புதன், 18 மார்ச், 2020

வேதாரண்யம் முதுமக்கள்தாழி

வேதாரண்யம் அருகே 
முதுமக்கள்தாழி கண்டெடுப்பு



தினத்தந்தி செய்தி  -  வேதாரண்யம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
பதிவு: மார்ச் 19,  2020 05:30 AM  வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செட்டிப்புலம் கிராமத்தில் நடுக்காடு பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வாய்க்காலின் ஒரு பகுதியை பணியாளர்கள் தோண்டியபோது அங்கு 2 மண் பானைகள் மண்ணில் புதைந்திருப்பது தெரியவந்தது.
அதில் ஒரு பானை உடைந்த நிலையில் இருந்தது. மற்றொரு பானை உடையாமல் காட்சி அளித்தது. அந்த பானையில் மனித எலும்பு துண்டுகள், பற்கள் மற்றும் தட்டு, கிண்ணங்கள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் இருந்தன. அந்த பொருட்களை மட்டும் பணியாளர்கள் கவனமாக வெளியே எடுத்து பத்திரப்படுத்தினர்.

‘வாட்ஸ்-அப்’ மூலமாக... இதுகுறித்து வேதாரண்யம் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தாசில்தார் சண்முகம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று மண்ணில் புதைந்த நிலையில் இருந்த பானைகளை பார்வையிட்டனர். இதையடுத்து பானைகளின் புகைப்படம் ‘வாட்ஸ்-அப்’ மூலமாக நாகையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
செட்டிப்புலம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டு இருப்பது முதுமக்கள் தாழிகள் ஆகும். அவற்றில் உள்ள சில குறியீடுகளை வைத்து பார்க்கும்போது அவை 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகளாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உடையாத நிலையில் உள்ள முதுமக்கள் தாழி, இன்று (வியாழக்கிழமை) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
நன்றி - https://www.dailythanthi.com/News/Districts/2020/03/19003231/2500yearold-adult-corridor-near-Vedaranyam.vpf

ஞாயிறு, 15 மார்ச், 2020

சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட செம்பினால் செய்யப்பட்ட இரு செப்புகள்

தொல் தமிழர் செம்பினால் குடுவைகள் செய்து பயன்படுத்தியுள்ளனர். இது குறித்துச் சங்கப்பாடல்களில் குறிப்பு ஏதேனும் உள்ளதா? எனத் தேடிக் கண்டறிய வேண்டும். தொல்லியலாளர்களுக்கு நல்வாழ்த்துகள். நல்லாசிரியர் மற்றும் சிவகளை தொல்லியல் ஆர்வலர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

சனி, 14 மார்ச், 2020

கீழடி அகழ்வாராய்ச்சி நீளமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தினத்தந்தி செய்தி - 
கீழடி அகழ்வாராய்ச்சியில் 
நீள சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.


பதிவு: மார்ச் 15,  2020 04:00 AM திருப்புவனம்.
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவு பெற்று தற்சமயம் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.  கடந்த மாதம் 19-ந் தேதியிலிருந்து பணிகள் தொடங்கப்பட்டு, கீழடி நீதியம்மாள் நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கீழடியில் ஏற்கனவே குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிறிய பானைகளும், செங்கற்களால் ஆன சிறிய சுவரும் கண்டுபிடிக்கப்பட்டது.  தற்போது தொடர்ந்து பணிகள் செய்யும் போது சிறிய சுவரின் தொடர்ச்சியாக நீள சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுவர் பழைய சுவருடன் இணைந்தே உள்ளது.  தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணியின் போது இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்கக் கூடும் என்று தெரிய வருகிறது. கொந்தகையில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அகரம் பகுதியிலும் சுத்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
https://www.dailythanthi.com/News/Districts/2020/03/15023728/Archaeological-kiladi--Long-wall-discovery.vpf

ஞாயிறு, 8 மார்ச், 2020

திருவாலவாய் திருச்சீரலைவாய் பெயர்க்காரணம் - ஊரும் பேரும்

ஆலவாயும் அலைவாயும்
(திருவாலவாய் , திருச்சீரலைவாய் - பெயர்க்காரணம் )

அப்பன் சோமசுந்தரபாண்டியன் ஆளும் மதுரைக்குத் திருவாலவாய் (திரு ஆலவாய்) என்றொரு பெயரும் உண்டு.  அப்பன்மகன் சுப்பனான  உக்கிரபாண்டியன் ஆளும் திருச்செந்துருக்குத் திருச்சீரலைவாய் (திருச்சீர் அலைவாய்) என்றொரு பெயரும் உண்டு.  இவை இரண்டும் காரணப் பெயர்கள் ஆகும்.

பிரளயம் - பிரளயம் என்றால் அயனங்கள் பிரள்வது அல்லது பெரும் நிலச்சரிவு என்று பொருள்.  கடலிலுள்ள பெரும் நிலத்திட்டுகள் சரிந்து விழுகின்றன.  இதனால் கடல்நீர் அடித்துச் செல்லப்பட்டுக் கடல்கோள் (பெருஞ் சுனாமி, Tsunami) உண்டாகிறது.


----------------------------------------------------------------
ஆலவாய் - 
பாண்டிய நாட்டிற்குக் கிழக்கே உள்ள வங்கக் கடலில் பிரளயம் ஏற்பட்டு அதனால் கடல்கோள் (கடல்வெள்ளம் அல்லது சுனாமி) ஏற்பட்டு மதுரையை அழித்துள்ளது.  கடல்வெள்ளத்தினால் அடித்துவரப்பட்ட மண் படிந்து, மதுரைக்கு மேற்கே நாகமலை உருவாகியுள்ளது.  கடல்வெள்ளம் (ஆலம்) வாய்வைத்த காரணத்தினால், இத்தலத்திற்கு “ஆலவாய்” என்ற காரணப்பெயரைத் தமிழர் சூட்டியுள்ளனர்.  திரு என்ற அடைமொழி சேர்ந்து திருவாலவாய் என்று பெயராகியுள்ளது.




-----------------------------------------------------------------------------

அலைவாய் -  
வங்கக் கடலில் பிரளயம் ஏற்பட்டு அதனால் கடல்கோள் (கடல்வெள்ளம் அல்லது சுனாமி) உண்டாகிப் பண்டைய பாண்டிய நாட்டைத் தாக்கியுள்ளது.  கடல்கோளில் உண்டான ‘கடலலைகள்’ திருச்செந்தூர் அருகே மோதித் தாக்கியுள்ளன.  கடலின் அலைகள் வாய் வைத்த காரணத்தினால் இத்தலத்திற்கு “அலைவாய்” என்ற காரணப்பெயரைத் தமிழர் சூட்டியுள்ளனர்.   திரு என்ற அடைமொழி சேர்ந்து திருச்சீரலைவாய் என்று பெயராகியுள்ளது.  இந்தக் கடல்வெள்ளத்தினால் (சுனாமி) அடித்துவரப்பட்ட மண் படிந்து, திருச்செந்தூருக்கு வடமேற்கே சிவகளை மலைகள் உருவாகியுள்ளன.  



மதுரைக்குத் திருவாலவாய் என்ற பெயரும், திருச்செந்தூருக்குத் திருச்சீரலைவாய் என்ற பெயரும் காரணப் பெயர்களாகும்.   பிரளயம் கடல்கோள் கடல்வெள்ளம் (சுனாமி, Tsunami) ஆழிப்பேரலை பற்றியும் அதனால் உண்டான புவியில் மாற்றங்கள் பற்றியும் தெளிவாகத் தமிழர் அறிந்திருந்து உள்ளனர்.    ஆலவாய் அலைவாய் என்ற பெயர்கள் புவியியல் அடிப்படையிலான காரணப் பெயர்களாகும்.

நாகமலைத்தொடரிலும், சிவகளை மலைத்தொடரிலும் தமிழரின் தொன்மையான வாழ்வியல் எச்சங்கள் புதைந்து கிடக்கின்றன.  இவற்றைத் தோண்டிக் கண்டறியும் தொல்லியலாளரைப் போற்றுவோம்.

நாகமலை சிவகளை போற்றுவோம்,
ஆலவாய் போற்றுவோம்,
அலைவாய் போற்றுவோம்,
தொல் தமிழர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மாசி 26 (09.03.2020) திங்கள் கிழமை.