செவ்வாய், 27 மார்ச், 2018

Theory of Tsunamis கீழடி அழிந்தது எவ்வாறு ?

 Theory of Tsunamis 
கீழடி அழிந்தது எவ்வாறு ?   
கடல்வெள்ளத்தினாலா (சுனாமியினாலா ) ?

Tsunami deposits south of Valdivia
http://quakehunters.blogspot.in/2013/01/fieldwork-so-far-in-pictures.html

மேலே உள்ள படத்தில் தென்னமெரிக்காக்காவில் உள்ள வால்திவ்ய (Valdivia) வில் உள்ள மண்படிமங்கள் சுனாமியினால் உண்டானது என்று காணமுடிகிறது.

கீழே உள்ள படங்களில் மதுரைக்கு அருகே கீழடியில் இந்தியத் தொல்லியல்துறையினாரால் தோண்டப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மண்படிமங்களைக் காண முடிகிறது.


ஆற்றுப் பெருக்கால், அடுக்கடுக்காய் மணவூரில் (கீழடியில்) மண் படிய வாய்ப்புகள் உண்டு.  ஆனால்,  கடல்நீர் வராமல் கலர்க்கலராய் மண் படிய வாய்ப்புகள் இல்லை.  எனவே இது வைகையாற்று வெள்ளத்தால் (நல்லதண்ணியால்) உண்டானது அல்ல. பிரளயத்தின் போது ஏற்பட்ட பெருஞ் சுனாமியினால் தோன்றிய கடல் வெள்ளம்  வைகை ஆற்றின் வழியாக உள்ளே புகுந்து பண்டைய மணவூரை (கீழடியை) அழித்துள்ளது என அறிய முடிகிறது.   

“திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே மதுரை உள்ளது” என்று நக்கீரர் பாடிய பண்டைய மதுரை இதுதான் என்பதை உறுதியாகிறது.

திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது.

மேலும், 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.
 http://kalairajan26.blogspot.in/2013/02/blog-post_18.html?view=timeslide

​வால்திவ்ய( Valdivia) வில் காணப்படும் மண் அமைப்பு சுனாமியினால் உண்டானது என்று கூறப்படுவதாலும், அதே போன்ற மண் அமைப்பு கீழடியிலும் காணப்படுகின்ற காரணத்தினாலும்,

மதுரைக்கு நேர் கிழக்கே அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் சுமார் 1,70,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள மாபெரும் நிலப்பகுதி பூமிக்குள் புதைந்துள்ளதைக் கூகுள்புவிப்படம் வழியாக அறியமுடிவதாலும்,
அங்கே தோன்றிய மிகமிகப்பெரிய கடல்வெள்ளம் (சுனாமி) மதுரை வரை வந்து அழிந்துள்ளது என்று கருதுகிறேன்.

மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
கி.காளைராசன்

திங்கள், 26 மார்ச், 2018

Theory of Tsunamis கடலூர் பாறைகள் ( cuddalore rocks )

Theory of Tsunamis 
கடலூர் பாறைகள் ( cuddalore rocks )





Theory of Tsunamis 
ஆழ்கடலின் அடியில் படிந்து கிடக்கும் களியினால் மட்டுமே கல்லையும் மண்ணையும் குழைத்துக் கடினமான “கடலூர் மணற் பாறை” களாக மாற்ற முடியும்.
ஆற்று (நன்) நீரால் கல்லையும் மண்ணையும் குழைத்துப் பாறைகளாக மாற்றமுடியாது. 

Tsunami clay rocks 

சுனாமியினால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர ஆற்றங்கரைகளின் அருகில் அல்லது நீர்நிலைகளின் அருகில் மட்டுமே “கடலூர் பாறை”களைக் காணமுடியும். சுனாமியினால் தாக்கப்படாத பகுதிகளில் உள்ள ஆற்றங்கரைகளில் கடலூர் பாறைகளைக் காணவே முடியாது என்று கருதுகிறேன்.



Tsunami clay rocks 
குளம் குட்டைகளின் அடியில் சேறும் சகதியும் படிந்து களிமண் போன்று கிடக்கும்.  இதுபோல் கடலின் அடியிலும் கீழ்க்கண்ட படத்தில் உள்ள பொருட்கள் படிந்துள்ளன.   பிரளயம் ஏற்பட்டு நிலங்கள் பெயர்ந்து கடலுள் மூழ்குவதால் கடல்வெள்ளம் (சுனாமி) உண்டாகிறது.  கடல்வெள்ளத்தினால் (சுனாமியினால்) ஆழ்கடலின் அடியில் படிந்துள்ள கடல்களிமண் அடித்து வரப்படுகின்றன.

இவை பசைபோன்று கல்லையும் மண்ணையும் கலந்து ஒட்டச் செய்து மணற்பாறைகளை அல்லது பொக்குப்பாறைகளை உருவாக்குகின்றன என்று கருதுகிறேன்.  எனது இந்தக் கருத்து (கோட்பாடு, Theory of Tsunami, Theory of Cuddalore Sandstone ) அறிவியல் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும்.


வெள்ளி, 23 மார்ச், 2018

Theory of Tsunamis மதுரைக்கு வந்த சுனாமி ( எழுகடல் தெரு )


 Theory of Tsunamis
மதுரைக்கு வந்த கடல்வெள்ளம்
( மதுரைக்கு வந்த சுனாமி )
எழுகடல் தெரு - பெயர்க்காரணம்
Madurai Tsunami

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள், தமிழகக் கடற்கரை ஊர்களைச் சுனாமி தாக்கி அழித்ததை அனைவரும் அறிவோம்.  பண்டைக்காலத்தில் மதுரைவரை கடல்வெள்ளம் (சுனாமி) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  

விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து, வெள்ளி போன்று நுரைகள் ததும்ப, கடற் சங்குகள் ஓசையிடுவது போன்ற சத்தத்துடன், ஆண் சுறாமீன்களையும் முத்துச் சிப்பிகளையும் அள்ளிக் கொண்டு, கடல்அலைகள் வரிசையாக ஏழு நிறங்களுடன் மதுரைவரை வந்து, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குக் கிழக்கே உள்ள குளத்தில் தங்கின என்கிறது திருவிளையாடற் புராணம்.   எழுகடலும் பொங்கி வந்த இடத்தை எழுகடல்தெரு என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.  இங்கே காஞ்சனமாலைக்குக் கோயிலும் அருகே குளமும் உள்ளன.  இந்தக் குளத்தில், கடல்வெள்ளத்தினால் உருவான ஏழுநிறங்களினால் ஆன பாறைகள் மற்றும் சிப்பிகள் சங்குகள் சுறாமீன்கள்  இவற்றின் எச்சங்கள் கிடைத்திடும் வாய்ப்புகள் உள்ளன. எனவே எழுகடல் தெருவில் உள்ள குளத்தை முறையான அகழாய்விற்கு உட்படுத்துவதால், பண்டைக்காலத்தில் மதுரைவரை கடல்வெள்ளம் (சுனாமி) வந்த நிகழ்ச்சியை உறுதிப் படுத்தலாம்.
Tsunami rocks in different colours (as mentioned in Thiruvillayadal Puranam)

Different colour rocks
Tsunami rocks in different colours (as mentioned in Thiruvillayadal Puranam)

மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
------------------------------------------------------------------------------------------------


திருவிளையாடற் புராணம்8. எழுகடலை அழைத்த படலம்


தடாதகைப் பிராட்டியை மணந்து சிவபெருமான் சுந்தரபாண்டியராகி உலகை ஆண்டுவந்தபோது, முனிவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து சிவபெருமானைத் தரிசித்துச் சென்றனர்.  மதுரைக்கு கௌதம முனிவரும் வந்தார்.  அவரைத் தடாதகைப் பிராட்டியாரின் தாயார் காஞ்சனமாலை அழைத்து வரவேற்றாள். தன் பிறவித் துன்பத்தை நீக்க வல்ல தவம் யாது? என வினவினாள்.  அதற்குக் கௌதம முனிவர், மானதம் வாசிகம் காயிகம் என்னும் மூவகைத் தவங்களில் காயிகங்களே சிறந்தவை என்றும், அவைகளில் தீர்த்த யாத்திரைகள் சிறந்தவை என்றும் கூறினார். அத் தீர்த்தங்களுள் கங்கை நதியே சிறந்தது என்றும், அந்த நதிகளில் தனித்தனியே போய் நீராடுதல் அரிது ஆகையால் அந்நதிகள் எல்லாம் வந்துகூடும் கடலில் நீராடுதல் சாலச் சிறந்தது என்றும் அவர் கூறினர். இதனைக் கேட்டு உணர்ந்த காஞ்சனமாலை தானும் கடலில் நீராடி விரும்பினாள்.   தனது விருப்பத்தைத் தன் மகளான தடாதகைப் பிராட்டியாரிடம் கூறினாள்.  பிராட்டியார் இறைவனிடம் கூறினார்.  தேவியின் திருமொழியினைக் கேட்ட சுந்தர பாண்டியராகிய சிவபெருமான், ‘‘ஒருகடல் என்ன, ஏழு கடலையுமே கூவி அழைப்போம்’’ என்று கூறி அவை வரும்படி எண்ணினார்.

இறைவனது திருவுளம் அறிந்த ஏழு கடல்களும் ஆரவாரித்து, சந்திரனைத் துண்டு செய்தது போன்ற வடிவத்தை உடைய, சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் வாய்விட்டுச் சத்தம் எழுப்பும் படியாக அவற்றைத் தள்ளிக் கொண்டுமிக வெள்ளிய நுரைகள் ததும்ப, ஆண் சுறாக்கள் மேலே சுழல, குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசிக் கொண்டுஅலையலையாக வரிசையாக, அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவும் அளவிற்கு உயர்ந்து  எழுந்தன.  கடல் பொங்கி எழுந்து வருவதைக் கண்ட மதுரை நகர மக்கள் நடுங்கினர்.  கலியுக முடிவின் போது பிரமனுடைய படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல கடல்கள் பொங்கி எழுத்தன.   பொங்கி எழுந்த ஏழு கடல்களும்பாம்பினையணிந்த சிவபெருமானது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, கிழக்கே இருந்த குளத்தில் சென்று அடங்கின.  இதனால், பொன்னிறமுடைய தாமரை மலர்ந்து இருந்த அந்தக் குளத்தில், ஏழு கடலின் வெவ்வேறு நிறங்களும் கலந்து சிவபெருமானுடைய எட்டு வகையான வண்ணங்களில்  அந்த குளம் விளங்கியது.

different colour rocks
தேவகோட்டை அருகே நிலத்தடியில் கிடந்த சில பாறைகள்

885.   
என்று முனி விளம்பக் கேட்டு இருந்த காஞ்சன மாலை 
துன்று திரைக் கடல் ஆடத் துணிவுடைய விருப்பினள் ஆய்த் 
தன் திருமா மகட்கு உரைத்தாள் சிறிது உள்ளம் தளர்வு எய்திச் 
சென்று இறைவற்கு உரைப்பல் எனச் செழியர் தவக் கொழுந்து அனையாள்.

886.   
தன் தன்னை உடைய பெரும் தகை வேந்தர் பெருமான்
முன் சென்று அன்னம் என நின்று செப்புவாள் குறள் வீரர்க்கு
அன்று அன்னக் குழியு னொடு ஆறு அழைத்த  அருட்கடலே
இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று இரந்தாள்.       
                             
887.       
தேவி திரு மொழி கேட்டுத் தென்னவராய் நிலம் புரக்கும்
காவி திகழ் மணி கண்டர் கடல் ஒன்றோ எழு கடலும்
கூவி வர அழைத்தும் என உன்னினார் குணபால் ஓர்
வாவி இடை எழுவேறு வண்ணமொடும் வருவன ஆல்.   

888.       
துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட  உதைத்து
வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக்  கொட்பத்
தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை
அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும்.  

889.       
காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்
கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்
பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால் 
அவன் அடி சென்று அடைந்தார் போல்  அடங்கியது ஆல்.               

890.       
தன் வண்ணம் எழு கடலின் தனி வண்ணமொடு கலந்து
பொன் வண்ண நறும் பொகுட்டுப் பூம் பொய்கை பொலிவு எய்தி
மின் வண்ணச் சடைதாழ வெள்ளி மணி மன்று ஆடும்
மன் வண்ணம் என எட்டு வண்ண மொடும் வயங்கியது ஆல். 


ஞாயிறு, 18 மார்ச், 2018

சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?


சமுத்திரம் என்று முடியும் ஊர்ப் பெயர்கள்.

சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?



நான்கு முறை மதுரைக்குக் கடல்வெள்ளம் (சுனாமி, ஆழிப்பேரலை) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது[1].  பஃறுளி ஆற்றுப் பன்மலை யடுக்கத்தையும், குமரிக்கோட்டையும், முதற் தமிழ்ச்சங்கம் நடைபெற்ற தென்மதுரையையும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தையும் கடல்கொண்டது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் பல காணப்படுகின்றன.
இந்த இலக்கியக் குறிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் ஏதும்செய்யப்படாமலேயே, இக்கருத்துகள் எல்லாம் பொய்யில் புலவர்களால் புனைந்து உருவாக்கப்பட்ட தொன்மம் என்று கூறிவந்தனர்.  இந் நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே “செழியன் கொடிநுடங்க மறுகின் கூடல்“[2] என்று அகநானூறும்,  மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரை என்று நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் சிறப்பித்துக் கூறும் கூடல் நகரம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப் பட்டது.

கீழடி போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற ஆய்வுகளில் பூமிக்கு அடியிலே பெருநகரங்கள் புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.  இந்த ஆய்வுகளால், தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கோள் என்ற செய்தியானது தொன்மக் கதைகள் அல்ல.  அவைகள் உண்மை நிகழ்வுகள் என்று உணர்ந்து கொண்டேன்.

இந்நிலையில், இறையருளால்
2014 ஆம் ஆண்டு இராமேச்சுரம்-காசி பாதயாத்திரையும்,  மீண்டும்  
2015 ஆம் ஆண்டு நாக்பூர்-காசி பாதயாத்திரையும்,
2016 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும், மீண்டும்
2017 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும்
செல்லும் செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன்.

பாதயாத்திரைப் பயணத்தில் வழிநெடுகிலும் காணக்கிடைக்கும் கல்லையும் மண்ணையும் சுனாமியின் எச்சங்களாகக் கண்டேன். அவற்றினைச் சேகரித்து முறையான அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளேன்.  பாதயாத்திரை செல்லும் வழிகளில் “சமுத்திரம்” என்று முடியும் பெயர்களை ஊர்களையும் ஆங்காங்கே கண்டேன்.

இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயரைச் சேர்த்து வைத்தது யார் ?
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
அல்லது, 
இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயர் வைத்த காரணம் என்ன ?
என்ற ஐயங்கள் என்னுள் எழுந்தன.

பண்டைத் தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (சுனாமி) தாக்கி அழிந்துள்ளது என்ற தமிழ் இலக்கியச் செய்திகளை அறிவியில் அடிப்படையில் நிறுவுவதற்கு ஏதுவாகச் சமுத்திரம் என்று முடியும் ஊர்களின் பெயர்களைத் தொகுத்து இணைத்துள்ளேன். எனது தேடலில்  54 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

1)      கடலூர்
2)      கொண்ட சமுத்திரம், kondasamudram 608701, cuddalore Dist
கொண்ட சமுத்திரம்  Kondasamudram కొండసముద్రం Andhra Pradesh 523113 (No lake)
3)      செக சமுத்திரம்,  Jakka samudram 636805, Dharmapuri
செக சமுத்திரம்,   Jakkasamudram జక్కసముద్రం Andhra Pradesh 515231
4)      வேங்கட சமுத்திரம், Venkata samudram 636905, Dharmapuri (0.75m lake)
5)      பாலசமுத்திரம்  Bala samudram 624610, Dindigul Dist (0.75m lake )
பாலசமுத்திரம் Balasamudram Tamil Nadu 641664 (No lake)
பாலசமுத்திரம்  Balasamudram, Hanamkonda, Telangana 506001 (2.0 km lake)
பாலசமுத்திரம்  Balasamudram బలసముద్రం Andhra Pradesh 515571 (No lake)
பாலசமுத்திரம் Palasamudram పాలసముద్రం Andhra Pradesh 515241 (600m lake)
6)      சமுத்திரா பட்டி,  Samudrapatti 624402, Dindigul Dist (No lake)
7)      கெட்டி சமுத்திரம், Getti samudram 638501 Erode dist (No lake)
8)    ரெங்க சமுத்திரம், Rangasamudram Sathyamangalam, Tamil Nadu 638402, Erode Dist (No lake, Bhavani river bank)


முத்து சமுத்திரம்  Muthusamuthiram Tamil Nadu 642201 (No lake)
ரெங்க சமுத்திரம்  Rangasamudram Tamil Nadu 641662 (No lake)
ரெங்க சமுத்திரம் Rangasamudram రంగసముద్రం Andhra Pradesh 517370 (No lake)
ரெங்க சமுத்திரா Rangasamudra ರಂಗಸಮುದ್ರ Karnataka (No lake, forest)
9)      திம்ம சமுத்திரம், Thimam samudram 631 502 Kanchipuram dist (No lake, near river, near sea)
திம்ம சமுத்திரம் Thimmasamudram తిమ్మసముద్రం Andhra Pradesh 523185 (No lake, near sea)
10)   எல்.என்.சமுத்திரம்,  L.N.Samudram 639002, Karur Dist
சமுத்திரம், Samudram, Tiruvannamalai, Tamil Nadu (No lake, near  Tiruvannamalai mountain) 
சமுத்திரம், Samudram Tamil Nadu 636306, (No lake, )
ஜலகண்டபுரம் Jalakandapuram Tamil Nadu 636501 (No lake)
ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் ஒரே பெயரில் ஊர்கள் உள்ளதைக் காண முடிகிறது.  இன்னும் கூடுதலாகத் தேடிப் பார்க்க வேண்டும்.

11)   வேங்கட சமுத்திரம், Venkata samudram 635104, Krishnagiri
12)   கோபால சமுத்திரம், Gopala samudram 609108, Nagapattinam Dist
13)   வில்லந்திட சமுத்திரம்,  Vilanthida Samudram 609111, Nagapattinam Dist
14)   பூமா சமுத்திரம்,  Bomma samudram 637001, Namakkal Dist
15)   மால சமுத்திரம், Malla samudram 637503, Namakkal Dist
16)   நமன சமுத்திரம், Namana samudram 622422, Pudukottai Dist
17)   அப்பம்மா சமுத்திரம்,  Appama samudram 636108, Salem Dist
18)   சங்கம்மா சமுத்திரம், Jangamma samudram 636 113, Salem Dist
19)   கோண சமுத்திரம், Kona samudram 637102, Salem Dist
20)   சமுத்திரம், Samudram 636306, Salem Dist
21)   சமுத்திரம், Samudram 630710, Sivaganga Dist
22)   திருமலை சமுத்திரம், Thirumalai samudram 613402, Thanjavur Dist
23)   தியாக சமுத்திரம், Tyaga samudram 612301, Thanjavur Dist
24)   ரெங்க சமுத்திரம், Renga samudram 625562, Teni Dist
25)   பாலசமுத்திரம்  625512
26)   திம்மராய சமுத்திரம், Thimmaraya Samuthiram, Near New Cauvery Bridge, Tiruchirappalli,
27)   திருமலை சமுத்திரம், Thirumalai Samudram village in Thanjavur Tehsil, Thanjavur,
28)   சின்னபாபு சமுத்திரம், chinnababu samudram 605102, Villupuram Dist.
29)   மூல சமுத்திரம், Moola samudram 606107 , villupuram Dist
30)   பெரியபாபு சமுத்திரம், periyababu samudram 605102, villupuram Dist
31)   தாண்டவசமுத்திரம்  Thandava samudram 604151, Villupuram Dist
32)   அப்பம்மாசமுத்திரம் 616108
33)   அம்பா சமுத்திரம்  Amba samudram 627401, Tirunelveli Dist
34)   அம்பா சமுத்திரம்  Amba samudram Pudukudi 627435, Tirunelveli Dist
35)   தளபதி சமுத்திரம், Dalapathi samudram 627101, Tirunelveli Dist
36)   கோபல சமுத்திரம், Gopala samudram 627451, Tirunelveli Dist
37)   இராவண சமுத்திரம், Ravana samudram 627424, Tirunelveli Dist
38)   இரெங்க சமுத்திரம், Renga samudram 627413, Tirunelveli Dist
நீலகண்ட சமுத்திரம் (பாலமடை)

39)   கோண சமுத்திரம், Kona samudram 631202,Tiruvallur Dist
40)   கிருஷ்ண சமுத்திரம், Krishna samudram 631 206, Tiruvallur Dist
41)   இராம சமுத்திரம், Rama samudram 631206, Tiruvallur Dist
42)   கோபால சமுத்திரம், Gopala samudram 614001, Tiruvarur Dist
43)   வடமலை சமுத்திரம், Vadamalai samudram  628907 Thoothukudi Dist
44)   வால சமுத்திரம், தூத்துக்குடி அருகில்
45)   சென்ன சமுத்திரம், Chenna samudram 632506, Vellore Dist
46)   சின்ன சமுத்திரம், Chinna samudram 635653, Vellore Dist
47)   கிரி சமுத்திரம், Giri samudram 635751, Vellore Dist
48)   காம சமுத்திரம்,  Kamma samudram 632319, Vellore Dist
49)   சோம சமுத்திரம், Soma samudram 631102, Vellore Dist
50)   திப்ப சமுத்திரம், Tippa samudram 635809, Vellore Dist
51)   வேங்கிட சமுத்திரம், Venkata samudram 635811, Vellore Dist
52)   மூல சமுத்திரம், Moola samudram 606107, Villupuram Dist
53)   சங்கம்மாசமுத்திரம் 636113
54)   கிருஷ்ண சமுத்திரம் 620013 (திருவெறும்பூர் அருகில்)
55)   நாக சமுத்திரம் nagasamthiram karnadaga (away from Bangalore)

கடலூரையும் சேர்த்து மொத்தம் 55 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  சமுத்திரம் என்று முடியும் பெயர்களைக் கொண்ட ஊர்கள் இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

கேரளம், கருநாடகம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சமுத்திரம் என்ற பெயரில் உள்ள ஊர்கள் கண்டறியப்பட வேண்டும்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
kalairajan26@gmail.com

1) காமசமுத்திரம் ஏரி உள்ளது . இது கோலார் மாவட்டம் பங்கார்பேட் ஜங்ஷன் அடுத்துள்ள சிறிய ஊர்

2) சமுத்தரிஞ்சு, சமுத்தரணை என்பதெல்லாம்,  வளருருவாக்கம்,  புனர்வேலை, மீளெழுச்சி போன்றவற்றைக் குறிக்கும். “வாடு சமுத்தரிஞ்சு சாவக் கொட்டேடு”.... அது போல முத்துவும் இரங்கனும் கட்டெழுப்பிய ஊர்களாக இருக்கலாம்.
நன்றி = பழைமைபேசி அவர்கள், மின்தமிழ் 
https://groups.google.com/d/msg/minTamil/FaK5pSOpTiE/en3pO8R0BwAJ

3) தாமிரபரணி நதியின் வடக்கு கரையில் பாலாமடை ( திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது.) கிராமத்தையும் சுற்றியுள்ள நிலங்களையும் திருமலை மன்னன் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதருக்கு மான்யமாக அளித்தான். அரசின் ஆவணங்களில் இது நீலகண்ட சமுத்திரம் என்றும் வழங்கப்படுகிறது. (See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244).  4) மைசூரில் சிவசமுத்திரம்,  திருக்குற்றாலத்தில் பொங்குமா கடல்
நன்றி = நா.கணேசன் அவர்கள், மின்தமிழ்  5) தொழுவூர் அருகே சிறுகடல் உள்ளது.
https://groups.google.com/d/msg/minTamil/FaK5pSOpTiE/gzux2kYmCgAJ




[1] http://thiruvilaiyadalpuranam.blogspot.in/2018/03/blog-post_7.html
[2] http://thiruvilaiyadalpuranam.blogspot.in/2018/03/blog-post_17.html