புதன், 23 ஆகஸ்ட், 2023

வியன் கங்கை





 

16. வையை

கரையே கைவண் தோன்றல்

வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்


.......  .......  .......

மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்

கரை மரம் சேர்ந்து கவினி; மடவார்

நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்

35

மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தாஅய்;

மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய

வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,

தேன் இமிர் வையைக்கு இயல்பு.

.......  .......  .......


பொருள் -  மலையருவி மரங்களின் பூங்கொத்துகளை அழகாக்கியது. மகளிர் கூந்தலில் சூடிய பூக்களும், மைந்தர் மாலையிலிருந்த பூக்களும் ஒன்றில் ஒன்று தாவின. அவை மிதந்து வரும் வெள்ளமானது, மீன்-மாலையைச் சூடிக்கொண்டு கங்கையாறு வருவது போல் இருந்தது. தேனீக்கள் ஒலிக்கும் வையையின் இயல்பு, இவ்வாறு ஆயிற்று.

சைய மலையினின்றும் இழிந்த அருவி போந்து வையை யாற்றின் இரு கரைதோறும் உள்ள மலர்க்கொத்துகள் நிறைந்த மரத்தைச் சேர்ந்து சேர்ந்து அவற்றின் மலர் உதிர்ந்தமையாலே அழகை அடைந்தது. மேலும் தன்னிடம்

இழிந்து நீராடும் மகளிரின் மடப்பம் உடைய கூந்தலில் நின்று வடிந்த தேன் சேர்ந்த குளிர்ந்த மலர்களும் ஆடவர் அகன்ற மார்பிலிருந்து சேர்ந்த மலர்களும் இதழ்களும் பொருந்தப் பெற்றது; முத்தைப் போன்று விளங்கும் மீன் களையுடைய வானத்தில் உள்ள பெருகிய அகன்ற கங்கை ஒழுகும் கூற்றை ஒத்தல் வண்டுகள் இசைபாடும் இவ் வையை ஆற்றுக்கு எக் காலத்தும் பொருந்தியிருக்கும் இயல்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக