியை வேட்டு அருளியதும் வாதவூர்ப் புனிதர்க்கு ஏறத்
தேம நாண் மலரடிகண் முடி சூட்டி உபதேசம் செய்த வாறும்.

423.
தம் குடிமைத் தச்சனை ஓர் விமானம் அமைத்திட விடுத்தத் அத் தடத்தின் பால் போய்
அம் கணனைக் கடிது அருச்சித்திட நறிய மலர் கிடையாது அயர்வான் அந்தச்
சங்கு எறி தண் திரைத் தடத்தில் அரன் அருளால் பல பரிதி சலதி ஒன்றில்
பொங்கு கதிர் பரப்பி முளைத்தால் என்னப் பொன் கமலம் பூப்பக் கண்டான்.

677.
வரை வளங்களும் புறவினில் வளங்களும் மருதத் தண் பணை வேலித்
தரை வளங்களும் சலதி வாய் நடைக்கலம் தரு வளங்களும் ஈண்டி
உரை வரம்பு அற மங்கலம் பொலிந்தது இவ்வூரினில் நால் வேதக்
கரை கடந்தவன் திருமணம் செயவரு காட்சியைப் பகர்  கின்றேன்.

1831.
அலை சிறந்த சலதி மீது ஒரு ஆறு செல்லு மாறு போல்
மலைசிறந்த நேரி வெற்பன் மள்ளர் சேனை வெள்ள மேல்
கலை சிறந்த மதி நிறைந்த கன்னி நாடு காவலன்
சிலை சிறந்த சிறிய சேனை சென்று அலைத்து நின்றதே.

2067.
தருக்களும் சலியா முந்நீர்ச் சலதியும் கலியா நீண்ட
பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா
அருள் கடல் விலைத்த கீத இன்னிசை அமுதம் மாந்தி
மருள் கெட அறிவன் திட்டி வைத்த சித்திரமே ஒத்த.

2189.
செம் கண் ஏறு அழகர் ஆடல் ஈது என்றே யாவரும் தெளிந்தனர் ஏத்தி
அம் கண் நாயகர் தம் கருணையின் திறனும் அடியவர் அன்பையும் தூக்கித்
தம் கணார் அருவி பெருக ஆனந்தத் தனிப் பெரும் சலதியில் ஆழ்ந்தார்
வங்கம் மேல் வந்தாள் பிடர் மிசை இருந்த மாண் இழை விறலியை மன்னன்.

2331.
அப்பெரும் சலதி வெள்ளத்து அழிந்தன அழி விலாத
எப்பெரும் பொழிலும், ஏழு திபமும், இவற்றுள் தங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும், நீண்ட சென்னி
பர்ப்பத வகையும் ஈறு பட்டன ஆக அம் கண்.

2655.
அன்னது தெரிந்து நால்வாய் ஐங்கரக் கடவுள் தாதை
முன்னர் வந்து இதனால் அன்றோ மூண்டது இச் செய்தி எல்லாம்
என்ன ஈர்ங் கவளம் போல் ஆங்கு இருந்த புத்தகங்கள் எல்லாம்
தன் நெடும் கரத்தால் வாரி எறிந்தனன் சலதி மீது ஆல்.

2670.
மகவு இலாமையல் ஆற்ற நால் மறுமை யோடு இம்மைப்
புகல் இலான் என வருந்துவான் ஒரு பகல் போது
தகவு சால் பெரும் கிளை யொடும் சலதி மீன் படுப்பான்
அகல வார் கலிக்கு ஏகுவான் அதன் கரை ஒருசார்.

2690.
சங்கு அலம்பு தண் துறை கெழு நாடன் இச் சலதித்
துங்க மந்தரம் எனக் கிடந்து அலமரும் சுறவை
இங்கு அணைந்து எவன் பிடிப்பவன் அவன் யான் ஈன்ற
மங்கை மங்கலக் கிழான் என மனம் வலித்து இருந்தான்.

2695.
தன் பெரும் கணத்து உளான் ஓர் தலைவனும் சலதி வாணன்
என்பது தோன்ற வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு
என் புற மலைப்பக் காவி மீன் இடு குடம்பை தாங்கிப்
பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான்.

நன்றி – பாடல்கள் தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தில் உள்ளபடி.
தொகுப்பு - காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன், 
kalairajan26@gmail.com. 
ஆடி31, 16.08.2017


வியாழன், 5 ஏப்ரல், 2018

Theory of Tsunamis கடல்கோள் உண்மையா?

Theory of Tsunamis  கீழடி அழிந்தது எவ்வாறு ?   
கடல்வெள்ளத்தினாலா (சுனாமியினாலா ) ?

Tsunami deposits south of Valdivia
http://quakehunters.blogspot.in/2013/01/fieldwork-so-far-in-pictures.html

மேலே உள்ள படத்தில் தென்னமெரிக்காக்காவில் உள்ள வால்திவ்ய (Valdivia) வில் உள்ள மண்படிமங்கள் சுனாமியினால் உண்டானது என்று காணமுடிகிறது.

கீழே உள்ள படங்களில் மலைகளில் இதே போன்ற மண்படிமங்களைக் காண முடிகிறது.


ஆற்றுப் பெருக்கால், அடுக்கடுக்காய் மணவூரில் (கீழடியில்) மண் படிய வாய்ப்புகள் உண்டு.  ஆனால்,  கடல்நீர் வராமல் கலர்க்கலராய் மண் படிய வாய்ப்புகள் இல்லை.  எனவே இது வைகையாற்று வெள்ளத்தால் (நல்லதண்ணியால்) உண்டானது அல்ல. பிரளயத்தின் போது ஏற்பட்ட பெருஞ் சுனாமியினால் தோன்றிய கடல் வெள்ளம்  வைகை ஆற்றின் வழியாக உள்ளே புகுந்து பண்டைய மணவூரை (கீழடியை) அழித்துள்ளது என அறிய முடிகிறது.   

“திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே மதுரை உள்ளது” என்று நக்கீரர் பாடிய பண்டைய மதுரை இதுதான் என்பதை உறுதியாகிறது.

திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது.

மேலும், 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.
 http://kalairajan26.blogspot.in/2013/02/blog-post_18.html?view=timeslide

​வால்திவ்ய( Valdivia) வில் காணப்படும் மண் அமைப்பு சுனாமியினால் உண்டானது என்று கூறப்படுவதாலும், அதே போன்ற மண் அமைப்பு கீழடியிலும் காணப்படுகின்ற காரணத்தினாலும்,

மதுரைக்கு நேர் கிழக்கே அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் சுமார் 1,70,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள மாபெரும் நிலப்பகுதி பூமிக்குள் புதைந்துள்ளதைக் கூகுள்புவிப்படம் வழியாக அறியமுடிவதாலும்,
அங்கே தோன்றிய மிகமிகப்பெரிய கடல்வெள்ளம் (சுனாமி) மதுரை வரை வந்து அழிந்துள்ளது என்று கருதுகிறேன்.

மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
கி.காளைராசன்
----------------------------------------------------------------------

N. Kannan navannakana@gmail.com

07/10/2016
to மின்தமிழ்

2016-10-07 0:29 GMT+08:00 Singanenjam Sambandam <singanenjam@gmail.com>:



இருபுறமும் மலைகள் எனில் , கடல்நீர் உட்புகும் வேகம்  மிக மிக அதிகமாக இருக்கும். ஏன் எனில் கடல் நீர் பரவுவதை மலைகள் தடுத்து விடும்.

​இதைச் சொன்னவுடன் எனக்கொரு திருவாய்மொழி நினைவிற்கு வந்தது:

ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே

​உரை:​

மஹாநதிக ளெல்லாம் மலைகளின்று பெருகிக் கடலிலே வந்து சேருமே; அப்படி சேருவதற்காக ஆறுகள் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனவாம். கடைகிற போது மலைகளிற் காட்டில் கடல் உயருகையாலே ஆறுகள் எதிர்வெள்ளங் கோத்து மலைகளையே நோக்கியே திரும்பியோடுகிற வோசை விலக்ஷ்ணமாயிருந்ததென்று முதலடியாற் சொல்லுகிறது. இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி;-‘கடலிலே மந்தரத்தை நட்டவாறே கடல் கொந்தளித்து ஸஹயம் போய்த்தாழ்ந்து கொடுத்தது; நீரோனது தாழ்ந்த விடத்தே ஒடக்கடவதிறே. ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டோடுகிற போதை த்வநியாயனது இவர்க்குச் செவிப்படுகிறபடி. இவர்க்குக் காலத்ரயத்திலுமுள்ள தெல்லாம் தெரியும்படியிறே அவன் வெளிச்சிறப்பித்தது.”

நன்றி = மின்தமிழ்
---------------------------------------------------------------------------------

Theory of Tsunamis கடல்வெள்ளத்தில் (சுனாமியில்) கருக்கொண்ட கல்முட்டைகள்

கடல்வெள்ளம் கோட்பாடு (Theory of Tsunamis )


கடல்வெள்ளத்தில் (சுனாமியில்) 
கருக்கொண்ட கல்முட்டைகள் 


"Theory of the Earth" எழுதிய ஆசிரியர் மட்டும், பெரும் ஆறுகள் ஒடியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் இவர் குறிப்பிடும் ஆறுகள் சுனாமியினால் உருவானவை.

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள் - huge Tsunami)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு, கபாடபுரம், தென்மதுரை உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளது.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.  
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.  

எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  



பழனி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் குழந்தைவேலன் சந்நிதி அருகே செல்லும்போது இந்தப் பாறைகளைக் கண்டேன்.   மலைக்குன்றுகளும் மண்குன்றுகளும் உள்ள இடங்களில் இதுபோன்ற கல்முட்டைகளைக் காணலாம்.


குளங்களின் அடியில் களிமண் படிந்து கிடப்பது போன்று,  ஆழ்கடலில் அடியில் கடல்களிமண் படிந்து உள்ளது.   பிரளயத்தினால், கடல்வெள்ளம் (சுனாமி) தோன்றித் தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது, கடலின் அடியில் படிந்து கிடந்த  சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.  ஏதோவொரு பொருள் இந்தச் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது.  அப்போது சேரும் சகதியும்  அந்தப் பொருளின் மீது படிந்து, அது  ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது.  பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது.  இப்போது இந்தப் பாறைகளின் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாகப் பிரிந்து விழுகின்றன என்பது எனது கருத்து.










ஹேவிளம்பி ஆனி 23 (07.07.2017) வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வழியில் ரெட்டியார் சத்திரம் அருகே மேலே உள்ள கல்முட்டைப் பாறைகளைப் பார்த்தேன்.  




வேடசந்தூர் அய்யலூர் சாலையில் அய்யலூர் அருகே செல்லும்போது இந்த கல்முட்டைப் பாறைகளைக் கண்டேன்.




கடந்த 21 மே 2017 அன்று திண்டுக்கலில் இருந்து தாண்டிகுடி செல்லும் போது மேலே உள்ள இந்தப் பாறைகளை கண்டேன்.  

இவ்வகையான பாறைகள் சிதிலமடைவதற்கு அறிவியல் அடிப்படையில் பல்வேறுவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.  ஆனால் இந்தக் கல்முட்டைப் பாறைகள் பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டை அழித்த கடல்வெள்ளத்தில் (பெருஞ் சுனாமியில்) ஆழ்கடலின் அடியில் இருந்த களிமண் அல்லது சவடு மண்ணினால் (Tsunami deposited clay) உருவானவை என்பது எனது கருத்து.

மேற்கண்ட கல்முட்டைகள் செதில்செதிலாக முட்டைபோன்று உள்ளன.   கோசுட்டாரிகா (Palmar Sur, Osa, Puntarenas Province, Costa Rica) நாட்டில் காணப்படும் கற்பந்துகள் போன்று கோளவடிவில் இல்லை.  

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி காளைராசன்


Palmar Sur, Osa,
Puntarenas Province
Costa Rica

 The Costa Rica Petrospheres.
The Costa Rica Petrospheres.
Ancient-Wisdom
(Map with Locations of Carved Petrospheres in Costa Rica)

புதன், 4 ஏப்ரல், 2018

இமயமலையின் தோற்றம், கங்கா புராணக் கோட்பாடு

இமயமலையின் தோற்றம்  
(கங்கா புராணக் கோட்பாடு) 

மஹாதேவன் பார்வதியுடன் பகீரதனுக்குப் பிரஸன்னமாய், “ராஜச்ரேஷ்ட, உன் தபஸால் திருப்தியடைந்தேன். உன்னிஷ்டப்படி பர்வதராஜ புத்திரியான கங்கையைத் தலையில் தரிக்கிறேன்“ என்றார்.  அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.  விழுந்தவுடன்ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள். பின்னர் மஹாதேவன், பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார். "... ... ... என்கிறது கங்கா புராணம்.
இதனால், 
கங்கை என்ற விண்ணீர்வியனுலகு பூமியில் இறங்குவதற்கு முன்பே இமயமலை இருந்துள்ளது என்றும், 
கங்கை என்ற விண்ணீர் முழுவதையும் தேக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கான மிகப் பெரிய மலைத்தொடர்களும் பள்ளத்தாக்குகளும்  இருந்துள்ளன என்றும் கருத வேண்டியுள்ளது.
Collision of ‘Gangan’ (a celestial planet of 2000 k.m. radius) on Earth formed the Himalayan mountain Ranges.  (Himalaya is not formed due to collision of Indian plate with China Plate)

மிகப் பெரிய, சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் ஒன்று இப்போது இமயமலை இருக்கும் இடத்தில் விழுந்துள்ளது.  நாம் இதைக் "கங்கன்" என்ற பெயரால் அழைப்போம்.
கங்கன் விழுந்ததனால் இதைச் சுற்றிலும்  உயரமான வட்ட வடிவமான மலைத் தொடர்கள் உருவாகி யுள்ளன.  இப் பெரிய உயர நீண்ட மலைத் தொடரின் தென்பகுதியே தற்போதிருக்கும் இமயமலைத் தொடர் ஆகும்.
கங்கன் பூமியில் விழுந்து பலகாலம் கழித்து, இதே இடத்தில் கங்கை என்ற நீர்க்கோள் இறங்கியுள்ளது. 
இதில் இருந்த நீரால் இமயமலையின் கிழக்கு மேற்கு வடக்குப் பகுதிகள்
அடித்துச் செல்லப்பட்டுள்ளன.



pacific ring of fire formation of volcanoes

இமயமலைக் கோட்பாடு :
1)  சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் பூமியைத் (துப்பாக்கிக் குண்டு போல்) துளைத்துச் சென்றதால் உருவானது இமயமலைத் தொடர். 
2) இமயமலை ஒரு வட்டவடிவமான மலைத் தொடர்.
3) இதன் அடிப்பகுதி மிகவும் கடினமான கிரானைட் பாறைகளால் ஆனது.  இதைக் “கல் தோன்றிய காலம்” எனத் தமிழ் இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
4) இந்தப் பாறைகள் மிகவும் பழைமையானவை.
5) கண்டப் பெயர்ச்சியால் இமயமலை உருவாகவில்லை.
6) கங்கன் பூமியில் மோதிய காரணத்தினால் பூமியின் மேற்பரப்பில் 71சதம் நிலப்பரப்பு காணாமல் போய் விட்டது.
7) எஞ்சிய 29சதம் நிலப்பரப்பு கண்டங்களாக இடம் பெயர்ந்துள்ளன.
8) இந்தியத் துணைக்கண்டமும் சீனாவின் நிலப்பகுதியும் அதே இடத்தில்தான் உள்ளன.  
9) கங்கன் விழுந்த இடத்தின் மறுபக்கத்தில், அதாவது பூமியின் மறு புறத்தில் ஆழமான அட்லாண்டிக் பகுதி உருவானது
10) கங்கன் விழுந்த காரணத்தினால், 
பூமிக்குள் எரிந்து கொண்டிருந்த லாவா குழம்புகள் அட்லாண்டிக் கடலைச் சுற்றிலுமுள்ள  பகுதிகளில் எரிமலைத் தொடர்களாய் (Ring of Fires) உருவாகி உள்ளன.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

குறிப்பு
1) கங்கன் பூமியில் மோதிச் சேர்ந்த காலத்தில் பூமியின் பௌதிகத் தன்மையானது இப்போதுள்ள பூமியின் பௌதிகத் தன்மை போன்று இல்லை. கல்போன்று கடினமாக இல்லாமல்  தார் போன்று (Tar is a dark brown or black viscous liquid) கடினமான திரவநிலையில் இருந்திருக்க வேண்டும்.  இதனால் 2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் பூமியில் மோதிபோது, பூமியானது சிதறிப் போகாமல், கங்கன் என்ற விண்கோளை அப்படியே உள்வாங்கிக் கொண்டுள்ளது எனக் கருதுகிறேன்.
2) படங்களில் பூமி இப்போது வடிவம் உள்ளது. கங்கன் பூமியில் விழுந்த போது,  படங்களில் இருப்பது போல் இருந்திருக்க வில்லை என்பதையும், கண்டங்கள் எல்லாம் ஒன்றாய் ஒட்டி இருந்தன என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டுகிறேன்.
3) இமயமலை முன்னொரு காலத்தில் கடலாக இருந்தது என்ற கருத்து தவறானது.  இமயமலையில் கங்கை என்ற விண்ணீர்க்கோள் இறங்கியுள்ளது.  அதில் ஆமை சிம்சுமாரம் முதலான நீர்வாழ் உயிரினங்கள் இருந்ததாகப் புராணம் கூறுகிறது.  எனவே, இமலையில் காணப்படும் உயிரினங்கள் கடலில் வாழ்ந்தன அல்ல.  அவை கங்கையுடன் விண்ணில் இருந்து மண்ணிற்கு வந்த உயிரினங்கள் ஆகும்.


செவ்வாய், 3 ஏப்ரல், 2018

Theory of Tsunamis விருப்பாச்சிப் பாறைகள் உருவானது எப்படி?



 Theory of Tsunamis விருப்பாச்சிப் பாறைகள் சுனாமியினால்  உருவாகி உள்ளனவா?

கீழே உள்ள பாறை அமெரிக்க ஐக்கியநாட்டில் உள்ளது.  இதேபோன்றதொரு பாறை அமைப்பை தமிழகம் ஆந்திரா தெலுங்கானா மற்றும் கருநாடகா பகுதிகளில் காணலம்.    அப்படியே அச்சு அசலாக அமெரிக்காவில் காணப்படும் பாறையும் விருப்பாச்சியில் காணப்படும் பாறையும் ஒன்று போல் உள்ளன.  
அமெரிக்காவில் உள்ளது நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் உருவானவை என்றால், விருப்பாச்சியில் உள்ள பாறைகளும் நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் உருவானவை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.


Seismite formed by liquefaction of sediments during a Late Ordovician earthquake (northern Kentucky, USA).

All of these comforting notions were shattered by paleoseismology studies showing evidence of extremely large earthquakes,[2] along with historical tsunami records. In effect, the subduction zone under British Columbia, Washington, Oregon, and far northern California, is perfectly normal, being extremely hazardous in the long term, with the capability of generating coastal tsunamis of several hundred feet in height at the coast. These are caused by the interface between the subducted sea floor stressing the overlaying coastal soils in compression. Periodically a slip will occur which causes the coastal portion to reduce in elevation and thrust toward the west, leading to tsunamis in the central and eastern north Pacific Ocean (with several hours of warning) and a reflux of water toward the coastal shore, with little time for residents to escape. (Ref: http://www.wikiwand.com/en/Paleoseismology )


தமிழகத்தில் பழனி - திண்டுக்கல் சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள மலையை வெட்டி சாலையை அகலப்படுத்தி உள்ளனர்.  இங்கே கடினமான பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறைகள் சேர்ந்து உள்ளதைக் காண முடிகிறது.  இந்தப் பொக்குப்பாறைகள் சுனாமியினால் அடித்துவரப்பட்ட களிமண் அல்லது சவடுமண்ணால் உருவானது என்பது எனது கருத்து.



Seismite formed by liquefaction of sediments during a  huge Tsunami hits the Tamil Nadu, (Virupatchi 624614, Tamil Nadu ).

 
Seismite formed by liquefaction of sediments during a  huge Tsunami hits the Tamil Nadu, (Virupatchi 624614, Tamil Nadu )


பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கமும் குமரிக்கோடும் கொடுங்கடல் கொண்ட காலத்தில் ஏற்பட்ட கடல் வெள்ளம் தமிழகம் முழுவதையும் தாக்கி அழித்துள்ளது.  அவ்வாறான ஒரு மாபெரும் கடல்வெள்ளத்தால் (பெருஞ் சுனாமியினால் ) உருவான பாறைகளாக இவைகள் இருக்க வேண்டும் என்று கருத வேண்டியுள்ளது.   


முதல் தமிழ்ச்சங்கம் வளர்த்த தென்மதுரையையும்,
இரண்டாம் தமிழ்ச்சங்கம் வளர்த்த கபாடபுரத்தையும் அழித்த கடல்வெள்ளம் (மாபெருஞ் சுனாமி) தமிழகத்தில் விருப்பாச்சியையும் அழித்துள்ளது என்று கருத வேண்டியுள்ளது.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்