மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (சிறுமலை)
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ (104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றிப் பண்டைய பாண்டிய நாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, தமிழகத்திற்குள் புகுந்து அழித்தது உண்மையா? கடல்மண் தமிழகத்தில் கிடக்கின்றனவா? கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் தமிழகத்தில் படிந்துள்ளனவா?
அழகர்கோயில், திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா, வத்தலக்குண்டு முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகள் உள்ளன. மேலும் மணவூர் (கீழடி), திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா, பெனுகொண்டா, புத்பூர், வத்தலக்குண்டு முதலான ஊர்களில் கடல்மண் படிமங்கள் உள்ளன.
சுற்றிலும் சிறுசிறு மலைக்குன்றுகள் இருக்க, அவற்றின் நடுவில் சிறுமலை கிராமம் அமைந்துள்ளது. சிறுமலையில் பிரளயம் பேர்த்த பாறைகள் உள்ளனவா? கடல் வௌவிய மண் படிமங்கள் உள்ளனவா?
சுற்றிலும் சிறுசிறு மலைக்குன்றுகள் இருக்க, அவற்றின் நடுவில் சிறுமலை கிராமம் அமைந்துள்ளது. சிறுமலையில் பிரளயம் பேர்த்த பாறைகள் உள்ளனவா? கடல் வௌவிய மண் படிமங்கள் உள்ளனவா?
தமிழகத்தில் உள்ள கிரானைட் மலைகளில், கிரானைட் பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறைகள் எனப் பொதுமக்களால் அழைக்கப்படும் பாறைகளும் உள்ளன. ஆனால் சிறுமலையில் கிரானைட் பாறைகள், பொக்குப்பாறைகள் இவற்றுடன் பல்வேறுபட்ட பாறைகளும் காணக் கிடக்கின்றன.
இதில் சிறப்பாக, ‘வெள்ளியங்கிரி‘ என்று அழைக்கப்படும் ஒரு சிறு குன்றின் உச்சிக்குச் செல்லும் வழி நெடுகிலும் இளஞ் செந்நிறத்தில் பொக்குப்பாறைகளை அதிகமாகக் காணமுடிகிறது.
இளஞ் செஞ்நிறத்தில் உள்ள இந்தப் பொக்குப் பாறையில் ஊசிமுனை அளவிற்குச் சிறுசிறு துளைகளைக் காணமுடிகிறது. இத்துளைகளை மூடியபடி இளங்கருப்பு நிறத்தில் துகள்களைக் காணமுடிகிறது. இந்தக் கருமையான சிறு துகள்களைத் தனியாகப் பிரித்து எடுத்துப் பார்த்தபோது, அவை மண்ணாகவோ மணலாகவோ பாறையாகவே இல்லை. மாறாக மக்கிய தாவரமாகவோ அல்லது கடல்வாழ் நுண்ணுயிர் போன்று கண்ணுக்குத் தெரிகிறது.
சிறுமலை வெள்ளியங்கிரியில் உள்ள இந்தப் பொக்குப் பாறைகளில் படிந்துள்ள சிறுசிறு கருமைநிறத் துகள்களை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து அறிய வேண்டும்.
கடல் இருக்கும் திசைநோக்கித் தமிழகத்தில் உள்ள பாறைகள் ஏன் பேர்ந்துள்ளன ? தமிழகத்தில் எரிமலையே இல்லாதபோது எரிமலையுடன் தொடர்புடைய மண் திட்டுகள் எவ்வாறு உண்டாகி உள்ளன?
இதற்கான காரணங்கள் அறிவியல் அடிப்படையில் கண்டறிப் பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
இதற்கான காரணங்கள் அறிவியல் அடிப்படையில் கண்டறிப் பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
பிரளயத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியானது பாறைகளைப் பேர்த்தெடுத்துப் போட்ட காரணத்தினால்தான், அவை கடல் இருக்கும் திசைநோக்கிப் பெயர்ந்துள்ளன என்று யூகிக்க முடிகிறது. மேலும், கடல்மண் வௌவிய காரணத்தினால்தான் சாம்பல்நிற மண்திட்டுக்கள் கிரானைட் பாறை இடுக்குகளில் படிந்துள்ளன என்றும் யூகிக்க முடிகிறது.
மேற்கண்ட ஐயங்களுக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் கிடைக்கும்வரை, பிரளயத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியால் மதுரையும் பண்டைத் தமிழகமும் அழிந்துள்ளன என்ற தமிழ் இலக்கியக் கருத்துகளை உண்மை என்றே கருத வேண்டியுள்ளது.
மேற்கண்ட ஐயங்களுக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் கிடைக்கும்வரை, பிரளயத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியால் மதுரையும் பண்டைத் தமிழகமும் அழிந்துள்ளன என்ற தமிழ் இலக்கியக் கருத்துகளை உண்மை என்றே கருத வேண்டியுள்ளது.
அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 16 (30 மே 2017) செவ்வாய் கிழமை.
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 16 (30 மே 2017) செவ்வாய் கிழமை.