ஞாயிறு, 23 ஜூன், 2019

Tamils' ancient rocket launcher

விண்கலம் ஏவிய தமிழர்கள்

Kalairajan Krishnan
23 ஜூன், 2016 ·
விண்கலம் ஏவுதலில் தமிழர்களே முன்னோடி.

"வடிவேல் எறிந்த வான்பகை பொறாது,
பகுறுளியாரும் பன்மலையடுக்கத்து,
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள,
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு,
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி..."

என்ற பாடல்வரிகளில் உள்ள, "வடிவேல் எறிந்த வான்பகை பொறாது" என்ற முதல் வரிக்கான பொருளைத் தமிழறிஞர் பலரும் ஆராயாமல் உள்ளனர்.

இந்த வரியையும் சேர்த்துப் பொருள் காண்பதே இக் கட்டுரையின்நோக்கம்.

1) வடி = வடிக்கப்பட்ட, செய்யப்பட்ட, அழகிய என்று பொருள்.

2)வேல் = முருகப் பெருமான் அசுரனை வெல்வதற்காக அன்னை பராசக்தியால் வழங்கப்பட்ட ஓர் ஆயுதம்.
அசுரனை அழிக்க வழங்கப்பெற்ற
இந்த வேல் கோண்டு திருச்செந்தூர் முதலான பல திருத்தலங்களில் பூமியைத் தோண்டி நன் நீர்த் தேக்கங்களை முருகப்பெருமான் உண்டாக்கியுள்ளார் எனத் தலபுராணங்கள் கூறுகின்றன.

3) எறிந்த = குறிபார்த்து வீசுதல், இலக்கு நோக்கி எய்தல், launch,

4) வான் = விண், space, outer surface of the earth

5) பகை = எதிர்த்தல் ( பகைவன் = எதிரி), திருப்புதல், re-attack, revert

6) போறாது = போறுக்க முடியாமல், தாங்க முடியாமல்,

7) பகுறுளியாரும் பன்மலையடுக்கத்து,
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள,
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு,
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி..."
= இதற்குஅறிஞர்கள் கூறியுள்ளவாறு பொருள்கொள்க.

மேற்கண்ட 1) முதல் 6) வரையிலான சொற்களுக்கான பொருட்களை இணைத்துப் பார்த்தால்,

வடிவமைக்கப்பெற்ற வேல் என்ற ஆயுதம் வான் நோக்கி எறியப் பெற்றுள்ளது.
அஃது (அந்த ஆயுதம்) வானத்தைப் பகைத்துக்கொண்டுள்ளது. அதனால் வான் பகை உண்டாகி, அதனைப் பொறுக்க முடியாமல் பூமிக்கே திரும்பி வீழ்ந்துள்ளது.

இதனால் சுனாமி உண்டாகிக் கடல் பொங்கி, பஃறுளி ஆறும் , பல மலைகளைத் தொடராகக் கொண்ட குமரி (க்கோடும்) ச்சிகரமும் அழிந்துபட்டன.

அதாவது, வின் நோக்கி ஏவப்பெற்ற வடிவேலானது, வான் பகைத்துக் கொண்ட( climate not supported) காரணத்தால், பூமிக்கே திரும்பி விழுந்துள்ளது.
இதனால் பெரும் பிரளயம் (சுனாமி tsunami) ஏற்பட்டு அதனால் பஃறுளி ஆறும் குமரி (இள வயதுடைய) மலைத் தொடரும் அழிந்துள்ளன எனப் பொருள் கொள்ளலாம்.

இதனால், விண்கலம் ஏவுதலில் பண்டைத் தமிழரே முன்னோடிகள் என்பதில் ஐயமில்லை.

அனைவரின் கருத்தையும் அன்புடன் வரவேற்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்.